நோய்களை குணப்படுத்தும் தெய்வங்களின் நாமஜபங்கள்– 3

Article also available in :

Contents

ஸத்குரு (டாக்டர்) முகுல் காட்கில்

சில  குறிப்பிட்ட நோய்களை குணப்படுத்துவதற்கு, ஸ்ரீ துர்காதேவி, ஸ்ரீராம், ஸ்ரீகிருஷ்ண, ஸ்ரீ தத்த, ஸ்ரீ கணபதி, ஸ்ரீ மாருதி மற்றும் சிவபெருமான் ஆகிய 7 முக்கிய தெய்வங்களில் எந்த தெய்வத்தின் தத்துவம் இன்றியமையாதது மற்றும் எந்த விகிதாச்சாரத்தில் தேவை என்பதை  தியானத்தின் மூலம்  முதலில் ஆராய்ந்தேன். நான்  முதலில் கொரோனா வைரஸை குணப்படுத்துவதற்கு உரிய  நாமஜபத்தை  ஆராய்ந்து கண்டறிந்து, அது பலன் அளிப்பதையும் அறிந்தேன். இது மற்ற நோய்களுக்கான நாமஜபத்தை கண்டறிய எனக்குள் ஆர்வத்தை எற்படுத்தியது. இவை பல்வேறு நோய்களை குணப்படுத்துவதற்குத் தேவைப்படுகின்றன சக்தி கொண்ட தெய்வங்களின் கூட்டு நாமஜபங்களாகும். ஸாதகர்கள், தங்களின் நோய்களை குணப்படுத்திக் கொள்ள இந்த நாமஜபங்களை பரிந்துரை செய்து வருகிறேன். இதனால் அவர்கள் பயனடைந்தார்கள் என்பதையும் புரிந்துகொண்டேன். சில மாதங்களுக்கு முன், சில நோய்கள் , அவற்றை குணப்படுத்துவதற்குரிய நாமஜபங்கள் மற்றும் அவற்றைப் பாராயணம் செய்தபின் எற்பட்ட  ஆன்மீக அனுபவங்கள் ஆகியவை ஆன்மீக நிவாரணம்  என்ற கட்டுரையில் வெளியிடப்பட்டன. இன்று, மேலும் சில நோய்கள் மற்றும் அவற்றைக் குணப்படுத்துவதற்குரிய நாமஜபங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.   பல்வேறு ஸாதகர்களுக்கு கடந்த 3 மாதங்களில்  இந்த நாமஜபங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது .  ஸாதகர்கள் தங்களின் ஆன்மீக அனுபவங்களை மின்னஞ்சல் முகவரிக்கோ  அல்லது இந்தக் கட்டுரையின் கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கோ  விரைவாக எழுதி அனுப்பவும்.

1. கீழே உள்ள அட்டவணையில், குறிப்பிடப்பட்ட  சில நோய்களை குணப்படுத்தும் நாமஜபங்களும் , மற்றும் மகான்கள், ஸாதகர்களின்  தனிப்பட்ட அனுபவங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

