ஸ்ரீ அத்திவரதப் பெருமாள் சுவாமி, காஞ்சிபுரம் (தமிழ்நாடு)

Contents

எதிரிகளின் அழிவு, உலக முன்னேற்றம், மற்றும் மோக்ஷம் வேண்டி வழிபாடு செய்பவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் ப்ரசித்தி பெற்ற ஆலயம்!

1. காஞ்சிபுரம் -மோக்ஷம் அளிக்கும் ஏழு தலங்களில் ஒன்று!

காஞ்சிபுரமானது  ஏழு மோக்ஷபுரிகளில் ஒன்றாக கருதப்படுகிறது  (முக்தி அளிக்கக்கூடிய புனித ஸ்தலங்கள்). காஞ்சிபுரத்தில் சிவசக்தி, ஸ்ரீவிஷ்ணு  உட்பட 1008 தெய்வங்களின் கோயில்கள் இருப்பதால், தமிழ்நாட்டின் கோயில்களின் நகரம் என்று அழைக்கப்படுகிறது. ‘சிவ-காஞ்சி’ மற்றும் ‘விஷ்ணு-காஞ்சி’ இரண்டும் இரட்டை மோக்ஷ ஸ்தலங்களாகும். ஸ்ரீவிஷ்ணுவின் 108 திவ்ய ஸ்தலங்களில் ஒன்றான ‘விஷ்ணு-காஞ்சி’யில் உள்ள ஸ்ரீவிஷ்ணு கோயில் ‘ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில்’ என்று அழைக்கப்படுகிறது. ஹிந்து தர்மத்தில் இந்த கோவிலுக்கு பெரும் முக்கியத்துவம் உண்டு. வரதராஜ ஸ்ரீவிஷ்ணுவின் பழமையான சிலையானது  ஒவ்வொரு 40 வருடங்களுக்கு பிறகு குளத்திலிருந்து எடுக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்படுகிறது. இது ‘ஸ்ரீ அத்திவரதராஜ சுவாமியின் பழமையான சிலை’யாகக் கருதப்படுகிறது. மற்ற நேரங்களில், இக்கோயிலில் உள்ள  ஸ்ரீ வரதராஜ சுவாமியின் கல் சிலை பக்தர்களால் வழிபடப்படுகிறது.

2. பழமையான ஸ்ரீ அத்திவரதராஜ சுவாமி சிலை!

ஸ்ரீ அத்திவரத சுவாமியின் சிலை, சத்யயுகத்தில் (நான்கு யுகங்களின் சுழற்சியில் முதன்மையானது) பிரம்மாவால் அத்தி மரத்தால் செய்யப்பட்ட 4 சிலைகளில் ஒன்றாகும். 9 அடி உயரமுள்ள இந்த சிலை 12 அடி நீளமுள்ள வெள்ளிப் பெட்டியில் ‘அனந்த் சரோவர்’ என்ற குளத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 40 ஆண்டுகளுக்குப் பிறகும் சம்பிரதாயமாக சிலை வெளியே எடுக்கப்பட்டு 48 நாட்கள் வழிபாடு செய்யப்படுகிறது. திருவிழாவின் முதல் 30 நாட்களில், அத்திவரதராஜ சுவாமி ஸயன  நிலையிலும்  அடுத்த 18 நாட்களுக்கு, நின்ற கோலத்திலும்  தரிசனம் தருகிறார். ‘அத்திவரத உற்சவம்’ என்று அழைக்கபடும்  இத் திருவிழாவில் பக்தர்களுக்கு அவரைத்  தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. ஒவ்வொரு 40 வருடங்களுக்கும் ஒரு முறை நடக்கும் இந்த திரு விழாவை ஒரு மனிதன் தன் வாழ்நாளில்  இரண்டு அல்லது அதிகபட்சம் மூன்று முறை மட்டுமே  காண முடியும். இவ்விழா 2019 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதிலுமிருந்து தினமும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரத ஸ்வாமியை தரிசனம் செய்ய வருகை தந்தனர். 1979 ம் ஆண்டு மற்றும், 2019 ம் ஆண்டு தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்ட இந்த சிலை, இனி 2059ம் ஆண்டுதான் வெளியே எடுக்கப்படும்.

3. பிரம்மாவால் துவங்கப்பட்ட அஸ்வமேத
யாகத்தைப் பாதுகாக்க ஸ்ரீவிஷ்ணு தோன்றினார்!

