ஸாதனை சம்பந்தமான சந்தேக விளக்கங்கள்

ஆன்மீகத்தின் சித்தாந்த பகுதியை எவ்வளவு பயிற்சி செய்தாலும் மனதிலுள்ள சந்தேகங்கள் நீங்காது என்பதால் ஸாதனை சரியானபடி நடப்பதில்லை. இந்த கண்ணோட்டத்தில் உலகெங்கும் உள்ள ஆன்மீக ஆர்வலர்கள் மற்றும் ஸாதகர்களின் மனங்களில் சர்வ சாதாரணமாக உண்டாகும் ஆன்மீக சாஸ்திரத்தின் சித்தாந்தம் மற்றும் செயல்பாடு சம்பந்தமான சந்தேகங்களுக்கு ஸனாதனின் ஊற்றுக் கண்ணாக விளங்கும் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் விளக்கங்களை அளித்துள்ளார். ‘சந்தேக விளக்கங்கள்’ என்ற இந்த தொடர் மூலமாக கேள்வி பதில் வடிவில் வாசகர்களுக்கு இதை வழங்குகிறோம். இதைப் படித்து புரிந்து கொண்டு அதிக அளவு ஆன்மீக ஆர்வலர்கள் சரியான ஸாதனை வழியை ஆரம்பிக்க வேண்டும் மற்றும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீகிருஷ்ணனின் சரணங்களில் பிரார்த்தனை செய்யப்படுகிறது!

ஆன்மீகத்தின் தத்துவ பகுதி வெறும் 2% முக்கியத்துவம் வாய்ந்தது, செயல்பாட்டு பகுதி 98% முக்கியத்துவம் வாய்ந்தது. ஸாதனை செய்யும்போது ஏற்படும் பல்வேறு தடங்கல்களை எவ்வாறு களைவது, ஸாதனை கண்ணோட்டம், ஸாதனையில் ஏற்படும் லௌகீக தடங்கல்களை எவ்வாறு களைவது ஆகியவற்ற்றைப் பற்றி செயல்முறை விளக்கங்களுடன் பதில்கள் அளிக்கப்பட்டுள்ளன.

 

அ. ஸாதனை – செயல்பாடு

கேள்வி : வியாபாரத்தில் மிக முக்கியமான ஒரு வேலை கண்முன் நிற்கிறது, அதை செய்து முடித்தாக வேண்டும் என்ற சூழ்நிலை. அச்சமயத்தில் வியாபாரத்தை மறந்து சேவைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பது எந்த அளவு சரியானது?

பதில் : யாருக்கு வியாபாரம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக தோன்றுகிறதோ மற்றும் மனதில் விகல்பம் எழும் வாய்ப்பு உள்ளதோ அவர்கள் வியாபாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஏதாவது ஒரு விஷயம் புத்தியில் சரி எனப் பட்டால் அதை உடனே செயல்படுத்த வேண்டும்.

ஸனாதன் ஸன்ஸ்தாவின் ஊற்றுக் கண்ணாக விளங்கும் ஸந்த் பக்தராஜ் மகாராஜ் அவர்களின் உத்தராதிகாரியான பரம் பூஜ்ய ராமானந்த மகாராஜிடம் அவர் குரு ‘ராம்ஜி என்னுடன் வா’ என்றால் உடனே அவர் சென்று விடுவார். மனைவி என்ன சொல்வாள் என்ற கவலை சிறிதும் அவருக்கு இல்லை. ஸந்த் பக்தராஜ் மகாராஜ் அவர்களின் பத்தினி (ஜிஜி) மற்றும் ராமானந்த் மகாராஜ் அவர்களின் பத்தினி (அக்கா) ஆகிய இருவரும் ஒரு விதத்தில் வனவாசத்தைத் தான் அனுபவித்தனர். அவர்கள் இருவரின் கணவன்மாரும் நாற்பது வருடங்கள் சுற்றிக் கொண்டே இருந்தனர். கிராமம் கிராமமாக சென்றனர், அச்சமயத்தில் அவர்களின் மனைவிகள் வீட்டிலேயே இருந்தனர். மனைவி வீட்டில் தனியாக இருக்கின்றாளே என்று கவலைப்பட்டார்கள் என்றால் இல்லை. அதனால் அவர்கள் ‘மகாராஜ்’ ஆனார்கள்.

ராம்ஜி தாதாவின் இன்னொரு உதாரணம் என்னவென்றால் அவரால் அலுவலகத்திற்கு அடுத்து சில மாதங்கள் செல்ல முடியாமல் இருந்தது. மகாராஜ் அவரை ‘வா’ என்று அழைத்தால் உடனே சென்று விடுவார்! ஒரு மாதத்திற்குப் பின்னர் யாத்திரையை முடித்து திரும்பியபோது அவருக்கு இந்த மாதம் சம்பளம் எதுவும் கிடைக்காது என்பது தெரிந்தது. யாரிடமாவது கடன் வாங்க வேண்டும் என நினைத்தார். ஆனால் அலுவலகத்திற்கு சென்ற பின் அதிகாரி கூறினார், ‘அடடா, நீங்கள் சம்பளம் வாங்க மறந்து விட்டீர்களே’. அதாவது அவர் இல்லாத சமயத்தில் இன்னொரு ‘ராம்ஜி தாதா’வை குருவானவர் நிர்மாணித்துள்ளார். அவரே இவரின் அனைத்து வேலைகளையும் செய்தவர். இது எப்பொழுதோ பூர்வ காலத்தில் மட்டுமே நடக்கும் என்பது இல்லை, இப்போழுதும் நடந்துள்ளது. அதற்கு அந்த அளவு ச்ரத்தை தேவை, குரு ஆணையை சிரமேற்கொள்ளும் மன உறுதி தேவை.

