நன்றியுணர்வு

‘இறைவனின் படைப்பில் நாம் ஒரு தானியத்தை நட்டால் ஆயிரக்கணக்கான தானியங்களாக விளைகின்றன. உலகத்தில் எந்த ஒரு வங்கியாவது இது போன்ற வட்டியைத் தர முடியுமா? அப்படி என்றால் இந்த அளவிற்கு பல மடங்கு வாரி வழங்கும் இறைவனை சிறிதளவாவது நினைக்க வேண்டாமா! தினையளவாவது நன்றி பாராட்ட வேண்டாமா!

நன்றியுணர்வுடன் இருப்பதால் ஏற்படும் லாபம்

1. தெய்வத்தின் மீதுள்ள ச்ரத்தை அதிகரிக்கிறது.

2. மனதிற்கு விரோதமாக நடக்கும் நிகழ்வுகளிலும் மனதின் ஸ்திரத்தன்மை அதிகரிக்கிறது.

3. ஸாதகர்களிடம் ஏற்படும் எதிர்மறை எண்ணங்கள் குறைந்து மற்றவர் பற்றிய தவறான எண்ணப்பதிவுகளும் குறைகிறது; கற்கும் மனப்பான்மை உண்டாகி மேலே செல்ல முடிகிறது.

4. ஆன்மீக கஷ்டம், பிராரப்தம் (விதி), ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவம் ஆகியவற்றால் உண்டாகும் நிலையை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் உண்டாகிறது; அத்துடன் அஹத்தை எதிர்த்து போராடும் சக்தி கிடைக்கிறது.

5. நன்றியுணர்வுடன் இருப்பதால் ஸாதனை, தொடர் முயற்சியாக தொடர்கிறது மற்றும் விடாமுயற்சி அதிகரித்து அதற்கு துரித கதி கிடைக்கிறது.

6. தெய்வம் அள்ளித் தரும் ஒவ்வொரு க்ஷணத்திலும் ஆனந்தத்தை அனுபவிக்க முடிகிறது.

7. ரஜ-தம இருந்தாலும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சைதன்யத்தை க்ரஹிக்க முடிகிறது.

– குமாரி பூஜா ஜாதவ், ஜல்காவ்.

 

ஸாதகர்களின் ஒவ்வொரு அசைவிலும்
நன்றி கலந்திருப்பதே நன்றியுணர்வு ஆகும்!

 

– கற்பனை மற்றும் சித்திரம் : திருமதி உமா ரவிசந்திரன், சென்னை

தானே மதுரமயமாக விளங்கும் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் ஸாதகர்களுக்கும் அகில சிருஷ்டியை மதுர நோக்குடன் பார்க்கும் சக்தியை ஈந்துள்ளார். இன்று ஸாதகர்கள் ஸாதனையில் உள்ள மாதுர்யத்தை அனுபவிக்கின்றனர். அதற்காக அவரின் சரணங்களில் கோடி கோடி நன்றி!

 

நன்றியுணர்வு எவ்வாறு நிர்மாணமாகிறது?

அ. ‘ஞானம் அடைய வேண்டும் என்ற தாபம் அதிகரிக்கும்போது ஜீவனின் ஆர்வம் ச்ரத்தையாக உருமாறுகிறது. அதாவது ஞானம் கிடைப்பது சம்பந்தமாக இறைவனிடம் நன்றியுணர்ச்சி மிகுகிறது.

ஆ. காரியத்தில் எப்பொழுதும் ஆன்மீக உணர்வு நிலையாக இருக்கும்போது அது வெளிப்படாத ஆன்மீக உணர்வாக உருமாறி நன்றியுணர்வாக பரிணமிக்கிறது.’

– ஒரு வித்வான் ((ஸத்குரு) திருமதி அஞ்ஜலி காட்கில் ‘ஒரு வித்வான்’ என்ற புனைப்பெயரில் எழுதுகிறார். 16.2.2006)

நன்றியுணர்வைக் கொள்வதால் ஸாதகர்களின் அஹம்பாவம் அதிகரிப்பதில்லை, இறுதியில் அஹம் அழிந்த நிலை (மோக்ஷபிராப்தி) ஏற்படுவது சுலபமாகிறது