ஸ்ரீ சரஸ்வதி தேவி ஒருமுறை பிரம்மாவிடம் ஸ்ரீ சரஸ்வதி மற்றும் ஸ்ரீ லக்ஷ்மியில் யார் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று கேட்டார். பிரம்மதேவன் ஸ்ரீ லக்ஷ்மிக்கு ஆதரவாக தனது கருத்தைக் கூறினார், இது ஸ்ரீ சரஸ்வதியை கோபப்படுத்தியதால், அவ்விடத்தை விட்டு வெளியேறினார். பின்னர் பிரம்மதேவர் அஸ்வமேத யாகம் செய்தபோது, ஸ்ரீ சரஸ்வதி தேவி இந்த யாகத்தில் தடைகளை ஏற்படுத்துவதற்காக வேகவதி நதியின் கோபமான வடிவத்தை எடுத்தார். அப்போது ஸ்ரீவிஷ்ணு தோன்றி, யாகம் தடையின்றி தொடரும் வகையில் அவளை நிறுத்தினார். பிறகு பிரம்மா விஸ்வகர்மாவால் அத்திமரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட 4 சிலைகளைப் பெற்றார். அதில் ஒன்றுதான் ஸ்ரீ அத்திவரதராஜப் பெருமாள் சிலை. இந்த சிலை காஞ்சியில் பிரதான தெய்வமாக பிரதிஷ்டை செய்யப்பட்டதால் அந்த பகுதிக்கு ‘விஷ்ணு காஞ்சி’ என்று பெயர் வந்தது. சமஸ்கிருதத்தில் ஔதும்பர் என்றும் தமிழில் ‘அத்தி’ என்றும் அழைக்கப்படுகிறது. அத்தி வரத ஸ்வாமி சிலை, பிரம்மதேவனுக்கு வரம் அளித்த அரசன் என்ற பொருளிலும் பிரசித்தி பெற்றது. இந்த தலத்தின் முக்கிய சிலையாக இருந்த இந்த சிலை 16 ஆம் நூற்றாண்டு வரை இருந்தது மேலும் பக்தர்கள் தரிசனத்திற்காகவும் திறந்து வைக்கப்பட்டு இருந்தது

4. ‘ஸ்ரீ அத்திவரத ஸ்வாமி சிலையின்’ முக்கியத்துவம் !

அத்தி மரத்தால் செய்யப்பட்ட இச்சிலை தண்ணீரில் வைக்கப்படும்போது, மிக அசாதாரண பிரகாசம், ஒளிவட்டம் மற்றும் தெய்வீக ஆற்றலைப் பெறுகிறது. எனவே, அத்தகைய சிலை எதிரிகளை அழிக்கவும், உலக முன்னேற்றம் மற்றும்  மோட்ஷம் அடையவும் உதவுகிறது. அத்தி மரம் மிகவும் மங்களகரமான மற்றும் புனிதமான மரமாகும். ஸ்ரீ தத்தாத்ரேயருக்கு மிகவும் விருப்பமான இருப்பிடமாகும். அத்தகைய புனிதமான அத்தி மரத்தில் இருந்து பிரம்மாவால் உருவாக்கப்பட்ட சிலை, சடங்கு முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.  மேலும் சத்யயுகத்தில் பிரம்மா, த்ரேதாயுகத்தில் கஜேந்திரன், துவாபரயுகத்தில் ப்ருஹஸ்பதி, கலியுகத்தில் அனந்தசேஷனால் வழிபட்ட ஸ்ரீ அத்திவரத ஸ்வாமி மிகவும் புனிதமானவர். பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவர். இந்த விழா பிரம்மோத்ஸவம் என்றும் அழைக்கப்படுகிறது.

5. 16ஆம் நூற்றாண்டில் தேடியும் கிடைக்காத சிலை,
17ஆம் நூற்றாண்டில் மீண்டும் தோன்றியது!

அந்த புனித சிலை வட்டமாக காட்டப்பட்டுள்ள
மண்டபத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளது

16 ஆம் நூற்றாண்டில் (1669 இல்), தத்தாத்ரேய பிரிவைச் சேர்ந்த ஒரு சாதுவால் (மதகுரு) இந்த சிலை அனந்தபுஷ்கரணியில்  மறைத்து வைக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, அதன் இருப்பும்  மறக்கப்பட்டது. பின்னர் அந்த மதகுரு இறந்தபின், அவரது சந்ததியினர் சிலையைத் தேட முயன்றனர், ஆனால் அவர்களால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு அத்தி மர சிலையைப் போலவே காட்சியளிக்கும், அத்ரி முனிவர் செய்து வழிபட்ட சிலை கோயிலில் வைக்கப்பட்டது. இன்றும் இது பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக  வைக்கப்பட்டுள்ளது. 1709-ம் ஆண்டு குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பாம்பு வடிவில் இருந்த வெள்ளிப் பெட்டியில் மூலவர் சிலை கண்டெடுக்கப்பட்டது. பின்னர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை இச்சிலை குளத்தில் இருந்து வெளியே கொண்டு வந்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

6. திருவிழாவுக்குப் பிறகு குளத்தில் எப்படி சிலை
அதன் மூல இடத்தில் வைக்கப்படுகிறது?

