இரவு உறங்குவதற்கு முன் உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள், பிரார்த்தனை மற்றும் நாமஜபம்

அ. ராத்ரிஸுக்தம்

சூரியனைப் போற்றும் வேத மந்திரங்கள்(‘ஸௌரஸுக்தம்’) போல நித்ரா தேவியைப் போற்றும் வேத மந்திரங்களும் (‘ராத்ரிஸுக்தமும்’)  உண்டு. உறக்கத்தை ‘நித்ரா தேவி’ எனச் சொல்கின்றனர். தேவியின் பலவித ரூபங்களில் நித்ராதேவியின் ரூபமும் ஒன்று. படுக்கையில் உட்கார்ந்து 2-3 முறை  நித்ரா தேவியைப் போற்றும் வேத மந்திரத்தை உச்சரிக்கவும். வேதமுறைப்படி உச்சரிக்க முடிந்தவர்கள் அதுபோலவே செய்யவேண்டும்.

ஆ. உறங்குவதற்கு முன் உச்சரிக்க வேண்டிய ஸ்லோகங்கள்/மந்திரங்கள்

  1. யா தேவி ஸர்வபூதேஷு  நித்ராரூபேண ஸன்ஸ்திதா |
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை  நமஸ்தஸ்யை நமோ நம : ||

–        ஸ்ரீ  துர்கஸப்தசதி, அத்தியாயம் 5, ஸ்லோகம்  16

பொருள்: எந்த தேவி ஸகல ஜீவராசிகளிடமும் நித்ரா ரூபத்தில் உள்ளாரோ அவரை மூன்று முறை நமஸ்கரிக்கிறேன்.

இந்த ஸ்லோகத்தை உச்சரித்து கொண்டே இருக்கும் போது எண்ணங்கள் சிறிது சிறிதாக குறைந்து மனம் லயமாகும்.

2. கெட்ட கனவு வராமலிருக்க கீழ் கண்ட ஸ்லோகத்தை சிரத்தையோடும் பக்தி உணர்வோடு உச்சரிக்கவும்.

ராமம் ஸ்கந்தம் ஹனுமந்தம் வைனதேயம் வ்ருகோதரம் |
சயனே ய: ஸ்மரேந்நித்யம்: து:ஸ்வப்னஸ்தஸ்ய  நச்யதி ||

பொருள்: உறங்கும் சமயத்தில் ஸ்ரீ ராமன், முருகன், ஹனுமான், கருடன் மற்றும் பீமனை நினைத்தால் கெட்டகனவுகள் தோன்றாது.

இ. உறங்கும் முன் கீழ் கண்ட பிரார்த்தனையை அழ்ந்த பக்தியோடு செய்யவும்.

  ‘ஹேசி  தான்  தேகா  தேவா | துஜா  விஸர் ந  வ்ஹாவா ||’

பொருள்: ‘ஹே பகவானே, உன்னை என்றும் மறவாத ஒரே வரத்தை எனக்குத் தந்தருள்வாய்’ – பரம் பூஜ்ய காணே  மஹராஜ் , நாராயண்காவ், பூனா, மஹாராஷ்ட்ரா ,1991.

ஈ. நித்ரா தேவி அல்லது உபாஸனை தெய்வத்திடம் பிரார்த்தனை செய்யவும்

ஈ 1. ‘நாள் முழுவதும் செய்யப்பட்ட சுப-அசுப மற்றும் புண்ணிய பாவ கர்மாக்களை தெரிந்து அல்லது தெரியாமல் செய்த கர்மாக்களை பரமேஸ்வரனிடம் அர்ப்பணம் செய்யுங்கள். நாள் முழுவதும் செய்த தவறுகளுக்காக பகவானிடம் மன்னிப்பு வேண்டுங்கள்’. – குருதேவ் டாக்டர் காடே சுவாமிஜி

ஈ 2.  தங்களின் உபாஸனை தெய்வத்திடம், ‘உறக்கத்திலும் ஆழ் மனதில் நாமஜபம் தொடர்ந்து நடைபெறட்டும். அமைதியான உறக்கம் ஏற்படட்டும்’ என்று பிரார்த்தனை செய்யவும்.

