ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி காட்கில் அவர்களின் அமுதவசனம் மற்றும் அவர்களின் விலைமதிப்பற்ற வழிகாட்டுதல்

ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி காட்கில்

1.     ‘பாரபட்சம்’ (ஒருவரைப் பற்றிய தவறான அபிப்ராயம் மனதில் ஆழமாக பதிந்து விடுதல்) என்ற ஆளுமை குறையை நேரத்துடன் தூர விலக்காவிட்டால் அது மனிதனின் ஆயுளையே பாழாக்கி விடும்!

‘பாரபட்சம்’ என்ற ஆளுமை குறை இளைஞர்களைக் காட்டிலும் வயதானவர்களிடம் அதிகம் காணப்படுகிறது. இதன் ஒரு காரணம் இவ்வாறாக இருக்கலாம், வயதானவர்கள் ஆயுள் முழுவதும் நடந்த நிகழ்வுகளில் வெளிப்பட்ட ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவ விஷயங்களின் ஸன்ஸ்காரங்கள் என்ற சுமையைத் தாங்கிக் கொண்டு தங்கள் வாழ்வை நடத்துகிறார்கள். திருமணமான, வயதான, குடும்பத்திலுள்ள பெண்களிடம் இதன் பிரமாணம் அதிகம் காணப்படுகிறது. பெண்கள் சில விஷயங்களை வெளிப்படையாக பேசுவது போலவே சில விஷயங்களை மனதிற்குள் பூட்டியும் வைக்கின்றனர். ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பேசும்போது ஒருவரோடு ஒருவர் ஒத்துப் போவது அவ்வப்பொழுது கடினமாக உள்ளது.  ஆண்கள் மனதிலுள்ளதை பெரும்பாலும் வெளியே பகிர்ந்து கொள்வதில்லை. அவர்களும் இவ்வாறு அதில் மாட்டிக் கொள்கிறார்கள். சுருக்கமாக ‘பாரபட்சம்’ என்ற ஆளுமை குறையை நேரத்துடன் தூர விலக்காவிட்டால் அது மனிதனின் ஆயுளையே பாழாக்குகிறது. இந்த ஆளுமை குறையால் வாழ்வில் பல கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன.

‘பாரபட்சம்’ என்ற ஆளுமை குறையுடன் கூட மற்ற ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தை, ‘ஆளுமை குறைகளை மற்றும் அஹம்பாவத்தைப் போக்கும் வழிமுறை’யைப் பின்பற்றி வெற்றி காணலாம்.

2.     ‘பாரபட்சம்’ என்ற ஆளுமைக் குறையைப் போக்க செய்ய வேண்டிய உடல்ரீதியான, மனோரீதியான மற்றும் ஆன்மீக நிலையிலான முயற்சிகள்

2 அ. உடலளவில் : ஸாதனை செய்யும்போது பல நிகழ்வுகள் நம் வாழ்வில் நடக்கின்றன. சேவையில் மற்ற ஸாதகர்களிடம் அல்லது உறவினர்களிடம் இது போன்ற அனுபவங்கள் ஏற்படுகின்றன. ஒவ்வொரு ஸாதகரும் ஸாதனை செய்து ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தைப் போக்க வெகுவாக சிரமப்படுகின்றனர். ஸாதகர்கள் கீழ்க்கூறியுள்ள முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

1.     ஸாதகர்களுடன் சேர்ந்து சேவையில் ஈடுபடும்போது யாராவது ஒரு ஸாதகர் தவறாக ஏதாவது பேசி விடலாம்; அப்போது கூட சேவை செய்யும் ஸாதகர் அதை மனதில் வைத்துக் கொள்ளாமல் அந்நிகழ்வை ஸாதனை கண்ணோட்டத்துடன் பார்க்க முயற்சிக்கலாம். மற்றவர்களிடம் குறைகளைக் கண்டு அப்படியே உட்காராமல் நடந்த தவறைத் தான் ஒப்புக் கொண்டு மீண்டும் உற்சாகத்துடன் சேவையில் ஈடுபடுபவரையே பகவானுக்குப் பிடிக்கும்.