‘அனந்தபுஷ்கரணியில்’  சிலையுடன் வெள்ளிப் பெட்டி
வைக்கப்படும் இடம் மற்றும்  அதன் அருகில் அனந்தசேஷனின் சிலை

48 நாட்கள் திருவிழாவிற்குப் பிறகு, சிலை மீண்டும் அனந்தபுஷ்கரணியில் வைக்கப்படுகிறது. முதலில் குளத்தில் இருந்து தண்ணீர் அகற்றப்பட்டு, அப்பகுதி முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, அதன்பின் சடங்கு முறைப்படி வெள்ளிப் பெட்டியில் வைக்கப்பட்ட ஸ்வாமி சிலை குளத்தில் உள்ள மண்டபத்தில்  வைக்கப்படுகிறது. 48வது நாள் நள்ளிரவில் சிலை மீண்டும்  குளத்தினுள் வைக்கப்படுகிறது. ஸ்வாமி சிலை வைத்த பிறகு எப்போதும் மழை பெய்து குளம் இயற்கை நீரால் நிரம்புவது வழக்கம். 2019ம் ஆண்டும் ஆகஸ்ட் 18ம் தேதி நள்ளிரவு குளத்தில் ஸ்வாமி சிலை வைக்கப்பட்டது.  மழைக்கான அறிகுறியே இல்லாமல் இருந்தது. ஆனால் அன்று இரவு 12.30 மணிக்கு மேல் சென்னையில் இரண்டு நாட்கள் மழை பெய்து குளம் இயற்கை நீரால் நிரம்பியது. எப்பொழுதும் போல் வருணதேவன் தானே ஸ்ரீ அத்திவரதராஜ ஸ்வாமியை சந்திக்க வந்ததால், உள்ளூர் நிர்வாகம் குளத்தை நிரப்ப செய்து வைத்த மாற்று ஏற்பாடுகள் பயன்படுத்தப்படவேயில்லை.

7. நன்றியும் பிரார்த்தனையும்!

இவை அனைத்தும் அதிசயமே. மகரிஷி மற்றும் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் அருளால் தான், சத்யயுகத்தில் இருந்து தெய்வங்களால் வழிபடப்பட்டு வரும்  இந்த ஸ்வாமி சிலையை தரிசனம் செய்யும் வாய்ப்பு இந்தக் கடுமையான கலியுகத்திலும்  நமக்குக் கிடைத்துள்ளது. ஸ்ரீமன்நாராயணன் ஸ்வரூப பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஹிந்து ராஜ்யத்தை ஸ்தாபிக்க  உள்ள தடைகள் அனைத்தையும் நீக்கி, அனைவரும் இறையருளைப் பெற, வழி வகுக்கும் ஸ்ரீ அத்திவரதராஜ் ஸ்வாமி அவர்களின் புனித பாதங்களில் பிரார்த்தனை செய்வோம் . – திரு விநாயக் ஷான்பாக்

ஸ்ரீ அத்திவரத ஸ்வாமியை 40 ஆண்டுகளுக்குப்
பிறகு ஏன் வழிபடுகிறோம் ?

ஸயன நிலையில் ஸ்ரீ அத்திவரத ஸ்வாமி சிலை

ஸ்ரீ அத்திவரதராஜ சுவாமிகள் நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்

ஸ்ரீ அத்திவரத சுவாமியின் சிலை குளத்தில் மறைந்திருப்பதற்கும், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும்  வழிபடப்படுவதற்கும் பல்வேறு குறிப்புகள் உள்ளன.

