நவராத்திரி

நவராத்திரியில் ஏன் அகண்ட தீபம் ஏற்ற வேண்டும்?


நவராத்திரியின்போது சூழலில் தேவியின் சக்தி ரூபமான தேஜதத்துவ அதிர்வலைகளின் சஞ்சாரம் அதிகரிக்கிறது. தீபம் தேஜதத்துவத்தை குறிக்கிறது. அதனால் தீப ஒளியால் தேஜதத்துவம் ஆகர்ஷிக்கப்படுகிறது. தீபமேற்றுவதால் வாஸ்துவிலும் சூழலிலும் தேஜ அதிர்வலைகளின் சஞ்சாரம் அதிகமாகி தேஜ தத்துவமும் அதிகரிக்கிறது. பக்தர்களுக்கு அதனால் நன்மை உண்டாகிறது. அதனால் நவராத்திரியின்போது அகண்ட தீபம் ஏற்றுவது மிக முக்கியமானது. எண்ணெய் தீர்ந்ததாலோ, காற்றினாலோ தீபம் அணைந்தால் உடனே ஏற்றி, அதற்கு பரிகாரமாக 108 முறை அல்லது 1000 முறை தேவியின் நாமஜபத்தை செய்யுங்கள்.

கர்பாவின் பவித்ரத்தைப்
பாதுகாத்து தர்மவழியில் செல்லுங்கள் !

 

கண்ணை உறுத்தும் ஆடைகளுடன், ஆண்களும் பெண்களும் சேர்ந்து ஆடுவதை தடுத்து நிறுத்துங்கள் !

சினிமா பாடல்கள், மேற்கத்திய இசையைத் தவிர்த்து, தேவி பாடல்களைப் பாடி கர்பா கொண்டாடுங்கள் !

ஆபாச அசைவுகளுடன் கூடிய ‘டிஸ்கோ-டாண்டியா’வை விடுத்து, பாரம்பரியமான ‘டாண்டியா’வை ஆடுங்கள் !

கர்பா என்பது கேளிக்கை அல்ல, பகவானின் சமூக நிருத்யோபாசனை ஆகும் !

தகவல் : சனாதனின் கையேடு ‘தேவி பூஜையின் சாஸ்திரம்’

Leave a Comment