பலவற்றிலிருந்து ஒன்றிற்கு செல்வது

ஈச்வரன் ஒன்றாக இருந்தாலும் இந்த உலகம் பற்பலவாக  பரந்து விரிந்துள்ளது. இந்த பலவற்றிலிருந்து ஈச்வரனான ஒன்றிற்கு நாம் செல்ல வேண்டும் என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும். இதை எப்படி சாதிப்பது என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

1. பூஜையறை

ஒவ்வொருவரின் பூஜை அறையிலும் 8 – 10 தெய்வப் படங்கள் இருக்கும். இவ்வளவு அதிக அளவு தெய்வப் படங்கள் வைக்கத் தேவையில்லை. தெய்வப் படங்களைக் குறைக்கவும்.  பூஜையறையில் குலதெய்வம், கணபதி, குலவழக்கப்படி பூஜிக்கப்படும் பாலகிருஷ்ணன், மாருதி அல்லது அன்னபூரணி மற்றும் சிவன் அல்லது துர்கா ஆகிய உச்ச தெய்வங்களில் எந்த தெய்வத்தை உபாஸனை செய்கிறோமோ அதன் படத்தை வைக்கலாம். இவற்றைத் தவிர உள்ள மற்ற தெய்வப் படங்களை விஸர்ஜனம் செய்யவும். நாம் மனிதர்கள் அனைவரும் என்ன பேசுகிறோமோ அவை வார்த்தைகளைக் கொண்டது. நம்முடையது நாதமொழி. தேவர்களுடையது ஒளிமொழி. நம்முடைய நாதமொழியை தேவர்களின் ஒளிமொழியாகவும் தேவர்களின் ஒளிமொழியை நம்முடைய நாதமொழியாகவும் மாற்றும் காரியத்தை ஸ்ரீ கணபதி செய்கிறார். அதனால் கணபதியை பூஜையறையில் அவசியம் வைக்க வேண்டும்.

2. கோவிலுக்கு செல்வது

சிலர் திங்களன்று சிவன் கோவிலுக்கும், செவ்வாய் வெள்ளியன்று அம்மன் கோவிலுக்கும், வியாழனன்று தத்த கோவிலுக்கும், சனியன்று மாருதி கோவிலுக்கும் செல்வர்.  அவ்வாறு செய்வது ஆன்மீகத்திற்கு ஏற்றதல்ல. ஏனென்றால் ஆன்மீகத்தில் ஏதாவது ஒன்றில் மனதை பதிய வைக்க வேண்டும். அதாவது குலதெய்வம் அல்லது உபாஸனை தெய்வத்தின் கோவிலுக்கு செல்ல வேண்டும். அருகில் குலதெய்வம் அல்லது உபாஸனை தெய்வத்தின் கோவில் இல்லையென்றால் அருகிலுள்ள கோவில் தெய்வத்தை, நமது குலதெய்வம் அல்லது உபாஸனை தெய்வத்தின் ஸ்வரூபமாக மனதில் வரித்து அந்த பக்தியோடு ச்ரத்தையோடு அந்த ஒரு கோவிலுக்கு செல்ல வேண்டும். பக்தியிருக்கும் இடத்தில் பகவான் இருப்பான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

3. புராண பாராயணம்

குலதெய்வம் அல்லது உபாஸனை தெய்வத்தின் புராணத்தைப் படிக்க வேண்டும். அநேக புராணங்களை அல்ல, ஏதாவது ஒரு புராணத்தைப் படிக்க வேண்டும். அவ்வாறு படிக்கும்போது இதுவே என் குலதெய்வத்தின் ஒரு ரூபம் என்ற ச்ரத்தையுடன், பக்தியுடன் படிக்க வேண்டும். புராணங்களில் ஆயிரக்கணக்கான வார்த்தைகள் உள்ளன. சிலர், நான் ஞானேச்வரியை எவ்வளவு பாராயணம் செய்தேனோ அந்த அளவு தாஸபோதத்தையும் பாராயணம் செய்துள்ளேன். வெறும் பாராயணம் செய்வதால் என்ன பயன்? ஸந்த் நாமதேவர் என்ன கூறுகிறார்  ஒரு வரியானாலும் அதை அனுபவிக்க வேண்டும். வெறும் பாராயணம் செய்வதைக் காட்டிலும் அந்த நூலில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதை நடைமுறைப்படுத்த முயல்வது அதிக மஹத்துவம் வாய்ந்தது. புராணங்களில் பல்லாயிரக்கணக்கான வார்த்தைகள் வருகின்றன. அவற்றைக் காட்டிலும் ஒரே ஒரு நாமத்தை கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும்.

