நோய்களை குணப்படுத்தும் தெய்வங்களின் நாமஜபங்கள் –  5

Article also available in :

Contents

வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட நன்றியுணர்வை வெளிப்படுத்துதல்

பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் மனதிற்குள் நோய்களுக்கான ஆன்மீக குணப்படுத்தும் நாமஜபங்கள் பற்றி ஆராயும் எண்ணம் தோன்றிய இரு நாட்களுக்குள், ஸத்குரு டாக்டர் காட்கில் எழுதிய, அதே விஷயம் சம்பந்தமான  கட்டுரையைப் படித்தார். அதை படித்தவுடன், அவரது மனதில்  ஸத்குரு டாக்டர் முகுல் காட்கிலிடம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட  நன்றியுணர்வு தோன்றியது.

ஸச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜெயந்த் ஆடவலே

ஸத்குரு டாக்டர். முகுல் காட்கில் எழுதிய ‘நோய்களை குணப்படுத்தும் தெய்வங்களின் நாமஜபங்கள்’ என்ற தலைப்பிட்ட  கட்டுரை சிறிது காலத்திற்கு முன்பு  வெளியிடப்பட்டது. இந்தக் கட்டுரையைப் படித்த பிறகு, குறிப்பாக மூன்றாம் உலகப் போரின்போது மருந்துகள் கிடைக்காத நிலையில், ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் நன்மை பயக்கும் இது போன்ற ஒரு ஆராய்ச்சியை மேற்கொள்வது பற்றி என் மனதில் உதித்த  ஒரு எண்ணம் நினைவுக்கு வந்தது. இந்த எண்ணம் என் மனதில் தோன்றுவதற்கு முன்பே, கடவுளால் ஸத்குரு டாக்டர். முகுல் காட்கிலின் மனதில் அது ஏற்கனவே விதைக்கப்பட்டு, தேவையான பொருளடக்கத்துடன் அவர் எழுதி வெளியிட்டார்; ஆகவே, ஸத்குரு டாக்டர். முகுல் காட்கில் மீது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட நன்றியுணர்வு என் மனதில் எழுந்தது. மேலும் இந்த எண்ணத்தை விதைத்ததற்காக, தெய்வங்களிடம் ஆன்மீக உணர்வு விழிப்படைந்தது.’ – (பராத்பர குரு) டாக்டர். ஆடவலே

‘நவீன மருத்துவ நிபுணர்களும் அவர்களின் மருந்துகளும் வரவிருக்கும் பாதகமான காலங்களில் கிடைக்காது. அத்தகைய சூழ்நிலையில், ஒரு குறிப்பிட்ட நோய்க்குரிய தீர்வை கண்டறிவது கடினம். எனவே, அவற்றை அறிந்து கொள்வதற்காக ஸாதகர்கள் இந்தக் கட்டுரையைப் பாதுகாத்து அதில் குறிப்பிட்டுள்ளபடி தெய்வத்தின் நாமங்களை பாராயணம்  செய்ய  வேண்டும். இது நோயைக் குறைக்க உதவும்’ – (பராத்பர குரு) டாக்டர் ஆடவலே (30.6.2022)

