உறக்கம் /நித்திரை/தூக்கம்

1. கலியுகத்தில் மனித வாழ்க்கையின் சிறப்பு

கலியுகத்தில், உறக்கம், பயம் மற்றும் விக்ருதி(வக்கிரத்தன்மை) ஆகிய மூன்று முக்கிய தன்மைகளும் மனித குலத்தின் கிரியா சக்தியின் பெரும் பகுதியை வகிக்கிறது.- ஒரு வித்வான் ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில் மூலமாக 7.12.2009 மதியம்12.12

2. நித்திரை (உறக்கம்) வார்த்தையின் பெயர்க் காரணமும், அர்த்தமும்

2 அ. பெயர்க் காரணம்

புராணத்தின்படி, நித்ரா பிரம்மாவின் பெண் ரூபமாகும். பாற்கடல் கடைதலிலிருந்து உற்பத்தியானவள் நித்ரா தேவி.

2 ஆ, பொருள்

‘மேத்யாமன: ஸம்யோக’ என்றால் மேத்யா என்ற நாடியும் மனமும் ஒன்று சேரும் நேரமே ‘நித்ரா’வாகும்.

2 இ. சதேஜ் நித்ரா

சரியான உணவுப் பழக்கத்தால் ஜீவன் நல்ல உறக்கத்திற்கு செல்கிறது. இதுவே ‘சதேஜ் நித்ரா’ எனப்படுகிறது. உறக்கத்தின் போது ஆழ்மனதில் ஸாத்வீக எண்ணங்கள் நிறைந்திருந்தால் அச்சமயத்திலும் அந்த ஜீவனின் ஸாதனை ஆழ்மனதில் நடந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம். இத்தகைய ஸாதனையால் மனம் தூய்மையாகி காலப்போக்கில் அந்த ஜீவனால் மனோலயத்தை அடைய முடிகிறது. – ஒரு வித்வான் ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில் மூலமாக 19.4.2010, மதியம்1.49

3. உறக்கத்தின் மகத்துவம்

சரீர மற்றும் மானஸீக ஆரோக்கியத்திற்கு உணவு எவ்வளவு அவசியமோ அது போலவே உறக்கமும் அவசியமாகும். நாள் முழுவதும் செய்யும் வேலையால் சரீரம் மற்றும் இந்திரியங்களின் சக்தி குறைகிறது. இதைப்  புதுப்பிக்க ஓய்வு தேவை. ஓய்வின் இயற்கையான நிலையே உறக்கம் ஆகும். சுகம் – துக்கம், அதிக உடல் எடை – குறைந்த உடல் எடை, ஞானம்- அஞ்ஞானம், ஆரோக்கியம் மற்றும் பலம் ஆகியவை எல்லாம் உறக்கத்தை சார்ந்து உள்ளன.

4. உறக்கத்தின் சிறப்பம்சம் மற்றும் இந்த கர்மாவினால் மனிதப் பிறவியின் மீது ஏற்படும் பாதிப்பு

அ, உறக்கம், அடிப்படையில் ஒரு தமோ குண காரியம் ஆகும் அதற்குக் காரணம் இது தமோகுண காலமான இரவில் நடப்பதாகும்.

ஆ, தமோகுண உறக்கத்தால் வெளிப்படும் ஆழ்மனதின் விக்ருத சிந்தனை அதிர்வலைகள் ஜீவனின் மனதில் பயம் என்ற ஸன்ஸ்காரத்தை ஏற்படுத்துகிறது.

இ, பயம் என்ற ஸன்ஸ்காரத்தால் சஞ்சலம் என்ற உணர்வு ஏற்படும் போது செய்யப்படும் கர்மாக்கள் ரஜ- தம நிறைந்த அதிர்வலைகளால் நிறையப் பெற்று வாயு மண்டலத்தை மாசுபடுத்துகிறது. – ஒரு வித்வான் ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில் மூலமாக 7.12.2009 மதியம்12.12

5. உறக்கத்தின் கால அளவு மனிதனின் வயது, முக்குணங்கள் (ஸத்வ, ரஜ தம,) மற்றும் ப்ரக்ருதி(இயல்பு) ஆகியவற்றிற்கு ஏற்றாற் போல் அமைகிறது.

அ. வயதின்படி

அ 1. குழந்தைகளுக்கு தினமும் 10-12 மணி நேரமும், இளைஞர்களுக்கு 8 மணி நேரமும், மதிய வயதினருக்கு 7 மணி நேரமும், வயோதிகர்களுக்கு 4-6 மணி நேரமும் உறக்கம் அவசியம்.

ஆ. மூன்று குணங்களின்படி

ஆ 1. ஸத்வ குணம் நிரம்பியவருக்கு 4-6 மணி நேரமும், ரஜோ குணம் நிரம்பியவருக்கு 8 மணி நேரமும், தமோ குணம் நிரம்பியவருக்கு 10-12 மணி நேரமும் தினமும் உறக்கம் அவசியம்

இ. ப்ரக்ருதிப்படி

6. உறக்கத்திற்கான காரணங்களும் அதன் செயல்பாடுகளும்

அ. சரீரத்தின் மூலம் செய்யப்படும் வெவ்வேறு காரியங்களால் இந்திரியங்களும் சோர்வடைந்து அவற்றிற்கு ஓய்வு தேவைப்படுகின்றன உறக்கத்தின் மூலமாக இத்தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

ஆ. நாள் முழுவதும் சிந்தனை செய்து மனமும் புத்தியும் சோர்வடைந்த நிலையில் அவற்றிற்கு ஓய்வு தேவைப்படுகிறது. நித்திரை மூலமாக இந்த தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவருக்கு சுற்றி நடக்கும் விஷயங்கள் எதுவும் தெரிவதில்லை. கனவும் வருவதில்லை.

இ. எல்லா இந்திரியங்களும் மனதில் ஒடுங்கிய பின் அதாவது இந்திரியங்களின் எல்லா காரியங்களும் நின்ற பின் உறக்கம் வருகிறது. அச்சமயத்தில் மனிதனின் காதுகள் கேட்பதில்லை, கண்கள் பார்ப்பதில்லை, நாசி நுகர்வதில்லை.

ஈ. எப்போது மனம் பிராணனில் அதாவது சுவாசத்தில் ஓடுங்குகிறதோ, அதாவது மனதின் காரியங்கள் நின்று போகிறதோ அப்போது உறக்கம் வருகிறது.

உ. ஒரு ஒழுங்கிற்குட்பட்ட உணவு, நடவடிக்கைகளை கொண்டவருக்கு அன்றாடம் தேவையான அளவு உறக்கம் வருகிறது.

7. உறங்கும் இடம்

அ, உறங்கும் இடம் சுத்தமாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

ஆ, தாய்-தந்தை, குரு மற்றும் பெரியவர் உறங்கும் அதே அறையில் நாமும் உறங்க வேண்டி இருந்தால் நம் கால்கள் அவர்களை நோக்கி நீட்டாதவாறு வேறு திசை நோக்கி பாயை விரித்து படுத்துக் கொள்ள வேண்டும்.

 

தகவல்: ஸனாதனின் தமிழ் நூல் ‘அமைதியான உறக்கத்திற்கு என்ன செய்வது?’

 

 

Leave a Comment