கணபதி உபாஸனைக்குரிய பொருட்கள்

தூர்வா

கணபதி பூஜையில் அருகம்புல்லுக்கு முக்கிய இடம் உண்டு. தூ: + அவம் என்பதே தூர்வா ஆயிற்று. தூ: என்றால் தூரத்தில் இருப்பது; அவம் என்றால் அருகில் வரவழைப்பது; எனவே தூர்வா என்றால் தொலைவிலுள்ள கணபதியின் பவித்ர துகள்களை அருகில் வரவழைப்பதாகும்.

கணபதிக்கு அர்ப்பணம் செய்யப்படும் அருகம்புல் மிருதுவாய் இருக்க வேண்டும். இதை (பாலத்ருணம்) இளம் அருகம்புல் என்கிறோம். தண்ணீரில் நனைந்த அருகம்புல்லை, 3,5,7 போன்ற ஒற்றைப்படையில் கட்டாக ஸமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் கணபதியின் பவித்ரத் துகள்கள் அதிக நேரத்திற்கு மூர்த்தியில் நிறைந்திருக்கிறது.

 

சிவப்பு நிறப் பொருட்கள்

கணபதியின் நிறம் சிவப்பு. அவர் பூஜையில் சிவப்பு வஸ்த்ரம், சிவப்பு பூக்கள், சிவப்புச் சந்தனம் உபயோகப்படுத்தப்படுகின்றன. இந்த சிவப்பு நிறத்தால் சூழ்நிலையில் கணபதியின் பவித்ர துகள்கள் அதிகமாக ஆகர்ஷிக்கப்பட்டு, மூர்த்தியில் எழுச்சி ஏற்பட உதவுகிறது.

தகவல் : ஸனாதனின் தமிழ் கையேடு ‘கணபதி’

Leave a Comment