ஆபத்துக் காலத்தில் உயிருடன் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாகம் – 3

ஆபத்துக் காலத்தில் எவ்வாறு உயிர்வாழ்வது என்பது
குறித்த வழிகாட்டுதலை ஸனாதன் ஸன்ஸ்தா வழங்குகிறது!

பாகம் – 2 படிப்பதற்கு இங்கு க்ளிக் செய்யவும் – ஆபத்துக் காலத்தில் உயிருடன் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாகம் – 2

பராத்பர் குரு (டாக்டர்) ஜெயந்த் ஆடவலே அவர்கள் மட்டுமே
ஆபத்துக் காலங்களில் மனிதர்கள் வாழ்வதற்கு வழி காட்டும்
ஒரே தொலைநோக்கு பார்வை கொண்டவர் !

வெள்ளம், பூகம்பம், மூன்றாவது மகாயுத்தம், கொரோனா விஷத்தொற்று போன்ற ஆபத்துக்கால கஷ்டங்களை கடந்து செல்ல செய்ய வேண்டிய முன்தயாரிப்பு பற்றிய இந்த கட்டுரைத் தொகுப்பின் முதல் கட்டுரையில், மண் அடுப்பு, கோபர்-காஸ் போன்றவற்றைப் பற்றிய விஷயங்களைத் தெரிந்து கொண்டோம். இரண்டாவது கட்டுரையில் காய்கறி, கனிவகைகளின் தோட்டம் போடுவதைப் பற்றிய விஷயங்களைத் தெரிந்து கொண்டோம்.

இந்தக் கட்டுரையில் நீண்ட காலம் இருக்கக் கூடிய பதார்த்தங்கள் பற்றிய விவரங்கள் உள்ளன. ஆபத்துக்காலத்தில் மற்ற காலங்களைப்  போன்று சிற்றுண்டி அல்லது மதிய உணவு சமைக்க முடியாமல் போகலாம். அப்போது பட்டினி கிடைக்காமல் இருப்பதற்கு வீட்டில் முன்பே நீண்ட காலம் இருக்கும்படியான பதார்த்தங்களை செய்து வைத்துக் கொள்வது உபயோகமாக இருக்கும்.

1.    ஆபத்துக் கால கண்ணோட்டத்தில் தினசரி அளவில்
செய்ய வேண்டிய முன்தயாரிப்புகள்!

1 அ. நீண்ட காலம் கெடாமல் இருக்கக் கூடிய பல்வேறு
உணவுப் பண்டங்களை வெளியிலிருந்து வாங்கியோ அல்லது
வீட்டிலேயே தயார் செய்தோ வைக்கலாம்

ஆபத்துக்காலத்தில் சமையல் எரிவாயுவின் தட்டுப்பாடு ஏற்படலாம், வீட்டில் அனைவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருக்கலாம், திடீரென்று வேறு இடத்திற்கு குடிபெயர்வதாக இருக்கலாம், மார்க்கெட்டில் காய்கறிகள் கிடைக்காமல் போகலாம், இது போன்ற சூழ்நிலைகள் ஏற்படலாம். அந்த சமயத்தில் தினசரி போலவே சிற்றுண்டி மற்றும் மதிய உணவு தயாரிப்பது முடியாமல் போகலாம். இது போன்ற சமயங்களில் வீட்டில் தயாரித்து பதப்படுத்தப்பட்ட உணவுகள் இருந்தால் உதவியாக இருக்கும்.

அ. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சில உணவுப் பண்டங்கள் (உதா. காக்ரே, ஊறுகாய், பழரசங்கள்) கடைகளிலும் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி வைத்துக் கொள்ளலாம். வீட்டிலும் இவற்றைத் தயாரிக்கும் வழக்கத்தை இப்போதிலிருந்தே துவங்கலாம். ஏனென்றால் வரக்கூடிய ஆபத்துக்காலத்தில் அதன் தீவிரம் எந்த அளவு அதிகரிக்கிறதோ அந்த அளவு கடைகளிலும் பொருட்கள் கிடைப்பது கடினமாக ஆகும்.

