படுப்பதில் சரியான மற்றும் தவறான வழிமுறை மற்றும் அதன் சாஸ்திரம்

1. இடது பக்கம் அல்லது வலது பக்கம் படுத்தல்

இடப்பக்கம் அல்லது வலப்பக்கம் படுக்கும் போது முறையே சந்திர நாடியும் சூரிய நாடியும் விழிப்படைந்து செயல்பட ஆரம்பிக்கிறது. இதனால் உடலின் சேதனா சக்தி விழிப்புற்ற நிலையில் இருப்பதால் பாதாளத்தோடு தொடர்பு கொண்ட உடலை, பூமியிலிருந்து தீய சக்திகள் தாக்குதல் செய்யாவண்ணம் பாதுகாக்கிறது. உறக்கம் தமோ குணத்தோடு சம்பந்தப்பட்டதால் முடிந்தவரை இடப்பக்கம் அல்லது வலப்பக்கம் படுக்கவும். – ஒரு வித்வான்  (திருமதி அஞ்ஜலி காட்கில் மூலமாக)

சூரிய நாடி செயல்பாட்டில் இருப்பதால் இடது பக்கமாக படுப்பது (பெரும்பான்மையினருக்கு) சிறந்தது. தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு தருவதில் சூரிய நாடியே அதிக செயல்பாட்டில் உள்ளது. சந்திர நாடி அதிக ஸாத்வீகமானதாக கருதப்பட்டாலும் பாதுகாப்பு தருவதில் குறைந்த அளவே செயல்பாட்டில் உள்ளது.

ஒருவர், தீய சக்திகளால் பீடிக்கப்பட்டிருந்தாலும் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர் இடது பக்கமாக படுப்பது நல்லது. ஏனெனில் அப்போது வலது பக்க சூரிய நாடி அதிக செயல்பாட்டில் இருக்கும். வலது பக்கமாக படுக்கும்போது சந்திர நாடி செயல்பாட்டில் உள்ளது. இது ஆனந்தத்தை தருகிறது. ஆனால் ஒரு சராசரி மனிதனின் ஆன்மீக நிலை குறைவாக இருப்பதால் அவனால் ஆனந்தத்தை உணர முடிவதில்லை. மாறாக ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள ஒருவர் வலது பக்கமாக படுத்தாலும் பரவாயில்லை.- தொகுத்தவர்

2. நிமிர்ந்து மல்லாக்க படுத்தல்

மல்லாக்க படுக்கும் போது இரண்டு நாடிகளுமே செயல்படாமல் முழு உடலும் செயலற்று உடல் அணுக்களின் சேதனா சக்தி வெளிப்படாத, தூங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது. இதனால் ஓரு சராசரி மனிதனுக்கு ஸுஷும்னா நாடி செயல்பாட்டில் இருப்பதில்லை. தேஹம் அதிக அளவு பாதாளத்தோடு தொடர்பு கொண்டிருக்கிறது. பாதாளத்தில் இருந்து வரும் கஷ்டம் தரும் அதிர்வலைகளை உடல் அணுக்களால் எதிர்கொள்ள முடிவதில்லை. மேலும் மல்லாக்க படுப்பதால் முதுகு சிறிது வளைந்த நிலையில் உள்ளது அதனால் முதுகுத்தண்டின் அடிப்பக்கத்தில் அழுத்தம் ஏற்படுகிறது. எனவே மூலாதார சக்கரத்தில் அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் மூலாதார சக்கரம் மட்டுமின்றி கீழ் பகுதி அனைத்திலுமே, வயிறு மற்றும் கீழ் வயிற்றுப் பகுதி ஆகியவற்றில் அழுத்தம் ஏற்படுகிறது. ஸ்வாதிஷ்டான சக்கரமும் இந்தப் பகுதியில் இருப்பதால் காம உணர்வுடன் சம்பந்தப்பட்ட வாயுக்கள் மற்றும் பிற வாயுக்கள் இதனால் தூண்டப்படுகின்றன. அதன் மூலம் பாதாளத்திலிருந்து மாந்திரீகர்கள் பெருமளவு தாக்குதல் நடத்த முடிகிறது. இந்த வாயுக்களின் துரித கதியால் சரீரத்தின் உப ப்ராணனுக்கும் துரித கதி கிடைப்பதால் மாந்திரீகர்களுக்கு தேகத்திற்குள் கருப்பு சக்தியை பரவச் செய்வது மிக சுலபமாகிறது இதனால் அவர்களின் தாக்குதலும் அதிகமாகிறது.