சில  குறிப்பிட்ட நோய்களை குணப்படுத்துவதற்கு, தியானத்தின் மூலம்  எந்த தெய்வத்தின் தத்துவம்  (7 முக்கிய தெய்வங்களில் – ஸ்ரீ துர்காதேவி, ஸ்ரீராம், ஸ்ரீகிருஷ்ண, ஸ்ரீ தத்த, ஸ்ரீ கணபதி, ஸ்ரீ மாருதி மற்றும் சிவபெருமான்) இன்றியமையாதது மற்றும் எந்த விகிதாச்சாரத்தில் தேவை என்பதை  முதலில் ஆராய்ந்தேன். நான்  முதலில் கொரோனா வைரஸை குணப்படுத்துவதற்கு உரிய  நாமஜபத்தை  ஆராய்ந்து கண்டறிந்து, அது பலன் அளிப்பதையும் அறிந்தேன். இது மற்ற நோய்களுக்கான நாமஜபத்தை கண்டறிய எனக்குள் ஆர்வத்தை எற்படுத்தியது. இவை பல்வேறு குணமளிக்கும் சக்தி கொண்ட தெய்வங்களின் கூட்டு நாமஜபங்களாகும். ஸாதகர்கள், தங்களின் நோய்களை குணப்படுத்திக் கொள்ள இந்த நாமஜபங்களை பரிந்துரை செய்து வருகிறேன். இதனால் அவர்கள் பயனடைந்தார்கள் என்பதையும் புரிந்துகொண்டேன். சில நோய்கள், அவற்றை குணப்படுத்துவதற்குரிய நாமஜபங்கள் மற்றும் அவற்றைப் பாராயணம் செய்தபின் எற்பட்ட  ஆன்மீக அனுபவங்கள் பற்றிய தகவல்கள் சில மாதங்களுக்கு முன்பு ‘தினசரி ஸனாதன் பிரபாத்’தில் கொடுக்கப்பட்டன. இன்று, மேலும் சில நோய்கள் மற்றும் அவற்றைக் குணப்படுத்துவதற்குரிய நாமஜபங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு ஸாதகர்களுக்கு கடந்த 3 மாதங்களில்  இந்த நாமஜபங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.  ஸாதகர்கள் தங்களின் ஆன்மீக அனுபவங்களை மின்னஞ்சல் முகவரிக்கோ  அல்லது இந்தக் கட்டுரையின் கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கோ  விரைவாக எழுதி அனுப்பவும்.

 ஸத்குரு டாக்டர். முகுல் காட்கில் அவர்கள்
நோய்களை தீர்க்கும் நாமஜபங்களை தியானத்தின்
மூலம் கண்டறிய முனைகிறார்.

