மகாசிவராத்திரி அன்று சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்வதன் மகத்துவம் என்ன?

கண்டனம் : மஹாசிவராத்திரி அன்று சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்வதற்கு பதிலாக அதை ஏழைகளுக்கு தானம் செய்யலாம்!

விளக்கம் : முடிந்தால் சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்வது நல்லது. ஏனென்றால் சிவதத்துவத்தை அதிகமாக ஆகர்ஷிக்கும் சக்தி பாலுக்கு உண்டு. அதன் மூலம் சிவ தத்துவம் உடனே விழிப்படைகிறது. இந்த அபிஷேகம் செய்யப்பட்ட பால் தீர்த்தமாக அருந்தப்படுகிறது. இதன் மூலம் ஒருவருக்கு சிவ தத்துவத்தின் ஆன்மீக பலன் பெருமளவு கிடைக்கிறது. இன்று பால் அபிஷேகத்தை எதிர்ப்பவர்கள் நாளை கோவிலில் தரிசனம் செய்வதற்கும் எதிர்ப்பு தெரிவித்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. (இத்தகைய பொய்களில் மாட்டிக் கொள்வதை விட ஹிந்துக்கள் நம் தார்மீக கிரந்தங்களைப் பின்பற்றினால் பயனடைவர்.)

Leave a Comment