– ஒரு வித்வான்  (திருமதி அஞ்ஜலி காட்கில் மூலமாக)

2 அ. ஆன்மீக நிலையில் 55 % க்கு கீழுள்ளவர்கள் மல்லாக்க படுக்கும் போது எற்படும் விளைவுகள்

ஒருவர் சராசரி ஆன்மீக நிலையில் இருக்கும் போது (20% ஆன்மீக நிலை) அவர் ஆன்மீக நிலையில் இல்லாமல் மனோரீதியான உணர்வு நிலையில்  உள்ளார். இந்த உணர்வுகளின் சஞ்சலத்தால் வலது மற்றும் இடது குண்டலினி நாடிகளில் சக்தி பிரவாஹம் சீராக இல்லாததால், ப்ராணசக்தி சமசீராக பாயாமல், தாறுமாறாக பாய்கின்றன. மேலும் அவர்களின் ஸுஷும்னா நாடியும் குறைந்த ஆன்மீக நிலை காரணமாக செயல்படுவதில்லை. இந்த மூன்று நாடிகளும் செயல்படாததால், இவர்களுக்கு பாதாளத்திலிருந்து வெளிப்படும் கஷ்டம் தரும் அதிர்வலைகளின் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் இரண்டு நாடிகளின் ப்ரவாஹமும் சரிசமமான நிலையில் இல்லாததால் உடலில் ரஜ – அதிர்வலைகள் சேரக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதனால் ஸாதனையின் பலத்தால், வெளிப்படாத ஆன்மீக உணர்வு நிலையில் நாடிகளின் ப்ரவாஹம் ஒரு நியமப்படி பாயும் வரை, மல்லாக்கப் படுப்பது தீங்கு விளைவிப்பதாகும். இந்த நிலையில், ஒருவர் மிக கவனத்தோடு  உறங்கும் சமயம் ஆன்மீக நிவாரணம் செய்தால் அவரைச் சுற்றி ஏற்படும் கூடுதல் பாதுகாப்பு கவசத்தால் அவருக்கு உறக்கம் ஏற்படலாம்.

– ஒரு வித்வான் (திருமதி அஞ்ஜலி காட்கில் மூலமாக, 31.10.2007, மதியம் 1.45.)

2 ஆ. ஆன்மீக நிலையில் 55 % க்கு மேல் உள்ளவர்கள் மல்லாக்க படுக்கும் போது எற்படும் விளைவுகள்

இவர்கள் மல்லாக்க படுக்கும் போது அவர்களின் ஸுஷும்னா நாடி விழ்ப்படைகிறது. 55% ஆன்மீக நிலைக்கு மேலே, வெளிப்படாத ஆன்மீக உணர்வு நிலையில் தேஹத்தில் ரஜ – தம ப்ரவாஹம் அவசியத்திற்கு ஏற்றபடி கட்டுக்குள் இருக்கிறது. ஏனென்றால் வெளிப்படாத ஆன்மீக உணர்வு நிலையில், ஆன்ம சக்தி நிலையில் செயல்படுவது அதிகமாகிறது. ஆன்ம சக்தி சந்திர நாடி மற்றும் சூரிய நாடியின் ப்ரவாஹத்தை ஒன்றுப்படுத்தி சமநிலைப்படுத்துகிறது. இதன் பலனாக ஜீவனின் தேகத்தில் ஆத்ம பலம் அதிகமாகின்றது. இத்தகைய ஜீவன் மல்லாக்க படுக்கும் போது முதுகின் எல்லா சக்கரங்களிலும், உண்மையான சமமான அழுத்தம் ஏற்படுவதால் எல்லா சக்கரங்களும் விழிப்படைந்து, அவை ஸுஷும்னா நாடியை விழிப்படைய செய்து அதை சரியானபடி கட்டுப்படுத்துகின்றன.

– ஒரு வித்வான் (திருமதி அஞ்ஜலி காட்கில் மூலமாக 01.10.2007, மதியம் 1.45)

3. குப்புறக் கவிழ்ந்து படுத்தல்

குப்புறக் கவிழ்ந்து படுப்பதால் வயிற்றில் உள்ள வெற்றிடங்களில் அழுத்தம் ஏற்படுகிறது இதனால் அங்குள்ள சூட்சும வேண்டாத வாயுக்கள் கீழ்நோக்கி நகர ஆரம்பிக்கின்றன. சில சமயம் நெஞ்சினில் வேண்டாத வாயுக்கள் அழுத்தம் அதிகமாக ஏற்பட்டால் அவை மேலே எழும்பி மூக்கு மற்றும் வாய் வழியாக வெளியேறுகிறது. உடலில் இந்த ரஜ-தம வேண்டாத வாயுக்களின் நடமாட்டத்தினால் வாயு மண்டலத்தில் இருந்து அதிகமாக ரஜ-தம அதிர்வலைகளை க்ரஹிக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதனால் தேஹத்தின் ஜடத்வ அங்கங்கள் மந்த நிலை அடைகின்றன மற்றும் உடலின் வெற்றிடங்களிலுள்ள வாயு மண்டலம், வயிற்றின் மேல் ஏற்பட்ட அழுத்தத்தால் விழிப்புற்ற நிலை அடைகிறது. இதனால் மேல் நோக்கியும் கீழ்நோக்கியும் பாயும் ரஜ-தம பிரதான வேண்டாத வாயுக்களுக்கு துரித கதி கிடைக்கிறது. அச்சமயத்தில் தேஹம் சூட்சும நிலையில் ரஜ – தம பிரதானமான வாயுக்கள் வெளியேறுவதை உணர்கிறது. அப்போது வாயுமண்டலம் மற்றும் பாதாளத்தில் உள்ள தீய சக்திகள், தாக்குதல் நடத்தும் வாய்ப்பு அதிகமாகிறது.

