நோய்களை  குணப்படுத்தும்   தெய்வங்களின் நாமஜபங்கள்

 

ஸத்குரு (டாக்டர்) முகுல் காட்கில், Ph.D

ஒரு குறிப்பிட்ட நோயை குணப்படுத்துவதற்கு , தியானத்தின் மூலம் முதலில் எந்த தெய்வத்தின் தத்துவம்   (7 முக்கிய தெய்வங்களில் – ஸ்ரீ துர்காதேவி, ஸ்ரீராம், ஸ்ரீகிருஷ்ண, ஸ்ரீ தத்த, ஸ்ரீ கணபதி, ஸ்ரீ மாருதி மற்றும் சிவபெருமான்) இன்றியமையாதது மற்றும் எந்த விகிதாச்சாரத்தில் தேவை என்பதை  முதலில் ஆராய்ந்தேன். பின்பு  அதன்  அடிப்படையில் சில வியாதிகளுக்குத் தேவையான நாமஜபங்களை  உருவாக்கினேன்.

நான்  முதலில் கொரோனா வைரஸை குணப்படுத்துவதற்கு உரிய  நாமஜபத்தை  ஆராய்ந்து கண்டறிந்து, அது பலன் அளிப்பதையும் அறிந்தேன். இது மற்ற நோய்களுக்கான நாமஜபத்தை கண்டறிய எனக்குள் ஆர்வத்தை எற்படுத்தியது. இவை பல்வேறு முக்கியமான  தெய்வங்களின் ஒருங்கிணைந்த நாமஜபங்களாகும். ஸாதகர்கள், தங்களின் நோய்களை குணப்படுத்திக் கொள்ள இந்த நாமஜபங்களை பரிந்துரை செய்கிறேன்.

பல ஸாதகர்களின் கருத்துகளுக்கு பிறகு இந்த நாமஜபங்களின் பலனை உணர்ந்தேன். சில மாதங்களுக்கு முன்பு, சில வியாதிகள், அவற்றுக்கான நாமஜபம் மற்றும் அதனால்  எற்படும்  ஆன்மீக அனுபவங்கள் ஆகியவை  ‘ஸனாதன் பிரபாத்’ நாளிதழில் வெளிவந்தன. மேலும் சில வியாதிகள் மற்றும் அவற்றுக்கான நாமஜபங்கள் கிழே  கொடுக்கப்பட்டுள்ளன. இவை கடந்த  3 மாதங்களில் சில ஸாதகர்களுக்கு  பரிந்துரைக்கப்பட்டது. அவர்கள்  தங்களுடைய  ஆன்மீக அனுபவங்களை எங்களுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஸாதகர்களுக்கு பின்வரும் நோய்களில் ஏதேனும் இருந்து, அதனுடன் தொடர்புடைய நாமஜபங்களை முயற்சிக்க விரும்பினால், தினமும் 1 மணிநேரம் வீதம் ஒரு மாதத்திற்கு தெய்வங்களின் நாமங்களை ஜபிக்க வேண்டும்.