‘நன்றியுணர்வைக் கொள்வதால் எக்காரணத்தாலும் ஸாதகர்களின் அஹம்பாவம் அதிகரிப்பதில்லை. நன்றியுணர்வு கொள்ளும்போது ஸாதகர் ஸம்பூர்ண புகழையும் குரு அல்லது இறைவனுக்கு அர்ப்பணிப்பதால் ஸாதகரிடத்தில் தான் கர்த்தா என்ற உணர்வு ஏற்படுவது இல்லை. தானே கர்த்தா என்ற உணர்வு எவ்வளவு குறைவாக உள்ளதோ அவ்வளவு அஹம்பாவம் குறைவது சுலபமாகிறது. அதனால் ஒவ்வொருவரும் எவ்வளவு ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட்டாலும் குருவிடம் உள்ள நன்றியுணர்வு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் ஸாதகர்களின் அஹம்பாவம் குறைந்து அத்துடன் அஹம்பாவம் முற்றிலும் அகன்ற நிலையை எட்டுவது சுலபமாகிறது. அஹம் அகன்ற நிலையை எட்டுவது என்பது ‘மோக்ஷபிராப்தி’ அடைவது ஆகும். இதனால்தான் பல மகான்கள் தங்களின் பாடல்களில், அபங்குகளில் மற்றும் காவியங்களில் தங்களின் குருவைப் போற்றி அடி பணிகின்றனர். அதன் மூலம் இப்பாடல்களைப் பயிலும்போது அந்த மகான்களைக் காட்டிலும் அவர்களின் குருமார்கள் மீது அதிக மதிப்பு ஏற்படுகிறது மற்றும் அவர்களிடம் நன்றியுணர்வு ஏற்படுகிறது.’ – குமாரி மதுரா போஸ்லே, 25.9.2005

 

ஒரு பொருளை உபயோகிக்கும்
நபருக்கு அப்பொருளிடம் உள்ள நன்றியுணர்வு எவ்வளவு அதிகமாக உள்ளதோ
அந்த அளவிற்கு பொருளிடமுள்ள சைதன்யம் கூடும்

‘ஒரு பொருளை உபயோகிக்கும் நபருக்கு அப்பொருளிடம் உள்ள நன்றியுணர்வு எவ்வளவு அதிகமாக உள்ளதோ அந்த அளவு அப்பொருள் சைதன்யம் மிகுந்ததாக மாறி ஸ்ரீகிருஷ்ண தத்துவத்துடன் ஒன்றிணைகிறது மற்றும் ஸாதக நிலையைப் பெறுகிறது.’ – திருமதி ஸ்மிதா ஜோஷி, 15.1.2007)

 

நன்றி என்றால் என்ன?

அ. ‘நீங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறீர்கள் மற்றும் அவர் உதவி செய்தால் அவரிடம் நன்றி தெரிவிக்கிறீர்கள். இங்கு நீங்கள் செய்யும் ‘க்ருதி’யையும் இறைவனே செய்விக்கிறார் என்ற ஞானமே ‘க்ருதக்ஞ’ அதாவது ‘நன்றி’ ஆகும். அதாவது நன்றி என்பது காரியம் செய்பவர் யார் என்ற உண்மையை உணர்ந்திருப்பது ஆகும். ‘க்ருத்’ என்றால் ஸத்யம், அதாவது இறைவனாலும் தான் செய்த பிரார்த்தனையாலும் தங்களின் மனோரதம் ஈடேறியது என்ற ஞானத்தைப் பெறுவதே ‘க்ருதக்ஞ’ அதாவது ‘நன்றி’ ஆகும்!’

– திரு. ஸந்தீப் நரேந்த்ர வைத்தி, மும்பை.

ஆ. ‘ச்ரத்தை என்பது நன்றியுணர்வு ஆகும். அத்துடன் வெளிப்படாத ஆன்மீக உணர்வின் பரிணாமம் என்பதும் நன்றியுணர்வு ஆகும்.’ – ஒரு வித்வான் ((ஸத்குரு) திருமதி அஞ்ஜலி காட்கில் ‘ஒரு வித்வான்’ என்ற புனைப்பெயரில் எழுதுகிறார். 16.2.2006)

 

நன்றி மற்றும் நன்றியுணர்வு

21.9.2004 அன்று காலை மணி 7.30 அளவில் நாமஜபம் செய்யும்போது ஸ்ரீ கணபதி மற்றும் ஸ்ரீகிருஷ்ணன் ஆகியோரை பிரார்த்தனை செய்தேன், ‘என் இதயத்தில் உங்களிடம் உள்ள நன்றியுணர்வு மற்றும் சரணாகதி உணர்வு அதிகரிக்கட்டும் மற்றும் ஒவ்வொரு நிமிடமும் விழிப்படைந்து இருக்கட்டும்.’ அப்பொழுது இறைவன் எனக்கு இந்த ஞானத்தை வழங்கினார்.

