குருபூர்ணிமா என்பது பகவானிடம் வெளிப்படுத்தப்படும் நன்றியுணர்வு மற்றும் தனக்குள் அதிகப்படுத்தும் சைதன்யம்!

குருபூர்ணிமா மூலமாக உண்மையான அர்த்தத்தில் பயன் கிடைக்க வேண்டுமென்றால் தினமும் ஒவ்வொரு காரியத்தையும் ஆன்மீக உணர்வுபூர்வமாக செய்வது அவசியம். எல்லா காரியங்களும் ஆன்மீக உணர்வுபூர்வமாக நடப்பதற்கு சில விஷயங்களை புத்திபூர்வமாக புரிந்து கொண்டால் அக்காரியம் ஆன்மீக உணர்வு பூர்வமாக நடப்பது சுலபமாகிறது. ‘எல்லா ஸாதகர்களின் ஆன்மீக உணர்வை அதிகப்படுத்தும் முயற்சி துரித கதியில் நடைபெறுவதற்கு இறைவன் எல்லா விஷயங்களின் திட்டத்தையும் எவ்வாறு வகுத்துள்ளான்’, என்பது பற்றி பராத்பர குரு பாண்டே மகாராஜ் அவர்கள் வருடம் 2017-ல் கூறியுள்ள மகத்துவம் நிறைந்த விஷயங்களை இங்கே உங்களுக்கு வழங்குகிறோம்.

பராத்பர குரு பாண்டே மகாராஜ்

‘மனிதனுக்கு ஆனந்தம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இறைவன் இந்த படைப்பை மற்றும் படைப்பிலுள்ள அனைத்துப் பொருட்களை நிர்மாணித்துள்ளான். எல்லாப் பொருட்களிலும் மற்றும் எல்லா ஜீவன்களிலும் பகவானின் சைதன்யம் நிரம்பி உள்ளது’, என்பதை மனதில் கொண்டு காரியங்களை செய்தால் அவற்றிலுள்ள சைதன்யத்திலிருந்து நமக்கு ஆனந்தம் கிடைக்கும். இது போன்று சைதன்யத்துடன் சைதன்யம் இணைவது என்பது மகானந்தத்தை உணர்வது ஆகும். குரு ஸ்மரணத்தால் ஸாதனை மூலமாக நிரம்பியுள்ள சைதன்யத்திடம் நன்றியை வெளிப்படுத்தும் நாளே குருபூர்ணிமா ஆகும்! ‘பகவான் எங்கும் இலவசமாக சைதன்யத்தை நிரப்பி வைத்துள்ளான்’, என்பதை மனதில் இருத்தி பகவானின் சைதன்யத்தை க்ரஹித்துக் கொண்டு நாமத்தின் மூலம் சைதன்யத்தை சம்பாதித்தல் என்பதே குருபூர்ணிமா!

நாம் குருவருளால் வருடம் முழுவதும் ஸாதனை செய்து கிடைத்த சைதன்யத்தை குருசரணங்களில் அர்ப்பணித்து ஸாதனையின் மதிப்பாய்வை செய்யும் நாளே குருபூர்ணிமா! இதற்கு ஒவ்வொரு காரியத்தையும் ஆன்மீக உணர்வுபூர்வமாக செய்து வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஆனந்தத்தை அனுபவிப்பதற்கு குருபூர்ணிமா கொண்டாட வேண்டும். அவ்வாறு செய்யும்போது ‘நாம் தினமும் சைதன்யத்துடன் காரியத்தை செய்கிறோமா?’ என்பதை பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு நடப்பதற்கு ஒவ்வொரு கணமும் பகவானின் அதாவது சைதன்யத்தை உடன் சேர்த்து ஒவ்வொரு காரியத்தை செய்வதன் வழக்கம் மனதில் ஏற்பட வேண்டும்.

குருபூர்ணிமா அன்று குருதத்துவம் ஆயிரம் மடங்கு அதிக அளவு செயல்பாட்டில் உள்ளது. அதன் பயனைப் பெறுவதற்கு நாம் தினமும் ஒவ்வொரு காரியத்தையும் ஆன்மீக உணர்வுபூர்வமாக செய்தால் நம்மிடமுள்ள சைதன்யம் அதிகமாகும்.