ஈ 3. பிரார்த்தனை செய்த பின் உறங்கியதால் ஏற்பட்ட அனுபூதிகள்

ஈ 3 அ. நித்ரா தேவியை பிரார்த்தனை செய்தவுடன் உறக்கம் ஏற்படுதல்:

25.08.2003 அன்று இரவு எனக்கு உறக்கம் வரவில்லை அதனால் நித்ரா தேவியிடம், எனக்கு ஆழ்ந்த உறக்கம் ஏற்படட்டும். தீய சக்திகள் எனக்கு கஷ்டம் கொடுக்காமல் இருக்கட்டும் என்று பிரார்த்தனை செய்தேன். உடனே எனக்கு ஆழ்ந்த உறக்கம் ஏற்பட்டது.- கு. கௌஷல், நிதின்  கோதவலே, மீரஜ், மகாராஷ்டிரா (15 வயது).

ஈ 3 ஆ. உடல் உபாதை இருந்ததால் பிரார்த்தனை, நாமஜபம் நடைபெறவில்லை:

ஒரு ஸாதகர் நினைவு படுத்திய பின் பிரார்த்தனை செய்ததால் சாந்தமான உறக்கம் ஏற்பட்டது : நவம்பர் 2007, 21 முதல் 23 வரை, மூன்று நாட்கள் கடும் தலைவலியால் அவதிக்குள்ளானேன். அதோடு தலைசுற்றல், கால்களில், முட்டியில் வலி, ஆஸ்துமா இவற்றாலும் கஷ்டம் ஏற்பட்டது. கடும் தலைவலியால் அறையிலேயே படுத்திருந்தேன். பிரார்த்தனை, நாமஜபம் செய்யக் கூட தோன்றவில்லை. 23.11.2007 அன்று மாலை 6-8 எட்டு மணி வரை ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில் எனக்கும் மற்ற ஆன்மீக கஷ்டம் உள்ள ஸாதகர்களுக்கும் ஆன்மீக நிவாரணம் அளித்தார்கள். (குறிப்பு-1) அப்போது தொடர்ந்து பிரார்த்தனை மற்றும் நாமஜபம் செய்ய நினைவுறுத்தினார்கள். நாள் முழுவதும் பிரார்த்தனையோ, நாமஜபமோ நான் செய்யவில்லை என்பதை அப்பொழுதுதான் உணர்ந்தேன். அன்று இரவு ஸனாதனின் மகானான பூஜ்ய நிகாம் தாத்யா அவர்களும் எங்களுக்கு ஆன்மீக நிவாரணம் அளித்தார்கள். அன்று இரவு என் கஷ்டம் குறைந்தாலும் முழுவதுமாக நீங்கவில்லை. அதனால் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களிடம்,  குருதேவரே,  தீய சக்திகள் உடன் போராடக்கூடிய சக்தியை அளித்து, இரவு முழுவதும் எனக்கு ஆன்மீக நிவாரணம் நடக்க அருள் புரியுமாறு வேண்டிக் கொண்டேன். அதற்குப் பிறகு எப்போது உறங்கினேன் என்பது கூட தெரியாது. – திருமதி க்ஷமா ராணே, ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா

குறிப்பு 1 – தீய சக்திகளால் தீவிர கஷ்டப்படுபவர்கள், அவற்றில் இருந்து தூர விலகி, அவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பட விபூதி ஊதுவது, கல்லுப்பு போடப்பட்ட தண்ணீரில் காலை வைத்திருப்பது போன்ற ஸ்துல  உபாயங்கள், பிரார்த்தனை, நாமஜபம் போன்ற சூட்சும உபாயங்கள் சொல்லப்பட்டுள்ளன. அதேபோல் மகான்கள் அல்லது உயர் ஆன்மீக நிலை உடைய ஸாதகர்களின் முன்னால் அமர்ந்து நாமஜபம் மற்றும் பிரார்த்தனை செய்வது போன்ற இந்த உபாயங்களும், ஆன்மீக நிவாரணம் எனக் கூறப்படுகின்றது.