நோய்  விபரம் தகுந்த, பரிந்துரைக்கப்பட்ட கூட்டு நாமஜபங்கள் (குறிப்பு)
1. கால்களை பாரமாக உணருதல் (மரத்து போதல் ) ஸ்ரீ கணேசாய நமஹ | ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஓம் நம:சிவாய |
2. நெஃப்ரோடிக் சிண்ட்ரோம் (சிறுநீரக கோளாரால் அதிகப்படியான புரத சத்தை சிறுநீரின் மூலம் உடல் வெளியேற்றுதல்) ஸ்ரீ குருதேவ தத்த | ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ | ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம | ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய|
3. ஸ்க்லெரோடெர்மா-  தோல் தடிமனாகவும் இறுக்கமாகவும் மாறுதல், குறைந்த ரத்தஓட்டம், சோர்வு, தசைகள் இறுக்கமாதல் போன்றவை) ஸ்ரீ குருதேவ தத்த | ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம | ஓம் நமோ பகவதே வாசுதேவாய | ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய|
4. பொடுகினால் (வேனற்கட்டியினால்) தலையில் எற்படும் அரிப்பு ஓம் நமோ பகவதே வாசுதேவாய | ஸ்ரீ குருதேவ தத்த | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஓம் நம:சிவாய|  ஓம் நம:சிவாய|
5. ஒரே பாலினத்தவர் மீது ஏற்படும் ஈர்ப்பு ஸ்ரீ குருதேவ தத்த |  ஸ்ரீ குருதேவ தத்த | ஓம் நமோ பகவதே வாசுதேவாய | ஓம் நம:சிவாய|  ஓம் நம:சிவாய|
6. இளைஞர்களிடம் ஏற்படும் அதிகப்படியான பாலியல் நோக்குநிலை ஸ்ரீ குருதேவ தத்த |  ஓம் நமோ பகவதே வாசுதேவாய | ஓம் நமோ பகவதே வாசுதேவாய | ஓம் நம:சிவாய|  ஓம் நம:சிவாய|
7. உடலில் இன்சுலின் உற்பத்தி குறைபாடு (நீரிழிவு நோய்) ஓம் நமோ பகவதே வாசுதேவாய | ஸ்ரீ கணேசாய நமஹ | ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஸ்ரீ ஹனுமதே நமஹ |
8. முணுமுணுத்தல், கத்துதல் மற்றும் தூக்கத்தில் ஒருவர் மீது ஆக்ரோஷமாக மாறுதல்  ஸ்ரீ குருதேவ தத்த |  ஓம் நமோ பகவதே வாசுதேவாய | ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய|  ஓம் நம:சிவாய|
9
உடலில் சதை கட்டி உருவாகுதல்
ஓம் நமோ பகவதே வாசுதேவாய | ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய|  ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய|
10. மயஸ்தினியா க்ராவிஸ் (தசைக்களைப்பு நரம்பியல் கோளாறு. எலும்பு தசைகளுடன் தொடர்புடைய நரம்புகளுக்கு மூளையால் அனுப்பப்படும் சமிக்ஞைகள் தசைகளை அடையாமல் தடுக்கப்படுவதன் விளைவாக தசைகள் செயல்படாமல் இருத்தல்) ஓம் நமோ பகவதே வாசுதேவாய | ஸ்ரீ கணேசாய நமஹ | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஓம் நம:சிவாய|
11. வயிற்றில் அதிக அமிலத்தன்மை காரணமாக உணவை வாந்தி எடுப்பதால் ஏற்படும் களைப்பு ஸ்ரீ துர்காதேவ்யை நமஹ | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஓம் நம:சிவாய|  ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய|
12. இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரித்தல் ஸ்ரீ குருதேவ தத்த | ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய|
13. ப்ரோசன் ஷோல்டர் (உறைந்த /மரத்துபோன தோள் பட்டை) ஸ்ரீ கணேசாய நமஹ | ஸ்ரீ  ஹனுமதே நமஹ | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய|
14. அட்ரினோகோர்டிகோட்ராபிக் ஹார்மோன் அதிகம் சுரத்தல் (ACTH) (உடலில் சமநிலையை எற்படுத்தும் ஒரு வகை நீர் அதிகப்படியாக சுரப்பது) ஸ்ரீ கணேசாய நமஹ | ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம |
15. சிறுநீரகத்தின் வீக்கம் ஓம் நமோ பகவதே வாசுதேவாய | ஸ்ரீ கணேசாய நமஹ | ஓம் நம:சிவாய|  ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய|
16. மாதவிடாய் சுழற்சியின் போது வயிற்றில் கடுமையான வலி ஏற்படுதல் ஸ்ரீ கணேசாய நமஹ | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஓம் நம:சிவாய|
17. பெருங்குடலில் எற்படும் புண் ஸ்ரீ கணேசாய நமஹ | ஸ்ரீ கணேசாய நமஹ | ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம |  ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய|
18. வெளிப்புற காரணிகளால் எற்படும்  நிலையற்ற மனோநிலை ஸ்ரீ குருதேவ தத்த | ஸ்ரீ கணேசாய நமஹ | ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய|
19. இரத்தத்தை மெல்லியதாக மாற்றுவதற்கு (கொரோனா வைரஸ் தொற்று சிலருக்கு இரத்தத்தை தடிமனாக்குகிறது) ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம | ஸ்ரீ குருதேவ தத்த | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஓம் நம:சிவாய| ஓம் நம:சிவாய|
20. ஸ்டெராய்டுகளின்(இயக்க ஊக்கி மருந்துகள்) பக்க விளைவுகள் ஸ்ரீ கணேசாய நமஹ | ஸ்ரீ கணேசாய நமஹ | ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம | ஸ்ரீ ஹனுமதே நமஹ | ஓம் நம:சிவாய|

குறிப்பு : கொடுக்கப்பட்ட வரிசையில் உள்ள கூட்டு நாமஜபங்கள் ஒரு நோய்க்காக பாராயணம் செய்யும்போது அவை ஒருமுறை  ஜபித்ததாகவே கருதப்படுகிறது. இந்த நாமஜபங்களை குறிப்பிட்ட காலம் வரை  மீண்டும் மீண்டும்  தொடர்ந்து செய்ய வேண்டும்.

