கணபதியும் ஆன்மீக சாதனையும்

நாமஜபம் மற்றும் வ்யஷ்டி ஸாதனை

ஸ்ரீ கணேசாய நம

இதில் ஸ்ரீ என்பது பீஜமந்திரம். கணேசாய என்பது மூல பீஜத்தின் கருத்து. நம: என்பது முடிவு.

ஓம் கங் கணபதயே நம: இதில் ஓம் என்பது ப்ரணவம்; கங் என்பது மூல பீஜ மந்திரம்; கணபதயே என்பது தெய்வம்; நம: என்பது நமஸ்காரம்.

அனுபூதி – ஓம் கங் கணபதயே நம

என்ற நாமஜபத்தைச் செய்யும்போது கங் என்ற பீஜ மந்திரத்தின் சக்தியை உணர முடிந்தது :

1.10.2007 அன்று ஓம் கங் கணபதயே நம : நாமஜப படிவத்தை கண் முன் இருத்தி அதன் ஒவ்வொரு எழுத்தைப் பார்த்து நாமஜபம் செய்ய ஆரம்பித்தேன். அச்சமயம் நாமஜபத்திலுள்ள சைதன்யத்தால் என் மீது ஆன்மீக உபாயம் நடக்க ஆரம்பித்தது. (ஆன்மீக உபாயம் என்பது தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்பு குறைவதைக் குறிக்கிறது. – தொகுத்தவர்) கங் என்ற வார்த்தையைப் பார்க்கும்போது மற்ற வார்த்தைகளைக் காட்டிலும் அதிக அளவு ஆன்மீக உபாயம் தீவிரமாக நடப்பதை உணர முடிந்தது. – (பூ.) திரு சந்தீப் ஆலஷி, ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா.

(கங் என்பது கணபதியின் பீஜ மந்திரமாகும். பீஜ மந்திரமான கங் என்பது ஈச்வரனின் நிர்குண சின்னமாக விளங்குகிறது. அதே போல் கணபதயே என்பது ஈச்வரனின் ஸகுண சின்னமாக விளங்குகிறது. ஸகுணத்தைக் காட்டிலும் நிர்குணம் அதிக சக்தி வாய்ந்ததால் இந்த அனுபூதி ஏற்பட்டுள்ளது. – தொகுத்தவர்)

அதர்வசீர்ஷ பாராயணம்

தர்வ என்றால் வெப்பம், அதர்வ என்றால் சாந்தி, சீர்ஷ என்றால் தலை. யாருடைய பாதத்திலிருந்து தலைவரை சாந்தி கிடைக்கிறதோ அவரே அதர்வசீர்ஷ ஆவார். இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்பவர் ஸர்வ பாதகங்களிலிருந்து தடங்கல்களிலிருந்து முக்தி பெறுகிறார். அவருக்கு நான்கு புருஷார்த்தங்களும் ஸாத்தியமாகின்றன. இத்தகைய பலன் இந்த ஸ்தோத்திரத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்பவரைச் சுற்றி பாதுகாப்பு கவசம் ஏற்படுத்தும் சக்தி இதற்கு உள்ளது. அதனால் அதர்வசீர்ஷ பாராயணம் செய்பவருக்கு தீய சக்திகளின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்பு ஏற்படுகிறது.

காலத்திற்கேற்ற அவசிய ஸமஷ்டி ஸாதனை

ஆன்மீக முன்னேற்றத்திற்காக சுயமாக உபாஸனை செய்து தர்மவழி நடப்பதே வ்யஷ்டி ஸாதனையாகும். சமூகத்தின் ஸாத்வீகத் தன்மையை அதிகரிக்க, சமூகத்தினரையும் ஸாதனையில் ஈடுபட, தர்மவழியில் நடக்க ஊக்கமளிப்பதே ஸமஷ்டி ஸாதனையாகும். கணபதி உபாஸனையில் பூரணத்துவத்தை அடைய, கணேச பக்தர்கள், வ்யஷ்டி மற்றும் ஸமஷ்டி ஸாதனையில் ஈடுபடுவது மிகவும் அவசியமாகிறது. வ்யஷ்டி மற்றும் ஸமஷ்டி ஸாதனையைப் பற்றி மேலும் விவரங்கள், ஸனாதனின் வ்யஷ்டி மற்றும் ஸமஷ்டி ஸாதனை நூலில் கொடுக்கப்பட்டுள்ளது.