2.     பாரபட்சத்தை மறந்து சஹஜமாக பழகுவது ஆரம்பத்தில் எல்லோருக்குமே கடினமாக இருக்கும். இருந்தாலும் மற்றவர்களின் உதவியை நாடி முயற்சிக்கலாம்.

3.     நடந்த சம்பவத்தைப் பற்றி ஒருவரோடு ஒருவர் மனம் விட்டு உடனடியாக பேசலாம். பணிவாகவும் மற்றவரைப் புரிந்து கொண்டும் பேசுவது அதிக மகத்துவம் வாய்ந்தது.

ஸாதனையின் மிகப் பெரிய தடைக்கல் – பாரபட்சம்

‘பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் ஸாதனை சம்பந்தமாக சொற்பொழிவு ஆற்றும்போது ஒரு பெண் சம்பந்தமான ஒரு சம்பவத்தைக் கூறினார். அப்பெண்ணுக்கு அவரின் மாமியார் கூறிய ஒரு விஷயம் பிடிக்கவில்லை மற்றும் மாமியார் சொன்ன விஷயம் மனதில் ஆழப் பதிந்து விட்டது. பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் அவளிடம் கேட்டார், ‘உன் மாமியார் அப்படி உன்னை என்ன சொல்லி விட்டார்?’ அதற்கு அவள் பதில் கூறினாள், ’50 வருடங்களுக்கு முன்பு கூறினார்! இப்போது அவர்கள் இல்லை. அவர்கள் இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன’. பாரபட்சம் பீடித்த ஒரு சிந்தனை கூட நமக்கு எவ்வளவு பாதகமாக உள்ளது? அதோடு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் அதனால் துக்கப்படுகிறான் என்பதற்கான உதாரணம் இது. அந்தப் பெண் அப்போதே அவளின் மாமியாரிடம் மனம் விட்டு பேசியிருந்தால் இவ்வளவு வருடங்கள் இந்த சிந்தனை அவளைப் பிடித்து உலுக்காது. மாமியார் ஏதோ சொல்லிவிட்டார் என்பதற்காக இவ்வளவு ஆழமாக மனதில் பதிய வைத்தால் குடும்பம் என்னாவது? குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஆனந்தமாக வாழ்க்கை நடத்துவதுதான் மகத்துவம் நிறைந்த விஷயம்.

4.     ஒரு ஸாதகருடன் ஏதாவது இம்மாதிரி நிகழ்வு நடந்தால் அதைப் பற்றியே திரும்பத் திரும்ப யோசிப்பதைத் தவிர்க்கவும்.

5.     சிறு குழந்தையுடன் இது போன்று ஏதாவது நடந்தால், உதாரணத்திற்கு யாராவது அதைக் கோவித்துக் கொண்டிருக்கலாம்; இருந்தாலும் கோவித்துக் கொண்டவர் மீண்டும் குழந்தையைக் கொஞ்சினால் அக்குழந்தை உடனே அவரிடம் ஆனந்தத்துடன் செல்கிறது. ஒரு நிமிடத்திற்கு முன் அவர் கோவப்பட்டதை அது மறந்து விட்டது. இந்த சிறு குழந்தையிடம் பெரியவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அதனால் சிறு குழந்தையைப் பார்க்கும்போதே ஆனந்தமாக உள்ளது; ஏனென்றால் அதன் மனதில் எந்த சிந்தனையும் கிடையாது. அது நிர்மலமாக உள்ளது. அது போன்று மனம் நிர்மலமாவதற்கு ஸாதகர்கள் முயற்சிக்க வேண்டும்.