யார் என்னுடைய வியாபாரம், வீட்டு காரியம், என்னுடைய கடமை என்று செய்து கொண்டிருக்கின்றனரோ, அவர்கள் பெரும்பாலும் ஆயுள் முழுவதும் அதே நிலையில் தேங்கி விடுகின்றனர். ‘இது எல்லாம் மாயை. இதிலிருந்து நான் விடுபட வேண்டும். அதுவே ஏன் ஜீவனின் தலையாய கடமை’, என்பதை உணர வேண்டும். பரமேச்வரனை அடைய வேண்டும் என்ற தீவிர இச்சை யாரிடம் உள்ளதோ அவரே இதிலிருந்து விடுபட இயலும். இல்லையென்றால் அந்நிலையிலேயே மாட்டிக் கொள்வர்.

நான் சிப்ளூன்-ல் இருந்து சிந்துதுர்க் நோக்கி செல்ல வேண்டி இருந்தது. அருகில் இருந்த சில ஸாதகர்களை சாதாரணமாகக் கேட்டேன், அவர்களும் என்னுடன் வருகிறார்களா என்று. அவர்கள் கூறினார்கள், ‘வரலாம்…ஆனால்…’ அவ்வளவுதான்! ‘ஆனால்’ வந்துவிட்டால் எல்லாம் குழப்பம்தான். ‘ஆனால்’, ‘இருந்தாலும்’ ஆகியவை செல்லாது. ஜீவனை சிறிதும் வருத்தாமல் எதுவும் சாத்தியமாகாது. இதற்கு மாறாக ஆலோயாவின் இரு ஸாதகர்கள் உடன் வந்தனர். அவர்களிடம் ‘வருகிறீர்களா’ என்றதும் ‘ஆம், வருகிறோம்’ என்றனர். நான் கேட்டேன், ‘உங்களின் துணிமணிகள்?’ அதற்கு அவர்கள், ‘ஒன்றும் இல்லை, அப்படியே வருகிறோம்’ என்றனர். அதாவது நான்கு நாட்கள் சிந்துதுர்க்-ல் இருக்க வேண்டுமென்றால் குளிப்பதற்கு துண்டு, உள்ளாடைகள் வேண்டுமே? துண்டு வேண்டுமென்றால் அங்கு கிடைக்கும்; ஆனால் அணிவதற்கு ஆடைகள், உள்ளாடைகள் வேண்டுமே, அது கூட இல்லையே! அதாவது யாருக்கு இவ்வாறிருக்க முடியுமோ அவர்களாலேயே எதையும் சாதிக்க முடியும்.

கேள்வி : ஸாதனை எவ்வாறு நடக்க வேண்டுமோ அவ்வாறு நடப்பதில்லை. ஏதாவது தடங்கல்கள் ஏற்பட்டு நடுவில் நின்று போகிறது.

பதில் : ஆரம்பத்தில் உடலளவில் தடங்கல்கள் ஏற்படுகின்றன. ஒரு இடத்தில் உட்காரும் பழக்கம் உங்களிடம் இல்லை. நாமத்தை எடுத்துக் கொண்ட பின்பு உடலில் அரிப்பு, கழுத்து வலி, முதுகு வலி எல்லாம் ஏற்படுகின்றன. நீங்கள் ஸாதனை செய்ய ஆரம்பிக்கும்போது இவ்வாறான தடங்கல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அதையும் மீறி செயல்படுவதற்கான உறுதி உங்களிடம் வேண்டும். சாய்பாபா அவர்கள் கூறியுள்ளார், ‘ச்ரத்தை மற்றும் பொறுமை’. ஸாதனையில் தொடர் முயற்சி அவசியம்.

கேள்வி : எங்களின் ஸாதனை சரியான வழியில் தான் செல்கிறதா, அதாவது அதில் குறைகள் உள்ளதா, இல்லையா என்று எவ்வாறு தெரிந்து கொள்வது?

