1. நவராத்திரியின் ஏழாவது நாள் வெளிப்பட்ட
ஆதிசக்தியின் காலராத்ரி ரூபமாகிய சுபங்கரி!
1 அ. நவராத்திரியின் ஏழாவது நாள் வெளிப்பட்ட ஆதிசக்தியின் ‘காலராத்ரி’
என்ற ஸ்வரூபம் மிக பயங்கரமானதால் அந்த ரூபத்தைப் பார்த்து எல்லா அசுரர்கள்,
பூதங்கள், பிரேதங்கள் பயப்படுகின்றன; ஆனால் அவள் சுப பலன்களைத் தரும்
சுபபலதாயினி ஆனதால் அவளை ‘சுபங்கரி’ என்றும் கூறுவர்
நவராத்திரியின் ஏழாவது நாள் அன்று காலராத்ரி தேவிக்கு பூஜை செய்யப்படுகிறது. காலராத்ரி தேவியின் நிறம் கருப்பு ஆகும். இந்த தேவியின் உள்மூச்சு வெளிமூச்சில் அக்னி ஜ்வாலை வெளிப்படுகிறது. பிரம்மாண்டம் போன்ற கோள வடிவத்தில் மூன்று கண்கள் உள்ளன. அவளின் வாஹனம் கழுதை ஆகும். காலராத்ரி தேவியின் ரூபம் பயங்கரமானதாகும்; ஆனால் சுப பலன்களைத் தருபவள் அவள். அதனால் காலராத்ரி தேவியை ‘சுபங்கரி’ (மங்களதாயினி) எனவும் கூறுவர். காலராத்ரி தேவி என்பவள் ஆதிசக்தியின் அழிக்கும் ரூபமாகும். தேவியின் இந்த ரூபத்தைப் பார்த்துவிட்டு எல்லா அசுர, பூத, பிரேதம் ஆகியோர் பயப்படுகின்றனர். காலராத்ரி தேவியின் உபாசனையை செய்வதால் க்ரஹபீடை, அக்நிபயம்,ஜலபயம், ஜந்துபயம் மற்றும் சத்ருபயம் ஆகியவை தூர விலகுகிறது. காலராத்ரி தேவி சுபங்கரி ஆனதால் அவள் பாபநாசினியாகவும் புண்யப்ரதாயினியாகவும் இருக்கிறாள். காளி, காளிகா ஆகிய ரூபங்களும் கூட காலராத்ரியின் ரூபங்களே.
1 ஆ. பிரார்த்தனை
‘ஹே காலராத்ரி தேவி, இந்த உலகத்தில் தேவர் மற்றும் அசுரர் ஆகிய இரு ரூபங்களும் உன்னுடையதே. நீயே தேவர்கள் மற்றும் அசுரர்களின் தாயாக விளங்குபவள். எப்போது அசுரர்களின் கை ஓங்குகிறதோ, தர்மத்திற்கு தீங்கு ஏற்படுகிறதோ அப்போது நீ அசுரர்களை அழிக்கிறாய். இன்றும் பூமியில் அசுர இயல்புடையவர்கள் பெரும் அட்டூழியம் செய்து வருகிறார்கள். அவர்கள் பூமியில் பெண்கள் மீதும் பலமற்றவர் மீது பல அக்கிரமங்களை செய்கின்றனர். மனிதர்கள் இடையே நாஸ்திகவாதம் அதிகரித்துள்ளது மற்றும் மிருக குணமும் பெருகியுள்ளது. ஹே மகாகாலஸ்வரூபிணி, காலராத்ரி தேவி, இன்று நீ இந்த அசுர இயல்புடையவர்களை அழிக்க வெளிப்படுவாய் அம்மா, அவர்களை அடியோடு அழிப்பாய் தாயே’, இதுவே உந்தன் சரணங்களில் நாங்கள் செய்யும் பிரார்த்தனை.’
