சிவனின் உருவ விசேஷங்கள் மற்றும் விசேஷத் தன்மைகள்

 

சிவனின் உருவ விசேஷங்கள

1. கங்கா

எப்படி சூரிய குடும்பத்தில், சூரியன் நடுநாயகமாக திகழ்கிறதோ அப்படி நம் உடம்பிற்கும் ஆத்மா மூலாதாரமாக விளங்குகிறது. அதே போல் ஒவ்வொரு பொருளின் சைதன்யம் மற்றும் பவித்ரத்தின் (சூட்சும சைதன்ய துகள்கள்) நடு மையமாக ‘கங்’ விளங்குகிறது. ‘கங்’கின் உற்பத்தி ஸ்தானம் கங்கா. சிவனுடைய சிரஸிலிருந்து ‘கங்’ பொழிவதால் கங்கை சிவனுடைய சிரஸிலிருந்து வருகிறது என்பது ஐதீகம்.

இப்பூவுலகில் ஓடிக் கொண்டிருக்கும் கங்கையானது, இத்தெய்வீக கங்கை என்ற தத்துவத்தின் ஒரு பகுதியே. அதனால்தான், சுற்றுப்புற சூழல் பாதிப்பு இருந்தும் கூட, கங்கை புனிதமாகக் கருதப்படுகிறது. இவ்வுலகில் உள்ள எல்லா நீர் நிலைகளைக் காட்டிலும், கங்கை தூய்மையானதாக கருதப்படுகிறது. சூட்சும உலகை உணர்ந்தவர்கள் மட்டுமின்றி விஞ்ஞானிகளாலும் கூட ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை இது.

2. சந்திரன்

சிவனின் தலையை, சந்திரன் அலங்கரிக்கிறது. நேசம், கருணை, தாயன்பு ஆகிய உணர்ச்சிகளின் பிறப்பிடமாக சந்திரன் திகழ்கிறது. ஆகையால், சந்த்ரமா என்கின்ற நிலை, இம்மூன்று உணர்ச்சிகளையும் ஒருங்கே பெற்றதாகிறது.

3. நெற்றிக்கண்

அ. சிவனின் இடது கண் முதற் கண்ணாகவும், வலது கண் இரண்டாவது கண்ணாகவும், புருவ மத்தியில் சூட்சுமமாக உள்ள நெற்றிக் கண் மூன்றாவது கண்ணாகவும் கருதப்படுகிறது. மேல் நோக்கி நீண்டிருக்கும் மூன்றாவது கண், மற்ற இரு விழிகளின் கூட்டு சக்தியை பிரதிபலிக்கிறது. தெய்வீக சக்தியின் இருப்பிடமாக திகழ்கிறது. அதற்கு, ‘ஜோதிர்மட்’, ‘வியாசபீட்’ என்றும் சில பெயர்கள் உள்ளன.

ஆ. சங்கரன் முக்கண் பெம்மான் ஆவார். அதாவது, இறந்த காலம், நிகழ்காலம் மற்றும் வருங்காலம் ஆகிய மூன்றையும் பார்க்கக்கூடியவர்.

இ. யோக சாஸ்திரத்தின்படி சிவனின் மூன்றாவது கண் ஸுஷும்னா நாடியைக் குறிக்கின்றது.

4. நாகம்

அ. சிவனின் மற்றொரு பெயர் புஜங்கபதிஹாரி. ‘புஜங்க’ என்றால் நாகம். அதாவது தூய்மையான பொருள்; ‘பதி’ என்றால் பேணி பாதுகாப்பவன்; ‘ஹாரி’ என்றால் கழுத்தில் ஹாரத்தை, அதாவது மாலையை அணிந்திருப்பவன். இதிலிருந்து, ‘புஜங்கபதிஹாரி’ என்பவன் தூய்மையான பொருளை பேணி பாதுகாத்து, தன் கழுத்தில் மாலையாக அணிந்து கொள்பவனாகிறான். பலவிதமான நாகங்கள், பலவிதமான பவித்ரத் துகள்கள் ஆகின்றன. மேலோட்டமான பார்வைக்கு, அவை நாகங்களாக தெரிந்தாலும், உண்மையில் அவை ஒரு விதமான ஏணிகளாக பயன்படுகின்றன. அவற்றின் வாலைப் பிடித்துக் கொண்டோமேயானால் விரைவில் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படும்.