1. மேற்கூறிய நோய்களில் சில நோய்களுக்கான குணப்படுத்தும் நாமஜபங்களைப் பற்றிய ஸாதகர்களின்  தனித்துவ அனுபவங்கள்

1 அ. சிறுநீரின் மூலம் அதிக அளவு புரதங்கள் வெளியேறுதல் (நெஃப்ரோடிக் சிண்ட்ரோம்/சிறுநீரக சிதைவு நோய்)

இது ஒரு சிறுநீரகக் கோளாறு. இதனால் அதிக அளவு புரதசத்து சிறுநீர் வழியாக வெளியேறும். ஒரு பெண் ஸாதகரது 9 வயது மகன் 2015 முதல் இந்தக் கோளாறினால் அவதிப்பட்டு வந்தார். 3 – 4 மாதங்களுக்கு ஒருமுறை மிகவும் அவதிப்படுவார். அதை குணப்படுத்த ஸ்டெராய்டுகளை எடுத்து கொண்டதால், அவருக்கு உடல் முழுவதும் வீக்கம் ஏற்பட்டது. 21 டிசம்பர் 2021ல், அந்த  நோய்க்குரிய, குணமாக்கும் நாமஜபத்தை பரிந்துரைத்தேன். தனது மகனுக்காக தினமும் 1 மணிநேரம் பரிந்துரைக்கப்பட்ட  நாமஜபத்தை அவர் பாராயணம் செய்தார். ஆரம்பித்த 7 நாட்களுக்குள்,  மகனின் சிறுநீரில் புரதச் சத்துகள் செல்வது நின்று போனது. அந்த பெண் ஸாதகரால் தனது மகனின் சிறுநீரில் புரதங்கள் வெளியேறுகிறதா என்பதை எளிய முறையில் வீட்டிலேயே சுலபமாக சரி பார்க்க முடிந்தது. தொடர்ந்து நாமஜபம் செய்ததால், 3-4 மாதங்களுக்கு ஒருமுறை நோய் மீண்டும் வருவது முற்றிலும் நின்றுபோனது. இருப்பினும், இன்று வரை அவர் நாமஜபத்தை தொடருகிறார். பின்னர், தனது மகனின் இந்த நோய்க்கான மூல காரணத்தை அவனது மனதில் உள்ள சில  பயமே என ஹோமியோபதி மருத்துவர் மூலம் கண்டறிந்து அதை அவரது மருந்துகளின் மூலம் நீக்கி குணப்படுத்தி வருகிறார்.

1 ஆ. ஒரே பாலினத்தவர் மீது ஏற்படும்  ஈர்ப்பு

ஆன்மீக ஆர்வலர் ஒருவர், ஒரே பாலினத்தவர்களிடம் ஈர்க்கப்படும் கஷ்டத்தில் அவதியுற்றார். அவர் தனது பிரச்சினையை வெளிப்படையாக கூறியபோது, ​அதை போக்குவதற்கான குணப்படுத்தும் நாமஜபத்தை பரிந்துரைத்தேன். தினமும் ஒரு மணி நேரம் ஜபிக்க ஆரம்பித்த பிறகு, 20 நாட்களில் அவருடைய குறைபாடு வெகுவாகக் குறைந்தது.

