ஸ்ரீ கணேச நாமஜபம் !

ஸ்ரீ கணபதி

பக்தியுணர்வு விரைவில் நிர்மாணமாகவும் தெய்வ தத்துவத்தின் பயன் அதிகபட்சம் ஏற்படவும் நாமஜபத்தின் உச்சாரணம் சரியானபடி இருத்தல் அவசியம். ஸ்ரீ கணபதியின் நாமஜபத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

1.    ‘ஓம் கங் கணபதயே நம:|’ என்ற
ஸ்ரீ கணபதியின் தாரக நாமஜபத்தைக் கேளுங்கள்

 

2.    ‘ஸ்ரீ கணேசாய நம:|’ என்ற நாமஜபத்தைக் கேளுங்கள்

ஸாத்வீக நாமபடிவம்

இறைவனை அடைய யுகத்திற்கேற்றபடி வெவ்வேறான உபாசனைகள் உள்ளன. ‘கலியுகத்தில் நாமஜபமே ஆதாரம்’ என்று மகான்கள் கூறியுள்ளனர். இதன் அர்த்தம், கலியுகத்தில் நாமஜபமே ஸாதனை வழியாகும். இப்போது நீங்கள் ஸ்ரீ கணபதியின் ‘ஓம் கங் கணபதயே நம: |’ என்ற நாமஜபத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

 

நாமஜபத்தை ஆன்மீக உணர்வுபூர்வமாக செய்யுங்கள்!

தெய்வத்தின் நாமஜபத்தை ஆன்மீக உணர்வுபூர்வமாக செய்தால் அது விரைவாக இறைவனை சென்று அடைகிறது. நாமஜபம் செய்யும்போது அதிலுள்ள அர்த்தத்தை கவனத்தில் கொண்டு செய்தால் அதிக ஆன்மீக உணர்வுபூர்வமாக செய்ய முடியும். ‘ஓம் கங் கணபதயே நம: |’ என்ற நாமஜபத்தில் ‘ஓம்’ என்பது இறைவனை குறிப்பதாகும். ‘கங்’ என்பது மூல பீஜமந்திரமாகும். பீஜமந்திரமாகிய ‘கங்’ இறைவனின் நிர்குண ஸ்வரூபத்தின் சின்னமாகும். ‘கணபதயே’ என்ற வார்த்தை இறைவனின் ஸகுண ஸ்வரூபத்தின் சின்னம். ‘நம:’ என்பது நமஸ்காரம் செய்கிறேன் என்று அர்த்தமாகிறது. ‘ஓம் கங் கணபதயே நம: |’ என்ற நாமஜபத்தை செய்யும்போது நாமஜபத்தில் தாரக உணர்வு (காக்கும் உணர்வு) ஏற்பட ‘நம:’ என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுக்காமல் மென்மையாக உச்சரிக்க வேண்டும். அந்த சமயத்தில் ‘நான் ஸ்ரீ கணபதிக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன்’ என்ற ஆன்மீக உணர்வைக் கொள்ள வேண்டும். ‘கணபதயே’ என்ற வார்த்தையில் சிறிது நேரம் நின்று பின் ‘நம:’ சொல்ல வேண்டும். இங்கு கூறியபடி நீங்களும் சாஸ்திரபூர்வ வழியில் ஸ்ரீ கணபதியின் நாமஜபத்தை செய்து அநுபூதி கிடைக்க வேண்டும் என்பதே ஸ்ரீ கணேச சரணங்களில் நாம் செய்யும் பிரார்த்தனை. தெய்வத்தின் தாரக (காக்கும்) மற்றும் மாரக (அழிக்கும்) ரூபத்துடன் சம்பந்தமான நாமஜபமே தாரக மற்றும் மாரக நாமஜபமாகும். இங்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கிய குறிப்பு என்னவென்றால் மற்ற நாட்களைக் காட்டிலும் கணேச சதுர்த்தி அன்று ஸ்ரீ கணேச தத்துவம் ஆயிரம் மடங்கு அதிக செயல்பாட்டில் உள்ளது என்பதே; அதனால் இந்தத் திதியில் , ‘ஓம் கங் கணபதயே நம: |’ என்ற நாமஜபத்தை அதிகபட்சம் செய்யுங்கள் மற்றும் கணபதி தத்துவத்தின் அதிகபட்ச பயனை அடையுங்கள்.

மகான்களின் வழிகாட்டுதலின்படி செய்யப்படும் நாமஜபம்!

இங்கு அளிக்கப்பட்டுள்ள நாமஜபத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த நாமஜபத்தை ஸநாதனின் ஸாதகரான குமாரி. தேஜல் பாத்ரிகர் சாஸ்திர சுத்த முறைப்படி உச்சரித்துள்ளார்.

தகவல் : ஸநாதனின் நூல் ‘ஸ்ரீ கணபதி’

கங் கணபதயே நம:| இந்த பீஜமந்திரத்தில் கங்
என்ற சப்தத்தை உச்சரிக்கும் வழிமுறை

சிலர் ‘கங் கணபதயே நம:’ என்பதற்கு பதிலாக ‘கம் கணபதயே நம:’ எனவும் உச்சரிக்கிறார்கள். சம்ஸ்க்ருத உச்சார சாஸ்திரப்படி ‘கம் கணபதயே நம:’ என்று உச்சரிப்பதற்கு பதிலாக  ‘கங் கணபதயே நம:’ என உச்சரிப்பது அதிக சிறப்பு வாய்ந்தது, சரியானது. – வைத்திய மேகராஜ் பராட்கர், ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா. (3.1.2018)

Leave a Comment