கணபதியின் சில பெயர்களும் அவற்றின் அர்த்தமும்

தோற்றமும் பொருளும்

கண + பதி = கணபதி. ஸமஸ்க்ருத அகராதிப்படி ‘கண’ என்றால் பவித்ரமான துகள்கள். பவித்ரம் என்றால் அதி சூட்சுமமான சைதன்ய துகள்கள் என்று அர்த்தம். ‘பதி’ என்றால் ஸ்வாமி என்று அர்த்தம். ‘கணபதி’ என்றால் ‘பவித்ரமான துகள்களின் ஸ்வாமி’ என்று அர்த்தம்.

 

வேறு சில பெயர்கள்

தமிழ்நாட்டில் கணபதி, பிள்ளையார் என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். முத்கல் ரிஷி கணேச ஸஹஸ்ர-நாமம் எழுதியுள்ளார். அதில் கணபதியின் 1000 நாமங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. துவாதஸ நாம ஸ்தோத்திரத்திலுள்ள கணபதியின் 12 நாமங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ப்ரதமம் வக்ரதுண்டம் ச ஏகதந்தம் த்விதீயகம்
த்ரிதீயம் க்ருஷ்ணபிங்காக்ஷம் கஜவக்த்ரம் சதுர்தகம் |
லம்போதரம் பஞ்சமம் ச ஷஷ்டம் விகடமேவ ச
சப்தமம் விக்னராஜேந்திரம் தூம்ரவர்ணம் ததாஷ்டமம் |
நவமம் பாலசந்திரம் ச தஸமம் து விநாயகம்
ஏகாதஸம் கணபதிம் த்வாதஸம் து கஜானனம் ||

மேலே கொடுக்கப்பட்டுள்ள 12 நாமங்களில், சில நாமங்கள் மற்றும் வேறு சில நாமங்களின் அர்த்தங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வக்ரதுண்ட : சாதாரணமாக வக்ரதுண்ட என்றால் வளைந்த முகம் அல்லது துதிக்கை உள்ளவர் என்று பொருள். ஆனால் சரியான அர்த்தம் இது அல்ல. ‘வக்ரான் துண்டயதி இதி வக்ரதுண்ட’, அதாவது கோணலான அல்லது தவறான வழி செல்பவரைத் தண்டித்து சரியான வழிக்குக் கொண்டு வருபவர் ‘வக்ரதுண்டர்’ என்று அழைக்கப்படுகிறார். திர்யக் அதிர்வலைகள் கோணலானவை. ரஜ-தம நிறைந்த 360 அதிர்வலைகளை தும்பிக்கையின் மூலமாக 108 அதிர்வலைகளாக, நேராக, ஸாத்வீகமாக மாற்றுவதே வக்ரதுண்ட ஆகும்.

ஏகதந்த அல்லது ஏகஷ்ருங்க : ஒரே தந்தம் அகண்டமாக (இன்னொன்று உடைந்துள்ளது) இருப்பதால் இந்தப் பெயர் வந்துள்ளது. ஒன்று பிரம்மத்தைக் குறிக்கிறது. ‘தந்த’ என்ற பதம் ‘த்ரு தர்ஷயதி’ (அதாவது காண்பிப்பது) என்ற மூலத்திலிருந்து வந்துள்ளது. ஒன்று என்ற ப்ரம்மத்தின் அனுபூதியை உணரும் சரியான வழியைக் காட்டுவதாகவும் இன்னொரு அர்த்தம் வருகிறது.

லம்போதரன் : இந்த வார்த்தை லம்ப (பெரிய) மற்றும் உதர (வயிறு) என்ற இரு பதங்களின் கூட்டு வார்த்தையாகும். லம்போதரன் என்ற பதத்தின் பொருளை ஏக்நாத் என்ற மஹான் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.

துஜ மாஜி வாசு சராசர |
மணோனீ போலிஜே லம்போதர ||
– ஏக்நாதி பாகவதம், ஆரம்ப ஸ்லோகம் 3

அர்த்தம் : நீயே அண்ட சராசரங்களையும் வியாபித்துள்ளவன். அதனால் உன்னை லம்போதரன் என அழைக்கிறோம்.

பாலசந்திர : ‘பால்’ என்றால் புருவங்களுக்கு மேலுள்ள நெற்றியின் பகுதி. உலகம் தோன்றிய நேரத்தில் பிரஜாபதி, ப்ரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் மீனாக்ஷியின் அதிர்வலைகள் ஒன்று கூடி அன்பு, மன்னிக்கும் தன்மை, வாத்ஸல்யம் இவற்றின் ஒட்டு மொத்தமான உருவத்திற்கு நிலவு என்று பெயரிட்டார்கள். அந்த நிலவை, திங்களை நெற்றியில் அலங்காரமாகச் சூடியவனை ‘பாலசந்திர’ என்கிறோம். சாதாரணமாக இந்தப் பெயர் சிவபெருமானுக்கே உகந்தது. ஆனாலும் கணபதி ஈசனின் மைந்தன் ஆன காரணத்தால், இவருக்கும் ‘பாலசந்திர’ என்ற பெயர் ஏற்பட்டது.

