கணேச மூர்த்தியின் விஸர்ஜனம்

புனர்பூஜை செய்த பிறகு மூர்த்தியை நீர்நிலையில் விஸர்ஜனம் செய்கின்றனர். விஸர்ஜனத்திற்காக செல்லும்போது, கணபதி மூர்த்தியோடு தயிர், அவல், தேங்காய் மற்றும் மோதகத்தையும் எடுத்துச் செல்ல வேண்டும். நீர்நிலைக்கருகில் மூர்த்திக்கு ஆரத்தி எடுத்து, மற்ற பொருட்களுடன் சேர்ந்து மூர்த்தியை விஸர்ஜனம் செய்ய வேண்டும். விஸர்ஜனத்தின்போது அந்த நீர்நிலையின் மண்ணை சிறிது எடுத்து வந்து வீட்டில் தெளிப்பது வழக்கம்.

 

புனர்பூஜைக்குப் பின் அன்றோ அல்லது மறுநாளோ மூர்த்தியை விஸர்ஜனம் செய்வது எல்லா விதங்களிலும் மிகவும் சிறந்தது

கணபதி விஸர்ஜன சந்தர்ப்பத்தில் மஹத்துவம் நிறைந்த விஷயம் என்னவென்றால் களிமண்ணால் செய்யப்பட்ட மூர்த்தியில் ப்ராணப்ரதிஷ்டை செய்த பின் ஒரு நாளைக்கு மேல் அதில் தெய்வத்தன்மையை வைத்திருக்க முடியாது. இதன் அர்த்தம் என்னவென்றால் கணேச மூர்த்தியை எப்பொழுது விஸர்ஜனம் செய்தாலும் கணேசமூர்த்தியில் ஆவாஹனம் செய்யப்பட்ட தெய்வீகத் தன்மை மறுநாளே மறைந்து போகிறது. அதனால் எந்த ஒரு தெய்வத்தின் புனர்பூஜை ஆன பிறகு அன்றோ அல்லது மறுநாளோ விஸர்ஜனம் செய்வது மிகவும் சிறந்தது. பிறப்பு-இறப்பு சடங்குகளால் தீட்டு ஏற்பட்டிருந்தால் புரோஹிதர் மூலமாக கணேச விரதத்தை அனுஷ்டிப்பது சிறந்தது. வீட்டில் பிரசவதீட்டு போன்றவற்றிற்காக காத்திராமல் உரிய நேரத்தில் விஸர்ஜனம் செய்வது சிறந்தது.

 

மூர்த்தியில் உண்டான தெய்வீகத் தன்மையால் மூர்த்தியில்
21 நாட்களுக்கு சைதன்யம் நிறைந்து காணப்படுகிறது

மூர்த்தியில் ஒரு நாளைக்கு மேல் தெய்வீகத் தன்மை இருப்பதில்லை என்று மேலே கூறப்பட்டுள்ளது. எல்லோர் மனங்களிலும் எழும் கேள்வி என்னவென்றால், ப்ராணப்ரதிஷ்டை ஆன கணேசமூர்த்தியில் ஒரு நாளைக்கு மேல் தெய்வீகத் தன்மை இருப்பதில்லை என்றால் கணேச உற்சவங்களில் ஒரு நாளைக்கு மேல் பூஜிக்கப்படும் கணேச மூர்த்திகளின் உபாஸனையால் பக்தர்களுக்கு என்ன பயன் கிட்டப் போகின்றது? இதற்கான விடை, மூர்த்தியிலுள்ள தெய்வீகத் தன்மை மறைந்து போனாலும் அந்த தெய்வ சைதன்யத்தின் ப்ரபாவம் மூர்த்தியில் 21 நாட்களுக்கு நிறைந்துள்ளது என்பதுதான். அதோடு கணேஷோத்ஸவ காலங்களில் அன்றாடம் நடைபெறும் பூஜை அர்ச்சனைகளால் பூஜிப்பவரின் பக்தி பாவத்திற்கு ஏற்றபடி மூர்த்தியிலும் சைதன்யம் அதிகரிக்கிறது. 21 நாட்களுக்குப் பிறகு மூர்த்தியிலுள்ள சைதன்யம் சிறிது சிறிதாக குறைய ஆரம்பிக்கிறது.