வ.எண் நோய்  விபரம் 5 நாமஜபங்களின் தொகுப்பில் இதற்குப்  பொருந்தக்கூடிய நாமஜபம்
1 ஆஸ்துமா( மூச்சிறைப்பு) ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஓம் நம:சிவாய | ஓம் நம:சிவாய |
2 சிறுநீர் பாதையில் தொற்று ஸ்ரீ குருதேவ தத்த | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய |
3 உடல் எரிச்சல் ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஸ்ரீ ஹனுமதே நமஹ| ஓம் நம:சிவாய |
4 ஸ்லிப்-டிஸ்க்’ (slip-disc’)காரணமாக ஏற்படும் வலியைக் குறைக்க ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ | ஸ்ரீ குருதேவ தத்த |ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய |
5 எடை அதிகரிக்க ஸ்ரீ கணேசாய நமஹ | ஸ்ரீ கணேசாய நமஹ | ஸ்ரீ கணேசாய நமஹ | ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய |
6 பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வு அல்லது எண்ண சுழற்சி நோய் (எக் காரணமுமின்றி மனதில் ஒரே எண்ணம் மீண்டும் மீண்டும் தோன்றுவது அல்லது எண்ணிய ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்வது) ஸ்ரீ குருதேவ தத்த | ஸ்ரீ கணேசாய நமஹ | ஸ்ரீ கணேசாய நமஹ | ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய |
7 குறைந்த செரிமான மற்றும்  வலிமையற்ற  குடல்கள் ஓம் நமோ பகவதே வாசுதேவாய | ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம | ஸ்ரீ குருதேவ தத்த| ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய |
8 அனைத்து வகையான உளவியல் குறைபாடுகள் ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய | ஸ்ரீ கணேசாய நமஹ | ஸ்ரீ கணேசாய நமஹ |ஸ்ரீ குருதேவ தத்த |
9 எக்காரணமும் இன்றி தொடர்ந்து அரிப்பு  ஏற்படுத்தல் ஸ்ரீ கணேசாய நமஹ |ஸ்ரீ குருதேவ தத்த | ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய |
10 உடல் தளர்ச்சி நோய் ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ | ஓம் நமோ பகவதே வாசுதேவாய | ஸ்ரீ குருதேவ தத்த | ஸ்ரீ கணேசாய நமஹ | ஓம் நம:சிவாய |
11 தொடர் விக்கல்  ஸ்ரீ கணேசாய நமஹ | ஸ்ரீ கணேசாய நமஹ | ஓம் நமோ பகவதே வாசுதேவாய | ஓம் நம:சிவாய|  ஓம் நம:சிவாய |
12 மூளை நோய்கள் (மூளையில் இரத்தம் உறைதல் அல்லது இரத்தம் திரிதல் ), பக்கவாதம், வலிப்பு  (மூளையில் திடீர், கட்டுப்பாடற்ற மின் தொந்தரவுகள்) போன்றவை ஓம் நமோ பகவதே வாசுதேவாய | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய | ஓம் நம:சிவாய |
13 முடக்கு வாதம் ஸ்ரீ குருதேவ் தத்தா | ஸ்ரீ குருதேவ் தத்தா | ஓம் நமோ பகவதே வாசுதேவாய | ஓம் நமோ பகவதே வாசுதேவாய | ஓம் நம:சிவாய | ஓம் நம:சிவாய | ஓம் நம:சிவாய |
14 அக்கி (  சீழ் அல்லது கட்டி ,சிவப்பு இரத்த உறைவு அல்லது வீங்கிய மற்றும் வலியுள்ள பகுதி/ தோலின் கீழ் சூடாகவும் தொடுவதற்கு மென்மையாகவும் இருக்கும்) ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ | ஓம் நமோ பகவதே வாசுதேவாய | ஸ்ரீ குருதேவ தத்த | ஸ்ரீ குருதேவ தத்த | ஸ்ரீ குருதேவ தத்த |
15 டெங்கு குறிப்பிட்ட வகை கொசுவினால் பரவும் குறிப்பிட்ட வகை தொற்றுக் காய்ச்சல்(இரத்த தட்டுகள் குறைதல்) /பிளேட்லெட்டுகள் குறைதல்) ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஓம் நம:சிவாய |
16 தூக்கமின்மை ஸ்ரீ குருதேவ தத்த | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய | ஓம் நம:சிவாய |
17 குடல் புழுக்கள் (அனைத்து வகையான குடல் புழுக்கள்) ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய |
18 குமட்டல் ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ | ஸ்ரீ குருதேவ தத்த| ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய |
19 மூளையில் உறைதல் காரணமாக பிக்ஸிலேட்டட் நடத்தை ஸ்ரீ குருதேவ தத்த | ஸ்ரீ கணேசாய நமஹ | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய |
20 நரம்புகளில் இரத்தக் கட்டிகள்( இரத்தம் உறைதல் ) ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய |

குறிப்பு : இவை பல்வேறு முக்கியமான  தெய்வங்களின் ஒருங்கிணைந்த நாமஜபங்களாகும். நோயை குணப்படுத்த நாடிவரும் ஸாதகர்களுக்கு இவற்றை பரிந்துரை செய்கிறேன். இந்த நாமஜபங்களை குறிப்பிட்ட காலம் வரை  மீண்டும் மீண்டும் ( தொடர்ந்து) செய்ய வேண்டும்.

1 அ. சிறுநீர் பாதையில் தொற்று

ஒரு மஹானிற்கு ஆண்மை சுரப்பிகளில் ஒன்றில் வீக்கம் ஏற்படுவது வழக்கம். இதனால் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்பட்டு சிறுநீர் முழுமையாக கழிக்க முடியாமல் தொற்று ஏற்பட்டு  மீண்டும் மீண்டும் காய்ச்சல் வந்தது. மருந்துகளும் பயனளிக்கவில்லை. இந்த நோயை குணமாக்க நான் கொடுத்த நாமஜபத்தை தினமும் 1 மணி நேரம் 2 மாதங்களுக்கு அவர் செய்தபோது, அவரது நோய் வெகுவாகக் குறைந்தது. இன்றும் அவர் குணப்படுத்துவதற்குரிய நாமஜபத்தை நிறுத்தினால், மீண்டும் கஷ்டப்படுகிறார்; எனவே அவர் தொடர்ந்து தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது நாமஜபம்  செய்கிறார்.