ஆ. கீழே கொடுக்கப்பட்ட உணவுப் பண்டங்களின் விவரங்கள் அதிகபட்சம் மகாராஷ்ட்ர மாநிலத்தை சேர்ந்தது. வாசகர்கள் அவரவர் மாநிலம் அல்லது தேசத்தைப் பொருத்து அதிக காலம் நீடிக்கக் கூடிய உணவுப் பண்டங்களை வாங்கி வைத்துக் கொள்ளலாம், அல்லது வீட்டில் தயாரிக்கலாம்.

இ. நாங்கள் இந்த உணவுப் பண்டங்களை எவ்வாறு தயாரிப்பது என்பது பற்றி அதிகம் கூறவில்லை. இவ்விஷயம் பலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். அதனால் ஆபத்துக்காலத்தைக் கருத்தில் கொண்டு பல இடங்களில் உணவுப் பண்டங்களை எப்படி அதிக காலம் நீடித்திருக்கச் செய்வது என்பது பற்றி கூறப்பட்டுள்ளது.

அதிக காலம் நீடித்திருக்கும் உணவுப் பண்டங்களை எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி வாசகர்கள் சிலருக்கு தெரியவில்லை என்றால் வீட்டிலுள்ள பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் அல்லது சமையல் புத்தகங்களைப் படிக்கலாம் அல்லது இது சம்பந்தமாக யூ-ட்யூப் சானலைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

ஈ. உணவுப் பண்டங்களின் சராசாரி கால அளவும் புத்தகங்களில் கொடுக்கப்பட்டிருக்கும். இந்தக் கால அளவு அந்தந்த பிரதேசம், சீதோஷ்ணம், உணவுப் பண்டத்தை தயாரிக்கும் முறை ஆகிய விஷயங்களையும் பொருத்து அமையும்.

1 ஆ. அரிசி மற்றும் ராகி மாவு, பால் பவுடர் போன்றவை

அரிசி மற்றும் ராகி மாவு : இந்த மாவுகளில் ராகி மாவு அதிக போஷாக்கு நிறைந்தது.

ராகி மாவு

அரிசியை 3 -4 தண்ணீரில் ஊற வைத்து பிறகு வடிகட்டி விடவும். சாதாரணமாக ஒரு மணி நேரத்தில் அரிசி உலர்ந்து விடும். பிறகு சிறிது சிறிதாக அரசியை எடுத்து மத்யம தீயில் வறுத்து எடுக்கவும். ஒரு தரத்திற்கு சிறிதளவே வறுப்பதால் அரிசி நன்கு மலர்ந்து பொரியும். இறுதியில் எல்லா அரிசியையும் மாவாக திரித்து காற்றுப் புகாத பாத்திரத்தில் போட்டு வைக்கவும். இந்த மாவு சாதாரணமாக 3 மாதங்கள் நன்றாக இருக்கும். இதை பால், தயிர், மோர் அல்லது ரசத்துடன் கலந்து உட்கொள்ளலாம். பாலில் கலக்கும்போது சுவைக்கு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.

அரிசி மாவு செய்யும் அதே முறையில் ராகி மாவையும் செய்து கொள்ளலாம். ராகி மாவும் சாதாரணமாக 3 மாதங்கள் நீடிக்கும்.

1 இ. சத்துமாவு

அ. கோதுமை/பார்லி மாவு

கோதுமை மாவு

கோதுமையை தண்ணீரில் களைந்து உலர்த்தவும். சாதாரணமாக 1 மணி நேரத்தில் நன்கு உலர்ந்து விடும். பிறகு சிறிது வறுத்தெடுத்துக் கொள்ளவும். இதோடு பொட்டுக்கடலை, சீரகம் சேர்த்து மாவு செய்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் கஞ்சி மாவு செய்யும் வழக்கம் உள்ளது. இதற்கு, கோதுமை, ராகி, பயத்தம்பருப்பு ஆகியவற்றை வறுத்து பொட்டுக்கடலை, ஏலக்காய் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்வார்கள். இந்த மாவை தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து பின் பால் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து பருகலாம். இந்த மாவும் 3 மாதங்கள் வரை நீடிக்கும்.