குப்புறபடுப்பதால் மாந்திரீகர்கள் மேலிருந்து தாக்குதல் புரிய வசதியாகிறது. மல்லாக்க படுக்கும் போது கீழிருந்து தாக்குதல் செய்ய முடிகிறது. ஜீவனின் பின்பக்கம், முன் பக்கத்தைக் காட்டிலும் கருப்பு சக்தியை கிரஹிப்பதில் அதிக திறனோடு விளங்குகிறது. ஏனென்றால் வேண்டாத வாயுக்கள் முன்பக்கத்தை காட்டிலும் பின்பக்கத்தில் அதிகமாக சேருகின்றன. மாறாக ஸாத்வீக அதிர்வலைகள் முன்பக்கத்தில் அதிகமாக உலாவுகின்றன. அதனால், மாந்த்ரீகர்கள் முடிந்தவரை பின்பக்கத்தை தாக்குகிறார்கள்.

4. கணுக்கால்களை ஒன்றின் மேல் ஒன்று மறித்து வைத்து ஏன் உட்காரவோ உறங்கவோ கூடாது?

கணுக்கால்களை மறித்து வைத்து உட்காரும்போதும், உறங்கும்போதும் சரீரத்தில் உள்ள உபபிராணனிலுள்ள க்ருகல் வாயு செயல்பட ஆரம்பிக்கிறது. இந்நிலையில் தேஹத்திலிருந்து வெளிப்படும் தேஜ மற்றும் ஆப தத்துவ சூட்சும அதிர்வலைகளால் வாயு மண்டலத்தில் உள்ள யம அதிர்வலைகள் செயல்பட ஆரம்பிக்கின்றன. கால் பெருவிரல்கள் வழியாக உடலுக்குள் ஆக்ர்ஷிக்கப்படுகின்றன. இந்த யம அதிர்வலைகளாலும் சரீரத்தை சுற்றி ஏற்பட்ட கோசத்தாலும் மனோமய கோசத்தில் ரஜ துகள்கள் அதிகமாகின்றன. அதனால் உறக்கத்தில் மனிதனின் மனசக்தி கனவுகளாகவும் விழிப்பு நிலையில் பகல் கனவுகளாகவும் செயல்படுகின்றன. அதனால் இந்நிலையில் படுப்பதால் கனவும் பகல் கனவும் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

ஒரு வித்வான் (திருமதி அஞ்ஜலி காட்கில் மூலமாக 16.12.2004, மாலை  7.20)

5. ஏனைய விஷயங்கள்

1. இடப்பக்கம் படுப்பதால் ஒருவரின் நாமஜபம் நன்கு நடைபெறுகிறது. அதே போல் அவரின் குண்டலினி சக்தியின் பிரவாஹம் சரி சம நிலையில் இருக்கிறது.

2. இடப்பக்கம் படுப்பதால் உடல் மற்றும் மனதின் ஸாத்வீகத்தன்மை அதிகரிக்கிறது. சூட்சுமத்திலும் நல்ல அதிர்வலைகளை உணர முடிகிறது இதனால் எழுந்தவுடன் உற்சாகம் ஏற்படுகிறது.

3. வலது பக்கம் படுப்பதால் இடது பக்க குண்டலினி சக்தி செயல்பட ஆரம்பிக்கிறது. சைதன்யத்தின் அளவு குறைவாக உள்ளதால் வலது பக்கம் சிறிதளவே செயல்பாட்டில் இருக்கிறது.

4. வலது பக்கம் படுத்தால் ஒருவரின் உடலில் கஷ்டம் தரும் சக்தி நிர்மாணமாகி சூழலிலும் அது ஆகர்ஷிக்கப்படுவதால் வலது பக்கம் படுப்பது ஸாத்வீகமானது அல்ல.

5. குப்புற படுப்பதால் ஒருவரின் மணிபூரக மற்றும் ஸ்வாதிஷ்டான சக்கரங்களின் ஸ்தானத்தில் இச்சா சக்தியின் வளையம் ஏற்படுகிறது. உடலின் ஸப்த சக்கரங்களும் செயல்பட ஆரம்பிப்பதில்லை. அதனால்  உடலில் கஷ்டம் தரும் சக்தி பாய்கிறது. அதனுடன் குண்டலினி சக்தியின் பிரவாஹம் சம நிலையில் இருப்பதில்லை.

6. மல்லாக்கப்படுப்பதால் உடலின் குண்டலினி சக்தியின் பிரவாஹம் சமநிலையில் இல்லாமல், சில சமயம் நின்றும், சில சமயம் துரித கதியிலும் நடக்கிறது.

– ஒரு மகான்

Leave a Comment