‘கோபுர (டவர்) முத்திரை’ செய்து உடலிலுள்ள ஆவரணத்தைக் களையும் வழிமுறை

Article also available in :

ஆன்மீக நிலை நிவாரண கட்டுரைகளை சேமித்து வையுங்கள்!


ஸச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஆடவலே

‘ஆபத்துக் காலத்தில் வைத்தியர் மற்றும் வைத்திய சிகிச்சை கிடைக்காமல் போகலாம். அப்போது தனக்கும் பிறருக்கும் ஆன்மீக நிலையில் உபாயங்களை செய்வதற்கு ஆன்மீக நிவாரணம் சம்பந்தமான எல்லா கட்டுரைகளையும் சேமித்து வையுங்கள் மற்றும் அவற்றை பயிற்சி செய்யுங்கள்!’

–            ஸச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஆடவலே (17.7.2023)

1.    கோபுர (டவர்) முத்திரை பற்றிய ஆய்வை ஸச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஆடவலே அவர்கள் விதைத்தார்

இரு கைகளின் நடு விரல்களை ஒன்றோடொன்று சேர்த்து, மணிக்கட்டை தலையின் இருபக்கங்களிலும் சாய்த்து வைத்து கோபுரத்தைப் போன்ற முத்திரையை செய்து காண்பிக்கும் ஸத்குரு டாக்டர் முகுல் காட்கில்

‘செப்டம்பர்  2018-ல் ஒரு நாள் ஒரு ஸாதகருக்கு பெரும் வயிற்று வலி ஏற்பட்டதால் நான் அவருக்காக நாமஜபம் மூலமாக உபாயம் செய்து கொண்டிருந்தேன். எந்த உடல் ரீதியான காரணமும் இல்லாமல் வெறும் தீய சக்திகள் அளிக்கும் கஷ்டத்தால் அவருக்கு பெரும் வேதனை வயிற்றில் ஏற்பட்டது; 3 மணி நேரம் உபாயம் செய்தும் கூட அவரது வேதனை சிறிதும் குறையவில்லை. இவ்விஷயம் பற்றி நான் ஸச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஆடவலே அவர்களிடம் கூறியவுடன் அவர் ஒரு நவீனமான ‘கோபுர (டவர்) முத்திரை’யை மணிபூரக சக்கரத்தில் வேதனை தீரும்வரை வைத்திருக்குமாறு கூறினார். அப்போது நான், அந்த ஸாதகரின் வேதனை குறைவதற்காக என் மணிபூரக சக்கரத்தின் முன்பாக இந்த முத்திரையை வைத்து நாமஜபம் செய்ய ஆரம்பித்தேன். இந்த முத்திரை செய்யும்போது என் மணிக்கட்டுகள் இரண்டையும் வயிற்றில் சாய்த்து வைத்துக் கொண்டேன். இவ்வாறு அரைமணி நேரம் உபாயம் செய்த பின்னர் அந்த ஸாதகரின் வேதனை முழுவதுமாக நீங்கியது. இது போன்று இந்த நவீனமான ‘கோபுர முத்திரை’யின் மகத்துவம் எனக்கு தெரிய வந்தது.

2.    உடல் மீது ஏற்பட்டுள்ள ஆவரண பட்டையை தூர விலக்குவதற்கு ‘கோபுர முத்திரை’யை உபயோகிக்கும் ஆய்வு  முதன்முதலில்  குருக்ருபையால் தோன்றியது

இரண்டாம் நாள் மீண்டும் அந்த ஸாதகரின் வயிற்றில் பெரும் வலி ஏற்பட்டது. அப்போது ‘அந்த ஸாதகரின் ஆக்ஞாசக்கரத்திலிருந்து மணிபூரக சக்கரம் வரை ஆவரண பட்டை வந்துள்ளது’ என்பது என் கவனத்திற்கு  வந்தது. இது போன்ற ஆவரணத்தை உணர்ந்தது இதுதான் முதல் தடவை. நான் அந்த ஆவரணத்தை கையை மடக்கி ஆவரணத்தைக் களையும் முறைப்படி செய்வதற்கு முயற்சி செய்தேன்; ஆனால் அது தூர விலகவில்லை. அப்போது ‘கோபுர முத்திரை’யை நாமஜபம் செய்து கொண்டே தலையிலிருந்து வயிறு வரை செய்யும்படி தெய்வம் எனக்குள் உணர்த்தியது. அதைப் போன்றே உபாயம் செய்த பிறகு பத்து நிமிடங்களில் ஆவரணம் தூர விலகியது, அந்த ஸாதகரின் கஷ்டமும் பெருமளவு குறைந்தது. அப்போது ஆவரணத்தைக் களைவதற்கு கோபுர முத்திரையை உபயோகிக்கும் ஆய்வு முதலில் தோன்றியது. குருதேவரின் அருளாலே இது நடந்தது.