ஈ 3 இ. பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களிடம் ஆழ்ந்த பக்தியுடன் செய்த பிரார்த்தனையால் தீய சக்திகளால் ஏற்பட்ட கஷ்டம் நீங்கி சாந்தமான உறக்கம் உண்டானது :

‘28.8.2004 அன்று நான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது நள்ளிரவில் யாரோ என் கழுத்தை நெரிப்பது போல் உணர்ந்தேன். அப்போது குருதேவரிடம் ஆன்மீக உபாயமாக, என்னுடைய கழுத்தை நெரிக்கும் மாந்திரீகனின் (குறிப்பு-2) கருப்பு சக்தி குறைந்து, அவனுடைய அழிவு நேரம் வந்தது என்றால் அவன் அழியவேண்டும் என்று பிரார்த்தனை செய்து, நாமஜபம் செய்ய ஆரம்பித்தேன். ஒரு மணி நேரம் ஆகியும் ,என் கஷ்டம் குறையாத போது குருதேவரிடம் மிகுந்த பக்தியோடு பிரார்த்தனை செய்தவுடன், என் கஷ்டம் குறைந்து ஆழ்ந்த உறக்கத்தைப் பெற்றேன். – குமாரி ராஜஸ்ரீ ஸக்தேவ், ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி கோவா.

குறிப்பு 2 – புவர்லோகம் மற்றும் பாதாள லோகத்தில் உள்ள லிங்க தேஹங்களே அசுர சக்திகளாகும். அவற்றில் பூதம் பிசாசு, ஹாடல் (ஒரு வகையான தீய சக்தி) போன்ற பலவகை உண்டு. அவற்றுள் மாந்திரீகர்களே மிகவும் சக்தி வாய்ந்த அசுர சக்திகள். அவர்கள் மனிதர்களின் உள்ளும், வெளியும் இருந்து கொண்டு கஷ்டம் தருகிறார்கள்.

உ. உபாஸனை தெய்வத்தின் நாமஜபத்தை செய்து கொண்டே உறங்குவது மிகுந்த நன்மை பயக்கும்.

ஊ. உறக்கமின்மை மற்றும் தீய சக்திகள்

‘பயம் மற்றும் அழுத்தம் நிறைந்த மனதின் விளைவே உறக்கமின்மை. இதனால் தீய சக்திகள் ஆகர்ஷிக்கப்பட்டு, கெட்ட கனவுகள் ஏற்படுகின்றன. அதனால் ஜீவன் தமோ பிரதானமான உறக்கத்தில் ஆழ்கிறான்.’ இயற்கையான உறக்கத்தால் உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படுகிறது. புத்தியின் க்ரஹிக்கும் தன்மையும்  அதிகரிக்கிறது. தீய சக்திகளின் கஷ்டத்தால் அதீதமாக உறக்கம் ஏற்படுகிறது. உறங்கி எழுந்த பின்னும் உடல் சோர்வு இருக்கிறது. புத்தியின் சிந்தனை சக்தி பாதிக்கப்படுகிறது. தீய சக்திகளின் பாதிப்பு ஏற்படாமலிருக்க ஒரு பக்கமாக திரும்பி படுப்பது எப்பொழுதும் நல்லது. அதைக் காட்டிலும் ஆன்மீக பயிற்சி செய்வதன் மூலம் அதிக பாதுகாப்பு கிடைக்கிறது.

– ஒரு வித்வான் –  (திருமதி அஞ்ஜலி காட்கில் மூலமாக, 27.04.2010 மாலை 7.52)

எ. உறக்கத்தில் தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு பெற செய்ய வேண்டிய ஆன்மீக உபாயங்கள்

1. ஸாத்வீக ஊதுபத்தியை ஏற்றி படுக்கையறை முழுவதும் காண்பித்து, பின்பு படுக்கைக்கு சிறிது தொலைவில் வைக்கவும்.

2. தலைக்கு அருகில் ஒரு நெய் தீபத்தையோ அல்லது  எண்ணெய் தீபத்தையோ ஏற்றி வைக்கவும்.

3. உறங்குவதற்கு முன்னால் படுக்கைக்கு கீழும் மேலும் விபூதி கலந்த தண்ணீரை தெளிக்கவும். கைகளிலும் கால்களிலும் விபூதியை தடவிக் கொள்ளவும்.

4. படுக்கையை சுற்றி ஸாத்வீக நாமபடிவங்களின் மண்டலம் ஏற்படுத்தவும். ஸ்ரீ கணபதியின் நாமபடிவங்களை தலை மற்றும் கால்களுக்கு அருகில் வைக்கவும். ஸ்ரீ கிருஷ்ணரின் நாமபடிவங்களை படுக்கைக்கு இரு பக்கங்களில் வைக்கவும். இந்த நாமபடிவங்களை படுக்கைக்கு வெளியே அல்லது படுக்கைக்கு மேலே அல்லது படுக்கைக்கு அடியில் அவரவர் சௌகரியப்படி வைக்கலாம்.

