உறங்கும் திசையின் முக்கியத்துவம்

கிழக்கு-மேற்கு திசையில் படுக்க வேண்டும். இதனால் ஸத்வ, ரஜ, தம ஆகியவற்றின் சமநிலை ஏற்படுகின்றது. அதிகாலையில் கிழக்கு திசையிலிருந்து ஸாத்வீக அதிர்வலைகள் அதிகமாக வெளிப்படுகின்றன. ப்ரம்மரந்திரத்தின் (உச்சந்தலை) வழியாக இந்த ஸாத்வீக அதிர்வலைகள் உடலுள் நுழைகின்றன. அவற்றை க்ரஹிப்பதால் ஜீவன் ஸாத்வீகமாகிறது. அதிகாலை ஸாத்வீக அதிர்வலைகளை க்ரஹித்து ஒரு ஜீவனின் நாள் ஸாத்வீகமாக துவங்குகிறது.

கிழக்கு-மேற்கு முகமாக படுப்பதால் ஜீவனுக்கு கிழக்கு-மேற்கு திசையிலுள்ள மற்றும் இவ்விரு திசைகளின் நடுவே சுழன்று கொண்டிருக்கும் ஈஸ்வர க்ரியா அதிர்வலைகளின் பயன் கிடைக்கின்றது. ஈஸ்வரனின் க்ரியாசக்தி, ஜீவனுக்கு பிரத்யக்ஷமாக காரியத்தில் ஈடுபடும் சக்தியை கொடுக்கின்றது. செயல்பாட்டிலுள்ள கிழக்கு-மேற்கு திசைகளின் உதவியோடு உடலுள் இந்த ஸாத்வீக க்ரியா அதிர்வலைகள் க்ரஹிக்கப்பட்டு, நாபி பிரதேசத்திலுள்ள பஞ்சப்பிராணன் உதவியோடு வேண்டாத வாயுக்களை உடலை விட்டு வெளியே தள்ளுகின்றன. இதனால் ஜீவனின் ப்ராணதேஹமும் ப்ராணமயகோசமும் தூய்மையாகின்றன.

இதற்கு மாறாக, மற்ற திசைகளில் தலை வைத்து படுப்பதால் வாயுமண்டலத்திலுள்ள தமோகுணமான திரியக் அதிர்வலைகள் ஜீவனிடம் ஆகர்ஷிக்கப்பட்டு உடலில் சேருகிறது. இக்காரணத்தால், உறக்கத்தில் கெட்ட கனவுகள் வருதல், சரீரத்தில் அனாவசிய அசைவுகள் ஏற்படுதல், நிலைகொள்ளாமல் தவிப்பது மற்றும் திரியக் அதிர்வலைகளின் உதவியோடு வாயுமண்டலத்தில் சுற்றும் ஏதாவது தீய சக்தி சரீரத்தில் நுழைதல் போன்ற கஷ்டங்கள் ஏற்படுகின்றன. வாயுமண்டலத்தில் திரியக் அதிர்வலைகளின் நடமாட்டம் இந்நிலையில் படுக்கும்போது ஏற்படுவதால் இந்நிலையில் படுப்பதை தவிருங்கள். அதனால் ஒரு நாளை மங்களகரமாக துவங்க கிழக்கு-மேற்கு திசையில் படுக்க வேண்டும்.

தகவல் : ஸனாதனின் தமிழ் நூல் ‘அமைதியான உறக்கத்திற்கு என்ன செய்வது?’

Leave a Comment