ஏகாதசியின் மகத்துவம்

1.   ஆடி மாத மற்றும் கார்த்திகை மாத ஏகாதசியின் மகத்துவம்

வருடம் முழுவதும் 24 முறை வரும் ஏகாதசிகளுடன் ஒப்பிடும்போது ஆடி மாத மற்றும் கார்த்திகை மாத சுக்ல பக்ஷத்தில் வரும் ஏகாதசிகளில் ஸ்ரீவிஷ்ணு தத்துவம் பூமிக்கு அதிக அளவு வருவதால் ஸ்ரீவிஷ்ணுவுடன் சம்பந்தப்பட்ட இந்த இரு ஏகாதசிகளுமே அதிக மகத்துவம் நிறைந்தவை ஆகின்றன.

2.   ஸந்த் ஏக்நாத் மகராஜ் ஏகாதசி பற்றி கூறியுள்ள வர்ணனை

அ. ஏகாதசிகளில் என்னென்ன உற்சவங்கள் நடக்கின்றனவோ அவை பகவானிடம் போய் சேர்கின்றன. பகவான் கூறியுள்ளான், ‘யார் ஏகாதசி விரதம் இருக்கிறார்களோ அவர்களின் வீட்டில் நான் நித்ய வாசம் செய்கிறேன். ஏகாதசி எல்லா பண்டிகைகளிலும் அதி உன்னதமானது. ஏகாதசி விரதம் என்பது எல்லா விரதங்கள் மற்றும் தீர்த்தங்கள் ஆகியவற்றின் ராஜா ஆகும். ஏகாதசி விரதமிருப்பவர் என் குடும்பத்தில் ஒருவர். அவர் எனக்கு மிக பிரியமானவர்.’

ஆ. சாதுர்மாஸ்யத்தில் எல்லா ஏகாதசிகளையும் பல்வேறு ஜெயந்திகளையும் அவற்றிற்குரிய சாஸ்திரப்படி செய்வது நல்லது. சயனி, பிரபோதினி, பவித்ரா போன்ற ஏகாதசிக்கள், அதேபோல் கடினி, நிராஜனி, வசந்ததமனகா ரோபணி போன்ற ஜெயந்தி விழாக் காலங்களில் பல்வேறு பூஜைகள் செய்யப்படுகின்றன. ஆரத்தி மற்றும் தீபமாலா ஏற்றப்படுகின்றன. தாள மிருதங்கத்துடன் உற்சவம் கொண்டாடப்படுகின்றன. உற்சாகத்துடன் கொடிகளைக் கைகளில் ஏந்தி நாமகோஷத்துடன் பாண்டுரங்க தரிசனத்திற்காக யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. காரணம் யார் இந்த தெய்வீக யாத்திரை மேற்கொள்கிறார்களோ அவர்கள் தங்கள் இஷ்ட தெய்வத்தை வீடுகளுக்கு அழைத்து வந்து பிரதிஷ்டாபனம் செய்கின்றனர்.’  (தகவல் : ஸார்த்த ஸ்ரீ ஏக்னாதி பாகவதம், அத்யாயம் 11, ஓவி 1266 முதல் 1282)

ஸந்த் ஏக்நாத் மகராஜ் கூறுகிறார், பாகவதத்தின் பதினோராவது ஸ்காந்தத்தில் பதினோராவது அத்தியாயத்தில் பகவானின் 11 பூஜை ஸ்தானங்கள் கூறப்பட்டுள்ளன. ‘சூரியன், அக்னி, பிராம்மணர், பசு, வைஷ்ணவன், ஆகாயம், வாயு, நீர், பூமி, ஒருவரின் ஆத்மா மற்றும் எல்லா பிராணிகள்  ஆகிய 11 பூஜை ஸ்தானங்கள் உள்ளன.’   (தகவல் : ஸார்த்த ஸ்ரீ ஏக்னாதி பாகவதம், அத்யாயம் 11, ஓவி 1328)

3.   ஏகாதசியில் பதினொன்று (11) என்ற எண்ணின் வர்ணனை

அ. பதினொன்று பூஜை ஸ்தானங்களின் அதாவது சர்வ பூதங்களின் பூஜையை செய்ய வேண்டும்’ என்று ஸந்த் ஏக்நாத் அவர்கள் கூறுகிறார். முதலாம் 1 பூஜை செய்யப்படுபவர் அதாவது பரமாத்மா, பகவானையும் இரண்டாவது 1 பூஜை செய்பவர் அதாவது ஆத்மாவையும் குறிக்கிறது. பூஜை செய்யப்படுபவர், செய்பவர் ஆகிய இருவரிடமும் 1 உள்ளது, அதாவது இருவரும் ஐக்கியமானவர்கள். 11 என்ற எண்ணிக்கை 10 இந்த்ரியங்களையும் ஒரு மனத்தையும் சேர்த்து தேக உணர்வின் சின்னமாக உள்ளது. இந்த உணர்வு சர்வ பிராணிகளிலும் உள்ளது. அதனால் அந்த எல்லா பூதங்களின் பூஜையும் செய்யப்படுகிறது. யார் தன்னுடைய எல்லா போகங்களையும் பகவானுக்கு அர்ப்பணிக்கும் உணர்வுடன் உள்ளனரோ அவர் ஆத்மதத்துவத்தை உணர்ந்தவர் ஆவார். அவர் எங்கும் சமத்வத்துடன் உள்ளார்.’ (தகவல் : ஸார்த்த ஸ்ரீ ஏக்னாதி பாகவதம், அத்யாயம் 11, ஓவி 1447 முதல் 1449)

ஆ. பத்து இந்த்ரியங்கள் மற்றும் ஒரு மனம் ஆகியவற்றை சம்பூர்ணமாக பாண்டுரங்களிடம் அர்ப்பணித்தல் என்பதே ஏகாதசி! ஆடி ஏகாதசி மற்றும் கார்த்திகை ஏகாதசியில் பண்டரிபுர யாத்திரை நடக்கிறது. பாண்டுரங்க தரிசனத்திற்காக வாரகரிகள் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கிறார்கள், அதாவது (1 + 10) அதாவது ஒரு மனம் மற்றும் பத்து இந்த்ரியங்களை சம்பூர்ணமாக பாண்டுரங்கனுக்கு அர்ப்பணிக்கின்றனர்.

தொகுத்தவர் : பராத்பர குரு பரசுராம் மாதவ் பாண்டே (தகவல் : ஸநாதனின் நூல் பண்டரியின் முதல் வாரகரி (பாண்டுரங்கன்)’)

 

Leave a Comment