ஸாத்வீக நாமவடிவங்களால் மண்டலம் ஏற்படுத்த முடியவில்லை என்றால் விபூதி கலந்த தண்ணீரால் மண்டலம் ஏற்படுத்தவும். படுக்கையில் அமர்ந்து கொண்டே இதைச் செய்யவும். விபூதி கலந்த தண்ணீர் பாத்திரத்தை வைத்துக் கொண்டு படுக்கையில் அமரவும். உபாஸனை தெய்வத்திடம் பிரார்த்தனை செய்து பின் பிரதக்ஷணமாக மூன்று முறை சுற்றித் தெளிக்கவும். பின் படுக்கையை விட்டு எழுந்திருக்கக் கூடாது. அவ்வாறு எழுந்தால் அந்த பாதுகாப்பு மண்டலம் தகர்ந்து விடும். ஏதாவது காரணத்தால் எழுந்திரிக்க நேரிட்டால் திரும்பவும் இச்செயலைச் செய்யவும்.

5. நாமஜப ஒலிநாடா அல்லது ப.பூ. பக்தராஜ் மஹராஜ் அவர்களின் பஜனைப் பாடல்களை இரவு முழுவதும் ஒலிக்க விடவும். இந்த பஜன்கள், ஸனாதன் ஸன்தாவின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் ப. பூ. பக்தராஜ் மஹராஜ் அவர்கள் இயற்றி, மெட்டமைத்து பாடியதாகும். இவற்றில் உள்ள சைதன்யம் தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

6. படுக்கையை சுற்றி ஆன்மீக உபாயத்திற்காக காலி பெட்டிகளை வைக்கவும். அதில் உள்ள வெற்றிடம் கருப்பு சக்தியை அழிக்க வல்ல நிர்குண தத்துவத்தை குறிக்கிறது.

ஏ. மானஸீக நாமஜப பெட்டி

ஸாதகர்களே, உங்களை சுற்றி மானஸீக ‘நாமஜப பெட்டி’ செய்து அதனுள் உறங்குங்கள்! ஸாதகர்களுக்கு உறக்கத்திலிருந்து காலை விழித்தவுடன் பலவித கஷ்டங்கள் ஏற்படுகின்றன. இது போன்ற கஷ்டங்கள் ஏற்படும் ஸாதகர்கள் மற்றும் மற்ற ஸாதகர்கள் இரவு உறங்கும் முன் மானஸீக ‘நாமஜப பெட்டி செய்து அதனுள் உறங்கும்போது அந்த கஷ்டங்களின் பிரமாணம் குறைவதை உணர முடிந்தது.

1. மானஸீக நாமஜப பெட்டி செய்யும் முறை
படுக்கையில் படுத்தவுடன் ‘நான் ஒரு பெட்டியில் உள்ளேன். படுக்கையின் அகல நீளத்தில் 2-3 அடி உயரத்தில் இந்தப் பெட்டி அமைந்துள்ளது’ என கற்பனை செய்து கொள்ளுங்கள்.முதலில் இந்த பெட்டியின் தலைமாட்டில் இருந்து ஆரம்பித்து கால்வரை மானஸீகமாக நாமஜபத்தை எழுதுங்கள். பிறகு பெட்டியின் தலைப்பக்கம் மேலிருந்து கீழ் நோக்கி நாமஜபத்தை எழுதவும். பெட்டியின் கால் பக்கமும் அதே போல மேலிருந்து கீழ்நோக்கி நாமஜபத்தை எழுதவும். இப்பொழுது பெட்டியின் வலது பக்கம் மற்றும் இடது பக்கம், மேலிருந்து கீழாக நாமஜபத்தை எழுதவும். நீங்கள் படித்த பிறகு உங்களின் கண்களுக்கு எதிரே (ஆகாய திசையில்) தலை பக்கத்தில் இருந்து கால் பக்கம் வரை நாமஜபத்தை எழுதவும்

2. மானஸீக நாமஜப பெட்டி சம்பந்தமாக சில குறிப்புகள்
அ. உறங்குவதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்த பிறகு இறுதியாக நாமஜப பெட்டியை செய்யவும். அதாவது அதன் பின்பு படுக்கையிலிருந்து எழக்கூடாது. அத்துடன் முடிந்தவரை பேசவும் கூடாது.