1 இ. இளம் வயதினரின் அதிகப்படியான பாலியல் நோக்குநிலை

ஒரு இளம் ஆன்மீக ஆர்வலர் ஒருவர், பெண்களிடம் அதிகப்படியான பாலியல் ஈர்ப்பைக் கொண்டிருந்தார். மேலும்  அது பற்றிய தொடர் எண்ணங்களாலும் அவதியுற்றார். இது அவரது ஆன்மிகப் பயிற்சிக்கு தடையாக இருந்ததால், அதை குணப்படுத்துவதற்குரிய நாமஜபத்தை பற்றி கேட்டார். அது பற்றி ஆராய்ச்சி செய்து தகுந்த நாமஜபம் பரிந்துரைக்கப்பட்டது. அதை 15 நாட்கள் தொடர்ந்து ஜபித்த பிறகு, அவரது கஷ்டம் வெகுவாகக் குறைந்தது.

1 ஈ. உடலில் இன்சுலின் உற்பத்தி குறைபாடு (நீரிழிவு)

ஒரு ஸாதகரின் (அவர் ஒரு மருத்துவர்) 16 வயது மகனுக்கு உடலில் உள்ள ஒரு குறிப்பிட்ட குறைபாட்டினால் இன்சுலின் உற்பத்தியாகாது. இத்தகைய குறைபாடு 10 லட்சத்தில் ஒருவருக்கு காணப்படும். எனவே, அத்தகையவர்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை உடலில் இன்சுலின் அளவை பரிசோதித்து அதற்குரிய  சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்நோயை குணப்படுத்த  ஜனவரி 2022ல் அந்த  ஸாதகரின் மகனுக்கு ஒரு குணப்படுத்தும் நாமஜபத்தை பரிந்துரை செய்தேன். கடந்த 4 மாதங்களில் தினமும் 1 மணிநேரம் ஜபம் செய்ததால் அவரது இரத்தத்தில் இன்சுலின் அளவு குறையாமல் 1 மில்லி லிட்டருக்கு 1 நானோகிராம் என்ற அளவில் பராமரிக்கப்பட்டது. ஒரு சாதாரண நபரின் இரத்தத்தில் இன்சுலின் அளவு 1 மில்லி லிட்டருக்கு 2 நானோகிராம் ஆகும். எனவே, இப்போது அவர் தினமும் 2 மணி நேரம் நாமஜபம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

1 உ. உறக்கத்தின் போது முணுமுணுத்தல், கூச்சலிடுதல் மற்றும் மற்றவர் மேல் ஆக்ரோஷமடைதல்

இரண்டு ஸாதகர்கள் இந்த கஷ்டத்தால் அவதிப்பட்டனர். தியானத்தின் மூலம் ஆராய்ச்சி செய்து பரிந்துரைக்கப்பட்ட குணப்படுத்தும் நாமஜபத்தை செய்த  2 வாரங்களில் அவர்களின் கஷ்டம் தீர்ந்தது.

1 ஊ. உடலில் தசைக் கட்டிகள் உருவாதல்

மார்ச் 2022-ல், ஒரு பெண் ஸாதகரின் அண்ணிக்கு வயிற்றில் தசைக் கட்டி ஏற்பட்டது. இதனை போக்க அவருக்கு  குணப்படுத்தும் நாமஜபத்தை பரிந்துரை செய்தேன். ஒரு மாதம் தினமும் ஒரு மணி நேரம் ஜபித்த பின் தசைக் கட்டி குறைந்துவிட்டது போல் உணர்ந்தார். அதை மீண்டும் உறுதிப்படுத்துவதற்காக மருத்துவரிடம் பரிசோதனைக்கு சென்றார். ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர், கட்டி சிதைந்திருப்பதை கண்டார். மேலும் அந்த ஸாதகரிடம், தசைக் கட்டிகள் சிதைவதைக் கண்டது இதுவே முதல் முறை என்றும், இது உண்மையில் சாத்தியமற்றது என்றும் கூறினார். மேலும் தசைக் கட்டியை அகற்றும் செயல்பாட்டிற்கு  இது ஒரு நல்ல அறிகுறி என்றும்  கூறினார். இந்த நேர்மறையான விளைவு நாமஜபத்தினாலேயே என்பது தெளிவாகிறது.