6.     தினமும் சக ஸாதகர்களைப் பார்க்கும்போது ‘ஆச்ரமத்திற்கு வந்தபின் முதல் நாளில் எந்த ஆன்மீக உணர்வோடு நீங்கள் எல்லா ஸாதகர்களையும் பார்த்தோம்’ என்பதை நினைவில் இருத்தி அதே ஆன்மீக உணர்வைக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

7.     உறவினர்களைப் பற்றி சிந்திக்கும்போது மனதிற்கு இதை எடுத்துச் சொல்லவும், ‘நாம் ஸாதனையில் இருக்கும்போதே நம்முடைய ஆளுமை குறைகளை, அஹம்பாவத்தைக் களைய எவ்வளவு கடின முயற்சி செய்ய வேண்டி உள்ளது? உறவினர்களுக்கு ஸாதனை பற்றிய பேச்சே கிடையாது; ஆளுமை குறைகளைக் களையும் செயல்முறை என்றால் என்ன என்பதும் கூட தெரியாது. இவ்வாறு முயற்சிக்கும்போது நம் மனதிலுள்ள பாரபட்ச சிந்தனைகள் குறைகிறது. இவ்வாறு செய்யும்போது தெய்வத்திடம் பூரண நம்பிக்கை வைக்க வேண்டும் மற்றும் செயல்பாட்டின் முயற்சியையும் தொடர்ந்து செய்ய வேண்டும்.

2 ஆ. மானசீக நிலையில் : மனிதர்களிடம் எழும் நல்ல சிந்தனைகள் மற்றும் தீய சிந்தனைகள் ஆகிய அனைத்தின் மூல காரணம் அவர்களின் மனம்தான். மனம் ஒரு குழந்தை போல் இருக்கிறது. அதை நாம் எவ்வாறு உருவாக்குகிறோமோ அவ்வாறு உருவாகிறது. அதற்கு நல்ல சிந்தனைகளின் ஸன்ஸ்காரங்களைத் தந்தால் அது ‘நல்ல மனம்’ ஆகிறது. அதனிடம் தீய விஷயங்களைச் சொன்னால் அது ‘தீய மனம்’ ஆகிறது. உங்களின் மனசக்தியை நீங்கள் எந்த திசையில் செலுத்துகிறீர்களோ அவ்வாறு அது சென்று காரியங்களை செய்யும். அதனால் உங்களை மனதை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும்.

1.     ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவம் களைதல் செயல்முறையின் ஒரு பகுதியாக பாரபட்சம் என்ற ஆளுமை குறையின் நிகழ்வுகளை குறிப்பெடுத்து, இது சம்பந்தமாக உங்களுடன் நடந்த நிகழ்வில் உங்கள் மூலமாக ஏற்பட்ட தவறை ஒருமுறை பயில வேண்டும்.

2.     ‘அந்த நிகழ்வில் உங்களின் நடத்தையின் மூல காரணம் என்ன? உங்கள் மூலமாக நடந்த தவறுக்கு பாரபட்சம் என்ற ஆளுமை குறை எவ்வாறு காரணமாகிறது?’ ஆகியவை பற்றி பயில வேண்டும்.

3.     மனப்பூர்வமாக மற்றும் புத்திபூர்வமாக உணர்வதற்கு தண்டனை முறையை உபயோகிக்க வேண்டும்.

4.     சம்பந்தப்பட்ட ஸாதகரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு மனதில் நல்ல ஸன்ஸ்காரம் ஏற்பட பாரபட்சம் என்ற ஆளுமை குறை மீது சுய ஆலோசனை வடிவமைத்து தொடர்ந்து சுய ஆலோசனை அமர்வுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

‘மனதில் ஏற்பட்டுள்ள ஆளுமை குறை மற்றும் அஹம்பாவம் என்ற நோய் குணமாக ‘சுய ஆலோசனை’ அமர்வுகளை செய்வதே ராமபாணம் ஆகும்.