 

1. குருபூர்ணிமா அன்று குருதத்துவம்
எப்படி ஆயிரம் மடங்கு அதிகம் செயல்பாட்டில் உள்ளது?

‘குருபூர்ணிமாவின் பயன் எப்படி ஆயிரம் மடங்கு அதிகமாக உள்ளது?’, என்பதை புரிந்து கொள்வதற்கு பகவான் இயற்கையில் எவ்வாறு திட்டம் வகுத்துள்ளான் என்பதை அறிந்து கொள்வது அவசியம். விதையில் மரம் ஆவதற்கான திறன் உள்ளது. விதையிலிருந்து ஆயிரம் மடங்கு அதிக பலன் பெறுவதற்கு விதையை கவனித்து அதை சரியான பூமியில் நட்டு அது மரம் ஆகும்வரை அதாவது அதிலிருந்து பலன் கிடைக்கும்வரை தொடர்ந்து செயல்முறையில் ஈடுபடுவது அவசியமாகிறது. அதேபோல் எந்த விதையிலிருந்து மரம் உருவாகிறதோ மற்றும் எதிலிருந்து நமக்கு ஆயிரம் மடங்கு பலன் கிடைத்துக் கொண்டிருக்கிறதோ அதேபோல் நாமும் ஆரம்பத்திலிருந்து சரியான வழியில் ஸாதனை செய்தால் நமக்கும் குருவருள் கிடைத்து ஆயிரம் மடங்கு அதிக பலன் கிடைக்கும்.

1அ. குருதத்துவம் ஆயிரம் மடங்கு
கிடைப்பதற்கு செய்ய வேண்டிய முன் தயாரிப்பு

எப்படி ஒரு விவசாயி வயலில் விதை விதைத்து ஒரு விதையிலிருந்து ஆயிரம் விதைகளை அறுவடை செய்வதற்கு முயல்கிறானோ அதேபோல் நாமும் ஒவ்வொரு காரியத்தையும் பகவானின் நினைவுடன் ஆன்மீக உணர்வுபூர்வமாக செய்து வந்தால் அந்தக்கரணம் தானாகவே தூய்மையாகி ஆத்ம சைதன்யத்தின் மூலம் நமக்கு ஆனந்த அனுபவம் ஏற்படும். அதன் மூலம் சுலபமாக ‘யோக: கர்மஸு கௌசலம்’ என்பதை உணரலாம்.

(அர்த்தம் : கர்மாவை சமநிலையுடன் கூடிய யோகமாக செய்யும்போது அது உன்னதமாகி கர்மபந்தத்திலிருந்து விடுவிக்கிறது.) இவ்வாறாக காரியமும் மிக சிறப்பாக நடக்கிறது மற்றும் குருவருளால் இறைவனையும் அடைய முடிகிறது.

இது போன்று ‘குருபூர்ணிமா தினத்தில் ஆயிரம் மடங்கு அதிக செயல்பாட்டில் இருக்கக்கூடிய குருதத்துவத்தின் பயனைப் பெறுவதற்கு வருடம் முழுவதும் சரியான வழியில் ஸாதனை செய்வது எவ்வளவு அவசியம் ஆகிறது’ என்பது கவனத்திற்கு வருகிறது. இதுவே குருபூர்ணிமா பூஜையின் முன்னேற்பாடு ஆகும். இதன் மூலம் உண்மையான ஸாதனை நடைபெறுகிறது.

 