1 எ. மயஸ்தினியா கிராவிஸ் (எலும்புத் தசைகளுடன் தொடர்புடைய நரம்புகளுக்கு மூளையால் அனுப்பப்படும்  சமிக்ஞைகளை தசைகளை அடைவதைத் தடுக்கும் ஒரு நரம்புத்தசைக் கோளாறு, இதன் விளைவாக தசைகள் செயல்படாமல் இருக்கும்)

இது மிகவும் தீவிரமான நோய் மற்றும் நரம்புத்தசை சந்திப்புடன் தொடர்புடையது. இந்த நோய் ஆட்டோ இம்யூன் கோளாறு என்ற வகையின் கீழ் வருகிறது, இதில் ஒருவரின் சொந்த நோய் எதிர்ப்பு சக்தி ஒருவரின் சொந்த உடல் அல்லது உடலின் ஒரு பகுதியை தாக்குகிறது. ‘Myasthenia Gravis’ல், எலும்புடன் இணைந்த தசைகள் நோய்வாய்ப்படும். எனவே, உடல் உறுப்புகளின் இயக்கத்துடன் தொடர்புடைய தசைகள் மற்றும் சுவாச செயல்முறையுடன் தொடர்புடைய தசைகள் இந்த நோயால் பலவீனமடைகின்றன. பெண் ஸாதகர்  ஒருவர் இந்த கோளாறால் அவதிப்பட்டார், இதனால் அவரால் அசையவே முடியவில்லை, உதாரணமாக அவரால் தனது விரல்களால் பேனாவை கூட தூக்க முடியவில்லை. அவர்  எளிதில் களைத்துப் போவதால் படுத்து ஓய்வெடுக்க வேண்டியிருந்தது. மருந்துகளின் வடிவில் ஸ்டெராய்டுகளை எடுத்துக்கொள்வதுதான் இதற்குரிய  ஒரே சிகிச்சை; ஆனால் அது உடலில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்த நோயை குணப்படுத்தும் நாமஜபத்தை ஆராய்ந்து பிப்ரவரி 2022ல் அவருக்கு கொடுத்தேன்.அவர்  தினமும் 2 மணிநேரம் நாமஜபம் செய்து ஒரு மாதத்திலேயே நல்ல பலன்களைக் கண்டார். அவருடைய தினசரி வேலைகளை அவரால் செய்ய முடிந்தது. அவரது முன்னேற்றங்களைக் கவனித்த மருத்துவர், ஸ்டீராய்டு அடிப்படையிலான மருந்துகளின் அளவைக் குறைத்து, நோய் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் குறிப்பிட்டார். கூடுதலாக, இந்த நோய் சுவாசத்தில் எந்த மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, இல்லையெனில் நிலைமை மோசமாக இருந்திருக்கும் என்றும்  மருத்துவர்  கூறினார்.

1 ஏ. அட்ரினோகார்டிகோட்ரோபிக் ஹார்மோனின் அதிகரிப்பு :