1 ஆ . உடலின் சில பகுதியில் எரியும் உணர்வு

79 வயதான பெண் ஸாதகர் ஒருவருக்கு மூல (பைல்ஸ்) நோய்க்கான அறுவை சிகிச்சை செய்யப்பபட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் சுற்றுச்சூழலில் வெப்பம் அதிகரிக்கும் பொழுது, இவரின் உடல் உஷ்ணமும் அதிகரித்து, அதனால், அந்த ஸாதகருக்கு மலம் கழித்த பிறகு ஆசனவாயில் எரியும் உணர்வு ஏற்பட்டுள்ளது. அதை கட்டுப்படுத்துவதற்குரிய நாமஜபத்தை நான் பரிந்துரைத்தேன். இந்த நாமஜபத்தை ஜபித்தவுடன், அவருக்கு தற்போது ஆசனவாயிலில் எற்படும்  எரியும் உணர்வு 15 நிமிடங்களில் நின்று விடுகிறது. முன்பு இந்த உணர்வு நிற்க 45 நிமிடங்கள் முதல் ஒன்றரை மணி நேரம் வரை ஆகும்.

1 இ .குறைந்த செரிமான சக்தி மற்றும் வலிமை இழந்த குடல்

மகான் ஒருவருக்கு செரிமான குறைபாடு ஏற்பட்டு அதன் விளைவாக வயிறு கனமாக இருந்தது மற்றும் மலம் கழிப்பதில் அவருக்கு சிக்கல் இருந்தது. இதனால் அவர் உடல்  மெலிந்திருந்தார். இந்த நோயை குணப்படுத்துவதற்குரிய  நாமத்தை  தினமும் 1 மணிநேரம் ஜபிக்க  ஆரம்பித்து ஒரு மாதத்திற்குள் அவருக்கு பலன்  கிடைத்தது. அவருக்கு தற்போது  வயிற்றில் எந்த உபாதையும்  இல்லாததால், அந்த நாமஜபம்  செய்வதை அவர் நிறுத்திவிட்டார்.

1 ஈ . அக்கி (பெரிய கொப்புளம்)

பெண் சாதகர் ஒருவரது இடது அக்குளில் ஒரு பெரிய கொப்புளம் ஏற்பட்டது. இதனால் மிகுந்த வலியில் இருந்த அவருக்கு, வலி நிவாரண மருந்துகளை சாப்பிட்டும் பலன் இல்லை. எனது ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்த  நாமஜபத்தை 2 மணி நேரம்  ஜபித்தவுடன் வலி நின்றது, மேலும் அவரது கையின் கனம் வெகுவாகக் குறைந்ததை அவர் உணர்ந்தார். பின்னர் கொப்புளத்தை துளைத்து சீழ் அகற்றப்பட்டபோதும்  அதிக வலி ஏற்படவில்லை. அதன் பிறகு கொப்புளம் முற்றிலும் குணமானது.

1 உ . டெங்கு (பிளேட்லெட் குறைதல்)/( இரத்த தட்டுகள் குறைதல்)

டெங்குவின் போது இரத்தத்தில் பிளேட்லெட்டுகளின் (இரத்த தட்டுகள்) அளவு சாதாரண அளவைக் காட்டிலும் வெகுவாகக் குறைகிறது. ஒரு மனிதனின் பிளேட்லெட்டுகளின் (இரத்த தட்டுகள்) எண்ணிக்கை பொதுவாக 1.5 லட்சம் (150,000) முதல் 4 லட்சம் (400,000) வரை இருக்கும். ஸாதகர் ஒருவருக்கு, டெங்கு பாதிப்பு ஏற்பட்டு, அவரது ரத்தத்தில் பிளேட்லெட் (இரத்த தட்டுகள்) எண்ணிக்கை 60,000 ஆகக் குறைந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனக்கு இதைப் பற்றி மாலை 6 மணியளவில் அறிவித்தார், அவருக்கு பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிப்பதற்குரிய நாமஜபத்தை பரிந்துரை செய்து, அதை முடிந்தவரை ஜபிக்குமாறு அவருக்கு அறிவுறுத்தினேன். மறுநாள் மதியம் அவரது இரத்தப் பரிசோதனையை மீண்டும் செய்தபோது, இரத்தத்தில் பிளேட்லெட் (இரத்த தட்டுகள்) எண்ணிக்கை 120,000 ஆக அதிகரித்திருந்தது. நாமஜபத்தின் விளைவாக அரை நாளில் பிளேட்லெட்டுகளின் (இரத்ததட்டுகள்) எண்ணிக்கை வியக்கத்தக்க அளவில் அதிகரித்தது. பெண் ஸாதகர்  ஒருவருக்கும் அவரது சகோதரருக்கும் இதே போன்ற அனுபவம் ஏற்பட்டது.