கணபதி உபாஸனை விஷயத்தில் சமூகத்தினருக்கு தர்மபோதனை வழங்குதல்

கணபதி உபாஸனையோடு சம்பந்தப்பட்ட பல்வேறு காரியங்களை சரியான முறையில் செய்வதற்கும் அவற்றின் உள்ளார்ந்த சாஸ்திரத்தையும் அவரவர் சக்திக்கேற்றபடி சமூகத்தினருக்கு தர்ம போதனை வழங்க முயற்சி செய்வதே கணேச பக்தர்களுக்குரிய, காலத்திற்கேற்ற மிக உன்னத ஸமஷ்டி ஸாதனையாகும்.

ஸனாதன் ஸன்ஸ்தா, கணபதி உபாஸனை சம்பந்தப்பட்ட பல காரியங்களை செய்யும் சரியான வழிமுறை மற்றும் அவற்றின் உள்ளார்ந்த சாஸ்திரம் பற்றிய வழிகாட்டுதல் வழங்கும் நூல்கள், கையேடுகள், ஒலி-ஒளி நாடாக்கள் மற்றும் தர்மபோதனை பலகைகள் ஆகியவற்றை செய்துள்ளன. நீங்கள் உங்களுக்குத் தெரிந்த கணேசபக்த, கணேச மண்டலிகளை அணுகி கணபதி உபாஸனை மற்றும் கணேஷோத்ஸவத்தை சரியான முறையில் கொண்டாடும் வழி பற்றிய தர்மபோதனை வழங்கலாம். தர்மாபிமானிகள், ஸ்தாபனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் கோவில்களை, அவரவர் இடங்களுக்கு அருகில் பார்வையில் படும் இடங்களில் தர்மபோதனைப் பலகைகளை உபயமளித்து மாட்ட ஊக்கப்படுத்துங்கள். அதோடு கோவில்கள், சமூக கூடங்கள், மண்டபங்கள், கண்காட்சி இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற இடங்களில் இந்த தர்மபோதனை பலகைகளை மாட்ட அவர்களின் உத்தரவு பெற்று, அவர்களுக்கும் இந்த விஷயங்களின் மஹத்துவத்தை எடுத்துக் கூறி ஸமஷ்டி ஸாதனை செய்யும் அரிய வாய்ப்பை பயன்படுத்துங்கள். ஸனாதனின் தர்ம போதனை பலகைகளைப் பற்றிய விவரங்கள் அதற்குரிய நூலில் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள ஸனாதனின் ஸத்ஸங்கங்களை அணுகுங்கள்.

கணபதிக்கு நேரும் அவமரியாதையைத் தடுப்பது

இன்று தெய்வங்களின் அவமரியாதை பல விதங்களில் நடந்து வருகின்றன. உதா. சித்திரக்காரர் ம.ஃபி.ஹுசேன், ஹிந்து தெய்வப் படங்களை நிர்வாணமாக ஆபாசமாக வரைந்து கண்காட்சியில் வைத்து விற்றிருக்கிறார். சொற்பொழிவுகள், நூல்கள் போன்ற பல விதங்களில், ஹிந்து விரோதிகள், ஹிந்து தெய்வங்களை அவமதித்துள்ளனர். வியாபார விளம்பரத்திற்காக தெய்வங்களை மாடல்களாக உபயோகிக்கும் தவறான வழக்கமும் உள்ளது.

மஹாராஷ்ட்ராவிலுள்ள ரத்னகிரி மாவட்டத்தில் சிப்ளூண் நகரில் பொது பணித் துறையினர், இரண்டு சக்கர வாஹன விபத்தைத் தடுக்க பாதையோரம் ஒரு விளம்பரப் பலகையில் கணேசரை அவமதித்திருந்தனர்.

தெய்வ நிந்தனை புரிவது, தெய்வ நம்பிக்கையை அவமதிப்பதாகும். இதனால் தர்மத்திற்கு பெரும் தீங்கு விளைகிறது. தர்மநிந்தனையைத் தடுப்பது, ஸமஷ்டி நிலையில் காலத்திற்கேற்றபடி செய்யும் தெய்வ உபாஸனையாகும்.

தகவல் : ஸனாதனின் தமிழ் கையேடு ‘கணபதி’

Leave a Comment