பதில் : ஸாதனை செய்து வரும்போது உங்களின் தடங்கல்கள் சிறிது சிறிதாக தூர விலகும்போது ஸாதனை சரியான பாதையில்தான் செல்கிறது என்பதை உணரலாம். ஸாதனை செய்யும்போது நாளுக்கு நாள் நீங்கள் அனுபவிக்கும் ஆனந்தம் அதிகமாகிறது, அடுத்த நிலை அனுபூதியை அனுபவிக்க முடிகிறது என்றால் உங்களின் ஸாதனை சரியான பாதையில் செல்கிறது என்று அர்த்தம். பெரும்பாலோருக்கு ஸாதனையில் தடங்கல்கள் தூர விலகுவதற்கு வெகு காலம் பிடிக்கிறது. உங்களுக்கு தானாக இதை உணர முடிவதில்லை. அச்சமயத்தில் உங்களைக் காட்டிலும் உன்னத நிலையிலுள்ளவர்களிடம் உங்களின் ஸாதனை சரியான பாதையில் செல்கிறதா என கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஸனாதன் ஸன்ஸ்தாவின் ஸத்ஸங்கங்களில் கூறப்படும் வழிகாட்டுதலின்படி நீங்கள் ஸாதனை செய்து வந்தால் அது சரியானதாக இருக்கும்.

ஒரு மாணவனுக்கு அவன் செய்யும் பயிற்சி சரியானதா தவறானதா என்ற சந்தேகம் எழுவதில்லை. பள்ளியில் ஆசிரியர்கள் பாடபுத்தகங்களில் உள்ளவற்றை சொல்லித் தருகிறார்கள். வீட்டில் தாய்-தந்தை சொல்லித் தருகிறார்கள். அதைத் தவிர தானே படிக்கிறான். எல்லா ஸாதகர்களின் மனோபாவமும் இவ்வாறு இருக்க வேண்டும். ஆன்மீகத்தில் யாருடைய விரலையாவது பிடித்துக் கொண்டு நடை பயில வேண்டும். ‘நான், என்னுடைய ஸாதனை, நானே தனியாக உட்கார்ந்து செய்வேன்’, என்று யார் செய்கிறார்களோ அவர்களுக்கு இந்த சந்தேகம் எழுகிறது. யார் ஸத்ஸங்கத்திற்கு செல்கிறாரோ அவர்கள் மனதில் எவ்வித சந்தேகமும் இல்லாமல் ஸாதனை செய்ய வேண்டும்.

கேள்வி : பல ஸாதகர்களுக்கு இங்குமங்கும் அலைய வேண்டி உள்ளது. அவ்வளவு சுலபமாக குருவின் அருள் கிடைப்பதில்லை. இதன் காரணம் தீய சக்திகளால் ஏற்படும் கஷ்டமா அல்லது குரு பரீட்சை செய்து பார்க்கிறாரா?

பதில் : ஆன்மீகத்தில் எப்பொழுதும் இங்குமங்கும் அலைய வேண்டி இருக்கும். எங்களின் குரு ஸந்த் பக்தராஜ் மகாராஜ் அவர்களுடன் நான் (பராத்பர குரு டாக்டர் ஆடவலே) 2-3 வருடங்கள் இந்தூரிலிருந்து விசாகபட்டிணம் வரை பல இடங்களுக்கு சுற்றித் திரிந்தோம். அதுவும் ஸாதனையின் ஒரு பகுதி. பல்வேறு இடங்களில் ஸாதகர்கள் எவ்வாறு வசிக்கிறார்கள், எப்படி பேசுகிறார்கள், எப்படி நடந்து கொள்கிறார்கள், அவர்களின் கேள்விகள் எவ்வாறு உள்ளன ஆகிய யாவையும் கற்க முடிந்தது அல்லவா! ஒரு சின்ன குளத்தில் இருக்கும்போது அக்குளமே சமுத்திரம் எனத் தோன்றும்.

குரு பரீட்சை செய்ய மாட்டார். அவர் பரீட்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. யாருக்கு எல்லாம் தெரியுமோ அப்பேற்பட்ட குருவுக்கு பரீட்சை செய்து ஒருவருக்கு தகுதி இருக்கிறதா என்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு மாணவன் எந்த அளவு பயின்றுள்ளான், அவனுக்கு அல்ஜீப்ரா கணக்குகளை போட வருகிறதா, வாய்ப்பாடு மனப்பாடம் ஆயிற்றா என்பதை ஆசிரியர்களால் அவனைப் பார்ப்பதால் மட்டுமே சொல்ல இயலாது. அதனால் அவர்கள் அவசியம் பரீட்சை செய்து பார்க்க வேண்டி உள்ளது. ஆனால் குருவுக்கு தெரியும். ‘இவன் எந்த அளவிற்கு நல்ல சிஷ்யன்’ என்பதை மற்றவர் உணர வேண்டும் என்பதற்காக பரீட்சித்து காண்பிக்கிறார்.

ராமதாஸ் சுவாமி அவர்கள் கல்யாண் சுவாமியை பரீட்சித்துப் பார்த்தார். கல்யாண் சுவாமி எந்த மரக்கிளையில் அமர்ந்திருந்தாரோ அந்தக் கிளையை வெட்ட சொன்னார். அவ்வாறு செய்ததால் கல்யாண் சுவாமி கீழே விழுந்தார். அவருக்குத் தெரியும் கிளையை அந்தப் பக்கத்தில் வெட்டினால் விழுவோம் என்று. இறுதியில் ராமதாஸ் சுவாமி அவரைக் காப்பாற்றினார் அல்லவா! அவர் கேட்டார், ‘அரே, எப்படி இருக்கிறாய்?’ என்று. அதற்கு கல்யாண் சுவாமி பதிலுரைத்தார், ‘மிகுந்த ஆனந்தமாய் இருக்கிறேன்’ என்று. சமர்த்தருக்குப் பின்னர் அவரின் காரியங்களை கல்யாண் சுவாமியே தொடர்ந்து செய்து வந்தார். அவரின் மகத்துவத்தை உலகம் உணர வேண்டும் என்பதற்காக இது நடந்தது.