சிவனின் ஆபரணமாக ஒன்பது நாகங்கள் திகழ்கின்றன. ஒன்று தலையில், ஒன்று கழுத்தில், ஒரு ஜோடி இரண்டு கைகளில், ஒரு ஜோடி இரண்டு மணிக்கட்டில், ஒன்று இடுப்பில், ஒரு ஜோடி இரண்டு தொடைகளில். ஆக சிவனின் திவ்ய ஸ்வரூபம் முழுவதிலும் தூய்மையான பவித்ர துகள்கள் நிரம்பி இருக்கின்றன. சிவனின் ரூபமாகிய ப்ரபஞ்சத்தில் அவை விளையாடுகின்றன.

ஆ. நாகம் சிவனின் ஆயுதமாகவும் இருக்கிறது. இந்த ஒன்பது நாகங்களுக்கும் ‘நவ நாராயண்’ என்று பெயர். ‘நவநாத்’ என்பதும் இதிலிருந்து வந்ததுதான்.

இ. கார்த்திகேயன், ஜோதிபா, ராவல்நாத் மற்றும் சாபு ஆகிய தெய்வங்கள் சில சமயம் நாகங்களாக தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.

ஈ. ஸர்வ தெய்வங்களின் ரூபங்கள் ஏதாவதொரு சமயம் நாகமாக இருந்துள்ளது.

உ. நம் உடம்பிலும் ஐந்து நாகங்கள் உள்ளன. அவற்றில் பெண்பாலான ஒன்றைத்தான் குண்டலினி என்கிறோம். இவ்வைந்தும் நம் உடம்பில், பஞ்ச வாயுவாக இருக்கின்றன. மீதி நான்கும், ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட்டாலே நம் உடம்பில் காணப்படும்.

ஊ. நாகம் ஆண் தத்துவத்தை குறிக்கிறது. சந்தான பாக்யத்தை அருளும் தேவதை இதுவே.

5. பஸ்மா

பூ-பவ என்பது பிறப்பைக் குறிக்கின்றது. அஸ்ம-அஷ்மா என்பது சாம்பலைக் குறிக்கின்றது. எது பிறந்து, முடிவில் சாம்பலாகிறதோ, அதற்கு ‘பஸ்மா’ என்று பெயர். உயிருள்ள வஸ்துக்களின் சாம்பல் ‘பஸ்மா’ எனப்படுகிறது. ஸ்மா என்றால் ரக்ஷா அல்லது சாம்பல் என்று பொருள். ஷ்ரு-ஷன் என்றால் தூவப்படுவது என்று பொருள். இதிலிருந்து, சாம்பல் தூவப்பட்ட இடம் ஸ்மஷான் ஆகிறது (மயான பூமி). பூமி நெருப்பிலிருந்து (சூரியன்) பிறந்தது. பூமியிலுள்ள எல்லா உயிர்களும், இந்நெருப்பிலிருந்து பிறந்து, பின்பு நெருப்பிலேயே ஐக்கியமாகின்றன. சரீரம் அழியக்கூடியது. அதனைத் தொடர்ந்து நினைவுறுத்தும் சின்னமே, பஸ்மம் என்பதே பஸ்மத்தின் உள்ளர்த்தம்.

பஸ்மத்தை தரித்தல் : த்ரிபுண்ட்ரம் என்பது பஸ்மத்தின் மூன்று கோடுகளைக் குறிக்கின்றது. அவை, ஞானம், தூய்மை, தவம் ஆகிய மூன்றைக் குறிப்பாலுணர்த்துகிறது. சிவனின் மூன்று கண்களையும் கூட இது குறிக்கின்றது.

6. ருத்ராக்ஷம்

சிவனை பூஜிக்கும் பொழுது கழுத்தில் ருத்ராக்ஷ மாலையை அவசியம் அணிய வேண்டும்.

ருத்ராக்ஷ வார்த்தையின் மூலமும், அர்த்தமும்

அ. ருத்ரா + அக்ஷ =ருத்ராக்ஷா ஆகின்றது.