2 இ. ஆன்மீக நிலையில் :   எந்த ஒரு காரியமும் இறைவனின் அருளாசி இல்லாமல் பூரணமடைவதில்லை. ஸாதகர்கள் தங்களின் ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தைக் களைய செய்யும் செயல்முறையில் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் ஸங்கல்பம் உள்ளது. ஸாதகர்கள் உண்மையுடனும் தொடர்ச்சியாகவும் இந்த செயல்முறையைப் பயின்று தங்களின் ஆன்மீக முன்னேற்றம் நடக்க குருதேவரின் ஸங்கல்ப சக்தியின் பூரண பயனைப் பெற வேண்டும்.

1.     ‘ஆச்ரமமே குருவின் வீடு’ மற்றும் ஆச்ரமத்தில் வசிக்கும் ஸாதகர்கள் குருவின் பல்வேறு ரூபங்கள்’ என்ற ஆன்மீக உணர்வுடன் அனைவரையும் பார்க்க வேண்டும்.

2.     ஆளுமை குறைகளைக் களைய சம்பூர்ண சரணாகதி உணர்வுடன் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

3.     இதுவரை இந்த ஆளுமை குறைகளால் நடந்த பெரும் தவறுகளுக்காக பகவானிடம் மன்னிப்பு வேண்டுங்கள். அதோடு சக ஸாதகர்கள் மற்றும் உறவினரிடம் (சமய சந்தர்ப்பத்திற்கு தகுந்தவாறு) மன்னிப்புக் கேட்கலாம்.

4.     பாரபட்சம் என்ற ஆளுமை குறைக்கான நிகழ்வுகளை பட்டியலிட்டு சுய ஆலோசனையை வடிவமைத்து அதை முதலில் பகவானின் சரணங்களில் அர்ப்பணம் செய்யுங்கள்.

5.     பாரபட்சம் என்ற ஆளுமை குறைக்கான நிகழ்வுகளை பட்டியலிட்ட பின்னர் அதை சுற்றி நாமஜப மண்டலத்தை உருவாக்கி அந்த எழுத்துகளின் மீது விபூதி, அத்தர் ஆகியவற்றைத் தடவவும். அந்த காகிதத்தை ‘பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் புகைப்பட ஜீவந்தர்ஷன்’ அல்லது சரித்திரம் அல்லது ஸநாதனின் ஏதாவது ஒரு நூலுக்குள் வைக்கலாம். அதன் மூலம் ஈச்வர தத்துவம் செயல்பட்டு நம் மீது ஆன்மீக நிலையில் உபாயங்கள் நடக்கும் மற்றும் ஆளுமை குறைகளை தூர விரட்டுவதற்கான தெய்வபலம் நமக்குக் கிடைக்கும்.

3.     ஆளுமை குறைகளைக் களைவதற்கு குருவருளின் பக்கபலம் அவசியம் தேவை!

நீங்கள் எவ்வளவு முயன்றாலும் ஆளுமைக் குறைகள் விரைவில் நீங்கும் என்று சொல்ல முடியாது. அதற்கு ஸாதனையின் அதாவது குருவருளின் பக்கபலம் மிகவும் அவசியம். குருவருளால்தான் ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தை விரைவில் களைய முடியும் என்பதை ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் அருளால் ஸனாதன் ஸாதகர்களுக்கு ‘ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தைக் களையும் செயல்முறை’யின் மூலமாக எம்மாதிரியான ஒரு ஈடு இணையற்ற ஸஞ்ஜீவனி கிடைத்துள்ளது என்றால் அது கலியுகத்தைத் தாண்டி செல்வதற்காக கிடைத்துள்ள ‘தெய்வீக வரதானம்’ என்று சொல்லலாம். இந்த கோர ஆபத்துக்காலத்தில் நமக்குக் கிடைத்துள்ள பொன்னான வாய்ப்பாகும். ‘இத்தகைய வரதானத்தை ஸாதகர்கள் பூரணமாக பயன்படுத்தி குருவருளைப் பெற வேண்டும்’ என்பதே பகவானின் சரணங்களில் செய்யும் பிரார்த்தனை ஆகும்.’

–    ஸ்ரீசித்சக்தி (திருமதி) அஞ்ஜலி காட்கில்

Leave a Comment