கேள்வி : குரு ஆணையின் உள்ளர்த்தத்தை புரிந்து கொள்வதற்கு வெகு காலம் பிடிக்கிறது. சில சமயம் எல்லாம் முடிந்த பின்னரே புரிய ஆரம்பிக்கிறது. இதற்கான உபாயம் என்ன?

பதில் : ஆரம்பத்தில் குரு என்ன சொல்கிறார் என்பது உங்களுக்கு விளங்குவது இல்லை. அவர் சாதாரணமாக பேசுவதன் உள்ளர்த்தம் உங்களுக்கு புரிவது இல்லை. அது புரிய வேண்டும் என்பதற்காக ஸனாதன் ஸன்ஸ்தா ‘பாபாவின் உபதேசம்’ என்ற நூலை வெளியிட்டு உள்ளது. அதில் குரு ஆணையின் நூற்றுக்கணக்கான உதாரணங்கள் தரப்பட்டுள்ளன. பாபாவின் பஜனை நூலிலும் (ஸந்த் பக்தராஜ் மகாராஜ்) பஜனை பாடல்களின் உள்ளர்த்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த இரு நூல்களை பயின்றால் மகான்களின் மொழி எவ்வாறு உள்ளது அதன் உண்மையான உள்ளர்த்தம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். ஒரு மகானின் வார்த்தையை புரிந்து கொண்டு விட்டால் எல்லா மகான்களையும் புரிந்து கொள்ள முடியும்.

கேள்வி : ஸாதனை தொடர்ந்து நடப்பதில்லை. ஸாதனைக்காக தினமும் எவ்வளவு நேரம் அளிக்க வேண்டும்?

பதில் : உங்களின் புத்தியில் உறுதி ஏற்படாததால் ஸாதனையில் தொடர்ச்சி இருப்பதில்லை. ‘நிச்சயாத்மக: புத்தி’ எனக் கூறுவர். உங்களின் மனம், சித்தம், புத்தி, அஹங்காரம் ஆகிய ஒவ்வொன்றின் காரியமும் வெவ்வேறாக உள்ளன. சங்கல்பம் மற்றும் விகல்பங்களை நிர்மாணிப்பதே மனதின் வேலை. விகல்பங்களால் ஸாதனையில் தடங்கல்கள் ஏற்படுகின்றன. எப்பொழுது மனோலயம் ஏற்படுகிறதோ அப்பொழுதே உங்களின் எல்லா விகல்பங்களும் தடங்கல்களும் நீங்கும். அதுவரை இல்லை. மனோலயம் ஏற்படுவதற்கு மீண்டும் ஸாதனையாக, அதாவது நாமத்தை சொல்வது, ஸத்ஸங்கத்தில் பங்கேற்பது, ஸத்சேவையில் ஈடுபடுவது, ஸத்யத்திற்காக தியாகம் செய்வது ஆகிய எல்லாவற்றையும் செய்ய வேண்டும். இதன் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்று கேட்பதில் அர்த்தம் இல்லை. புத்தியில் உறுதியை ஏற்படுத்திக் கொண்டு உத்தம ஸாதகர் உத்தம சிஷ்யராக வேண்டும். எந்த க்ஷணம் ஆன்மீகத்தின் மகத்துவம் புரிகிறதோ, எந்த க்ஷணத்தில் எல்லாவற்றையும் தியாகம் செய்ய முடிகிறதோ அக்கணமே அவருக்கு முக்தி கிடைக்கிறது. அவர் சர்வோத்தம சிஷ்யராக கருதப்படுகிறார். புத்தியில் உறுதி ஏற்படுவது அவசியமாகும். உங்களின் புத்தியில் உறுதி ஏற்படாதபோது நீங்கள் எல்லாவற்றையும் தியாகம் செய்தால் நாளை தெய்வம் உங்களுக்கு உதவி புரியவில்லை என்றால் என்ன ஆகும்? பக்த பிரஹ்லாதனைப் பற்றி உங்களனைவருக்கும் தெரிந்திருக்கும். பிரஹ்லாதனை கொதிக்கின்ற எண்ணெய் கொப்பரையில் தூக்கி எறிந்தனர், மலை உச்சியிலிருந்து உருட்டி விட்டனர், அப்பொழுது தெய்வம் காப்பாற்றும் என்ற முழு நம்பிக்கை அக்குழந்தைக்கு இருந்தது. அதனால் தெய்வம் அவனைக் காப்பாற்றியது. அவனுக்காக தெய்வம் நரசிம்ம அவதாரமெடுத்து கம்பத்திலிருந்து வெளிப்பட வேண்டி இருந்தது. எந்த அளவு ச்ரத்தை உள்ளதோ அதற்கேற்றார் போல் பகவான் வெளிப்படுவான்.

