நவதுர்கா 9 – ஸித்திதாத்ரீ!

1.    நவராத்திரியின் ஒன்பதாவது நாள் வெளிப்பட்ட
ஆதிசக்தியின் ‘ஸித்திதாத்ரீ ‘ ரூபம்!

     சித்தகந்தர்வயக்ஷாத்யைரஸுரைரமரைரபி |
     சேவ்யமானா ஸதா பூயாத் ஸித்திதா ஸித்திதாயினி ||

அர்த்தம் : சித்தர், கந்தர்வர், யக்ஷர், அசுரர், தேவர் ஆகிய அனைவரும் யாருக்கு சேவை செய்கிறார்களோ அப்பேற்பட்ட ஸித்திதாத்ரி தேவியே, நீ எங்களுக்கு ஸித்தியை வழங்குவாயாக!

1 அ. அஷ்டமஹாசித்திகள் பெற்றவளும் பக்தர்களின்
இக-பரஇச்சைகளை பூர்த்தி செய்யும் தேவி ஸித்திதாத்ரீ !

நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் ஸித்திதாத்ரீ தேவியின் பூஜை செய்யப்படுகிறது. மார்க்கண்டேய புராணப்படி அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராப்தி, ப்ராகாம்ய, இசித்வ மற்றும் வசித்வ ஆகிய எட்டு சித்திகள் உள்ளன. இந்த சித்திகளை அருள்பவளே ‘ஸித்திதாத்ரீ’’! தேவிபுராணப்படி ஸித்திதாத்ரீயின் அருளால் சிவனுக்கு அஷ்டமஹாசித்திகள் கிடைத்தன மற்றும் அவளின் அருளால் சிவனின் பாதி சரீரம் தேவி ஸ்வரூபமாயிற்று. அதனால் சிவனுக்கு ‘அர்த்தநாரீச்வரர்’ என்ற நாமமும் ஏற்பட்டது. இந்த தேவி தாமரை மீது அமர்ந்துள்ளாள்; நான்கு கரங்களை உடையவள். ஸ்ரீ ஸித்திதாத்ரீதேவி பக்தர்களின் இகலோக மற்றும் பரலோக ஆகிய இரண்டு விதமான இச்சைகளையும் பூர்த்தி செய்கிறாள். எல்லா பக்தர்களும் இறைவனை அடைய வேண்டும் என்று விரும்புவதில்லை. யாருக்கு சித்திகள் வேண்டுமோ அவர்களுக்கு சித்திகளை அருள்கிறாள் மற்றும் யாருக்கு அஷ்டமஹாசித்திகளுக்கு ஸ்வாமியான இறைவன் வேண்டுமோ அவரை இறைவனை அடையுமாறு செய்கிறாள். அதனால் மோக்ஷதாயினி ஆகிறாள். அத்தகைய மோக்ஷதாயினியான ஸித்திதாத்ரீ தேவியின் சரணங்களில் கோடி கோடி நமஸ்காரங்கள்!

1 ஆ. பிரார்த்தனை

‘ஹே ஸித்திதாத்ரீ தேவி, ஸாதகர்களாகிய எங்களுக்கு உலக இச்சைகள் இல்லை; ஆனால் எங்களுக்கு குருசரணங்களை அடைய வேண்டும் என்ற இச்சை மட்டும் உள்ளது. ஹே தேவி, ஸாதகர்களாகிய எங்களிடம் குருபக்தி என்ற இச்சையை உண்டு பண்ணுபவள் நீதான். ஸாதகர்களாகிய எங்களின் பிறப்பு குருசேவை செய்வதற்காகவே ஏற்பட்டுள்ளது. எங்களுடைய இறுதி மூச்சு வரை அதிகபட்ச அளவு குருசேவையில் ஈடுபட வேண்டும் என்பதே உந்தன் சரணங்களில் நாங்கள் செய்யும் பிரார்த்தனை.’

–  திரு. விநாயக் ஷான்பாக் (66% ஆன்மீக நிலை), பெங்களூரு. (26.9.2021)

2.    மஹாமாயா ஆதிசக்தியை சரணடைவதே நமக்குள்ள ஒரே வழி!

2 அ. ‘மனித ரூபத்திலுள்ள தெய்வங்களையும் அசுரர்களையும் அடையாளம்
காண முடியாமல் இருத்தல்’ என்பதும் ஆதிசக்தியின் யோகமாயையே!

இன்று நாம் கலியுகத்தில் இருக்கிறோம். மற்ற யுகங்களைக் காட்டிலும் இந்த யுகம் அதிக ஜடமானது, அதிக ஸ்தூலமானது. இந்த யுகத்தில் பகவான் மனித ரூபத்தில் வந்தாலும் சரி, அசுரர்கள் மனித ரூபத்தில் வந்தாலும் சரி, அடையாளம் காண்பது கடினம். ஆதிசக்தியின் யோகமாயா எவ்வளவு சக்தி வாய்ந்தது என்றால் ‘மனித ரூபத்திலுள்ள தெய்வத்தையும் அல்லது மனித ரூபத்தில் உள்ள அசுரர்களையும் புரிந்து கொள்வது என்பது முடியாத காரியம். இதுவும் ஆதிசக்தியின் யோகமாயையே!