‘அக்ஷ’ என்றால் கண், ருத்ரா + அக்ஷா என்றால், எது எல்லாவற்றையும் பார்த்து காரியங்களை செய்கின்றதோ அதைக் குறிக்கும் (உதா. மூன்றாவது கண்). அக்ஷாவின் இன்னொரு அர்த்தம் அச்சாணி. கண், ஒரு அச்சாணியைக் கொண்டு சுழல்கிறது. அதனால் கண்ணிற்கும் ‘அக்ஷ’ என்று பெயருண்டு.

ஆ. ருத்ராக்ஷம் பீஜம் ஆகும். அது என்றும் குறைவதில்லை. ஆத்மாவும் அவ்வாறேதான். ருத்ராக்ஷம், ஆத்மாவின் சின்னமாகும், என்பதே ருத்ராக்ஷத்தின் உள்ளர்த்தம். ருத்ராக்ஷம் சிவப்பு நிறமாகவும் மீனைப் போல் தட்டையாகவும் காட்சியளிக்கிறது. அதில் மஞ்சள் நிறத்தில் கோடுகள் உள்ளன. அதன் ஒரு பக்கத்தில், வாயைப் போன்ற ஒரு பிளவு காணப்படுகிறது.

தன்மைகள்

அ. ருத்ராக்ஷத்தால் தேவதைகளின் ஒளி அலைகளை மனித உடம்பின் ஒலி அலைகளாக மாற்றவும், அதே போல் ஒலி அலைகளை ஒளி அலைகளாக மாற்றவும் முடியும். அதனால், மனிதனால் தெய்வீக அதிர்வுகளை உணர்ந்து, மனித சிந்தனையை தேவ பாக்ஷையாக மாற்றவும் முடிகிறது.

ஆ. ருத்ராக்ஷம் ஸாத்வீக அதிர்வுகளை க்ரஹிக்கவும், வெளியிடவும் செய்கிறது. உண்மையான ருத்ராக்ஷம் நம் கையில் இருந்தால், அதன் அதிர்வுகளை நம் விரல்களால் உணர முடியும். அச்சமயம், அது வெளியிடும் நல்ல அதிர்வுகளை நாம் க்ரஹித்துக் கொள்கிறோம்.

போலி ருத்ராக்ஷம்

அ. பத்ராக்ஷ

ஆ. விக்ருதாக்ஷ: இக்காலங்களில், இதையே ருத்ராக்ஷம் என்று கூறி விற்கிறார்கள், ஆனால், இது ஒரு வகையான காட்டுச் செடியில் இருந்து கிடைப்பது. அதன் நடுவில் ஒரு சூடான ஊசி மூலம் துளையிடுவார்கள். சூடுபடுத்தப்பட்ட ஊசி மூலம், ஓம், ஸ்வஸ்திக், சங்கு, சக்கரம் ஆகியவை அதில் செதுக்கப்படுகின்றன. அவை நிறம் பெற பாக்கில் இருந்து பிழிந்தெடுக்கப்பட்ட சாறில் வைக்கப்படுகின்றன. தண்ணீரில் வைத்தால் அவை மீண்டும் நிறம் மாறிவிடும். இதை தாந்த்ரீகர்கள், யக்ஞங்கள், ஜாரன்- மாரன் (பில்லி சூனியம்) போன்றவற்றிற்கு உபயோகப்படுத்துகிறார்கள்

7. புலித்தோல்

புலி (ரஜ, தம குணங்களின் சேர்க்கை), கொடூரத் தன்மையை குறிக்கின்றது. சிவன் இத்தகைய புலியைக் (ரஜ-தம) கொன்று, தனது ஆசனமாக்கியிருக்கிறார்.

 

ஆன்மீக விசேஷங்கள்

1. மஹா தபஸ்வி மற்றும் மஹா யோகி

இடைவிடாது நாமஜபம் செய்யும் ஒரே தெய்வம் சிவபெருமான். பந்தா மற்றும் முத்ராவில் அமர்ந்திருக்கிறார். இத்தகைய கடுமையான தவத்தினால் உண்டாகும் வெம்மையைத் தணிக்க, கங்கை, பிறைச்சந்திரன் மற்றும் நாகங்கள் உதவுகின்றன. இதோடு கூட, சிவனிருக்கும் இடமோ பனி சூழ்ந்த கைலாஸ பர்வதம்.

