நோய்களை குணப்படுத்தும் தெய்வங்களின் நாமஜபங்கள் – 1

Article also available in :

ஸத்குரு (டாக்டர்) முகுல் காட்கில்

ஒரு குறிப்பிட்ட நோயை குணப்படுத்துவதற்கு , தியானத்தின் மூலம் முதலில் எந்த தெய்வத்தின் தத்துவம்   (7 முக்கிய தெய்வங்களில் – ஸ்ரீ துர்காதேவி, ஸ்ரீராம், ஸ்ரீகிருஷ்ண, ஸ்ரீ தத்த, ஸ்ரீ கணபதி, ஸ்ரீ மாருதி மற்றும் சிவபெருமான்) இன்றியமையாதது மற்றும் எந்த விகிதாச்சாரத்தில் தேவை என்பதை  முதலில் ஆராய்ந்தேன். பின்பு  அதன்  அடிப்படையில் சில வியாதிகளுக்குத் தேவையான நாமஜபங்களை  உருவாக்கினேன்.

நான்  முதலில் கொரோனா வைரஸை குணப்படுத்துவதற்கு உரிய  நாமஜபத்தை  ஆராய்ந்து கண்டறிந்து, அது பலன் அளிப்பதையும் அறிந்தேன். இது மற்ற நோய்களுக்கான நாமஜபத்தை கண்டறிய எனக்குள் ஆர்வத்தை எற்படுத்தியது. இவை பல்வேறு முக்கியமான  தெய்வங்களின் கூட்டு நாமஜபங்களாகும். ஸாதகர்கள், தங்களின் நோய்களை குணப்படுத்திக் கொள்ள இந்த நாமஜபங்களை பரிந்துரை செய்கிறேன்.

1. மாதவிடாய் சுழற்சி தொடர்பான மன உளைச்சலைக் குணப்படுத்தும் நாமஜபம்

‘ஸ்ரீ கணேசாய நமஹ – ஸ்ரீ கணேசாய நமஹ – ஸ்ரீ குருதேவ தத்த’

இந்த நாமஜபத்தை  ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது 5 நாட்களுக்கு மேல் மாதவிடாய் நீடிப்பவர்களுக்கு பரிந்துரைத்தேன். மாதவிடாய் வருவதற்கு 4 நாட்களுக்கு முன்னதாகவே ஜபிக்கத் தொடங்கி, சுழற்சி முடியும் வரை தினமும் 1 மணிநேரம் ஜபித்துக்கொண்டே இருக்கும்படியும், மேலும்  வலது கை விரல்களின் நுனிகளை இணைத்து ஆக்ஞா சக்கரத்தில் நியாஸ் செய்ய அறிவுறுத்தினேன் நியாஸ் செய்யும்போது  கையானது  1-2 செ.மீ. உடலில் இருந்து விலகி இருக்க வேண்டும். அவ்வாறு செய்த ஸாதகர்கள், இந்த தீர்விலிருந்து குறிப்பிடத்தக்க நன்மைகளைப் பெற்றனர்.

 

2. நீரிழிவு (சர்க்கரை) நோய்க்கான நாமஜபம்

‘ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ – ஸ்ரீ ஹனுமதே நமஹ’

உயர் இரத்த சர்க்கரை அளவைக் கொண்ட ஒரு பெண் ஸாதகருக்கு இன்சுலினால் பயனில்லை. அதாவது, பரிந்துரைக்கப்பட்ட இன்சுலின் அளவானது  அவரது இரத்த சர்க்கரையை வரம்பிற்குள் கொண்டு வரவில்லை. நான் அவருக்கு இந்த நாமஜபத்தை பரிந்துரைத்து, அவர் தினமும் ஜபிக்க துவங்கினார். நாளடைவில் அவரது   இரத்தத்தில் சர்க்கரையின் அளவில் மாற்றம் ஏற்பட்டு, அதனால் மருந்தின் அளவை மாற்றக் கூடிய நிலை மருத்துவருக்கு ஏற்பட்டது . புதிய மருந்தின் அளவானது  அவரின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பயனுள்ளதாக இருந்தது

 

3. உடல் முழுவதும் திடீரென உருவான கொப்புளங்களுக்கான  நாம ஜபம்

‘ஸ்ரீ ஹனுமதே நமஹ – ஸ்ரீ குருதேவ தத்த – ஸ்ரீ குருதேவ தத்த – ஸ்ரீ குருதேவ தத்த – ஸ்ரீ ஹனுமதே நமஹ – ஸ்ரீ குருதேவ தத்த – ஸ்ரீ குருதேவ தத்த – ஸ்ரீ குருதேவ தத்த – ஓம் நம:சிவாய’