சத்துமாவு செய்யும் வழக்கம் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடலாம். சில இடங்களில் கோதுமைக்கு பதிலாக பார்லி உபயோகிக்கும் வழக்கமும் உள்ளது. ஐந்தாறு தானியங்களை சேர்த்து செய்யும் வழக்கமும் உள்ளது.

– திருமதி க்ஷமா ராணே, ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா. (பிப்ரவரி 2020)

ஆ. கோதுமை அல்லது ராகி சத்துமாவு 

சத்துமாவு கூழ்

கோதுமை அல்லது ராகியை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். பின் சிறிதே தண்ணீர் விட்டு அரைக்கவும். அந்த பிசுக்கான மாவை வடிகட்டிக் கொள்ளவும். இதை முழுவதும் உலர விடவும். இதுவே சத்துமாவு. இது மிகவும் போஷாக்கானது.இதை தண்ணீர் அல்லது பாலில் கலந்து கொதிக்க விட்டு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து பருகலாம். இது சாதாரணமாக 3 மாதங்கள் நீடிக்கும்.

– திருமதி அர்பிதா தேஷ்பாண்டே, ஸனாதன் ஆச்ரமம், மீரஜ், மகாராஷ்ட்ரா. (பிப்ரவரி 2019)

1 ஈ. இயந்திரங்கள் மூலமாக தயாரிக்கப்படும்
போஷாக்கான உணவுப் பண்டங்கள்

பால் பவுடர், சிறு குழந்தைகளுக்கு பல்வேறு போஷாக்கு அடங்கிய லாக்டோஜன், செர்லாக் ஆகியவற்றையும் வாங்கி வைத்துக் கொள்ளலாம். இவற்றை நோயாளிகள் வயதானவர்கள் ஆகியோர் முழு உணவாகவும் பயன்படுத்தலாம். அயல்நாட்டு இனமான ஜெர்சி பசுவின் பால் உடலுக்கு கேடு விளைவிக்கும். இது பரிசோதனைகளாலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.  அதனால் தேசீய பசுக்களின் பால் பவுடர் கிடைத்தால் அதற்கு அதிக முக்கியத்துவம் தரலாம்.

1 உ. வெயிலில் காய வைத்து எடுத்த பாக்ரி,
வெல்ல சப்பாத்தி போன்ற உணவுப் பண்டங்கள்

1 உ 1. ஜாவர் (மக்காச்சோளம்) மற்றும் பாஜ்ரா (தினை) பாக்ரி

ஜாவர் பாக்ரி

இந்த பாக்ரி செய்வதற்கு முன்பு மாவில் சுவைக்காக மிளகாய்ப் பொடி, உப்பு, பெருங்காயம் சேர்த்து பிசைந்து கொள்ளலாம்.

அ. மக்காச்சோள மாவால் மெலிதான பாக்ரி செய்து வெயிலில் நன்கு உலர்த்தி எடுக்கவும். இவை ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.

ஆ. தினை மாவைக் கொண்டு மெலிதான பாக்ரி செய்து அதேபோல் வெயிலில் நன்கு உலர்த்தி எடுக்கவும். இவை மக்காச்சோள பாக்ரியைக் காட்டிலும் சுவை மிகுந்தது. 2 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.

வெயிலில் உலர்ந்த பாக்ரியை காற்றுப் புகாத டப்பாக்களில் சேமிக்கலாம். இவற்றை துண்டு செய்து சூடான சப்ஜியுடன் உண்ணலாம்.

1 உ 2. வெல்லப்போளி

வெல்லப்போளி

சப்பாத்திக்குள் வெல்லப் பூரணத்தை வைத்து கல்லில் நன்கு சுட்டு எடுக்கவும். பிறகு நன்கு குளிர விடவும். போளிகள் சூடாக இருக்கும்போது ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கக் கூடாது. போளிகள் குளிர்ந்த பின் காற்றுப் புகாத டப்பாக்களில் போட்டு வைக்கவும். இவை ஒரு மாதத்திற்கு மேல் நன்றாக இருக்கும்.