2. ரௌத்ரம்

சிவன் நாமஜபத்தை தானே நிறுத்திக் கொண்டால், எந்தவித பாதிப்புமின்றி அமைதியாக இருக்கிறார். அன்றி, வேறு யார் மூலமாவது (உதாரணத்துக்கு ஒரு முறை மன்மதனால்) நாமஜபத்திற்கு பங்கம் ஏற்பட்டால், ஆன்மீக ஸாதனையால் சேர்ந்த சக்தி உடனே வெளிப்பட்டு, எதிரில் இருப்பவரை பொசுக்கி விடுகிறது. இத்தகைய நிகழ்வை நாம், சிவன் தன் நெற்றிக் கண்ணைத் திறந்து எரித்துவிட்டார் என்று கூறுகிறோம்.

சிவனின் தவத்திற்கு பங்கம் விளைவிப்பவர்கள், 100% பாதிப்பை அடைகிறார்கள் என்று வைத்துக் கொள்வோமேயானால், சிவனின் பாதிப்பு 0.01% தான் ஆகிறது. இதனால் சிவன் தன் நாடி பந்தத்தை மட்டுமே இழக்கிறார். ஆசனத்தை இழப்பதில்லை. மறுபடியும் பந்தா மற்றும் முத்ராவில் ஆழ்கிறார்.

3. பிறரின் இன்பத்திற்காக, தான் துன்பத்தை ஏற்பவர்

பாற்கடலைக் கடைந்ததால் வெளிப்பட்ட ஆலகால விஷம், பிரபஞ்சத்தையே சுட்டெரித்தபோது, ஒருவரும் அதை ஏற்க முன் வரவில்லை. சிவன் மட்டுமே அதை உண்டு தன் கழுத்தில் இருத்திக் கொண்டு இப்பிரபஞ்சத்தை அழிவிலிருந்து காத்தவர்.

4. மிகவும் சுலபமாக சந்தோஷப்படக் கூடியவர் (ஆசுதோஷி).

5. தேவர்களால் மட்டுமின்றி அஸுரர்களாலும் பூஜிக்கப்படுபவர்.

பாணாசுரன், ராவணன் ஆகிய ராக்ஷஸர்கள், விஷ்ணுவை பூஜித்து எந்த வரமும் பெற்றதில்லை. ஆனால் சிவனை பூஜித்து வரம் பெற்றிருக்கிறார்கள்.

6. பூதகணங்களின் தலைவன்

சிவனே பூதகணங்களின் தலைவனாக இருப்பதால், சிவனடியார்களை, பூதகணங்கள் ஒன்றும் செய்வதில்லை.

7. உர்துவரேதஸ்

உர்துவரேதஸ் என்றால் விந்து வெளிதள்ளுவதை கட்டுபடுத்த கூடியவன் என்று பொருள். இவ்விடத்தில் விந்து ஒளியாக மாறுகிறது. சிவன் உர்துவரேதஸ் என்பதால் தன்னுடைய சங்கல்பத்தினாலேயே உயிரினங்களை படைக்க முடியும்.

8. கற்பனைக்கும் எட்டாத அளவு படைக்கும் சக்தி கொண்டவர்

ப்ரம்மதேவனின் ஆயுள் 1000 திவ்ய வருடங்களாகும். க்ருத, த்ரேதா, த்வாபர மற்றும் கலி ஆகிய நான்கு யுகங்கள் சேர்ந்து ஒரு சதுர்யுகம் ஆகிறது. அதுபோல் 1000 சதுர்யுகங்கள் ப்ரம்மாவின் ஒரு நாள் ஆகிறது. இதை ஒரு கல்பம் என்றும் கூறுவர். இது போன்ற 360 நாட்கள் ஒரு திவ்ய வருடமாகும். 100 திவ்ய வருடங்களுக்கு சிவனின் உற்பத்தி காரியம் தொடர்ந்து நடைபெறுகிறது. இதிலிருந்து சைவ சம்பிரதாயத்தினர் சிவனை ஏன் படைக்கும் தொழிலைச் செய்பவர் என்கின்றனர் என்பது மிகவும் தெளிவாகிறது.

தகவல் : ஸனாதனின் தமிழ் கையேடு ‘சிவன்’

Leave a Comment