அனுபூதிகளால் ச்ரத்தை ஏற்படுகிறது. அனுபூதி, ஸாதனை செய்வதால் கிடைக்கிறது. ஸாதனை நடப்பதற்கு ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நம்பிக்கை, ஆன்மீகத்தை பயில்வதால் நிர்மாணமாகிறது. ஆன்மீகத்தை வெறும் படித்தால் மட்டும் போதாது, அதைப் பயில வேண்டும்.

கேள்வி : நம் ஆன்மீக முன்னேற்றம் எந்த அளவிற்கு ஏற்பட்டுள்ளது மற்றும் முன்னேற்றம் ஏற்படுகிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது?

பதில் : நம் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுகிறதா என்பதை தெரிந்து கொள்வது சம்பந்தமான ஒரு சுவாரஸ்யமான சம்பவம் உள்ளது. ஒரு சிஷ்யன் தன் குருவிடம் இக்கேள்வியைக் கேட்டான், என் ஆன்மீக முன்னேற்றம் நடக்கிறது என்பதை நான் எவ்வாறு தெரிந்து கொள்வது, மற்றும் என் ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது பற்றி மற்றவருக்கு எப்பொழுது தெரிய வரும்? குரு கூறினார், ‘இதோ பார், ஒரு பெண் கர்ப்பவதி ஆகும்போது அவளுக்கு அது முதலில் தெரிவதில்லை. சில மாதங்களுக்கு பிறகு அவளுக்கு தான் கர்ப்பவதியாக உள்ளோம் என்பது தெரிய வருகிறது. அதேபோல் ஒரு சிஷ்யன் தான் மற்றவரிலிருந்து வித்தியாசமாக உணருகிறோம் என்பதை உணர ஆரம்பிப்பான். பிறகு சில மாதங்கள் சென்ற பின்புதான் மற்றவர்களுக்கு அந்தப் பெண் கர்ப்பவதி என்பது தெரிய வருகிறது. அதேபோல் உங்களின் முன்னேற்றமும் சிறிது சிறிதாக மற்றவருக்குத் தெரிய வரும்.’

மனதில் ஏற்படும் நூற்றுக்கணக்கான சிந்தனைகள் குறைதல், கனாக்கள் வருவது குறைதல் மற்றும் ஸாத்வீகமான கனாக்கள் (மகான்கள், தெய்வங்கள் பற்றிய கனாக்கள்) காணுதல், கனவில் யாரிடமிருந்தாவது கற்றுக் கொள்ளுதல் ஆகியவை முன்னேற்றத்தின் அடையாளங்கள். கனவிலும் கற்றுக் கொள்ளுதல் இல்லையென்றால் அது கனவு நிலைக்கு அப்பாற்பட்ட துரீய நிலை என்று அர்த்தம். அந்நிலையில் யாராவது உன்னத புருஷர்கள் கற்றுத் தருகிறார்கள்.

ஸ்வப்னம் (கனவு) மற்றும் ஸ்வப்ன திருஷ்டாந்தம் (கனவு நனவாதல்) ஆகிய இரண்டில் வேறுபாடு உள்ளது. ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி ஸ்வப்னத்தில் கற்றுக் கொண்டு, அன்று அல்லது மறுநாள் ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது அதே விஷயம் படித்தல் மற்றும் ஏதோ ஒரு கதாகாலட்க்ஷேபம் சென்றபோது அங்கும் இதே விஷயம் பற்றிய விளக்கம் கேட்டல், யாராவது ஒரு உன்னத புருஷரை சந்தித்து கேள்வி கேட்டவுடன் அவரும் அதே பதிலை கூறுதல் ஆகியவை நடந்தால் நீங்கள் கண்டது ஸ்வப்னம் இல்லை, ஸ்வப்ன திருஷ்டாந்தம் என தெரிந்து கொள்ளுங்கள்.

பக்திமார்க்கத்தில் ஸாதனை செய்யும்போது அஷ்டஸாத்வீக உணர்வு விழிப்படைகிறது. யாராவது ஒரு மகானை சந்திக்கும்போது அல்லது பக்திமார்க்கத்தில் ஏதாவது ஒரு சம்பவம் நடந்தால் தொண்டை அடைத்தால், கண்களில் இருந்து கண்ணீர் பெருகுதல் போன்ற பல விதங்களில் இது வெளிப்படுகிறது. ஒவ்வொருவரின் ஆன்மீக நிலைக்கேற்ப அவருக்கு அதற்குரிய அநுபூதி கிடைக்கிறது. பிறருக்கு ஒருவர் உன்னத புருஷர், அவரின் முன்னேற்றம் நடந்துள்ளது என்பதை எப்படி உணர முடிகிறது என்றால் அவரைப் பார்க்கும்போதே மகிழ்ச்சியாக உணருதல், ஆனந்தத்தை அனுபவித்தல், நாமஜபம் தானாகவே நடத்தல் மற்றும் தியானத்தில் மனம் ஒன்றுதல் ஆகிய அனுபவங்கள் ஏற்படும்.