வாரணாசியைச் சேர்ந்த ஒரு பெண் ஸாதகருக்கு உடல் முழுவதும் கொப்புளங்கள் ஏற்பட்டன. நான் 4.11.2020 அன்று இந்த நாமஜபத்தை  பரிந்துரைத்து ,தினமும் 1 மணிநேரம் ஜபிக்கச் சொன்னேன். 8 நாட்களுக்குப் பிறகு அவர்  என்னிடம் பின்வருமாறு கூறினார். 2 நாட்களுக்குள், அவரது உடலில் உலர்ந்த பழுப்பு நிற மேலோடுகள் மென்மையாகி, கொப்புளங்கள் குணமடையத் தொடங்கியுள்ளன. அரிப்பும்  கணிசமாகக் குறைந்துள்ளது. 8 நாட்களுக்குப் பிறகு,  கொப்புளங்களும்  கணிசமாகக் குறைந்து வெளிறத் தொடங்கியுள்ளது . 8 நாட்களுக்குப் பிறகு குணமடையும் தன்மை மிகவும் அதிகரித்து தோலானது மேலும் மென்மையாகியுள்ளது  .

 

4. தோலில் ஏற்படும் பூஞ்சை தொற்றுக்கான (ஃபங்கல் இன்ஃபெக்ஷன்) நாமஜபம்

‘ஸ்ரீ கணேசாய நமஹ – ஸ்ரீ கணேசாய நமஹ – ஸ்ரீ கணேசாய நமஹ – ஸ்ரீ கணேசாய நமஹ – ஸ்ரீ குருதேவ தத்த – ஸ்ரீ கணேசாய நமஹ – ஸ்ரீ கணேசாய நமஹ – ஸ்ரீ கணேசாய நமஹ – ஸ்ரீ ஹனுமதே நமஹ – ஸ்ரீ ஹனுமதே நமஹ’

ஒரு பெண் ஸாதகருக்கு  அவரது இடுப்பு மற்றும் உள் தொடைகளில் பூஞ்சை தொற்று ஏற்பட்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் தோல் தடிமனாகவும், கருப்பாகவும் காணப்பட்டது. மேலே குறிப்பிட்ட நாமஜபத்தால் அவரது தொற்று கணிசமாகக் குறைந்தது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரிப்பு, தோல் தடித்தல் மற்றும் நிறமாற்றம் ஆகியவை கணிசமாகக் குறைந்ததை உணர்ந்தார் .இந்த நாமஜபத்தை 15 நாட்களுக்கு தினமும் 1 மணிநேரம்  ஜபிக்க வேண்டும்.

 

5. இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு அதிகமானதால்
பாதிக்கப்பட்ட   சிறுநீரக செயல்பாட்டிற்கான நாமஜபம்

‘ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ – ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ – ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ – ஸ்ரீ குருதேவ தத்த – ஸ்ரீ ஹனுமதே நமஹ’

 

6. மூலநோய்க்கான நாமஜபம்  – (பைல்ஸ்)

‘ஸ்ரீ கணேசாய நமஹ – ஸ்ரீ கணேசாய நமஹ – ஸ்ரீ கணேசாய நமஹ – ஸ்ரீ ஹனுமதே நமஹ – ஸ்ரீ கணேசாய நமஹ – ஸ்ரீ கணேசாய நமஹ – ஓம் நம:சிவாய’

 

7. சிறுநீரக கற்களுக்கான நாமஜபம்

‘ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ – ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ – ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ – ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ – ஸ்ரீ ஹனுமதே நமஹ’

 

8. இரும்புச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகைக்கு நிவாரணம்  அளிக்கும் நாமஜபம்

‘ஸ்ரீ குருதேவ தத்த – ஸ்ரீ குருதேவ தத்த – ஸ்ரீ குருதேவ தத்த – ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ – ஸ்ரீ குருதேவ தத்த – ஸ்ரீ குருதேவ தத்த – ஸ்ரீ குருதேவ தத்த – ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ – ஸ்ரீ குருதேவ தத்த – ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம’

இந்த நாமஜபங்கள், மிகவும் பயனுள்ளதாக  இருக்கும் என்று ஸாதகர்கள் உணர்ந்தால், தங்களுடைய மருத்துவ சிகிச்சையுடன் இவற்றையும் பயன்படுத்தலாம். குறிப்பிட்ட நாமஜபத்தை  ஒரு மாதத்திற்கு தினமும் 1 மணிநேரம் அல்லது குறிப்பிட்டபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. இந்த நாமஜபத்திற்கு  பிறகு உங்களுக்கு ஏதேனும் ஆன்மீக அனுபவங்கள் ஏற்பட்டால், அவற்றை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் அல்லது பின்வரும் முகவரிக்கு அஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம். இது உங்கள் ஆன்மீக அனுபவத்தை வெளியிடவும், நோய்களைக் குணப்படுத்தும் நாமஜபங்களின்  திறனை வெளிப்படுத்தவும் எங்களுக்கு உதவும்.

அஞ்சல் முகவரி : ஸனாதன் ஆசிரமம், 24/பி ராமனாதி, பாந்தோடா, போண்டா, கோவா – 403 401.

– (ஸத்குரு) டாக்டர். முகுல் காட்கில், மகரிஷி ஆன்மீக பல்கலைக்கழகம், கோவா. (10.12.2020)

Leave a Comment