1 உ 3. காக்ரா (உலர்ந்த கரகரப்பான மசாலா ரோட்டி)

காக்ரா

வெந்தயம், சீரகம், மாங்காய்ப் பொடி, மசாலாப் பொடி  ஆகியவற்றைக் கலந்து இந்த மசாலா காக்ராவை செய்யலாம். வேண்டிய மசாலாக்கள் சேர்த்து கோதுமை மாவை நன்கு கெட்டியாக பிசையவும். மிக மெலிதான ரொட்டிகளாக இடவும். கல்லில் மிக மெல்லிய தீயில் சுடும்போது பருத்தித் துணியால் ரொட்டியை ஒத்தி எடுக்கவும். அதை உப்ப விடக் கூடாது. பிறகு ரோட்டி நன்கு குளிர வேண்டும். இது காக்ரா எனப்படும். காக்ரா முழுவதும் குளிர்ந்த பிறகு அவற்றைக் காற்றுப் புகாத டப்பாக்களில் போட்டு வைக்கவும். இவை 3 மாதங்கள் வரை நன்றாக இருக்கும்.

1 உ 4. கோதுமை லட்டு மற்றும் சிறு தானிய லட்டு

கோதுமை லட்டு

கோதுமை மாவு மற்றும் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்த லட்டு ஓரிரு மாதங்கள் நன்றாக இருக்கும். ராகி லட்டு, பொட்டுக்கடலை லட்டு, பச்சைப்பயறு லட்டு போன்றவையும் ஓரிரு மாதங்கள் நன்றாக இருக்கும்.

1 உ 5. காய்ந்த மாம்பழம் மற்றும் பலாப்பழ போளிகள்

பலாப்பழ போளிகள்

இவற்றை வெயிலில் நன்கு உலர்த்த வேண்டும். வெந்நீரை இந்த காய்ந்த மாம்பழப் போளியில் சேர்க்கும்போது அது ஜாம் போல் ஆகிறது. அதை ரொட்டியுடன் சேர்த்து உண்ணலாம். இந்த காய்ந்த பழத் துண்டுகளை காற்றுப் புகாத பாட்டில்களில் அடைத்து வைக்கும்போது அவை ஒரு வருடம் கூட நன்றாக இருக்கும்.

– பூஜ்ய (வைத்திய) வினய் பாவம் ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா. (ஜனவரி 2020)

1 உ 6. மாங்காய்க் கூழ்

மாங்காய்க் கூழ்

1.   மாங்காய்க் கூழ் மற்றும் சர்க்கரையை சமமான அளவு கலந்து வெயிலில் முழுவதும் உலரும்படி காய வைக்கவும். இந்த காய்ந்த கலவையை குளிர்பதனப் பெட்டியில் வைத்தால் ஒன்றரை முதல் இரு வருடங்கள் வரை நன்றாக இருக்கும். வெளியில் வைத்தால் ஒரு வருடம் வரை நன்றாக இருக்கும்.

2.   சரிசமமான அளவு மாங்காய்க் கூழ் மற்றும் சர்க்கரையைக் கலந்து அடுப்பின் மீது வைத்து கெட்டியாகும் வரைக் கிளறவும். இது குளிர்பதனப் பெட்டியில் ஒரு வருடம் வரை நன்றாக இருக்கும். (வெளியில் வைத்தால் ஃபங்கஸ் உருவாகலாம்.)

1 உ 7. பதப்படுத்திய மாம்பழம், மாங்காய் இனிப்பு-கார தொக்கு

பதப்படுத்திய மாம்பழ தொக்கு

தேவையான அளவு சர்க்கரை அல்லது வெல்லப் பாகு, பழக் கூழுடன் சேர்க்கப்படுகிறது. அது கெட்டியாகும் வரை அடுப்பில் வைத்துக் கிளற வேண்டும். இதன் மூலம் அதில் தண்ணீர் முழுவதும் ஆவியாகி நெடுங்காலம் நீடிக்கும். கெட்டிப் பாகு வைத்துக் கலப்பதால் இதில் ப்ரிசர்வேடிவ்ஸ் சேர்க்கத் தேவையில்லை.