2 ஆ. ஆதிசக்தி என்பவள் பகவானின் சக்திஸ்வரூபம் ஆனதால்
சம்பூர்ண சிருஷ்டி காரியம் இடைவிடாமல் தொடர்ந்து நடத்தல்

ஆதிசக்தி சந்தர்ப்பமாக உள்ள இந்த கட்டுரைகள் மூலமாக ‘ஆதிசக்தி இல்லாமல் நம்முடைய இருப்பே இல்லை’ என்பது கவனத்திற்கு வருகிறது. சுருக்கமாக, ஆதிசக்தி என்பவள் பகவானின் சக்தி ஆவாள். அவளால் பகவான் நிர்மாணித்த சிருஷ்டி சக்கரம் தொடர்ந்து நடக்கிறது. எப்படி நெருப்பிலிருந்து அதன் வெப்பத் தன்மையை பிரிக்க முடியாதோ அதேபோல் பகவானும் அவனின் சக்தியும் ஒன்றேயாகும். நிர்குண பரமாத்மாவின் ஸகுணத்வம் சக்தியால் வெளிப்படுகிறது. முக்குணங்களின் ஆதாரத்தால் ஆதிசக்தி எல்லா காரியங்களையும் நடத்துகிறாள், மற்றவர் மூலமாக நடத்துவிக்கிறாள். தேவர்களாக இருந்தாலும் சரி, அசுரர்களாக இருந்தாலும் சரி, மனிதர்களாக இருந்தாலும் சரி, இவர்கள் அனைவரும் செய்யக்கூடிய காரியங்கள் ஆதிசக்தியின் அருளால் தான் நடக்கின்றன.

2 இ. எல்லாமே ஆதிசக்தியின் இச்சையால்
நடக்கிறது என்பதால் அவளை சரணடைவதே ஒரே வழி!

சிலருக்கு ஒரு கேள்வி எழுகிறது, ‘எல்லாமே ஆதிசக்தியின் இச்சையால் நடக்கிறது என்றால் நாம் ஏன் இவ்வளவு அல்லல்பட வேண்டும்? எதற்கு காரியங்களை செய்ய வேண்டும்? இதற்கான பதிலும் ஆதிசக்தி என்பதே ஆகும். நாம் சும்மா இருப்போம் என்றாலும் நம்மால் சும்மா இருக்க முடிவதில்லை. அநேக விதங்களில் ஆதிசக்தி நம் எல்லோர் மூலமாகவும் காரியங்களை நடத்துவிக்கிறாள். ‘கர்மாக்களை செய்து கொண்டே இருத்தல் மற்றும் ஆதிசக்தியை சரணடைதல்’ என்பது மட்டுமே நாம் செய்யக் கூடியது. நான் கர்மாக்களை செய்ய மாட்டேன் எனக் கூறுவது சரியானதல்ல. ‘எந்த கர்மா நமக்குக் கிடைத்துள்ளதோ அதை சரியானபடி செய்வதற்குரிய சக்தியும் நமக்குக் கிடைக்கட்டும்’ என்ற பிரார்த்தனையை ஆதிசக்தியின் சரணங்களில் செய்வோம்.

அத்தகைய ஆதிசக்தியை நினைத்து ஆழ்ந்த பக்தியில் திளைக்கும் 9 நாட்களே ‘நவராத்திரி’ ஆகும்! ஆதிசக்தியின் அருள் எல்லோருக்கும் சமமாகவே உள்ளது; ஆனால் யாருக்கு எந்த அளவு பக்தி உள்ளதோ அந்த அளவு தேவியின் அருளும் கிடைக்கிறது.

2 ஈ. நன்றி

துர்கா, லக்ஷ்மி, ஸரஸ்வதி சரணங்களில் நன்றி!

இந்த நவராத்திரி நிமித்தமாக என் மூலமாக இந்தக் கட்டுரைகளை எழுதுவித்த ஆதிசக்தி ஜகதம்பா சரணங்களில் கோடி கோடி நன்றி கலந்த நமஸ்காரங்களை செய்கிறேன். மகரிஷி வியாசர் எழுதிய ஸ்ரீமத்தேவிபாகவத புராணங்களாலும் மற்ற சக்தி உபாசகர்கள் எழுதியுள்ள ஆழ்ந்த கருத்துகள் நிறைந்த கட்டுரைகளாலும் இந்த விஷயங்களை எழுத முடிந்தது. அவர்களின் சரணங்களில் என் நன்றியை தெரிவிக்கிறேன். குருதேவரின் அருளால் இவை எழுத்து வடிவத்தில் வெளிப்பட்டுள்ளன. குருதேவரின் அருளால் இவற்றை எழுதும்போது ஆதிசக்தி மீதுள்ள என் ச்ரத்தை அதிகமாயிற்று, அன்னையின் மீது அன்பு பெருகியது. ஆதிசக்தி மீது பக்தியுணர்வை நம் மனதில் ஏற்படுத்தியுள்ள பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் சரணங்களில் எவ்வளவு நன்றி தெரிவித்தாலும் அது குறைவே.