நன்றி நன்றியுணர்வு
1. அர்த்தம் இறைவனே உனக்கு நான் கடமைப்பட்டுள்ளேன் என வெளிப்படுத்துவதே ‘நன்றி’. இறைவனிடம் எப்பொழுதும் கடமைப்பட்டுள்ளோம் என்ற உணர்வுடன் இருப்பது நன்றியுணர்வு
2. முயற்சியின் அவசியம் ஆன்மீக உணர்வு அதிகரிக்க நன்றியை வெளிப்படுத்துவது அவசியம். இதில் முயற்சி எடுத்து வார்த்தைகளால் நன்றி கூறப்படுகிறது. ஆன்மீக உணர்வு அதிகரித்த பின் சரியான வார்த்தைகளாக நன்றியுணர்வு தானே வெளிப்படுகிறது.
3. எப்பொழுது வெளிப்படுகிறது/வெளிப்படுகின்றன? நிகழ்வு அல்லது காரியம் நடந்த பின் ‘இறைவனே எல்லாவற்றையும் செய்தவர்’ என்ற புரிதல் ஏற்பட்டு நன்றி வெளிப்படுகிறது. காரியம் செய்வதற்கு முன், செய்யும்போது மற்றும் செய்த பின் ‘இறைவனின் சித்தப்படியே எல்லாம் நடக்கின்றன, அவரே செய்விப்பவர்’, என்பதை உணர முடிகிறது.
4. கர்த்தா என்ற உணர்வு எப்பொழுது இறைவனிடம் ஸமர்ப்பிக்கப்படுகிறது? காரியத்திற்கு பின்னர் எப்பொழுதும்
5. அஹம்பாவம் நன்றியை வெளிப்படுத்துவதால் அஹம் குறைகிறது. அஹம் ஏற்கனவே குறைவாக இருப்பதால் நன்றியுணர்வு விழிப்படைந்து ஆன்மீக உணர்விலேயே எப்பொழுதும் இருக்க முடிவதால் அஹம் குறைவாகவே நீடிக்கிறது.
6. ஸாதகரின் நிலை ஆரம்ப நிலை உயர் நிலை
7. ஸாத்வீக மகிழ்ச்சியின் கால அளவு சில மணித்துளிகள் எப்பொழுதும்
8. பரிணாமம் எப்பொழுதும் நன்றி வெளிப்படுவதால் நன்றியுணர்வு விழிப்படைகிறது. குருவருளால் நன்றியுணர்வு விழிப்படைந்து தொடர்ந்து நீடிக்கிறது.
9. நிலை வெறும் வார்த்தைகளாக வெளிப்படும் நன்றி ஸ்தூல நிலையில் உள்ளது. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட நிலை அதி சூட்சும நிலை ஆகும். ஸாதகரின் ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் நன்றியுணர்வு கலந்துள்ளது.

– குமாரி மதுரா போஸ்லே, ஸனாதன் ஆஸ்ரமம், ராம்னாதி, கோவா. 21.9.2004

நன்றியுணர்வுடன் இருக்கும்போது
மனச்சோர்வு ஏற்படாது ஆனந்த நிலையில்
இருப்பதால் ஸாதனையை மேலும் சிறப்பாக செய்ய முடிகிறது!

‘ஸாதகர்கள் ஆளுமை குறைகள் அட்டவணையை நிரப்புகிறார்கள். ஆளுமை குறைகள் குறைய வேண்டும் என்பதற்காக சுய ஆலோசனைகளை வழங்குகின்றனர். ஸாதகர்கள் இவ்வாறு செய்வதே சரியான வழியாகும். ஆனால் பெரும்பான்மை ஸாதகர்கள் ஆளுமை குறைகளை நாள் முழுவதும் நினைத்து துக்கப்படுகின்றனர். சில ஸாதகர்கள் மற்றவரின் குணங்கள் மற்றும் முன்னேற்றத்துடன் ஒப்பீடு செய்து ‘நான் பின்தங்கி உள்ளேன்’ என்று துக்கப்படுகின்றனர். அவர்களுக்கு ஒன்று தெரிவதில்லை, அதாவது மாதம் பத்தாயிரம், ஐம்பதாயிரம் மற்றும் ஒரு லக்ஷம் சம்பளம் வாங்குபவர் தங்களைக் காட்டிலும் அதிக சம்பளம் வாங்குபவருடன் ஒப்பீடு செய்ய ஆரம்பித்தால் அவர்கள் துக்கத்திலேயே ஆழ்ந்திருப்பர். அதற்குப் பதிலாக பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவர் ‘வேலை இல்லாமல் திண்டாடுபவரைக் காட்டிலும் நான் மேல்’ என்றும், ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவர், ‘மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவரைக் காட்டிலும் நான் மேல்’ என்றும், ஒரு லக்ஷம் ரூபாய் சம்பளம் வாங்குபவர், ‘ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவரைக் காட்டிலும் நான் மேல்’ என்றும் சிந்தனை செய்தால் அவர்களுக்கு துக்கம் ஏற்படாது ஆனந்தமே ஏற்படும்.