1 உ 8. ஜாம்

பழுத்த அல்லது பழுக்காத மாம்பழங்களை உபயோகித்து மாம்பழ ஜாம் அல்லது பதப்படுத்திய மாம்பழம் செய்யலாம். இவை ஒரு வருடம் வரை நன்றாக இருக்கும்.

1 உ 9. மாங்காய்த் தொக்கு

மாங்காயைத் துருவி பல்வேறு மசாலாக்கள் சேர்த்து தொக்கு செய்து அதை 15-20 நாட்கள் வரை கடும் வெயிலில் வைக்க வேண்டும். இது பல வருடங்கள் நன்றாக இருக்கும்.

1 உ. 10. நெல்லிக்காய், மாங்காய், ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு போன்றவற்றை உபயோகித்து ஜெல்லி அல்லது ஜாம்

ஜெல்லி மற்றும் ஜாம்

இவை ஒரு வருடம் வரை நன்றாக இருக்கும்.

–  திருமதி அர்பிதா தேஷ்பாண்டே, ஸனாதன் ஆச்ரமம், மீரஜ், மகாராஷ்ட்ரா. (பிப்ரவரி 2019)

1 உ 11. வெகு காலம் இருக்கக் கூடிய உணவுப் பண்டங்களை வாங்குங்கள் அல்லது தயார் செய்யுங்கள்

ஊறுகாய் மற்றும் சாஸ்

ஊறுகாய்

மாங்காய் ஊறுகாய்

அ. வீட்டில் செய்த ஊறுகாய் வெகு காலம் நீடிக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

வீட்டில் தயாரிக்கும் ஊறுகாய்களை கீழே கூறியுள்ளபடி எச்சரிக்கையுடன் செய்தால் நெல்லிக்காய், மிளகாய், பச்சை மஞ்சள் கிழங்கு ஊறுகாய் போன்றவை 1-2 வருடங்கள் வரை நன்றாகவே இருக்கும். வேக வைத்த எலுமிச்சை சேர்க்கப்பட்ட ஊறுகாய்கள் 4-5 வருடங்கள் கூட நன்றாக இருக்கும். எலுமிச்சை ஊறுகாய் ஒரு நோயாளியின் நாக்கு ருசியை விழிப்படையச் செய்கிறது. எவ்வளவு பழையதாக உள்ளதோ அவ்வளவு சுவையும் கூடுதலாக இருக்கும்.

அ 1. கைகளை நன்கு கழுவி பின் துடைத்துக் கொள்ள வேண்டும். ஊறுகாய் செய்யத் தேவையான மாங்காய், எலுமிச்சை, நெல்லிக்காய், பச்சை மஞ்சள் கிழங்கு, மிளகாய் ஆகியவற்றை நன்கு கழுவி, ஈரம் போகத் துடைத்து உலர்த்த வேண்டும்.

ஊறுகாய் செய்யத் தேவையான மிளகாய்ப் பொடி, கல்லுப்பு ஆகியவற்றையும்  நன்கு வறுத்துக் கொள்ளவும். அப்போது அவற்றிலுள்ள ஈரத்தன்மை முழுவதும் நீங்கும். (அயோடைஸ்ட் உப்பைக் காட்டிலும் கல்லுப்பு சிறந்தது. அயோடைஸ்ட் உப்பில் ஈரத்தன்மை அதிகம்.) ஊறுகாயுடன் சர்க்கரை சேர்க்க வேண்டுமென்றால் அதுவும் ஈரத்தன்மை இல்லாமல் உலர்ந்து இருக்க வேண்டும். ப்ரிசர்வேடிவ்ஸ் தேவையானால் சேர்க்கவும்.

அ 2. ஊறுகாய்களை பீங்கான் ஜாடிகள் அல்லது கெட்டியான கண்ணாடி ஜாடிகளில் போட்டு வைக்கவும்.