– திரு. விநாயக் ஷான்பாக் (66% ஆன்மீக நிலை), பெங்களூரு. (23.9.2021)
2. ஆதிசக்தி ‘ரக்தபீஜன்’ என்ற அசுரனை எவ்வாறு வதம் செய்தாள்?
2 அ. ஒரு விஞ்ஞான சித்தாந்தப்படி ‘சக்தியை நிர்மாணிக்கவும் முடியாது,
அழிக்கவும் முடியாது, ஒரு சக்தியை இன்னொரு சக்தியாக மாற்ற மட்டுமே முடியும்’
விஞ்ஞான சித்தாந்தம் ஒன்று உள்ளது ‘‘சக்தியை நிர்மாணிக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது, ஒரு சக்தியை இன்னொரு சக்தியாக மாற்ற மட்டுமே முடியும்’. (Energy cannot be created nor destroyed; it can only be changed from one form to another.)
எந்த நியமத்தை இப்போது விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ளதோ அது சிருஷ்டிக்கு முன்பிருந்தே உள்ளது. தீய சக்தி என்பது ஒரு வகை சக்தி ரூபம்; ஆனால் அதன் கர்மா, சிந்தனை மற்றும் லட்சியம் விரோத போக்குடன் இருப்பதால் அதை ‘தீய சக்தி’ என்கிறோம். தீய சக்தி எப்போதும் மரிப்பதில்லை; ஆனால் அதன் சக்தி குறைந்து போகிறது. அதன் சக்தி குறைந்தால் அது மறுபடியும் பாதாளத்திற்கு சென்று ஸாதனை செய்து சக்தியை அதிகப்படுத்திக் கொண்டு பூமிக்கு திரும்ப வருகிறது’ என்று ஆன்மிகம் சொல்கிறது. ஜெய-விஜய இருவரும் பூமியில் ஹிரண்யாக்ஷன்-ஹிரண்யகசிபு, ராவணன்-கும்பகர்ணன் மற்றும் சிசுபாலன்-தந்தவக்ரன் ஆகிய ரூபங்களில் பிறந்தனர். மகாபாரத யுத்த சமயத்தில் நரகாசுரன் சூரியபுத்திரனான கர்ணனுள் பிரவேசித்தான், அதன் பலனாக தானங்களில் சிறந்த கர்ணனுக்கு துரியோதனன் பக்கம் யுத்தம் செய்ய வேண்டும் எனத் தோன்றியது.
2 ஆ. ரம்பனின் சிதாக்னியிலிருந்து ரக்தபீஜன் தோன்றுதல்,
ஆதிசக்தியான ஜகதம்பிகை பல ரூபங்களை எடுத்துக் கொண்டு
பல அசுரர்களை வதம் செய்தல், அதன் பின் சும்பன் மகாபராக்ரமியான
‘ரக்தபீஜனை’ தேவியுடன் யுத்தம் புரிய அனுப்புதல்
ரம்பன் என்ற மகாபலசாலியான அசுரனின் இன்னொரு ரூபமே ‘ரக்தபீஜன்’ ஆகும். ரம்பனின் சிதாக்னியிலிருந்து ரக்தபீஜன் தோன்றினான். மகிஷாசுரனின் வதம் நடந்த பிறகு சும்ப-நிசும்ப என்ற பெயர்களுடைய மகாபராக்கிரம் பொருந்தியவர்கள் ராக்ஷசர்களின் ராஜாவாக ஆகிறார்கள். அவர்களின் ஆதிபத்தியத்தில் உள்ள ரக்தபீஜன் என்ற அசுரன் அதிக பராக்கிரமம் கொண்டவன் மற்றும் புத்திசாலியும் கூட. சும்ப-நிசும்பர்களை வதம் செய்ய ஆதிசக்தி ஜகதம்பா பல ரூபங்களை தரிக்கிறாள். தேவியோடு நடந்த யுத்தத்தில் சும்ப-நிசும்ப சேனையில் உள்ள பல பெரிய பராக்கிரமசாலிகள் மற்றும் அசுரர்கள் மடிகின்றனர். சும்ப-நிசும்பர்களின் சேனாபதிகளான சண்ட-முண்டர்களும் கூட தேவியுடனான யுத்தத்தில் மடிகின்றனர். சண்ட-முண்டர்களை வதம் செய்ய தேவி சண்டி மற்றும் சாமுண்டா ஆகிய ரூபங்களை தரித்துக் கொள்கிறாள். சண்ட-முண்டர்கள் இறந்த பின் சும்பன் மகாபராக்கிரமசாலியான ரக்தபீஜன் என்ற அசுரனை அனுப்புகிறான். தேவி யுத்த பூமியில் மத்திய பாகத்தில் சிம்மத்தின் மீது வீற்றிருக்கிறாள். அவளின் சண்டி, சாமுண்டா, அம்பிகா, காளி ஆகிய ரூபங்கள் அசுரர்களுடன் போரிடுகின்றனர்.
