மூன்றுவித கணேச சதுர்த்தி விரதங்கள்

வளர் பிறைச் சதுர்த்தியை விநாயகி என்றும், தேய்பிறை சதுர்த்தியை சங்கஷ்டி என்றும் கூறுவர்.

விநாயகி

இந்த விரதத்தில் விரதம் முடிந்த பின் சந்திர தரிசனமோ, சந்திரனுக்கு பூஜையோ செய்வதில்லை. நாள் முழுவதும் உபவாஸம் உண்ணாநோன்பு இருந்து மறுநாள் விரதத்தை முடித்து விடுகின்றனர். இந்த விரதத்தின் தேவதை, ஸித்தி விநாயகர் ஆவார். எல்லா நலங்களும் பெற விநாயகி விரதம் இருக்கிறார்கள்.

 

சங்கடஹரசதுர்த்தி

சங்கஷ்டம் என்றால் சங்கடம் (கஷ்டம்). பூமியிலிருந்து வெளிவரும் 360 அதிர்வலைகளால் நாம் சூழப்பட்டுள்ளோம். இதனால் நம் உடலின் இயக்க ஓட்டத்திற்கு தடை உண்டாகிறது. இதையே சங்கடம் என்கிறோம். தேய்பிறையில் இந்த அதிர்வலைகள் அதிகமான அளவில் செயல்படுகின்றன. இதனால் நம்முடைய நாடி நரம்புகளில் ஓட்டத்தின் இயக்கம் ஏறக்குறைய நின்றே போகின்றன. இந்த சங்கடத்தை நிவாரணம் செய்யவே சங்கடஹரசதுர்த்தியை அனுசரிக்கிறோம். முன்னூற்று அறுபது அலைகளும் கணபதியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவரை உபாஸித்தால் இந்த அதிர்வலைகளின் மூலம் ஏற்படும் சங்கடங்களிலிருந்து விடுதலை கிடைக்கிறது.

இந்த நாளில் நாள் முழுவதும் உபவாஸம் இருப்பார்கள். மாலை ஸ்நானம் செய்து கணபதி பூஜைக்கான ஏற்பாடுகளை செய்கிறார்கள். இரவில் சந்திர தரிசனத்திற்குப் பின் வீட்டில் வைத்திருக்கும் கணேசரின் உருவத்திற்கு பூஜை செய்வார்கள். உருவம் இல்லையானால் அரிசியை ஒரு தட்டில் குவித்து அதன் மீது ஒரு கொட்டைப் பாக்கை வைத்து, பதினாறு உபசாரங்கள் செய்து பூஜை செய்கின்றனர். அதர்வசீர்ஷ மந்திரத்தை 21 முறை ஜபிக்கிறார்கள். சந்திரனுக்கு நைவேத்தியம் (அர்க்கியம்) சமர்ப்பணம் செய்து, வானை சோக்கி சந்தனம், புஷ்பம், அக்ஷதையை அளித்து விட்டு, நமஸ்காரம் செய்கின்றனர். சதுர்த்தியன்று அர்க்கியத்தைத் தாமிரப் பாத்திரத்தில் அர்ப்பணம் செய்கின்றனர். இறுதியில் மஹா நைவேத்தியம் செய்துவிட்டு உண்கின்றனர். இந்த விரதத்தின் தேவதைக்கு விக்ன விநாயகர் என்று பெயர்.

 

அங்காரகி

செவ்வாய் கிழமைகளில் வரும் சதுர்த்திக்கு அங்காரகி என்று பெயர். அங்காரகன் என்றால் மங்களகிரகம் அதாவது செவ்வாய் கிரகம். பூமியைப் போல, செவ்வாய் கிரகத்திலும் கணேசரின் ஆதிபத்யம் உண்டு. கணபதி, செவ்வாய் இருவர் நிறமும் ஒன்றே.

செவ்வாய் கிழமையன்று கணேசரின் அதிர்வலைகள் மிக அதிகமான அளவில் பூமிக்கு வருகின்றன. அதே போல மங்கள கிரகத்திலிருந்தும் (செவ்வாயிலிருந்தும்) அதிக அளவில் அதிர்வலைகள் பூமிக்கு வருகின்றன. அதனாலேயே சந்திரனிலிருந்து ஏற்படும் அதிர்வலைகள் அதிக அளவில் நாசமடைகின்றன. எனவே, அங்காரக சதுர்த்தியின் பலன் ஆண்டு முழுவதும் செய்யும் விநாயகி மற்றும் சங்கடஹர சதுர்த்தி பூஜைக்கு சமமாக உள்ளது.

அங்காரகி விரதம் மற்ற விரதங்களைப் போல் அல்லாமல், இரவும் பகலும் விரதம் இருப்பது; ஐந்துபொழுது (ஜாமம்) விரதம் என்ற வகையில் அனுஷ்டிக்கப்படுகிறது. பகலில் நான்கு ஜாமங்களும், இரவில் ஒன்றுமாக ஐந்து ஜாமம் ஆகிறது.

சந்திரோதயத்தின்போது உணவு உண்ணப்படுகிறது. இங்கு உணவு உண்ணுதல் என்பது விரதத்தை முடிப்பதற்காக மட்டும் செய்யப்படும் காரியம் அல்ல. விரதங்களுக்கான நியமங்களில் இதுவும் ஒரு முக்கியமான நியமமாகிறது.

தகவல் : ஸனாதனின் தமிழ் கையேடு ‘கணபதி’

Leave a Comment