அ 3. ஜாடிகளில் ஊறுகாயைப் போட்ட பின்னர் அதன் மேல்பரப்பில் கல்லுப்பை தூவவும்.

அ 4.ஊறுகாயின் மேற்பரப்பில் ஃபங்கஸ் உருவாகாமல் தடுக்க எண்ணெயை நன்கு காய வைத்து குளிர வைக்கவும். பின் இந்த குளிர்ந்த எண்ணெயை இரண்டு விரற்கடை அளவு ஊறுகாயின் மேற்பரப்பில் ஊற்றவும்.

அ 5. ஜாடியின் வெளிப்புறத்தை சுத்தமான துணியால் துடைத்து பின் இறுக்கி மூடவும். சுத்தமான பருத்தித் துணியை மூடியின் மேல் சுற்றி ஒரு நாடாவால் கட்டவும்.

அ 6. ஊறுகாய் ஜாடிகளை உலர்ந்த இடத்தில் வைக்கவும். முன்பெல்லாம் ஊறுகாய் ஜாடிகளை அலமாரியின் மேல்தட்டில் அல்லது பூஜை அறையில் வைக்கும் வழக்கம் இருந்தது.

அ 7. முக்கிய பெரிய ஊறுகாய் ஜாடிகளை தினமும் கையாளக் கூடாது. ஒரு வாரத்திற்கு தேவையான அளவு வேறு சிறு பாட்டிலில் போட்டு வைக்கவும். எப்போது தேவையோ அப்போது மறுபடியும் நிரப்பிக் கொள்ளலாம். முடிந்தவரை குளித்த பின்னரே முக்கிய ஜாடியில் இருந்து ஊறுகாயை எடுத்து நிரப்ப வேண்டும். ஊறுகாய் எடுக்க உபயோகிக்கும் நீளமான ஸ்பூன், சிறிய பாட்டில் மற்றும் அந்த நபரின் கைகள் ஆகியவை உலர்ந்து சுத்தமாக இருக்க வேண்டும். ஊறுகாயை எடுத்த பின்னர் ஜாடியின் வெளிப்புறத்தை உலர்ந்த துணியால் சுத்தமாகத் துடைத்து பின் முன்பு போல் மூடவும்.

அ 8. மாதவிடாய் நாட்களில் பெண்கள் அந்த முக்கிய ஜாடியைத் தொடக் கூடாது. க்ரஹண நாட்களிலும் தொடக் கூடாது. கரையோர இடங்களில் அதிக ஈரப்பதம் இருப்பதன் காரணமாக ஊறுகாய் மேல் ஃபங்கஸ் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் வெப்பமான, உலர்ந்த பகுதிகளைக் காட்டிலும் இது போன்ற இடங்களில் ஊறுகாய் விரைவில் கெட வாய்ப்புண்டு.

– திருமதி அர்பிதா தேஷ்பாண்டே, ஸனாதன் ஆச்ரமம், மீரஜ், மகாராஷ்ட்ரா. (பிப்ரவரி 2019) மற்றும் திரு. பிரசாத் மைச்கர், ரத்னகிரி, மகாராஷ்ட்ரா. (8.8.2019)

1 உ 12. தக்காளி சாஸ்

தக்காளி சாஸ்

வினிகர் உபயோகப்படுத்தாத தக்காளி சாஸை குளிர்பதனப் பெட்டியில் ஒரு வருடம் வரை உபயோகிக்கலாம். வினிகர் சேர்த்த தக்காளி சாஸ் சாதாரண தட்பவெட்ப நிலையில் ஆறு மாதங்களும் குளிர்பதனப் பெட்டியில் ஒன்று முதல் ஒன்றரை வருடங்கள் வரை நன்றாக இருக்கும்.

1 உ 13. சட்னிகள், பொடிகள்

மாங்காய், நெல்லிக்காய் மற்றும் புளி ஆகியவற்றின் ஈர சட்னிகள்

அ. மாங்காய் சட்னி

மாங்காய் சட்னி

கம்பிப் பதத்தில் கெட்டி சர்க்கரை பாகு வைத்துக் கொள்ளவும். அதில் தேவையான மசாலாக்கள் மற்றும் துருவிய மாங்காயை சேர்த்து சட்னி செய்யவும். இந்த சட்னியை அரை பழுத்த மாங்காய் உபயோகித்தும் செய்யலாம். சர்க்கரைக்கு பதிலாக வெல்லப் பாகு சேர்த்தும் செய்யலாம்.