2 இ. ரக்தபீஜனின் ஒரு துளி ரத்தம் பூமி மீது சிந்தினாலும் அதிலிருந்து
அவனைப் போன்ற சக்திசாலியான இன்னொரு ரக்தபீஜன் உருவாவான்
என்பது அவன் சிவனிடமிருந்து வாங்கிய வரம்
ரக்தபீஜன் தேவியுடன் யுத்தம் செய்ய வருகிறான் மற்றும் ஆரம்பத்தில் தேவியின் சிம்மத்தின் மீது தாக்குதல் நடத்துகிறான். தேவி பாணமிட்டு அவனை மூர்ச்சையாக செய்கிறாள். சிறிது நேரத்தில் அவன் நினைவு திரும்புகிறது. நினைவு திரும்பியவுடன் மிகுந்த கோவத்துடன் அவன் தன் மாயாவி சக்தியை உபயோகிக்கிறான். அவனிடமுள்ள முக்கிய மாயாவி சக்தி என்னவென்றால் அவன் உடலிலிருந்து பூமியில் விழும் ஒவ்வொரு துளி ரத்தத்திலிருந்து அவனை ஒத்த பலமும் பராக்கிரமும் நிறைந்த அசுரன் உருவாவான் என்பதே. அதனால் அவனுக்கு ‘ரக்தபீஜன்’ என்ற காரணப் பெயர் ஏற்பட்டது. அவன் பகவான் சிவனிடமிருந்து இதை வரமாகப் பெற்றிருந்தான். சாபத்திற்கு சாப விமோசனம் இருப்பது போல் விசித்திர வரத்திற்கும் விமோசனமாக ஏதாவது ஈச்வர யுக்தி உள்ளது. அதன்படி தெய்வங்கள் அசுரர்களுக்கு வரதானம் வழங்கும்போதும் ஏதாவது ஒரு கதவை திறந்தே வைத்திருப்பார்கள், பின்பு அதன் மூலம் அந்த அசுரனை வதம் செய்வார்கள்.
யுத்தபூமியில் ஆதிசக்தியின் பல ரூபங்கள் வெளிப்பட்டன. இறுதியில் ஸ்ரீவிஷ்ணுவின் சக்தியான வைஷ்ணவி தேவி கருடன் மீது அமர்ந்து யுத்த பூமிக்கு வந்தாள் மற்றும் தன் சக்ராயுதத்தால் ரக்தபீஜனின் சிரசை துண்டித்தாள். கழுத்திலிருந்து பீறிட்ட ரத்தம் பூமியில் விழுந்தது. விழுந்த ஒவ்வொரு துளி ரத்தத்திலிருந்தும் ஒரு அசுரன் உருவானான். எங்கெங்கு ரக்தபீஜனின் ரத்தம் விழுந்ததோ அங்கெல்லாம் அவனை ஒத்த ஒவ்வொரு அசுரர் உருவானார். பிரம்மாணி, மாஹேச்வரி, ஐந்த்ரீ, நாரசிம்ஹி, வாராஹி போன்ற பல தேவியர் ரக்தபீஜன் மீது சஸ்திரங்களை எய்தனர். ஆனால் ஒவ்வொரு வேளையும்பலமடங்கு ரக்தபீஜனை ஒத்த அசுரர்கள் உருவானார்கள்.