 

மூர்த்தி மற்றும் பூஜை நிர்மால்யத்தை
ஓடும் தண்ணீரில் விஸர்ஜனம் செய்வதன் சாஸ்திரம்

மூர்த்தியிலுள்ள பவித்ர துகள்களாலும் சைதன்யத்தாலும் மூர்த்தியை ஓடும் தண்ணீரில் விஸர்ஜனம் செய்யும்போது தண்ணீரும் பவித்ரமாகிறது. உபாஸனை விதிகளின் பலனாக கணபதியின் பவித்ரத்-தன்மை நிறைந்து காணப்படும் மூர்த்தியை தண்ணீரில் கரைக்கும்போது அந்த தண்ணீருக்கும் பவித்ரத்தன்மை ஏற்படுகிறது. ஓடும் தண்ணீர் பலரை சென்றடைவதால் பலருக்கு இதன் பலன் கிடைக்கிறது. இந்த தண்ணீரின் பவித்ரத் தன்மையால் சுற்றுப்புற சூழ்நிலையும் ஸாத்வீகமானதாக மாறுகிறது.

பூஜைக்கு பயன்படும் பொருட்களும் சைதன்யம் நிறைந்து காணப்படுகிறது. அதனால் அவற்றையும் ஓடும் தண்ணீரில் விஸர்ஜனம் செய்ய வேண்டும். இந்த நிர்மால்யப் பொருட்களில் பூக்கள், இலைகள் போன்ற இயற்கைப் பொருட்களே உள்ளன. அதனால் அவற்றால் நீர் மாசு ஏற்படுகிறது என்ற பேச்சுக்கே இடமில்லை. இதற்கு மாறாக, ரசாயனக் கழிவுகளாலேயே நீர் மாசு ஏற்படுகிறது.

 

கணேசமூர்த்தியின் விஸர்ஜனத்தை ஏன்
செயற்கையான ர்த் தொட்டியில் செய்யக் கூடாது?

மாசில்லாத கணேசமூர்த்தி விஸர்ஜனம் என்ற பெயரில் சில மாநகராட்சிகளும் அல்லது உள்ளூர் அரசு நிர்வாகங்களும் பல இடங்களில் செயற்கையான நீர்த் தொட்டிகளை ஏற்படுத்துகின்றனர். ஆனால் இத்தொட்டிகளில் விஸர்ஜனம் செய்வது நல்லது அல்ல. ஏனென்றால் –

அ. தர்மசாஸ்திரப்படி கணேசமூர்த்தியை ஓடும் தண்ணீரிலேயே விஸர்ஜனம் செய்ய வேண்டும். ஓடும் நீரில் மூர்த்தியை விஸர்ஜனம் செய்வதால் மூர்த்தியிலுள்ள சைதன்யம் தண்ணீரின் வாயிலாக எல்லா இடங்களுக்கும் செல்ல முடிகிறது. அதனால் பலருக்கு நன்மை உண்டாகிறது. செயற்கை குளத்தில் ஓடும் நீர் இல்லாததால், பக்தர்களுக்கு இந்த நன்மை கிடைப்பதில்லை.

ஆ. நீர்த் தொட்டியில் விஸர்ஜனம் செய்த பிறகு அதற்குரிய அதிகாரி அந்த மூர்த்தி முழுதும் கரைவதற்கு முன்னரே மூர்த்தியைத் தூக்கி வெளியே வைத்து விடுகிறார்.

இ. நீர்த் தொட்டியில் விஸர்ஜனம் செய்யப்பட்ட மூர்த்திகள் மாநகராட்சி குப்பை லாரிகளில் எடுத்துச் செல்லப்படுகின்றன.