பிப்ரவரி 2022ல், ஒரு பெண் ஸாதகரது  உடலில் அட்ரினோகார்டிகோட்ரோபிக் ஹார்மோனின் அளவு அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு எப்போதும் குறைந்த இரத்த அழுத்தம் இருந்தது. (இரத்தத்தில் கார்டிசோல் ஹார்மோன் குறைவதால் அட்ரினோகார்டிகோட்ரோபிக் ஹார்மோனின் அதிகரிப்பு ஏற்படுகிறது. குறைந்த இரத்த அழுத்தத்திற்கு கார்டிசோல் ஹார்மோன் குறைவதே காரணம்.) அவர் அதிக சோர்வாக இருந்ததுடன் மேலும் அவரது வளர்சிதை மாற்றமும் பாதிக்கப்பட்டது. இவை அனைத்தும் அவரது நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கும் வழிவகுத்தது. மார்ச் 2022-ல் இதை குணப்படுத்துவதற்குரிய நாமஜபத்தை பரிந்துரை செய்து தினமும் 1 மணிநேரம் ஜபிக்கச் சொன்னேன். தொடர்ந்து 3 மாதங்கள் செய்து, மருத்துவர் பரிந்துரைத்த  ஸ்டீராய்டு மருந்துகளையும் உட்கொண்டார். ஜூன் 2022-ல், அவரது உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. அவரது சோர்வும் குறைந்து, இரத்த அழுத்தம் முன்பு இருந்ததை விட அதிகரித்தது, மேலும் அவரால் உணவை ஜீரணிக்க முடிந்தது. முன்பு 1 மில்லி லிட்டருக்கு 72.6 பிகோகிராம் இருந்த அட்ரினோகார்டிகோட்ரோபிக் ஹார்மோனின் அளவு இப்போது 1 மில்லி லிட்டருக்கு 64.1 பிகோகிராம் ஆகக் குறைந்துள்ளது. (பொதுவாக, அட்ரினோகார்டிகோட்ரோபிக் ஹார்மோனின் அளவு 1 மில்லி லிட்டருக்கு 46 பிகோகிராமிற்கும் குறைவாக இருக்க வேண்டும்.)

 2. நாமஜபத்தின்  முக்கியத்துவம்

மருந்துகள் மற்றும் மருத்துவர்களின் பற்றாக்குறை உணரப்படும் மோசமான காலகட்டங்களில், இந்த நாமஜபங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

3. நன்றியுணர்வு

பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின் அருளால், இந்த நிவாரண நாமஜபங்களை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது, மேலும் இவை மிகவும் பயனுள்ளதாக இருப்பதைக் கவனிக்க முடிந்தது. இதற்காக நான் பராத்பர குரு (டாக்டர்) ஆடவலே அவர்களின்  திவ்ய திருவடிகளில் எனது அளவிட முடியாத நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். – (ஸத்குரு) டாக்டர் முகுல் காட்கில், Ph.D., கோவா (3.7.2022).

இந்தக் கட்டுரையில் வெளியிடப்பட்டுள்ள ஆன்மீக அனுபவங்கள் அனைத்தும், ‘ஆன்மீக உணர்வு இருக்கும் இடத்தில் கடவுள் இருக்கிறார்’ என்ற பழமொழியின் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற  தனிப்பட்ட ஆன்மீக அனுபவங்களின் தொகுப்பு ஆகும் . அனைவருக்கும் ஒரே மாதிரியான ஆன்மீக அனுபவம் கிடைக்காமல் இருக்கலாம். – ஆசிரியர்

குறிப்பிட்ட நோய்களுடன் தொடர்புடைய நிவாரண நாமஜபங்களை ஜபித்த  பிறகு எற்படும் ஆன்மீக அனுபவங்களை அனுப்புங்கள்!

மேற்கூறிய நோய்களில் ஏதேனும் ஒன்றை ஸாதகர்கள் அனுபவித்து, அதை  குறைக்க, அது தொடர்பான நிவாரண நாமஜபத்தை  ஜபிக்க வேண்டும் என்று நினைத்தால், ஒரு மாதத்திற்கு தினமும் ஒரு  மணிநேரம் ஒரு பரிசோதனையாக இதை செய்ய வேண்டும். மேலும் தங்கள் ஆன்மீக அனுபவங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected] அல்லது கீழ்  கொடுக்கப்பட்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். ஸாதகர்களின்  இத்தகைய அனுபவங்கள் புனித நூல்களில் சேர்க்கப்படுவதுடன், இந்த நாமஜபங்களின்  பயனை உறுதிப்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கும்.

அஞ்சல் முகவரி : ஸனாதன் ஆச்ரமம், 24/பி ராம்நாதி, பந்தோடா, போண்டா, கோவா. பின்கோடு – 403401.

 

 

 

Leave a Comment