ஆ. நெல்லிக்காய் சட்னி

நெல்லிக்காய் சட்னியும் மாங்காய் சட்னி போலவே செய்யலாம்.

இ. புளி சட்னி

அரை மணி நேரத்திற்கு புளியை ஊற வைத்து அதை பிழிந்தெடுத்துக் கொள்ளவும். கெட்டி சர்க்கரைப் பாகு அல்லது வெல்லப் பாகு வைத்து அதில் புளித் தண்ணீர், மிளகாய்ப் பொடி, உப்பு, சிறிது கருப்பு மிளகு மற்றும் தனியா-சீரகப் பொடி சேர்த்து கொதிக்க விட வேண்டும். எல்லாம் நன்றாக ஒன்று சேர்ந்த பின்னர் அடுப்பை அணைக்கவும்.

இந்த சட்னிகளை குளிர வைத்து கண்ணாடி ஜாடிகளில் அடைத்து வைக்கவும். குளிர்பதனப் பெட்டியில் வைத்தால் ஒன்றரை வருடங்கள் நன்றாக இருக்கும்; இல்லையேல் ஒரு வருடத்திற்கு வரும்.

– திருமதி அர்பிதா தேஷ்பாண்டே, ஸனாதன் ஆச்ரமம், மீரஜ், மகாராஷ்ட்ரா. (பிப்ரவரி 2019)

1 உ 14. வடகம், பப்படம்

இவை ஒரு வருடத்திற்கு நன்றாக இருக்கும்.

1.   வடகத்தில் பல வகைகள் உள்ளன.

வடகம்

அ. தர்ப்பூஸ் பழத்தின் வெள்ளை மற்றும் பச்சை நிறப் பகுதியைக் கொண்டு வடகம் செய்யப்படுகிறது; சுரைக்காய், வெள்ளை பூசணி, பப்பாளி, கோஸ் மற்றும் சோயா பீன்ஸ் ஆகிய காய்கறிகளைக் கொண்டும் வடகம் தயாரிக்கப்படுகிறது.

ஆ. சர்க்கரைவள்ளிக் கிழங்கு, உப்ப வைத்த மக்காச் சோளம் ஆகியவற்றைக் கொண்டும் தயாரிக்கப்படுகிறது.

இ. பச்சைப் பயறு, கருப்பு உளுந்து, கொண்டைக்கடலை ஆகியவற்றை தனியாகவோ அல்லது சேர்த்தோ வடகம் செய்யலாம்.

ஈ. காராமணி, முழு உளுந்து சரிசமமாக எடுத்து ஊற வைத்து உப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்த்து சிறிது கொரகொரவென அரைத்து இதை வடகமாகப் போடலாம். தமிழ்நாட்டில் இந்த வடகத்தை தாளித்து குழம்பு வைக்கும் வழக்கம் உள்ளது.

வடகத்தை காயாகவும் வேக வைக்கலாம். சுரைக்காய், பூசணி வடகத்தில் உப்பு சேர்க்கக் கூடாது. உப்பு சேர்த்தால் அதை வேக வைப்பது கடினம். வடகத்தை பொரித்து உணவுடன் உட்கொள்ளும்போது அதில் உப்பு சேர்க்கலாம்.

– திருமதி சாயா விவேக் நஃடே, ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா. (மே 2020)

2.   துருவிய கிழங்கு வகைகள் : துருவிய சேனை மற்றும் உருளைக்கிழங்கு

3.  பப்படம் : கருப்பு உளுந்து, பச்சைப் பயறு, அரிசி, ராகி, அவல் மற்றும் பலாப்பழக் கூழ் ஆகியவற்றை உபயோகித்து பப்படம் செய்யலாம்.