ஈ. கணேசமூர்த்திகளின் விஸர்ஜனத்திற்குப் பிறகு அந்த நீர்த் தொட்டியின் தண்ணீர் முழுவதும் சாக்கடையில் சேர்க்கப்படுகின்றன. இதுவும் ஒரு வகையில் கணேச மூர்த்தியை அவமதிப்பதாகும்.

 

வறண்ட இடங்களிலும் ஆபத்துக்
காலங்களிலும் கணேசமூர்த்தியை
விஸர்ஜனம் செய்வதில் ஏற்படும் எதிர்ப்புகள்

சில வருடங்கள் போதிய அளவு மழை பெய்யாததால் நதிகளும் குளங்களும் வறண்டு போகின்றன. அதனால் தர்ம சாஸ்திரப்படி கணேசமூர்த்தியை ஓடும் நீரில் கரைப்பதற்கு தடைகள் ஏற்படுகின்றன. வறண்ட காலத்திலும் தார்மீக காரியங்களை ஆன்மீக தத்துவப்படி செய்வதால் தர்ம சாஸ்திரத்தின் பலன் கிடைக்கிறது. அதன்படி வறண்ட காலத்தில் கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றி கணேசமூர்த்தியின் விஸர்ஜனத்தை செய்யலாம்.

அ. ஒவ்வொரு முறையும் பெரிய அளவு மூர்த்தியை பூஜிக்கும் வழக்கம் இருந்தாலும் வறண்ட காலத்தில் சிறிய அளவு மூர்த்தியை (6-7 இஞ்ச் மூர்த்தி) வைத்து பூஜிக்கலாம்.

ஆ. புனர்பூஜையின் பின்பு மூர்த்தியை வீட்டிற்கு வெளியே கொண்டு வரவும். துளஸி பிருந்தாவனத்திற்கு அருகில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் மூர்த்தியை விஸர்ஜனம் செய்யவும். துளஸி பிருந்தாவனமோ, வெற்றிடமோ இல்லாத ஃப்ளாட்டுகளில் வீட்டினுள் பெரிய பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் மூர்த்தியை விஸர்ஜனம் செய்யலாம்.

இ. மூர்த்தி, தண்ணீரில் பூரணமாக கரைந்த பிறகு காலில் படாத இடமாக, அரசமரம், ஆலமரம், வில்வமரம் போன்ற ஸாத்வீக மரங்களின் அடியில் தண்ணீரைக் கொட்டவும்.

ஈ. சிறிய மூர்த்தி செய்ய முடியாமல் பெரிய அளவு மூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், புனர்பூஜைக்கு சிறிது நாட்களுக்குப் பின் விஸர்ஜனம் செய்யவும் : சிறிய அளவு மூர்த்தி செய்ய முடியாமல் பெரிய அளவு மூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அதை ஸ்தாபித்து புனர்பூஜை முடிந்த பின் வீட்டில் ஸாத்வீகமான (உதா. பூஜையறை அருகில்) இடத்தில் வைக்கவும். இந்த மூர்த்திக்கு நித்ய பூஜை செய்ய வேண்டிய அவசியமில்லை. அந்த மூர்த்தியின் மீது தூசி படியாவண்ணம் ஏதாவது பெட்டியில் பத்திரமாக எடுத்து வைக்கவும். பின்பு மழைக் காலத்தில் ஓடும் தண்ணீர் வசதி ஏற்படும்போது மூர்த்தியை ஓடும் தண்ணீரில் விஸர்ஜனம் செய்யவும்.

– திரு தாமோதர் வஸேகுருஜி, தலைமை ஆசிரியர், ஸனாதன் ஸாதக-புரோஹித பாடசாலை, ராம்நாதி, கோவா.

எப்பொழுதாவது கணேசமூர்த்தி விஸர்ஜன காலத்தில் கலவரம் போன்ற ஆபத்துக்கள் ஏற்பட்டால் விஸர்ஜனம் செய்ய முடியாமல் போகலாம். அல்லது நீர் நிலைகள் மாசுபட்டிருந்தால் அதில் விஸர்ஜனம் செய்ய முடியாது போகலாம். அத்தகைய காலங்களில் மேலே குறிப்பிட்டுள்ளபடி செய்யலாம்.