2 ஈ. ஆதிசக்தி காளிதேவியிடம் ரக்தபீஜனின் உடலிலிருந்து சிந்தும் ஒவ்வொரு
துளி ரத்தத்தையும் பருக சொன்னாள், அதன் மூலம் ரக்தபீஜன் அழிக்கப்பட்டான்
இறுதியில் ஆதிசக்தி ஜகதம்பா காளியைப் பார்த்து கூறினாள், ‘ஹே காளி, நீ உன் வாயைத் திறந்து ரக்தபீஜநிடமிருந்து விழும் ஒவ்வொரு துளி ரத்தத்தையும் பருகுவாய். நானும் மற்ற தேவிகளும் சேர்ந்து ரக்தபீஜனின் மற்ற ரூபங்களை வதம் செய்கிறோம். ஹே தேவி, அவனின் ஒரு துளி ரத்தம் கூட கீழே பூமியில் விழாதவாறு முழுவதையும் பருகி விடு. இந்த ஒரே உபாயம்தான் உள்ளது. நான் ரக்தபீஜனை வதம் செய்த பின் நீ அவனை முழுவதும் கபளீகரம் செய்து விடு.’ ஆதிசக்தி இவ்வாறு கூறியதைக் கேட்டு காளி தேவி ரக்தபீஜனின் உடலிலிருந்து வெளியே வரும் ஒவ்வொரு துளி ரத்தத்தையும் பருக ஆரம்பித்தாள். தேவி ரக்தபீஜனின் ஒவ்வொரு அங்கமாக வெட்ட வெட்ட காளி தேவி அதை கபளீகரம் செய்தாள். பிறகு காளி ரக்தபீஜனை முழுவதுமாக கபளீகரம் செய்தாள். ஒரு துளி ரத்தம் கூட மிஞ்சவில்லை. இது போன்று ரக்தபீஜனின் வதம் நடந்தது. ரக்தபீஜனை வதம் செய்து தேவி, சம்பூர்ண படைப்பை ஆனந்தத்தில் முழுக செய்தாள். எல்லா தேவதைகளும் ரிஷி முனிவர்களும் ஆதிசக்தி ஜகதம்பா மீது மலர்மாரி பொழிந்தனர்.
2 உ. ரக்தபீஜனைப் போன்ற தீய இயல்புடையவர் மீண்டும் பூமிக்கு வருதல்
ரக்தபீஜ அசுரனைப் பற்றி கூறுவதன் தாத்பர்யம் தற்போது பூமியில் மீண்டும் ரக்தபீஜனைப் போன்ற தீய இயல்புடையவர் நிறைந்திருப்பது தான். இது போன்று தீய இயல்புடையவர் எல்லா தேசங்களிலும் உள்ளனர். அவர்களின் எண்ணிக்கை ரக்தபீஜனின் ஒவ்வொரு துளி ரத்தத்திலிருந்து முளைத்தெழும் அசுரர்களைப் போன்று நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இது போன்றவர்கள் கலியுக ரக்தபீஜ அசுரர்கள் என்று நாம் கொள்ளலாம். ரக்தபீஜனை மனிதரால் மாய்க்க முடியாது. அதை தேவியால் மட்டுமே செய்ய முடியும். ஆனால் ‘இதை எப்போது எப்படி செய்வார்’ என்பது பகவானுக்கே தெரியும்.