விநாயகன் : விநாயகன் என்ற பதம் ‘விசேஷ ரூபேண நாயக:’ என்ற பதத்திலிருந்து வந்தது. யாரிடம் நாயகனுக்கான அதாவது தலைவனுக்கான எல்லா குணங்களும் இருக்கின்றனவோ, அவனே விநாயகன். விநாயக கணங்களின் விஷயத்தில் ஆறு என்ற எண் அதோடு சம்பந்தப்படுத்தப் படுகிறது. விநாயக கணங்களைப் பற்றிய அதிக விவரங்கள் மானவக்ருஹ்ய சூத்ரம் மற்றும் போதாயன க்ருஹ்ய சூத்ரத்தில் காணப்படுகின்றன. அதன் சாராம்ஸம் என்னவென்றால், விநாயக கணங்கள் கஷ்டங்களைக் கொடுக்கின்றன; தொல்லைகளை ஏற்படுத்துகின்றன. சில சமயம் கொடூரமாகவும் உள்ளன. ஒரு முறை இவைகளின் தொல்லை துவங்கி விட்டால், மனிதன் பைத்தியம் பிடித்தவன் போல் நடந்து கொள்கிறான். அவனுக்குப் கெட்ட கனவுகள் வருகின்றன. எதைக் கண்டாலும் பயப்படுகிறான். விநாயக கணங்களின் தொல்லையிலிருந்து தப்பிக்க தர்மசாஸ்திரங்களில் அநேக பரிகாரங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. கணபதி, அதாவது விநாயகன் என்பவர் இந்த விநாயக கணங்களின் அதிபதியாவார். சங்கரன், கணபதியிடம் கூறியுள்ளார், விநாயக கணங்கள் உன்னுடைய ஸேவகர்களாக இருப்பர். யக்ஞ காரியங்களில் உன் பூஜை முதலில் செய்யப்படும். இதைச் செய்யாதவரின் காரியங்களில் விக்னங்கள் ஏற்படும். அன்றிலிருந்து எந்த ஒரு காரிய ஆரம்பத்திலும் கணபதி பூஜை செய்யப்படுகிறது. விநாயக கணங்கள் விக்ன ரூபமாக உள்ளனர்; ஆனால் விநாயகர் அந்த விக்னங்களைப் போக்குபவராக உள்ளார். பக்தர்களின் அபீஷ்டங்களை ஸித்தி செய்பவர், அதாவது விரும்புபதைத் தருவதால் ஸித்தி விநாயகர் ஆகிறார்.

மங்களமூர்த்தி : மங்கம் சுகம் லாதி இதி மங்கலம் | ‘மங்’ என்றால் சுகத்தை அருளுபவர். இந்த மங்கலத்தைத் தருவதால் மங்களமூர்த்தி ஆகிறார்.

மஹாராஷ்ட்ராவில் கணபதியை மங்கல மூர்த்தி மோர்யா என்ற ஜயகோஷத்தோடு வரவேற்கிறார்கள். இதில் மோர்யா என்ற வார்த்தை மோர்யா கோசாவி என்ற விநாயக பக்தரைக் குறிக்கிறது. இவர் பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். பூனே நகரின் அருகில் இருக்கும் சிஞ்ச்வட் கிராமத்தைச் சேர்ந்தவர். இந்த ஜயகோஷத்தின் மூலம் கடவுளுக்கும், பக்தனுக்கும் இடையில் உள்ள திடமான, உறுதியான இணைப்பு தெளிவாகிறது.

வித்யாபதி : 1. சிக்ஷை, 2. கல்பம், 3. இலக்கணம், 4. நிருக்த, 5. ஜ்யோதிஷம், 6. சந்தஸ், 7. ரிக்வேதம், 8. யஜூர்வேதம், 9. ஸாமவேதம், 10. அதர்வவேதம், 11. பூர்வ மற்றும் உத்தரமீமாம்ஸா, 12. நியாயம், 13. புராணம், 14. தர்மசாஸ்திரம், 15. ஆயுர்வேதம், 16. தனுர்வேதம், 17. காந்தர்வவேதம், 18. நீதிசாஸ்திரம் ஆகிய இந்த பதினெட்டு வித்தைகளின் அதிபதி கணபதி. அதாவது, இந்த வித்யாக்களை அத்யயனம் பண்ணுவதற்கு முன் அல்லது அத்யயனத்தின்போது கணபதி பூஜை செய்வது மஹத்துவம் நிறைந்ததாகும்.

சிந்தாமணி : இது கணபதியின் மற்றொரு பெயர். சித்தத்தில் (மனதில்) ஷிப்த, மூட, விக்ஷிப்த, ஏகாக்ர, மற்றும் நிருத்த என்று ஐந்து நிலைகள் உள்ளன. எவர் இந்த நிலைகளைப் பற்றிய தெளிவைத் தருகிறாரோ, அவர் சிந்தாமணி என்று அழைக்கப்படுகிறார். சிந்தாமணி கணபதியை பஜனை செய்வோருக்கு மனதில் இந்த ஐந்து நிலைகள் மறைந்து, மனம் அமைதி அடைகிறது. இதைப் பற்றிய விவரம் முத்கலபுராணத்தில் உள்ளது.

மஹாகணபதி : ரித்தி-சித்தி (சக்திகள்)களுடன் இருக்கும் கணபதி, மஹாகணபதி என்று அழைக்கப்படுகிறார். பார்வதி அமைத்த கணேச மூர்த்தியே மஹாகணபதியின் அவதாரமாகும். மஞ்சளால் உருவம் அமைத்து அதில் கணபதியை ஆவாஹனம் செய்தாள். உலகம் தோன்றும் முன்பே முழு முதற்கடவுளாக எந்த மகத்தான தத்துவம் நிர்குணமாகவும், ஆத்ம ஸ்வரூபமாகவும் இருந்ததோ, அதையே மஹா கணபதி என்று சொல்லுகிறோம்.

தகவல் : ஸனாதனின் தமிழ் கையேடு ‘கணபதி’

Leave a Comment