 

நிர்மால்யத்தை விஸர்ஜனம் செய்ய
வேண்டிய சரியான வழிமுறை!

சாதாரணமாக மூர்த்தியோடு கூட நிர்மால்யத்தையும் விஸர்ஜனம் செய்வது வழக்கம். நிர்மால்யத்திலுள்ள சைதன்யத்தை தண்ணீரில் விஸர்ஜனம் செய்வதால் அந்த தண்ணீரின் மூலம் சமஷ்டி நிலையில் சைதன்யத்தின் பலன் அனைவருக்கும் போய் சேர்கிறது. ஆனால் மேற்கூறிய ஆபத்துக் காலங்களில் விஸர்ஜனம் செய்ய வேண்டிய அளவு தண்ணீர் கிடைக்காதபோது அல்லது தண்ணீர் சுத்தமாக இல்லாதபோது விஸர்-ஜனம் செய்ய முடிவதில்லை. இந்நிலையில் நிர்மால்யத்திலுள்ள சைதன்யம் வ்யஷ்டி நிலையில் கிடைப்பதற்கு அந்த நிர்மால்யத்தை தண்ணீரில் நனைத்து எடுக்கவும். பின் அந்த தண்ணீரை குளிப்பதற்கு பயன்படுத்தலாம். அல்லது பூச்செடிகளுக்கு விடலாம். பின் அந்த நிர்மால்யத்தை உரமாக பயன்படுத்தலாம். அது முடியாத பட்சத்தில் தெய்வத்திடம் பிரார்த்தனை செய்து தூர எறியலாம்.

 

மூர்த்தியின் சிதைவு

ப்ராணப்- பிரதிஷ்டைக்கு முன்போ, (உயிரூட்டுதலுக்கு முன்போ) விஸர்ஜனைத்திற்கு முன்போ (நீரில் கரைக்கும் முன்போ) அக்ஷதை போட்டபின்போ மூர்த்தியானது தெய்வீகத்தன்மை அற்றுப் போன காரணத்தால் மூர்த்தி உடைந்தால் கூட கவலைப்பட தேவை யில்லை. ப்ராணப்ரதிஷ்டையின் முன் மூர்த்தியின் எந்த பாகமாவது குறைபட்டால், புதிய மூர்த்தியை பூஜை செய்யவும்.

மூர்த்தியின் தெய்வீகத்தன்மை போன பிறகு எந்த பாகமாவது சிதைந்து விட்டால் முறைப்படி நீரில் கரைக்கவும். ப்ராண- ப்ரதிஷ்டைக்குப் பிறகு மூர்த்தியின் எந்த பாகமாவது சிதைந்துவிட்டால், மூர்த்தியின் மேல் அக்ஷதை போட்டு விஸர்ஜனம் செய்யவும். இந்த மாதிரி ஒரு சம்பவம் கணேச சதுர்த்தியன்றே ஏற்பட்டால், புதிய கணபதி உருவத்தை வாங்கி வழிபட வேண்டும். இரண்டு அல்லது மூன்றாவது நாளன்று இப்படி ஏற்பட்டால், புது வடிவத்தை பூஜை செய்வதற்காக வாங்க வேண்டிய அவசியம் இல்லை. கணபதி உருவமானது பூர்ணமாக உடைந்து விட்டால், வீட்டுப்- புரோகிதரின் ஆலோசனைப்படி அத்புத தர்ஷன சாந்தி செய்யவும். விளக்கு விழுதல், மேடை உடைதல், உருவம் உடைதல் போன்ற ஆச்சரியமான அதிர்ச்சி சம்பவங்களால், அந்தக் குடும்பத்தில் திரவியநாசம், தீவிர நோய், அல்லது அகாலமரணம் ஏற்படும் சந்தர்ப்பங்கள் வரலாம். இதற்காக பரிகாரங்களைச் சிரத்தையோடு செய்யவும்.

Leave a Comment