அ. இஸ்லாமிய படையெடுப்பாளர்களிடமிருந்து சிலைக்கு அச்சுறுத்தல்

முற்காலத்தில் ஹிந்து கோவில்கள் இஸ்லாமிய படையெடுப்பாளர்களால் தாக்கப்பட்டன. சத்யயுகத்தில் இருந்து தெய்வங்களால் வழிபடப்பட்டு வந்த ஸ்வாமி சிலையை, அவர்கள் இடமிருந்து பாதுகாக்க, கோயில் பூசாரிகள் மூல  சிலையை குளத்தில் மறைத்து, அதன் இடத்தில் அதே போல் உள்ள சிலையை நிறுவினர். பின்னர் குளத்தில் மூலவர் சிலை தேடியும் கிடைக்கவில்லை, ஆனால் 40 ஆண்டுகளுக்கு பிறகு அந்த குளத்திலேயே கிடைத்தது. எனவே, 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழிபடப்படுகிறது, என்ற குறிப்பு சில இடங்களில் காணப்பட்டது.

ஆ. ஸ்ரீவிஷ்ணுவின் வழிகாட்டுதலின் படி, பிரம்மதேவன்,
கஜேந்திரன், பிருஹஸ்பதி மற்றும் அனந்த் சேஷ் ஆகியோரால்
மற்றவர்களுக்கு வழங்கப்பட்ட வழிபாட்டிற்கான காலம்

இந்த ஸ்தலம்  தொடர்பான சில குறிப்புகள்  புராணக் கதைகளிலும் காணப்படுகிறது. ஸ்ரீ அத்திவரத ஸ்வாமியை சத்யயுகத்தில் பிரம்மாவும், த்ரேதாயுகத்தில் கஜேந்திரனும், துவாபர்யுகத்தில் பிருஹஸ்பதியும், கலியுகத்தில் அனந்த் சேஷும் வழிபட்டனர். சத்யயுகத்தில், ஒருமுறை காஞ்சிபுரத்தில் பிரம்மதேவர் யாகம் செய்து கொண்டிருந்தபோது, புனித நெருப்பின் ஜுவாலை அத்தி மரச் சிலையைத் தொட்டது. பிரம்மதேவர் இதற்கு ஒரு தீர்வைக் கடவுளிடம் கேட்டார், அவர் அனந்த் சேஷ்ஷன்  வசிக்கும் குளத்தில் சிலையை வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டார். அதனால் இன்று வரை அந்த குளத்தில் ஸ்வாமி சிலை வைக்கப்பட்டுள்ளது. சத்யயுகத்தில் பிரம்மதேவர் ஸ்ரீ அத்திவரத் ஸ்வாமியை வழிபட்டபோது, ஸ்ரீவிஷ்ணு அவரிடம், “தேவனே, நீயே என்னைத் தொடர்ந்து வழிபடுகிறாய் மேலும்  மற்றவர்களுக்கும்  வழிபடும்  வாய்ப்பை வழங்கலாம் என்றார் . ”பின்னர், பிரம்மதேவர் சில கணங்களுக்கு மட்டுமே மற்றவர்களையும்  இந்த சிலையை வணங்க அனுமதித்தார்,  த்ரேதாயுகத்தில் கஜேந்திரனும், துவாபரயுகத்தில் பிருஹஸ்பதியும் ஸ்ரீ அத்திவரத் ஸ்வாமிக்கு பூஜை செய்யும் போது, அவர்களும் சில நிமிடங்களுக்கு மற்ற பக்தர்களை பூஜை செய்ய அனுமதித்தனர். இதேபோல், அனந்தசேஷ் சிலைக்கு பூஜை செய்யும் போது, அவரும் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை 48 நாட்களுக்கு இதுபோன்ற பூஜை செய்ய மற்றவர்களை அனுமதித்தார். எனவே, 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்தில் இருந்து ஸ்ரீ அத்திவரத சுவாமி சிலை எடுக்கப்பட்டு, 48 நாட்கள் பூஜை செய்யப்படுகிறது. திருவிழாவிற்குப் பிறகு, ஸ்வாமிசிலை ஒரு வெள்ளிப் பெட்டியில் ஒரு மண்டபத்தின் கீழ் வைக்கப்பட்டு, அடுத்த 40 ஆண்டுகளுக்கு அனந்த் ஷேசன் அதை வணங்குகிறார். ‘அனந்த் சரோவர்’ என்பது பகவான் ஷேஷாவின் இருப்பிடம்.

சத்யலோகம் மற்றும் தபோலோகம்  போன்ற உயர் லோகங்களில் (சூட்சும பகுதிகள்) காலத்தின் அளவு மற்ற லோகங்களுடன் ஒப்பிடும்போது வேறுபட்டது என்று தர்மசாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சத்யலோக்கதில் ஒரு கணம் என்பது  பூமியில்  ஒரு வருடத்திற்கு சமம்!

– திரு. விநாயக் ஷான்பாக்

 

Leave a Comment