நாம் நம் பக்தியை எந்த அளவிற்கு அதிகரிக்க வேண்டும் என்றால் அதன் மூலம் தேவி உடனே பிரசன்னமாகி தீயவர்களை அழிக்க முற்பட வேண்டும். எந்தப் பெரிய தீய சக்தியையும் அழிக்கக் கூடிய சக்தி அவளே. தேவியின் பக்தர்களாகி அவளின் அருளுக்கு நாம் பாத்திரமாவோம். ஜகதம்ப, போற்றி, போற்றி!
– திரு. விநாயக் ஷான்பாக் (66% ஆன்மீக நிலை), பெங்களூரு. (23.9.2021)
3. பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் ஸாதகர்களின்
மூலமாக நடத்துவித்த ஆதிசக்தியின் உபாசனை!
பராத்பர குரு டாக்டர் ஆடவலே
ஸநாதனின் ஸாதகர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருந்தாலும்
பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் அருளால் ‘தர்மரக்ஷணத்திற்காக
பல போராட்டங்கள், நீதிமன்ற போராட்டங்கள் போன்ற பல வெற்றிகரமான
போராட்டங்கள் நடத்தியதால் அவர்களிடம் தேஜ தத்துவம் விழிப்படைந்துள்ளது,
இதுவே ஆதிசக்தியின் உபாசனையும் ஆகிறது
‘ஆதிசக்தி என்றால் தைரியம், பராக்கிரமம் மற்றும் வெற்றி ஆகும்! ஸனாதன் ஸன்ஸ்தாவில் பெரும்பான்மை ஸாதகர்கள் பெண்கள் ஆகும், அவர்கள் வீட்டைப் பார்த்துக் கொள்கின்றனர். ஸநாதனின் இளம் ஸாதகர்கள் சமூகத்தில் உள்ள சாமான்யரைப் போன்று எளிமையானவர்கள். ஸனாதன் ஸன்ஸ்தாவில் உடல்பலம், பணபலம் அல்லது அரசியல் பலம் போன்ற எதுவும் இல்லை. ஆனால் பராத்பர குரு டாக்டர் ஆடவலே ஸாதகர்களிடம் பாவபக்தி என்ற பலத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த பாவபக்தியின் பலத்தால் சில ஆயிரம் ஸாதகர்கள் ‘தர்மரக்ஷண போராட்டம், நீதிமன்ற போராட்டம், கோவில் ஊழலை எதிர்த்துப் போராட்டம் ஆகியவற்றில் வெற்றி கண்டுள்ளனர். அதோடு மிக சாதாரணமாக உள்ள ஸநாதனின் ஸாதகர்கள் பராத்பர குருதேவரின் அருளால் தர்ம விழிப்புணர்விற்காக அசாதாரணமான தர்மவிழிப்புணர்வு சபாக்களில் பங்கேற்கின்றனர்.பராத்பர குருதேவரின் இயக்கம், போராட்டங்கள், தர்மசபாக்கள் போன்றவற்றின் மூலம் ஸாதகர்களிடம் வீர உணர்வு நிர்மாணமாகிறது. குருதேவர் ஒருவிதத்தில் ஸாதகர்கள் மூலமாக ஆதிசக்தியின் உபாசனையை நடத்துவித்துள்ளார். எங்கு தைரியம் உள்ளதோ, அங்கு ஆதிசக்தி உள்ளதே!
யா தேவீ ஸர்வபூதேஷு த்ருஷ்ணாரூபேண ஸம்ஸ்திதா |
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: ||
– ஸ்ரீதுர்காஸப்தசதி, அத்யாயம் 5, ஸ்லோகம் 35
அர்த்தம் : எந்த தேவி எல்லா ஜீவராசிகளிடத்தும் த்ருஷ்ணா ரூபமாக இருக்கிறாளோ அந்த தேவியை மும்முறை நமஸ்கரிக்கிறேன். ‘
– திரு. விநாயக் ஷான்பாக் (66% ஆன்மீக நிலை), பெங்களூரு. (23.9.2021)