உறக்கத்துடன் சம்பந்தமான ஆசாரம்

 எப்படி நல்ல உறக்கத்தைப் பெறுவது?

1.  படுக்கையறையை இருளாக வைக்கக் கூடாது.

2.  இரவு உறங்குவதற்கு முன் படுக்கையைச் சுற்றி இறைவனின் நாம ஜப படிவங்களைக் கொண்டு பாதுகாப்பு மண்டலம் ஏற்படுத்தவும்.

3.  அன்று முழுவதும் செய்த தவறுகளுக்காக இறைவனிடம் மன்னிப்பு கேட்கவும்.

4.  “உன்னுடைய பாதுகாப்பு கவசம் எப்பொழுதும் என்னைச் சுற்றி இருக்கட்டும்; தூக்கத்திலும் என்னுடைய நாமஜபம் தொடர்ந்து நடக்கட்டும்.”- என்று உபாசனை தெய்வத்திடம் பிரார்த்தனை செய்யவும் .

5.  கிழக்கு – மேற்காக படுக்கவும்; முடிந்தவரை ஒருக்களித்துப் படுக்கவும்.

6.  மல்லாக்க நிமிர்ந்தோ, குப்புறக் கவிழ்ந்தோ படுக்கக் கூடாது; தெற்குநோக்கியோ, பூஜையறையில் தெய்வங்களை நோக்கியோ கால்களை நீட்டி படுக்கக் கூடாது.

தகவல் : ஸனாதனின் தமிழ் நூல் ‘அமைதியான உறக்கத்திற்கு என்ன செய்வது?’

Leave a Comment