குருபூர்ணிமா


குருபூர்ணிமா அன்று குரு தத்துவம் (ஈச்வர தத்துவம்) ஆயிரம் மடங்கு அதிக செயல்பாட்டில் உள்ளது. அன்று குரு சேவை மற்றும் குருவிற்காக சகலத்தையும் தியாகம் செய்வதால் ஆயிரம் மடங்கு அதிக பலன் கிடைக்கிறது.

ஞானம் வழங்குபவரை குருவாக மதித்து நடப்பது ஒரு மாணவனின் கடமை. அதனால் குருபூர்ணிமா தினத்தை ஆசிரியர் தினமாக கொண்டாட வேண்டும்.

குருபூர்ணிமா அன்று ‘ஹிந்து ராஷ்ட்ர
ஸ்தாபனம்’ என்ற சங்கல்பத்தை மேற்கொள்ளுங்கள் !

சமர்த்த ராமதாஸ் அவர்கள், ஸ்வதர்ம ஸ்வராஜ்ய ஸ்தாபகரான சத்ரபதி சிவாஜி மகராஜிடம் ‘தர்ம ரக்ஷணத்திற்காக ஸ்வராஜ்யத்தை ஸ்தாபனம் செய்வதே உண்மையான குருதக்ஷிணை’ என்ற மந்திரத்தை அளித்து ஹிந்தவி ஸ்வராஜ்யத்தை ஸ்தாபனம் செய்ய வைத்தார். தர்ம பீடமாக விளங்கும் குருவே உண்மையில் தர்மத்தை காப்பாற்றக் கூடியவர். பாரம்பரிய குரு-சிஷ்ய பரம்பரை நமக்கு கற்றுக் கொடுத்ததை மனதில் உள்வாங்கி சமர்த்தர் தந்தருளிய இந்த மந்திரத்தை மறுபடியும் உபயோகிக்கும் காலம் வந்துவிட்டது.

ஹிந்து தர்ம ரக்ஷணம் மற்றும் ‘ஹிந்து ராஷ்ட்ர ஸ்தாபன’த்திற்காக குருவின் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் ஹிந்துக்களிடையே இதற்கான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் ஸ்ரீ குருவின் நல்லாசிகளுடன் உடல், மனம் மற்றும் செல்வம் மூலமாக செயல்படும் சங்கல்பத்தை இவ்வருட குருபூர்ணிமா சுபதினத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்!

படியுங்கள் : சனாதனின் கையேடு ‘குருக்ருபாயோகம்’

Leave a Comment