‘ஆதிசக்தி சம்பந்தமாக இது போன்ற பல கட்டுரைகளை என் மூலமாக எழுதுவிக்க வேண்டும் என்பதே ஆதிசக்தி அன்னையின் பாதங்களில் நான் செய்யும் பிரார்த்தனை.’

– திரு. விநாயக் ஷான்பாக் (66% ஆன்மீக நிலை), பெங்களூரு. (26.9.2021)

3.    பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள்
ஸாதகர்களின் மூலமாக நடத்துவித்த ஆதிசக்தியின் உபாசனை!

3 அ. பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள்
ராம்நாதி ஆச்ரமத்தில் பவானி கோவில் எழுப்புதல்!

ப.பூ. குருதேவர் ஸாதகர்கள் மூலமாக பலவிதங்களில் ஆதிசக்தி உபாசனை நடக்குமாறு செய்துள்ளார். அதோடு ஸாதகர்களின் மனங்களில் ஆதிசக்தி மீது அன்பும் பக்தியும் நிர்மாணமாக செய்துள்ளார். ‘ஆதிசக்தியின் அருள் ஸாதகர்களுக்கு நிரந்தரமாக தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் ஸாதகர்கள் தொடர்ந்து பக்தி செய்ய வேண்டும் என்பதற்காகவும் குருதேவர் ராம்நாதி ஆச்ரமத்தில் ஸ்ரீ பவானிதேவி கோவிலைக் கட்டியுள்ளார். எந்த ஒரு கோவிலும் சாஸ்வதம் இல்லை; ஆனால் இந்த இடத்திலுள்ள தேவியின் சக்தி ஊற்று மட்டும் சாஸ்வதம் ஆகும். குருதேவர் தன்னுடைய கரகமலத்தினால் பவானி தேவியின் பிராணபிரதிஷ்டை செய்துள்ளதால் அந்த மூர்த்தியில் சக்திபீடத்தை ஒத்த சக்தி ஊற்று நிர்மாணமாயுள்ளது.

3 ஆ. ஆதிசங்கரர் கூறியுள்ளபடி தேவியின் 108 சக்திபீடங்களில்
ஒரு சக்திபீடமான கோமந்தக்கில்  உள்ள கைவல்யபுரி (கவளே, கோவா)
ஸனாதனின் ஆச்ரமத்திற்கு அருகே இருத்தல்

பூமியின் சிறப்பு என்னவென்றால் ஆதிசக்தியின் சக்திபீடங்கள் வெறும் 51 மட்டும் இல்லாமல் மற்றும் பலவும் உள்ளன. ஆதிசங்கரர் கூறியுள்ள தேவியின் 108 சக்திபீடங்களில் கோமந்தக்கில்  உள்ள கைவல்யபுரியும் ஒரு சக்திபீடமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கைவல்யபுரி என்பது இன்றைய கோவாவில் உள்ள கவளே கிராமம் ஆகும். இங்கு மிகவும் பிரபலமான ஸ்ரீ சாந்தாதுர்கா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சிறிது தொலைவிலேயே ஸனாதனின் ராம்நாதி ஆச்ரமம் உள்ளது. ஆஸ்ரமத்தின் நுழைவாயில் அருகில் ஸ்ரீ பவானிதேவியின் கோவில் உள்ளது. ஸ்ரீ சாந்தாதுர்காவைப் போன்று ஸ்ரீ பவாநிதேவியும் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறாள். ஆதிசக்தியின் அகண்ட சக்தி ஊற்று ஸாதகர்களுக்கு ராம்நாதி ஆச்ரமத்தின் ஸ்ரீ பவானிதேவி கோவில் மூலமாக கிடைக்கச் செய்த பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் சரணங்களில் ஸாதகர்களாகிய நாங்கள் கோடி முறை நன்றி செலுத்துகிறோம்.

ஸ்ரீ பவானிதேவி

ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்தஸாதிகே  |
சரண்யே த்ரயம்பிகே கெளரி நாராயணி நமோஸ்துதே ||

அர்த்தம் : எல்லா மங்கள பொருட்களிலும் உள்ள மாங்கல்ய ஸ்வரூபிணி, பவித்ரமானவளே, எல்லா இச்சைகளையும் பூர்த்தி செய்யக் கூடிய, எல்லோரின் சரணடையும் ஸ்தானமான த்ரிநேத்ரதாரிணி, ஹே கௌர வர்ணமுடைய நாராயணி தேவி (ஸ்ரீ துர்கா தேவி), நான் உன்னை நமஸ்கரிக்கிறேன்.’

– திரு. விநாயக் ஷான்பாக், பெங்களூரு. (26.9.2021)

 

 

 

Leave a Comment