கேள்வி : பல்வேறு பகுதிகளில் ஏதாவதொரு சம்ப்ரதாயம் அதிக அளவு பிரபலமாக உள்ளது. மற்ற பகுதிகளில் அவ்வளவு பிரபலமாக இருப்பதில்லை. நான் எந்த சம்ப்ரதாயத்தை பின்பற்றுகிறேனோ அவர்கள் கூறியபடி ஸாதனை செய்கிறேன். மற்ற பகுதிகளில் இந்த சம்ப்ரதாயம் இல்லாததால் அங்கு செல்லும்போது தொடர்ந்து செய்ய முடிவதில்லை. வேலை நிமித்தமாக மாற்றலாகி மற்ற இடங்களுக்கு செல்லும் என்னைப் போன்ற பலருக்கு இந்த பிரச்சனை உள்ளது. இது போன்ற சமயங்களில் என்ன செய்வது? அத்துடன் மற்ற காரணங்களுக்காக ஸாதனை நின்று போனால் என்ன செய்வது?

பதில் : நீங்கள் செய்து வரும் ஸாதனை மூலமாக அனுபூதிகள் கிடைக்கின்றன, சூட்சுமத்தில் சிறிதளவாவது உணர முடிகிறது, சூட்சும மற்றும் அடுத்த நிலைகளுக்கான அனுபூதிகள் கிடைக்கின்றன என்றால் ஸாதனையை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஸாதனையை தொடர்ந்து செய்து வரலாம்.

ஒரு குரு ஒருவருக்கு குருமந்திரம் அளித்தால் அவர் அந்த மந்திரத்தில் சைதன்யத்தை நிரப்பித் தருகிறார். நீங்கள் தொடர்ந்து அந்த மந்திரத்தை ஜபம் செய்து அதிலுள்ள சைதன்யத்தை விழிப்புற்ற நிலையில் வைக்கவில்லை என்றால் இரு வருடங்களிலேயே அதில் சைதன்யம் இல்லாது போய் விடும். குருவானவர் குருமந்திரத்தைத் தரும்போதே சைதன்யத்தையும் தருகிறார், அதாவது ‘இந்த நாமத்தை நீ எடுத்துக் கொள் உன் முன்னேற்றம் நடக்கும்’ என்ற குருவின் சங்கல்பம் அதில் உள்ளது. நீங்கள் அந்த நாமத்தை எடுத்து செய்யவில்லை என்றால் அதிலுள்ள சைதன்யம் போய் விடுகிறது. அதாவது சிஷ்யனின் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்ற குருவின் சங்கல்பமும் முடிவுக்கு வருகிறது. பிறகு நீண்ட காலம் சென்ற பிறகு, உங்களுக்கு ஒரு குரு இருந்தார், குருமந்திரம் தந்திருந்தார் என்பதும் மறந்து போகும்; அப்பொழுது மறுபடியும் ஸாதனையை ஆரம்பிக்க வேண்டி இருக்கும்.

அ. ஸாதனை – தத்துவம்

கேள்வி : ஸாதகர்கள் பதினாறு ஸன்ஸ்காரங்களை செய்ய வேண்டியது அவசியமா?

பதில் : விரத விதிமுறைகள் ஆகியவை கர்மகாண்டத்தின் ஒரு பகுதி ஆகும். யாருக்கு நாமம் சொல்ல முடியவில்லையோ, சேவை, தியாகம் ஆகியவை முடியவில்லையோ அவர்கள் விரதத்தை மட்டுமாவது அனுஷ்டிக்க வேண்டும். வருடத்தில் ஒரு முறை வடசாவித்ரி, ரிஷிபஞ்சமி விரதங்கள் இருத்தல் மிகவும் கீழ் நிலை ஆகும். யாரால் தினமும் தெய்வ பூஜையை செய்ய முடியவில்லையோ அவர்கள் வருடத்திற்கு சில முறையேனும் விரதங்களை அனுஷ்டிக்க வேண்டும். யாருக்கு பூஜை செய்ய முடிகிறதோ அவர்கள் விரதத்தை அனுஷ்டிக்க வேண்டாம். யாரால் நாமத்தை சொல்ல முடிகிறதோ அவர்களுக்கு பூஜையும் அவசியம் இல்லை. யாரால் சேவை, தியாகம் செய்ய முடிகிறதோ அவர்கள் நாமத்தை சொல்லவில்லை என்றாலும் பரவாயில்லை. ஐந்தாவது வகுப்பிற்கு சென்ற பின் நாம் நான்காவது வகுப்பு பாடத்தை படிப்பதில்லை தானே, அதுபோல் தான் இதுவும்.

கேள்வி : சிலருக்கு பல்வேறு விதங்களில் ஸாதனை எதிர்பார்ப்பில்லாத மனத்துடன் நடந்து வருகிறது. அத்துடன் அவர்களின் பரோபகாரமும் நல்ல காரியங்களும் தொடர்ந்து நடைபெறுகின்றன. இருந்தாலும் அவர்களுக்கு பல கவலைகளும் மன சஞ்சலமும் உண்டாகின்றன. அச்சமயத்தில் இறைவனை பற்றி, ஸாதனையைப் பற்றி ச்ரத்தை குறைகிறது.