ஸாதகர்களின் கவனத்திற்கு இவை வருவதில்லை, அதாவது கிடைத்தற்கரிய மனிதப் பிறவியை இறைவன் அளித்துள்ளான், அதிலும் ஸாதனையின் மீது ஈடுபாடு கொள்ள வைத்துள்ளான், ஸாதனைக்கான வழிகாட்டுதலையும் அளித்துள்ளான், ஸாதனை செய்து முன்னேற்றம் அடைய வைத்துள்ளான். இதை நினைவில் இருத்தும்போது ‘பூமியிலுள்ள பெரும்பான்மை மனிதர்களுடன் ஒப்பிடும்போது நாம் எவ்வளவு பாக்கியம் செய்துள்ளோம்’, என்பது கவனத்திற்கு வந்து மனதில் இறைவன் மீது நன்றியுணர்வு மிகும். சுய ஆலோசனை தரும் நேரத்தில் குறைகளை கவனத்திற்கு கொண்டு வந்து அவற்றை நீக்க சுய ஆலோசனை வழங்குவதே சரியான வழிமுறை. அத்துடன் நாள் முழுவதும் ஆன்மீக உணர்வு பூர்வமாக நாமஜபம் செய்து நன்றியுணர்வுடன் இருங்கள். ‘பக்தியுள்ள இடத்தில் பகவான்’ என்பதால் அச்சமயம் மனதில் ஆனந்தத்தை அனுபவிக்க முடிகிறது.

என்னுடைய உதாரணத்தின் மூலம் நன்றியுணர்வுடன் இருப்பதால் ‘சேவை எவ்வாறு செய்ய முடிகிறது மற்றும் மனதிற்கு எவ்வாறு ஆனந்தம் கிடைக்கிறது’ என்பது புரிய வரும். முன்பு நான் எல்லா இடங்களிலும் ஸத்சங்கம், பயிற்சி வகுப்புகள், பெரும் சபாக்கள் ஆகியவற்றில் பங்கு கொள்ள செல்வேன். இன்று என்னால் எங்கும் வெளியே செல்ல முடிவதில்லை என்றாலும் இன்றுவரை இறைவன் நடத்துவித்த காரியங்கள் அனைத்தையும் நினைக்கும்போது என்னால் நன்றியுணர்வுடன் ஆனந்தமாக இருக்க முடிகிறது. அறையிலேயே உட்கார்ந்து இரவு பகல் முழுவதும் நூல் எழுதும் சேவையை ஆனந்தமாக செய்ய முடிகிறது’.

– (பராத்பர குரு) டாக்டர் ஆடவலே

 

ஸாதகர்களே, ஸாதனையில்
முன்னேற்றம் அடைய நன்றியுணர்வுடன் இருங்கள்!

‘ஸாதகர்களால் ஸாதனையில் முன்னேற்றம் அடைய முடியவில்லை என்றாலும் ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தை களைய முடியவில்லை என்றாலும் அவர்கள் தங்களின் ஆன்மீக உணர்வு விழிப்படைய முயற்சி செய்யலாம். ஆன்மீக உணர்வு விழிப்படைந்து விட்டால் ஸாதனையில் உள்ள பல தடைகள் தானே விலகுகின்றன மற்றும் முன்னேற்றமும் ஏற்படுகிறது. அதற்கு அவர்கள் ‘ஆன்மீக உணர்வு விழிப்படைய ஸாதனை’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளபடி முயற்சி செய்தல் நலம். அதைக் கூட பலரால் செய்ய முடிவதில்லை. அவர்கள் மேலும் முயற்சி செய்தால் ஆன்மீக உணர்வு விழிப்படைய உதவி கிடைக்கும்.

‘நீங்கள் தனியாக இருந்து கொண்டு வாழ முடியாது’ என்பதை நினைவில் கொண்டு குடும்பத்தினர் உங்களின் மீது எடுத்துக் கொள்ளும் கவனம், உங்கள் மீது வைத்திருக்கும் அன்பு, மற்றவர் உங்களுக்கு செய்யும் உதவி, அத்துடன் இறைவன் உங்களுக்கு தந்தருளிய ஜீவன் போன்ற தினப்படி வாழ்வில் நடக்கும் உதாரணங்களை படிப்படியாக நினைவு கூர்ந்தால் நன்றியுணர்வு 5 – 6 வாரங்களில் நிர்மாணமாக ஆரம்பிக்கும். பிறகு அது அதிகப்படும். அதன் மூலம் ஸாதனையிலும் முன்னேற்றம் ஏற்பட ஆரம்பிக்கும்.’

– (பராத்பர குரு) டாக்டர் ஆடவலே

(தகவல் : ஸனாதனின் நூல் ‘ஆன்மீக உணர்வின் வகைகளும் விழிப்புணர்வும்’)

Leave a Comment