கணபதி உருவத்தின் சில சிறப்பு அம்சங்களின் உள்ளர்த்தம்

தும்பிக்கை

வலம்புரி தும்பிக்கை

வலப் பக்கம் வளைந்துள்ள தும்பிக்கையுடைய மூர்த்தி தெற்கு முகமானதால் தக்ஷிண்மூர்த்தியாகும். இங்கு தக்ஷிண் என்பது தெற்கு திசை அல்லது வலது பக்கத்தைக் குறிக்கிறது. தென் திசை யமலோகத்தை நோக்கி செல்வது; வலது பக்கம் சூர்ய நாடியைக் கொண்டது. யமலோகத்தை அடக்க முயல்பவர் பலவானாக இருக்க வேண்டும். எவரின் சூரியநாடி சுறுசுறுப்பாகச் செயல்படுகிறதோ, அவர் தேஜஸ்வியாகவும் மிகவும் கூர்மையான அறிவு படைத்தவராகவும் ஆகிறார். அந்த இரண்டு அர்த்தங்களின் அடிப்படையில், வலம்புரி விநாயகர் எழுச்சி உள்ளவராகக் கருதப்படுகிறார். மரணத்திற்குப் பின் தக்ஷிண திசை சென்று எவ்வாறு அங்கு பாபம், புண்ணியங்கள் கணக்கிடப்படுகின்றனவோ, அதைப் போல மரணத்திற்கு முன்பு தென் திசை நோக்கி அமர்ந்தாலோ அல்லது தென் திசையில் கால் நீட்டி படுத்தாலோ அதே அனுபவம் ஏற்படும்.

தெற்கு நோக்கிய தக்ஷிணமுகி மூர்த்தி உருவத்திற்கு பூஜை சாதாரண முறையில் செய்யப்படுவதில்லை. ஏனென்றால் திர்யக் (ரஜ-தம) அதிர்வலைகள் தெற்கு திக்கிலிருந்து வருகின்றன. இப்படிப்பட்ட உருவத்திற்கான வழிபாட்டில், கர்மகாண்டத்தில் எல்லா நியமங்களையும் கடைபிடிப்பது கட்டாயமாகிறது. இதனால் ஸாத்வீக குணம் அதிகமாகிறது. மேலும் தெற்கிலிருந்து வரும் ரஜ-தம அதிர்வலைகளினால் துன்பம் ஏற்படுவதில்லை.

 

இடப்பக்க தும்பிக்கை

தும்பிக்கையின் நுனி, இடப்பக்கம் வளைந்திருப்பது வாமமுகி மூர்த்தியாகும். வாம என்றால் இடது பக்கம் அல்லது வடக்குத் திசையாகும். இடது பக்கத்தில் சந்திரநாடி இருக்கிறது. இது குளுமையைத் தருகிறது. வடதிசை, ஆன்மீகத்திற்கு உகந்ததாக மற்றும் ஆனந்தம் தருவதாக இருக்கிறது. இதனால் பூஜையில் அதிகமாக இடப்பக்கம் தும்பிக்கை உள்ள கணபதியின் உருவம் அமைக்கப்படுகிறது.

 

மோதகம்

‘மோத’ என்றால் ஆனந்தம், ‘க’ என்றால் சிறிய பகுதி. மோதகம் என்றால் ஆனந்தத்தின் ஒரு சிறிய பகுதி. மோதகத்தின் உருவம் (அமைப்பு) தேங்காய் போல் உள்ளது. குண்டலினி (சக்தி) உச்சந்தலையான பிரம்மரந்திரம் வரை சென்றால் ஆனந்தத்தின் உணர்வு உண்டாகிறது. கணபதியின் கையிலுள்ள மோதகம், ஆனந்தத்தை அளிக்கும் சக்தியைக் குறிக்கிறது.