பதில் : உண்மையில் பல வழிகளைப் பின்பற்றி ஸாதனை செய்வது ஸாதனை ஆகாது. ஸாதனை என்றால் என்ன, நாமம், சேவை, தியாகம் ஆகியவற்றை உடல்-மனம்-செல்வம் மூலம் செய்வது ஸாதனை. தீர்த்த யாத்திரை செல்வது, ஏதாவது ஒரு பாராயணம் செய்வது, சோமவார விரதமிருப்பது போன்ற பல்வேறு வகை ஸாதனைகளை ஆன்மீக ஸாதனை எனக் கூற முடியாது. ஸாதனையில் ஒருமுக சிந்தனை வேண்டும். ஒரே தெய்வத்திடம் பக்தி தேவை. அவ்வாறு செய்தால் கவலைகள் அணுகாது. அதாவது வியாதி ஒன்றிற்கு வைத்திய சிகிச்சையை பாதியில் விட்டுவிட்டாலோ அல்லது வைத்திய சிகிச்சையை செய்யவில்லை என்றாலோ வியாதி அப்படியேதான் இருக்கும்.

நாம் பிறவி எடுத்திருப்பதே பெரும் நோய் தான். அதைத் தீர்ப்பதற்கும் தடங்கல்களை நீக்குவதற்கும் சரியான வழியில் ஸாதனை செய்ய வேண்டியது அவசியம். ‘பரோபகாரம், நல்ல காரியங்கள்’ ஆகியவை ஆன்மீகம் ஆகி விடாது. அவை மிகவும் கீழ் நிலையில் இருப்பவை. எல்லா பரோபகாரங்களும் உணர்வின் உந்துதலால் செய்யப்படுகின்றன. உலக உணர்வுகளை குறைப்பதும் அவற்றை முழுவதுமாக அழிப்பதுமே ஆன்மீகம் ஆகும்! உணர்வுகள் எல்லாம் மனதளவில் எழுபவை ஆகும். ஆன்மீகம் என்பது அதைத் தாண்டி வெகு தூரம் மேலே பயணிப்பது ஆகும். அதற்கு ஆன்மீக உணர்வே தேவையானது, ஆன்மீக உணர்வை பல விஷயங்களின் மேல் வைக்க முடியாது.

உணர்வு என்பது என்ன, பிச்சைக்காரனைப் பார்த்தவுடன் மனமிரங்கி அவனுக்கு பிச்சையிடுதல். யாருக்காவது வேலை இல்லை என்றால் அவர்களுக்கு உதவி செய்வது. இந்த கிராமத்தில் மருந்துகள் இல்லை, மருத்துவ வசதியை ஏற்படுத்தி தருதல். இந்த கிராமத்தில் மக்கள் குடிதண்ணீருக்காக நான்கு கி.மீ. நடக்க வேண்டியுள்ளது அதற்காக கிணறு வெட்டித் தருதல். இங்கு பள்ளிக்கூடம் இல்லை, அங்கு நூலகம் இல்லை…! இவற்றிற்கு ஒரு முடிவே இல்லை.

இவற்றால் மனம் சஞ்சலப்படாமல் சாக்ஷி உணர்வுடன் பார்ப்பதே ‘ஸாதனை’ ஆகும். அவ்வாறு பார்ப்பவனே ‘ஸ்திதபிரக்ஞன்’ ஆவான். அந்நிலையில் உலகில் என்ன நடந்தாலும், தனக்கு என்ன நடந்தாலும் அது சம்பந்தமாக எதுவும் தோன்றுவதில்லை. ஆன்மீகத்தில் இது மிக உன்னத நிலை. ஆனால் எங்காவது நாம் ஆரம்பிக்க வேண்டும் அல்லவா! பிச்சைக்காரனைப் பார்த்தல் மனது இரங்குகிறது, வேலை இல்லாதவரைப் பார்த்தால் கஷ்டமாக உள்ளது என்றால் அது நடக்காது. யாருக்கு வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் எனத் தோன்றுகிறதோ பரமேஸ்வரனை அதாவது சச்சிதானந்த நிலையை அடைய வேண்டும் எனத் தோன்றுகிறதோ அவர்கள் சுக-துக்கங்களில் மூழ்காமல் சச்சிதானந்த நிலையை அனுபவிக்க வேண்டும். அர்ஜுனனுக்கு வெறும் பறவையின் கண் மட்டுமே தெரிந்தது. மற்ற எதுவுமே தெரியவில்லை. அதேபோல் ஒரு ஸாதகனுக்கு ‘நான் நாமத்தை எடுத்துக் கொண்டேனா, ஸத்சேவையில் ஈடுபடுகிறேனா, ஸத்யத்திற்காக தியாகம் செய்கிறேனா’ என்று எல்லா விஷயங்களிலும் ஸத்-ஸத் என்பதே தெரிய வேண்டும். மாயை மட்டுமே கண்ணுக்கு தெரிபவர்கள் ‘நான் பரோபகாரம் செய்கிறேன், வேலை வாங்கித் தருகிறேன், ஒருவரின் வியாபாரத்திற்கு உதவுகிறேன்’ எனக் கூறுவதெல்லாம் மாயை தானே தவிர ஸத்யம் ஆகாது.