3.    ‘கோபுர முத்திரை’யை உடலின் மீது சுழற்றுவதன் அவசியம்

முன்பெல்லாம் தீய சக்திகளால் உடலின் மீது ஆவரணம் ஏற்படும்போது அந்த ஆவரணம் ஒரு சக்கரத்தின் மீதோ அல்லது அதிகபட்சம் இரு சக்கரங்களின் மீதோ இருக்கும். ஆனால் இப்போது சூட்சும யுத்தத்தின் நிலை அதிகரித்துள்ளது. ஆறாம் அல்லது ஏழாம் பாதாளத்தின் மிக சக்தி வாய்ந்த தீய சக்திகள் தாக்குதல்கள் நடத்துகின்றன. அதனால் அவை உடலின் ஒன்றிரண்டு சக்கரங்களின் மீது ஆவரணம் உண்டாக்காமல் தலையிலிருந்து மார்புவரை அல்லது தலையிலிருந்து இடுப்புவரை ஆவரணம் உண்டாக்கி முறையே 4 சக்கரங்கள் (ஸஹஸ்ராரம் முதல் அனாஹதம் வரை) அல்லது 6 சக்கரங்கள் ( ஸஹஸ்ராரம் முதல் ஸ்வாதிஷ்டானம் வரை) ஆவரணத்தை நிரப்புகின்றன. அதோடு அவை உண்டாக்கும் ஆவரணம் மேலிருந்து கீழ்வரை அடுத்தடுத்து உள்ளன. இது அவற்றின் நிர்குண நிலையிலான தாக்குதல் ஆகும். அதனால் ‘கையை மடக்கி ஆவரணம் களையும் முறை’யினால் இதை நீக்க முடிவதில்லை. அதற்கு ‘கோபுர முத்திரையை’ உடலின் மீது சுழற்றும் முறையை உபயோகிக்க  வேண்டி உள்ளது.

4.    ‘கோபுர முத்திரையை’ உடலின் மீது சுழற்றும் வழிமுறை

இரு கைகளின் நடு விரல்களை ஒன்றோடொன்று சேர்த்து, மணிக்கட்டை தலையின் இருபக்கங்களிலும் சாய்த்து வைத்து கோபுரத்தைப் போன்ற முத்திரையை செய்து பின்பு இந்த முத்திரையை குண்டலினி சக்கரங்களில் (ஸஹஸ்ராரம் முதல் ஸ்வாதிஷ்டானம் வரை) மேலிருந்து கீழாக மற்றும் கீழிலிருந்து மேலாக இது போன்று 7-8 முறை சுழற்ற வேண்டும்.

5.    கோபுர முத்திரையை உடல் மீது சுழற்றும்போது நாமஜபம் செய்ய வேண்டியதன் அவசியம்

கோபுர முத்திரையை உடல் மீது சுழற்றும் முன்பு ‘பிராணசக்தி ஓட்ட உபாய வழிமுறை’ (உடல் மற்றும் உடலின் சக்கரங்கள் மீது விரல்களை சுழற்றி விரல்களிலிருந்து வெளிப்படும் பிராணசக்தி மூலமாக ஆன்மீக கஷ்டத்தைக் கண்டுபிடித்தல் மற்றும் உடலில் பிராணசக்தி ஓட்டத்திற்கு தடை ஏற்படுத்தும் ஸ்தானத்தையும் கண்டுபிடித்தல். அதன் பிறகு அந்த ஸ்தானத்தின் மீது தடையின் தீவிரத்திற்கேற்ப கைவிரல்களின் முத்திரை மற்றும் நாமஜபத்தைக் கண்டுபிடித்து அதன் மூலம் உபாயத்தை செய்தல்) மூலம் எந்த நாமஜபத்தை செய்ய வேண்டும் என்பதைக் கண்டுபிடிக்கவும். கோபுர முத்திரையை உடலில் மீது சுழற்றும்போது இந்த கண்டுபிடித்த நாமஜபத்தை செய்யவும்.  இவ்வாறு ஜபம் செய்வதால் இரு நடுவிரல்களும் ஒன்று சேரும் உச்சியில்  (கோபுர முத்திரையின் உச்சியில்) நாமஜப அதிர்வலைகள் இரு உள்ளங்கைகளில் பரவி பின் உடலுக்குள் பாய்கிறது. சக்கரங்களின் மூலமாக  உடலுக்குள் பரவுகிறது. நாமஜப அதிர்வலைகளால் உடலிலுள்ள ஆவரணம் நஷ்டமடைகிறது. அதனால் உடலில் அடுக்கடுக்காக உண்டான ஆவரணம் பங்கப்படுகிறது. கோபுர முத்திரையை உடலின் மீது 7-8 முறை சுழற்றுவதால் பெரும்பான்மையான ஆவரணம் நஷ்டமடைகிறது. மீதமுள்ள ஆவரணத்தை ‘கையை மடக்கி ஆவரணத்தை நீக்கும் வழிமுறையை (உடலின் மீது உருவான கஷ்டம் தரும் சக்தியின் ஆவரணத்தை இரு கைகளால் அள்ளி சேர்த்து பின் உடலுக்கு அப்பால் தூர வீசுதல்) உபயோகித்து தூர விலக்க முடியும்.’