மோதகம் ஞானத்தின் அடையாளம். அதனால் அதை ஞானமோதகம் என்றும் சொல்கிறோம். துவக்கத்தில் ஞானம் இவ்வளவுதானா என்று எண்ணுகிறோம். (மோதகத்தின் மேல் உள்ள சிகரமே இதற்கு உதாரணம்). ஆனால் பயிற்சி செய்யச் செய்ய, ஞானம் ஆழமானது என்பது தெளிவாகிறது. (இதற்கு அடையாளம் மோதகத்தின் கீழ் பாகம்). மோதகம் அல்லது கொழுக்கட்டை எவ்வாறு இனிப்பாக இருக்கிறதோ, அதே போல ஞானத்திலிருந்து கிடைக்கும் ஆனந்தமும் இனிக்கிறது.
மோதகம் தேங்காயைப் போன்ற உருவம் கொண்டது. தேங்காயின் ஒரு சிறப்பம்சம் தீய அதிர்வலைகளை தன்னுள் ஆகர்ஷிக்கிறது. மோதகமும் அவ்வாறே பக்தர்களின் விக்னங்களை, பக்தர்களுக்கு கஷ்டம் கொடுக்கும் தீய சக்திகளைத் தன்னுள் இழுத்துக் கொள்கிறது. கணபதி இந்த மோதகத்தை உண்கிறார் என்பது விக்னங்களை, கஷ்டம் தரும் தீய சக்திகளை நாசம் செய்கிறார் என்று அர்த்தம்.

 

அங்குசம்

ஆன்மீக ஞானம் மற்றும் ஆனந்தம் கிடைக்கும் வழியில் உள்ள தடைகளை நாசம் செய்வதற்குப் அங்குசம் பயன்படுகிறது.

 

பாசம்

இது கணபதியின் கையில் இருக்கும். தீய சக்திகளை சுருக்கு போட்டு அவற்றை ஒன்றாக கட்டி தூர விரட்டியடிக்கிறது.

 

இடுப்பைச் சுற்றியுள்ள நாகம்

இது விஷ்வ குண்டலினியாகும். சுற்றிய நாகத்தின் படம், எழுச்சி பெற்ற விழிப்படைந்த குண்டலினி சக்தியாகும்.

 

வாஹனம்

வ்ரு-வஹ என்ற சொற்றொடரின் பொருள் ‘கொண்டு செல்லுதல்’. இந்த வார்த்தையிலிருந்தே வாஹனம் என்ற சொல் ஏற்பட்டது. தெய்வங்களின் வாஹனம் எந்த செயல் மேற்கொள்ளப்படுகிறதோ அதற்கேற்ப காலத்திற்குக் காலம் மாறிக்கொண்டே வருகிறது. சாதாரணமாக, கணபதியின் வாஹனம் மூஷிகம்-அதாவது மூஞ்ஜூறு; இது ரஜோ- குணத்தின் அடையாளம். கணபதியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஆனால் அவருக்கு வேறு சில வாஹனங்களும் இருக்கின்றன. ஆவாஹன் என்றால் அழைப்பு. அழைக்காமல் தெய்வங்கள் கூட வருவதில்லை. (ஆனால் பக்தன் துன்பத்தில் இருந்தால், அழைப்பில்லாமலே தெய்வங்கள் உடனே ஆஜராகி விடுகிறார்கள்.) அழைப்பு வரும்பொழுது, செயலுக்கேற்ற வாஹனத்தின் அவசியம் ஏற்படுகிறது. உதாரணம், போருக்குச் செல்லும்போது ஹேரம்ப கணபதியின் வாஹனம் ஸிம்மம்; மயூரேஷ்வரின் வாஹனம் மயில்; பக்தர்களின் ரஜோ குணத்தை அடக்கி ஆண்டு அருள் புரியும்போது கணபதியின் வாஹனம் மூஞ்ஜூறு.

தகவல் : ஸனாதனின் தமிழ் கையேடு ‘கணபதி’

Leave a Comment