1 ஊ. மூளையில் இரத்த உறைதல் காரணமாக பிக்ஸிலேட்டட் நடத்தை

பெண் ஸாதகர் ஒருவரின் 74 வயது தந்தைக்கு, அவரது மூளையில் ஏற்பட்ட ஒரு  இரத்த உறைவின்  காரணமாக பிக்ஸிலேட் நடத்தை இருந்தது. அவரது நோயை போக்குவதற்குரிய குணப்படுத்தும் நாமஜபத்தை பரிந்துரை செய்தேன். அந்த பெண் ஸாதகரின் தாயார் தினமும் 2 மணி நேரம் அந்த நாமஜபத்தை செய்து கொண்டிருந்தார். அந்த நாமஜபத்தின் நல் விளைவின் காரணமாக 5வது நாளில் அவரது தந்தை மிகவும் நன்றாக உணரத் தொடங்கினார். இந்த முன்னேற்றம் காரணமாக, மருத்துவமனையில் இருந்தும் வீடு திரும்பினார். மேலும், அவரது மூளை உறைவு 30 – 40%  குறைந்துள்ளது எம்ஆர்ஐ ஸ்கேனில் தெரியவந்தது. 8 நாட்களுக்குப் பிறகு சுமார் 60%-மாகவும், மற்றொரு மாதத்திற்குப் பிறகு 10%-மாகவும் குறைந்தது. அந்த பெண் ஸாதகரின் தந்தை இந்த வயதிலும் குறிப்பிடத்தக்க வகையில் குணமடைந்ததை பார்த்து, மருத்துவர்களும் ஆச்சரியமடைந்தனர்.

2. நாமஜபத்தின்  முக்கியத்துவம்

மருந்துகள் மற்றும் மருத்துவர்களின் பற்றாக்குறை உணரப்படும் மோசமான காலகட்டங்களில், இந்த நாமஜபங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

3. நன்றியுணர்வு

பராத்பர குரு (டாக்டர்) ஆடவலேயின் அருளால், இந்த நிவாரண நாமஜபங்களை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது, மேலும் இவை மிகவும் பயனுள்ளதாக இருப்பதைக் கவனிக்க முடிந்தது. இதற்காக நான் பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின்  புனித பாதங்களில் எனது அளவிட முடியாத நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

–            (ஸத்குரு) டாக்டர் முகுல் காட்கில், Ph.D., கோவா.

குறிப்பிட்ட நோய்களுடன் தொடர்புடைய நிவாரண நாமஜபங்களை ஜபித்த  பிறகு எற்படும் ஆன்மீக அனுபவங்களை அனுப்புங்கள்!

மேற்கூறிய நோய்களில் ஏதேனும் ஒன்றை ஸாதகர்கள் அனுபவித்து, அதை  குறைக்க ( நிவர்த்தி செய்ய),  அது தொடர்பான நிவாரண நாமஜபத்தை  ஜபிக்க வேண்டும் என்று நினைத்தால், ஒரு மாதத்திற்கு தினமும் ஒரு  மணிநேரம் ஒரு பரிசோதனையாக இதை செய்ய வேண்டும். மேலும் தங்கள் ஆன்மீக அனுபவங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected] அல்லது கீழ்  கொடுக்கப்பட்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். ஸாதகர்களின்  இத்தகைய அனுபவங்கள் புனித நூல்களில் சேர்க்கப்படுவதுடன், இந்த நாமஜபங்களின்  பயனை உறுதிப்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கும்.

அஞ்சல் முகவரி : ஸனாதன் ஆச்ரமம், 24/பி, ராம்நாதி, பந்தோடா, போண்டா, கோவா, பின்கோடு – 403401.

Leave a Comment