வ.எண் நோய்  விபரம் பரிந்துரைக்கப்பட்ட  நாம ஜபம்
1. நல்ல ஆரோக்கியத்திற்காக ஸ்ரீ கணேசாய நமஹ-ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ-ஸ்ரீ ஹனுமதே நமஹ-ஓம் நமசிவாய-ஓம் நமசிவாய !
2. இரத்தத்தில் ‘சி ரியாக்டிவ் புரோட்டீன்’ அதிகரிப்பு, மார்பு சளி மற்றும் சொறி (கபம் தொற்று மற்றும் பித்தத்தினால் உண்டான சொறி) ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ-ஸ்ரீ ஹனுமதே நமஹ-ஸ்ரீ ஹனுமதே நமஹ-ஓம் நமசிவாய-ஓம் நமசிவாய !
3. இரத்தத்தில் ஹீமோகுளோபின்  குறைதல் ஸ்ரீ ஹனுமதே நமஹ-ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்-ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்-ஸ்ரீ கணேசாய நமஹ-ஸ்ரீ கணேசாய நமஹ-ஸ்ரீ கணேசாய நமஹ-ஸ்ரீ கணேசாய நமஹ !
4. இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அதிகரிப்பு ஸ்ரீ கணேசாய நமஹ-ஸ்ரீ ஹனுமதே நமஹ–ஓம் நமசிவாய-ஓம் நமசிவாய-ஓம் நமசிவாய !
5. இரத்தத்தில் தேவைக்கு அதிகமாக உள்ள பொட்டாசியத்தின்  அளவை குறைக்க ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ–ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்-ஸ்ரீ ஹனுமதே நமஹ-ஸ்ரீ ஹனுமதே நமஹ-ஸ்ரீ ஹனுமதே நமஹ !
6. கருப்பையில் நீர்க்கட்டி ஸ்ரீ ஹனுமதே நமஹ-ஓம் நமசிவாய-ஓம் நமசிவாய-ஓம் நமசிவாய-ஓம் நமசிவாய !
7. சியாட்டிகா காரணமாக மன உளைச்சல் ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ-ஓம் நமோ பகவதே வாசுதேவாய-ஸ்ரீ ஹனுமதே நமஹ-ஓம் நமசிவாய-ஓம் நமசிவாய !
8. மலச்சிக்கல் மற்றும் அதன் விளைவாக வயிறு வீக்கம் ஸ்ரீ ஹனுமதே நமஹ-ஸ்ரீ ஹனுமதே நமஹ-ஸ்ரீ ஹனுமதே நமஹ-ஸ்ரீ ஹனுமதே நமஹ-ஓம் நம சிவாய !
9. உடல் வீக்கம் மற்றும் அதிக உடல் எடை ஸ்ரீ ஹனுமதே நமஹ-ஓம் நமசிவாய-ஓம் நமசிவாய-ஓம் நமசிவாய!
10. உடம்பில் தடிப்புகள் ஸ்ரீ குருதேவ தத்த-ஸ்ரீ கணேசாய நமஹ-ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ-ஸ்ரீ ஹனுமதே நமஹ-ஸ்ரீ ஹனுமதே நமஹ !
11. முடி உதிர்தல் ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ-ஸ்ரீ ஹனுமதே நமஹ-ஸ்ரீ ஹனுமதே நமஹ !
12. தைராய்டு ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ-ஸ்ரீ ஹனுமதே நமஹ-ஸ்ரீ ஹனுமதே நமஹ-ஸ்ரீ ஹனுமதே நமஹ-ஓம் நம சிவாய !
13. அழுகிய புண் ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ-ஸ்ரீ ஹனுமதே நமஹ-ஓம் நமசிவாய-ஓம் நமசிவாய-ஓம் நமசிவாய !
14. ஒவ்வாமை(அலர்ஜி) ஸ்ரீ கணேசாய நமஹ-ஓம் நமசிவாய !
15. மஞ்சள் காமாலை ஓம் நமசிவாய-ஓம் நமசிவாய-ஓம் நமசிவாய-ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ-ஓம் நமசிவாய-ஓம் நமசிவாய-ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ-ஸ்ரீ குருதேவ தத்த !
16. எக்ஸிமா (ஒரு தோல் நோய்) ஓம் நம சிவாய(4 முறை)-ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ-ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ-ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ-ஸ்ரீ குருதேவ தத்த-ஸ்ரீ குருதேவ தத்த-ஸ்ரீ கணேசாய நமஹ !
17. சொரியாசிஸ்( ஒரு வகை தோல் நோய் ) ஸ்ரீ ஹனுமதே நமஹ-ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ-ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ-ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ-ஸ்ரீ குருதேவ தத்த-ஶ்ரீ துர்காதேவ்யை நமஹ-ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ-ஸ்ரீ கணேசாய நமஹ !
18. உஷ்ணத்தால் பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாயிலில் எரிச்சல் ஸ்ரீ குருதேவ தத்த-ஸ்ரீ ஹனுமதே நமஹ-ஓம் நமசிவாய-ஓம் நமசிவாய-ஓம் நமசிவாய !
19. காயங்கள்  விரைவாய்  குணமடைய ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ-ஸ்ரீ கணேசாய நமஹ-ஓம் நமசிவாய-ஓம் நமசிவாய-ஓம் நமசிவாய !
20. எலும்பு முறிவை குணப்படுத்துதல் ஸ்ரீ கணேசாய நமஹ-ஸ்ரீ ஹனுமதே நமஹ-ஸ்ரீ ஹனுமதே நமஹ-ஓம் நமசிவாய-ஓம் நமசிவாய!
21. அமிலத்தன்மை அதிகரிப்பு ஸ்ரீ கணேசாய நமஹ-ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்-ஸ்ரீ ஹனுமதே நமஹ-ஓம் நம சிவாய-ஓம் நம சிவாய!

ஸத்குரு (டாக்டர்) முகுல் காட்கில், மகரிஷி ஆன்மீக பல்கலைகழகம், கோவா

நோய்களைக் குணப்படுத்தும் நாமஜபங்களின்  செயல்திறனை நிரூபிக்க ஸாதகர்கள்  தங்களது  ஆன்மீக அனுபவங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!

ஸாதகர்கள், தங்களது ஆன்மீக அனுபவங்கள்  மற்றும் நாமஜபங்களால்    ஏற்பட்ட   பலன்களை   மின்னஞ்சல் அல்லது அஞ்சலில் அனுப்புமாறு வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள். (இது வெளியிடுவதற்கு உதவியாக இருக்கும்)

மின்னஞ்சல் : [email protected]

அஞ்சல் முகவரி : திருமதி பாக்யஸ்ரீ சாவந்த், ஸனாதன் ஆச்ரமம் , 24/B, ராம்நாதி, பந்தோரா, போண்டா, கோவா.

ஆதாரம் : தினசரி ஸனாதன் பிரபாத்

 

 

 

Leave a Comment