4. தீர்த்த யாத்திரை

தீர்த்த யாத்திரை செல்வதிலும் இதே கொள்கையைக் கடை பிடிக்க வேண்டும். யாருக்கு குலதெய்வம் உள்ளதோ அல்லது உபாஸனை தெய்வம் உள்ளதோ அங்கு  தீர்த்த யாத்திரை மேற்கொள்ள வேண்டும்.

5. பஜனைகள் பாடுவது

கிராமத்திற்கு கிராமம் பல பஜனை மண்டலிகள் உள்ளன. பஜனைகளில் தெய்வத்தின் நாமஜபத்தை எடுத்துக் கொள், ஸத்ஸங்கத்திற்கு செல், ஸத்ஸேவை செய், ஈச்வரனை அடைய ஏதாவது தியாகம் செய், இறைவனை அடைய வேண்டும் என்ற தாபத்தை வளர்த்துக் கொள் எனக் கூறப்படுகிறது; ஆனால் அவற்றை செயல்படுத்தாமல் எல்லா மக்களும் என்ன செய்கிறார்கள், பெரிய பெரிய பஜனைகளைப் பாடிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். அதாவது சினிமா பாடல்களைப் பாடுவதைக் காட்டிலும் பஜனைப் பாடல்களைப் பாடுவது சிறந்ததுதான்! பல தெய்வங்களின் பஜனைகளைப் பாடுவதைக் காட்டிலும் உங்களின் குலதெய்வம் அல்லது உபாஸனை தெய்வத்தின் பஜனைகளைப் பாடவும்.

6. ஆரத்தி

கணேச சதுர்த்தியின்போது மக்கள் முட்டாள்களைப் போல் ஐந்து-ஐந்து அல்லது பத்து-பத்து ஆரத்திகளைப் பாடுகின்றனர். அண்டை வீட்டார் அரைமணி நேரம் ஆரத்தி செய்கிறார்கள் என்றால் நாங்கள் ஒரு மணி நேரம் செய்வோம் என்பதில் பெருமை கொள்கின்றனர்! கணேச சதுர்த்தியின்போது கணேச தத்துவம் அதிக செயல்பாட்டில் உள்ளது. அதனால் கணபதியின் ஆரத்தியை மட்டும் செய்தால் அதிக பலன் கிடைக்கும். ஸுககர்தா துக:ஹர்தா என்ற ஆரத்தியை பெரும்பான்மையினர் பாடுகின்றனர். இந்த ஆரத்திப் பாட்டில் கணேசரின் நாமங்கள் மூன்று அல்லது நான்கு முறைதான் வருகின்றன. கணபதியின் சக்தி எங்கு உள்ளது, லம்போதரன் என்ற நாமத்தில்தான். ரத்னமணிமய மகுடத்தை தரித்தவர் என்பதெல்லாம் கணபதியைப்  புகழ்வது மற்றும் அவரை வர்ணிப்பது ஆகும். அதில் கணேச தத்துவம் இல்லை. அதனால் ஆரத்தியை மூன்று-நான்கு நிமிடங்களில் முடித்துக் கொண்டு அதற்கு பதிலாக ஸ்ரீ கணேசாய நம: என்ற நாமஜபத்தை அதிகம் செய்வதால் நிச்சயம் அதிக பலன் கிடைக்கும். அதாவது பல ஆரத்திகளிலிருந்து ஒரு ஆரத்திக்கும் ஒரு ஆரத்தியிலிருந்து ஒரு நாமஜபத்திற்கும் படிப்படியாக செல்ல வேண்டும். கணேச சதுர்த்தி போன்ற விசேஷ தினங்கள் அல்லாத ஏனைய தினங்களில் குலதெய்வம் அல்லது உபாஸனை தெய்வத்தின் ஆரத்தியைச் செய்யலாம்.

தகவல் : ஸனாதனின் தமிழ் கையேடு ‘குருக்ருபாயோகம்’

Leave a Comment