பப்படம்

4.   சிறு பப்படம் : மக்காச் சோளம், அரிசி, ஜவ்வரிசி அல்லது உருளைக்கிழங்கு உபயோகித்து சிறு பப்படம் செய்யலாம். கோதுமை முறுக்கு செய்து அதை காய வைத்து உபயோகிக்கலாம்.

–  திருமதி  சாயா விவேக் நஃடே, ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா. (மே 2020)

5.   மோர் மிளகாய் செய்து அல்லது மிளகாய்க்குள் மசாலா ஜவ்வரிசி அடைத்து வெயிலில் உலர்த்தி உபயோகிக்கலாம்.

–  திருமதி அர்பிதா தேஷ்பாண்டே, ஸனாதன் ஆச்ரமம், மீரஜ், மகாராஷ்ட்ரா. (பிப்ரவரி 2019)

6.   பலாப்பழ விதைகள்

1 உ 15. தாகம் மற்றும் ஓரளவு பசியைத் தணிக்கும் பானங்கள்

அ. எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் சாத்துக்குடி அடர்த்தியான பழச்சாறுகள்

சமமான அளவு சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து ஒரு கண்ணாடி ஜாடியிலிட்டு சர்க்கரை கரையும்வரை வெயிலில் வைக்கவும். வெப்பத்தின் அளவைப் பொருத்து சாதாரணமாக சர்க்கரை முழுவதும் கரைவதற்கு 15 முதல் 30 நாட்கள் ஆகும். ஆரஞ்சு மற்றும் சாத்துக்குடி அடர்த்தியான பழச்சாறுகளையும் இதுபோன்றே தயாரிக்கலாம். இவை குளிர்பதனப் பெட்டியில்லாமலேயே 2-3 ஆண்டுகள் நீடிக்கும். குளிர்பதனப் பெட்டியில் வைத்தால் அதன் சுவை மாறி விடும். அதனால் வைக்கத் தேவையில்லை.

1 உ 16. ஆம் பன்னா (மாங்காய் அடர்த்தி பழச்சாறு)

மாங்காயை தண்ணீரில் கொதிக்க வைத்து அதன் கதுப்பை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து பழச்சாறை தயாரிக்க வேண்டும். இதை கண்ணாடி பாட்டிலில் நிரப்பி குளிர்பதனப் பெட்டியில் வைக்கலாம். இது 12 முதல் 18 மாதங்கள் வரை நன்றாக இருக்கும். மகாராஷ்ட்ராவின் கொங்கன் பகுதியில் ‘கோகம் பழச்சாறு பிரபலமானது. அதேபோல் அந்தந்த மாநிலத்தில் கிடைக்கும் பழங்களுக்கு ஏற்ப இவற்றைத் தயாரிக்கலாம்.

–  திருமதி அர்பிதா தேஷ்பாண்டே, ஸனாதன் ஆச்ரமம், மீரஜ், மகாராஷ்ட்ரா. (பிப்ரவரி 2019)

1 உ 17. சத்துகள் அடங்கிய பிஸ்கட், 5 வருட காலம் நீடிக்கும் சாக்லேட்டுகள், உலர்ந்த பழங்கள் ஆகியவை.

ஆபத்துக் காலத்தில் திடீரென்று இடம்பெயர வேண்டியிருக்கும். அல்லது ஒரு புதிய இடத்தில் இருக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படலாம். இது போன்ற சமயங்களில் உணவு கிடைக்காமல் போகலாம். இது போன்ற தருணங்களில் மேற்கூறிய உணவுப் பண்டங்கள் கைகொடுக்கும்.

நான்காம் பகுதியைப் படிப்பதற்கு இங்கு க்ளிக் செய்யவும் – ஆபத்துக் காலத்தில் உயிருடன் எடுக்க செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாகம் – 4

தகவல் : ஸநாதனின் வெளிவரவிருக்கும் நூல் தொகுப்பு – ‘ஆபத்துக் காலத்தில் உயிருடன் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்’

(Copyright : Sanatan Bharatiya Sanskruti Sanstha)

Leave a Comment