ஆ. நாமஜபத்தை இடைவெளி அதிகம் விடாமல் அருகருகே எழுதவும், உதாரணம். பெட்டியின் நீள்வாட்டில் மஹரிஷி கூறியுள்ள ‘ ஓம் நிஸர்க தேவோ பவ! ஓம் வேதம் ப்ரமாணம்! ஹரி ஓம் ஜயமே ஜயம்! ஜய் குருதேவ்! என்ற 4 நாமஜபங்களை சுலபமாக 3 முறை (மொத்தத்தில் 12 முறை) எழுத முடியும். பெட்டியின் அகலவாட்டில் சுலபமாக 2 முறை (மொத்தத்தில் 8 முறை) நாமஜபங்களை எழுத முடியும். (இங்கே குறிப்பிட்டுள்ள எண்ணிக்கைக்கு மேற்பட்டும் நாமஜபங்களை எழுதலாம்.)

இ. மஹரிஷி கூறியுள்ள நாமஜபங்களை எழுதும் போது ஒரு நாமஜப வார்த்தையை (உதாரணமாக ‘ஓம் நிஸர்கதேவோ பவ’) இடையில் பிரிக்காமல் சேர்த்து எழுதவும்.

ஈ. மற்ற எந்தவித நாமஜபத்திற்கும் இதே போல் நாமஜப பெட்டி தயாரிக்கலாம். நாமஜப பெட்டி தயாரித்த பின்,’ ஹே ஸ்ரீ கிருஷ்ணா, இந்த நாமஜப பெட்டியின் மூலமாக என்னை சுற்றி பாதுகாப்பு கவசம் நிர்மாணமாகி நாமஜபத்தின் மூலம் வெளிப்படும் சைதன்யத்தின் முழு பலனையும் நான் பெறுமாறு செய். நான் உறங்கும் போது என் நாமஜபம் தொடர்ந்து நடைபெறட்டும். இதுவே உன் சரண கமலங்களில் நான் செய்யும் பிரார்த்தனை.’ என்று பிரார்த்தனை செய்யவும்.

உ. நாமஜப பெட்டி செய்த பிறகு இடையில் எழுந்திருக்க வேண்டி இருந்தால், எந்தப் பக்கம் நாமஜப மண்டலத்திற்கு பங்கம் ஏற்பட்டதோ அந்தப் பக்கம் மறுபடியும் நாமஜபத்தை எழுதி நாமஜப மண்டலத்தை பூர்த்தி செய்யவும்.காலை எழுந்தவுடன் நாமஜப பெட்டி மூலம் நன்மை அடைந்ததற்காக ஸ்ரீ கிருஷ்ண சரணங்களில் ஆழ்ந்த பக்தியுடன் நன்றி தெரிவிக்கவும்.

ஊ. இது போன்ற நாமஜப பெட்டிகளை மற்ற வேலைகளிலும் (உதாரணமாக சேவை செய்யும் இடத்தில், பிரயாணம் செய்யும் பொழுது) செய்ய முடியும்.

ஐ. மானஸீக நாமஜப பெட்டியில் உறங்குவதால் ஏற்படும் நன்மைகள்

1. உறங்கும் நேரம், ஒன்றரை மணி நேரம் குறையும்.

2. உறக்கத்தின் நடுவே எழும் எண்ணிக்கை குறையும்.

3. கஷ்டம் தரும், பயமுறுத்தும் கனவுகள் குறையும்.

4. காலை எழுந்தவுடன் நம்மிடம் ஏற்பட்ட மாற்றத்தை உணர முடியும், அதாவது உடல் வலி குறைதல் அல்லது ஏற்படாதிருத்தல், பிராண சக்தி குறையும் அளவு குறைதல், புத்துணர்ச்சி மற்றும் உற்சாகத்தை உணர்தல், இரவு முழுவதும் உறங்கும் நேரம் நாமஜபம் நடைபெறுவதை உணர்தல், முன்பை காட்டிலும் துரிதமாக செயல்பட முடிதல், போன்ற ஏதாவது ஒரு மாற்றத்தை உணரமுடியும்

– பூஜ்ய (திரு) ராஜேந்திர ஷிண்டே, ஸனாதன்  ஆச்ரமம், தேவத், பன்வேல்.(25.3.2016)

தகவல்: ஸனாதனின் தமிழ் நூல் ‘அமைதியான உறக்கத்திற்கு என்ன செய்வது?’

Leave a Comment