2. ஸாதகர்களின் வாழ்வில்
குருவின் அசாதாரண மகத்துவம்

பகவான் ஸத்-சித்-ஆனந்த ஸ்வரூபமானவர். இந்த படைப்பின் ஒவ்வொரு அம்சத்திலிருந்தும் ஆனந்தத்தைப் பெறுவதற்காக மனிதனைப் படைத்துள்ளார் பகவான் மற்றும் ஸாதனை செய்வதற்காக இந்த உடலைத் தந்துள்ளார். அதற்காக அவரது சரணங்களில் நன்றி பாராட்டி ஸாதனை செய்வது மகத்துவம் நிறைந்தது ஆகும். நாம் இந்த உடல் இருக்கும்வரை தான் இப்பூவுலகில் துரித கதியில் ஸாதனை செய்ய இயலும். அதனால் மனிதப்பிறவி அசாதாரணமானது. ‘ஒவ்வொரு அம்சத்திலிருந்தும் ஆனந்தத்தை எவ்வாறு பெறுவது?’, என்பதை குருவே நமக்குக் கற்றுத் தர இயலும். குரு சிஷ்யனுக்கு ‘ஒவ்வொரு அம்சத்திலும் பகவானை எவ்வாறு காண்பது?’ என்பதைக் கூறுகிறார், கற்றுத் தருகிறார் மற்றும் அவன் மூலம் செய்விக்க வைக்கின்றார். நம்முடைய வாழ்வில் சரியான குரு கிடைப்பதற்கு ஸாதனை செய்வது மிகவும் அவசியமானது ஆகிறது.

உலக விவகாரங்களில் எல்லா அம்சங்களுமே கருவிகளாகின்றன. ஆனந்தமே அடையும் லக்ஷியமாகிறது. குருவின் அருள் கிடைக்கப் பெறாததால் மனிதன் உலக சுகங்களில் மாட்டிக் கொள்கிறான். இதற்கு மாறாக குருவானவர், உலக சுகங்களில் சிஷ்யன் மாட்டிக் கொள்ளாமல் ‘அவற்றிலும் இறைவனை எப்படிக் காண்பது?’ என்ற ஞானத்தை வழங்குகிறார். அத்தகைய குருவிற்கு நன்றி செலுத்தும் நாளே குருபூர்ணிமா; இதையே பகவத்கீதையிலும்,

ஈச்வர சர்வபூதானாம் ஹ்ருத்தேசேர்ஜுன திஷ்டதி |
ப்ராமயன்ஸர்வபூதானி யந்த்ரரூடானி மாயயா ||

– ஸ்ரீமத்பகவத்கீதை, அத்தியாயம் 18, ஸ்லோகம் 61

அர்த்தம் : ஹே அர்ஜுனா, அந்தர்யாமியான பரமேஸ்வரன் உங்களை மாயையாகிய சரீர ரூபமான யந்திரத்தில் ஆரூடமாக வைத்து, எல்லாப் பிராணிகளையும் அவரவரின் கர்மப்படி ஆட்டுவித்து எல்லாப் பிராணிகளின் இதயத்திலும் வசிக்கின்றான்.

விளக்கம் : எல்லா படைப்பிலும் பகவானின் சைதன்யமே செயல்படுகிறது. பகவான் எல்லா படைப்புகளையும் அதன் மூலம் கட்டுப்படுத்துகிறான். அதோடு மட்டுமல்லாமல் அந்த எல்லா பிராணிகளின் இதயத்திலும் வீற்றிருந்து செயல்படுகிறான். இதன் அர்த்தம் எங்கும் அவனின் இருப்பே உள்ளது. அவனில்லாமல் காணப்படும் அனைத்துமே பொருளற்றது. கருவியாகவும் அவனே உள்ளான். அதை உணர்ந்து அவற்றை உபயோகித்து ஆனந்தத்தைப் பெறுவதே வாழ்க்கையின் லட்சியம். குருக்ருபாயோகத்தின் மூலமே இதை உணர்ந்து பயன் பெற முடியும்; அதனால் குருவின் மகத்துவம் அசாதாரணமானது. அதற்காக அவருக்கு நன்றி செலுத்தும் நாளே குருபூர்ணிமா ஆகும்.’

– (பராத்பர குரு பாண்டே மகாராஜ் (26.6.2017)

‘சேவை செய்யும்போது ‘இது பகவானின் சைதன்யத்தாலேயே நடைபெறுகிறது’, என்ற ஆன்மீக உணர்வைக் கொள்ளும்போது மனதில் வேறு சந்தேகங்கள் விகல்பங்கள் எழாது. அதன் மூலம் மனோலயமும் ஏற்படுகிறது. மனோலயம் என்பது அகண்டமாக பகவானுடன் தொடர்பில் இருப்பது ஆகும்.’

– (பராத்பர குரு) பாண்டே மகாராஜ்

 

Leave a Comment