பரோபகாரம் செய்வது ஆன்மீக கண்ணோட்டத்தில் மகத்துவம் நிறைந்ததல்ல என்றாலும் அது ஒரு முதல் படியாகிறது. பெரும்பான்மையான மக்கள் சுயநலம் மிக்கவராக உள்ளனர். தங்களைப் பற்றியே நினைக்கின்றனர். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் தேவையான பணம் சேர்க்க வேண்டும் போன்றவை. யார் தன்னைப் பற்றியே நினைக்கிறார்களோ அவர்களைக் காட்டிலும் யார் சிறிதளவு பரோபகாரம் செய்கிறாரோ அவர் அதிக நல்லவர். ஆன்மீக திசையில் இன்றோ நாளையோ அல்லது அடுத்த பிறவியிலோ அதற்கடுத்த பிறவியிலோ அவர் பயணிக்கக் கூடும். ஆனால் யார் உண்மையான ஸாதகர் என்றால் அவர் இப்பிறவியிலேயே எதையாவது சாதிக்க விரும்புபவர். அவர்கள் இது போன்ற பரோபகார செயல்களில் சிக்கிக் கொள்ள மாட்டார்கள்.

‘ஸத்கர்ம’ என்றால் ‘நல்ல கர்மா’! பிச்சைக்காரனுக்கு பிச்சையிடுவது, கல்வி பயில பணம் இல்லை என்றால் அதற்கு தருவது, கிணறு தோண்டுவது, கல்விக்கூடம் கட்டுவது, மருந்துகள் தருவது ஆகிய யாவும் அஸத் அதாவது மாயையில் உள்ள காரியங்கள் ஆகும். நீங்கள் இவற்றை நல்ல காரியங்கள் எனக் கூறினாலும் ஆன்மீக கண்ணோட்டத்தில் இவை அனைத்தும் அஸத் அதாவது மாயை சம்பந்தமான காரியங்களே. ஆன்மீக கண்ணோட்டத்தில் பரமேச்வரனை பரபிரம்மத்தையே ‘ஸத்’ என்கின்றனர். பரமேச்வரனை விடுத்து அனைத்துமே ‘மாயை’ ஆகும்.

பல கவலைகள், மன சஞ்சலங்கள் தீருவது எப்போது? நம் தலை விதியில் என்ன எழுதப்பட்டுள்ளதோ அதன்படியே நடக்கும். சிலருக்கு வேலை இல்லை, சிலருக்கு மூலதனம் இல்லை, சிலருக்கு கல்யாணம் ஆவதில்லை, இவை எல்லாம் நடந்து கொண்டு தான் இருக்கும். இவை எல்லாவற்றையும் சாக்ஷி உணர்வுடன் பார்க்க முடியவில்லை என்றால் துக்கத்தில் ஆழ வேண்டியதுதான்.

ஸாதனை சரியானபடி நடந்தால் எந்த சூழ்நிலை இருந்தாலும் மனம் ஆனந்தமாகவே இருக்கும். ஷேகாவ் கிராமத்தில் கஜானன் மகாராஜ் தெரு குப்பைகூளங்களின் நடுவே அமர்ந்திருந்தாலும் ஆனந்த நிலையில் மூழ்கியிருப்பார். நீங்கள் நல்ல சோபா நாற்காலியில் அமர்ந்திருந்தாலும் துக்கத்தை அனுபவிக்கிறீர்கள். ஆனந்தம் என்பது மனதில் ஜீவனின் நிலை. உலக விவகாரங்களில் மாட்டிக் கொண்டவர்களுக்கே கவலை, கஷ்டம் எல்லாம். தன்னுடைய பிரச்சனைகளை சாக்ஷி உணர்வுடன் பார்க்க முடியவில்லை என்றால் ஸாதனை செய்தும் வீணே. ஆனந்த அனுபவம் அப்பொழுது கிடைக்காது.

ஒருவர் தன் மனதுக்கு தோன்றியபடி தானே வைத்தியம் செய்து கொள்கிறார். எனக்கு வைத்தியரிடம் நம்பிக்கை இல்லை என அவர் கூறினால் அதில் அர்த்தம் இல்லை. உண்மையான வைத்தியரிடம் சென்று வைத்தியம் பார்த்த பின்னரே நோய் குணமாகும். ஆன்மீகத்தில் யாருடைய வழிகாட்டுதலின்படியாகவாவது ஸாதனை செய்ய ஆரம்பித்தால் முன்னேற்றம் நிச்சயம்; காரணம் ‘ஆன்மீக சாஸ்திரம்’ என்பது பரிபூரண சாஸ்திரம் ஆதலால் ஸாதனை செய்த பின் பலன் கிடைத்தே ஆக வேண்டும்.

Leave a Comment