–  (ஸத்குரு) டாக்டர் முகுல் காட்கில், பிஹெச்.டி., மகரிஷி ஆன்மீக பல்கலைகழகம், கோவா. (29.6.2023)

ஸஹஸ்ரார சக்கரத்தில் செய்யும் ‘கோபுர முத்திரை’ (டவர் முத்திரை), அதேபோல் ‘பர்வத முத்திரை’ ஆகியவற்றால் தீய சக்திகளின் கஷ்டம் விரைவில் தூர விலக உதவி கிடைக்கிறது

‘உடலில் மீது ஏற்பட்டுள்ள கஷ்டம் தரும் சக்தியின் ஆவரணத்தைக் களைவதற்கு ‘கோபுர முத்திரை’ (டவர் முத்திரை) எவ்வளவு உபயோகமாக உள்ளது என்பதை ஸாதகர்கள் அனுபவித்து வருகின்றனர். பிரயோகத்தின் மூலம் கிடைத்த நாமஜபத்தை செய்து கொண்டே ஸஹஸ்ரார சக்கரம் துவங்கி ஸ்வாதிஷ்டான சக்கரம் வரை ‘கோபுர முத்திரையை’ மேலிருந்து கீழே மற்றும் கீழிருந்து மேலே என 5-

6 முறை சாவகாசமாக சுழற்றுவதால் உடலின் மீது ஏற்பட்டுள்ள ஆவரணம் விலகுகிறது. ஆன்மீக உபாயம் செய்யும்போது எனக்கு ‘கோபுர முத்திரை’யின் மற்றும் ஓர் பயன் கவனத்திற்கு வந்தது.

உங்கள் உடலிலிருந்து ஆவரணம் விலகிய பிறகு ‘கோபுர முத்திரையை’ உங்களின் ஸஹஸ்ரார சக்கரத்தில் அதாவது தலையில், புகைப்படத்தில் காண்பித்துள்ளபடி 4-5 நிமிடங்கள் வைத்து நாமஜபம் செய்யும்போது உங்களுக்கு ஏற்பட்டுள்ள தீய சக்திகளின் கஷ்டம் விரைவில் தூர விலகுகிறது என்பது என் கவனத்திற்கு வந்தது. இதன் காரணம், ஸஹஸ்ரார சக்கரத்தில் வைக்கப்பட்டுள்ள கோபுர முத்திரை மற்றும் நாமஜபத்தால் ஈச்வரனிடமிருந்து கிடைக்கும் சைதன்யம் உங்களின் பிரம்மரந்திரம் வழியாக உட்சென்று உங்களின் எல்லா சக்கரங்களிலும் உடலிலும் பரவுகிறது. அதனால் உங்களுக்கு தீய சக்திகளால் ஏற்படும் கஷ்டங்கள் விரைவாக விலக உதவி கிடைக்கிறது.

கோபுர முத்திரையின் இந்த பரிணாமத்தை அனுபவிக்கும் வேளையில் எனக்கு ஒன்று நினைவிற்கு வந்தது, ‘முன்னொரு காலத்தில் ரிஷிகள் முனிவர்கள் தவம் செய்யும்போது தலைக்கு மேல் இரு கைகளையும் கூப்பி நமஸ்கார முத்திரையுடன் இருப்பர்.’ அதை ‘பர்வத முத்திரை’ என்பர். நான் அந்த முத்திரையை செய்து பார்க்கும்போது அந்த முத்திரையின் மூலமாக அதிக அளவில் சைதன்ய பிரவாஹம் உடலுள் பாய்வதை உணர முடிந்தது. இந்த முத்திரையின் மூலமாகவும் நமக்கு ஏற்படும் தீய சக்திகளின் கஷ்டம் விரைவாக தூர விலகுகிறது.’

–             ஸத்குரு டாக்டர் முகுல் காட்கில், மகரிஷி ஆன்மீக பல்கலைகழகம், கோவா. (14.6.2023)

 

 

Leave a Comment