ஒவ்வொரு அமாவாசை மற்றும் பௌர்ணமி அன்று  கண்களை சுற்றி உள்ள சூட்சும கருப்பு சக்தி படலத்தை   அகற்றவும்  

ஸத்குரு (டாக்டர்) முகுல் காட்கில், Ph.D

தீய சக்திகள்  அமாவாசை மற்றும் பௌர்ணமி  நாட்களில் அதிக ஆற்றலுடன் இருக்கும். எனவே அவை சுற்றுப்புற சூழலில் அதிக செயல்பாட்டுடன் இருக்கும்.

நம்மைச் சுற்றியுள்ள அனைத்தையும் புரிந்துகொள்ள,  ஐம்புலன்களில் பெரும்பாலும் நம் கண்களையே பயன்படுத்துகிறோம்; எனவே, கண்கள் நல்ல மற்றும் கெட்ட அதிர்வுகளை  உள் வாங்கி கொள்கின்றது. அமாவாசை மற்றும் பௌர்ணமியில் சுற்றுப்புறசூழலில் தீய சக்திகள் அதிக செயல்பாட்டுடன்  இருப்பதால், நமது கண்கள் சூட்சும  அளவில் அந்த அதிர்வுகளின்  தாக்கத்தை  ஏற்கின்றன. இதனால் , நம் கண்கள் பாரமாகவோ , மந்தமான தன்மையுடனோ, இருள் சூழ்ந்தது போன்றோ  பல துன்பங்களை அனுபவிக்கின்றன.

இந்த தீய சக்திகளை சரியான நேரத்தில் நம் கண்களில் இருந்து அகற்றவில்லை என்றால், தீய  சக்தி  நம் உடலில் நுழைந்து, குண்டலினி-சக்கரங்களின் மேல் படரும். இதனால் உடலின் மற்ற பாகங்களிலும் கருப்பு ஆவரணம் உருவாகிறது. எனவே, அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் கஷ்டங்கள் அதிகரிப்பதைத் தடுக்க,  கண்களின் மீது  தீய சக்திகளின் ஆவரணம் ஏற்பட்டிருந்தால், அதை உடனடியாக அகற்ற வேண்டும்.

– ஸத்குரு (டாக்டர்) முகுல் காட்கில், Ph.D., மகரிஷி ஆன்மீக பல்கலைகழகம், கோவா.

குறிப்பு :

சூட்சுமம் என்பது ஐந்து புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியவற்றின் புரிதலுக்கு அப்பாற்பட்டது. ஆன்மீகத்தில் முன்னேறியவர்களால் இந்த சூட்சுமமான அதிர்வலைகளை உணர முடியும். பல்வேறு கிரந்தங்களில்  சூட்சும ஞானம் பற்றிய குறிப்புகள் உள்ளன.

ஆன்மிக கஷ்டங்கள் 

ஸாதனை செய்பவர்களுக்கு பல்வேறு விதங்களில் எதிர்மறை சக்திகள் கஷ்டங்களைக் கொடுக்கின்றன. இத்தகைய கஷ்டங்களை தூர விலக்க வேதம் போன்ற பல்வேறு கிரந்தங்கள் ஆன்மீக நிவாரணங்களை பரிந்துரைக்கின்றன. இவ்விஷயத்தை மனதில் இருத்தியே ஸனாதனின் நூல்களில் ‘எதிர்மறை சக்திகள்’ மற்றும் ‘ஆன்மீக கஷ்டங்கள்’ ஆகிய பதங்கள் சில இடங்களில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வலைதளங்களில் எதிர்மறை சக்திகளின் இருப்பு பற்றிய தகவல்களும் ஆராய்ச்சிகளும் காணக்கிடைக்கின்றன.  

ஒவ்வொருவரிடமும்  தனிப்பட்ட எதிர்மறை அதிர்வலைகள் உள்ளன. ஒரு நபருக்கு எதிர்மறையான அதிர்வலைகள், 50%-க்கு மேல் இருந்தால், அது ‘கடுமையானதாகவும் ,  30 – 49% இடையே இருந்தால், அது ‘மிதமானதாகவும் , 30%-க்கு குறைவாக இருந்தால், அது ‘மந்தமானதுமான  ‘ கஷ்டத்தையும்   குறிக்கிறது. இவை விதி  மற்றும் மறைந்த மூதாதையர்களால் ஏற்படும் துன்பங்களால்  உண்டாகின்றன.

 

 

 

Leave a Comment