ஆபத்துக் காலத்தில் உயிருடன் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாகம் – 9

ஆபத்துக் காலத்தில் எவ்வாறு உயிர்வாழ்வது என்பது
குறித்த வழிகாட்டுதலை ஸனாதன் ஸன்ஸ்தா வழங்குகிறது!

பராத்பர் குரு (டாக்டர்) ஜெயந்த் ஆடவலே அவர்கள் மட்டுமே
ஆபத்துக் காலங்களில் மனிதர்கள் வாழ்வதற்கு வழி காட்டும்
ஒரே தொலைநோக்கு பார்வை கொண்டவர் !

பராத்பர் குரு (டாக்டர்) ஜெயந்த் ஆடவலே

3. ஆபத்துக் காலங்களுக்கு ஏற்ற
ஸ்தூல நிலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

3 ஏ. மருத்துவர்கள், வைத்தியர்கள், மருத்துவமனைகள்
போன்றவற்றின் உதவி  கிடைக்காது என்ற நிலையை கருத்தில் கொண்டு உடல்நலம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.

3 ஏ 1. ஆபத்துக் காலங்கள் வருவதற்கு முன்பு குடும்பத்திற்கு தேவையான மருந்துகளை போதுமான அளவு கையிருப்பில் வைத்துக் கொள்ளுதல்

பூகம்பங்கள், வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகளின் போது, போக்குவரத்து அமைப்புகள் நிலைகுலைந்து, மருந்துகள் மற்றும் பிற தேவையான பொருட்களை வாங்குவது கடினமாகிவிடும். போரின் போது, மருந்துகளின் இருப்பு, முன்னுரிமை அடிப்படையில் இராணுவத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இது மருந்துகளின் பற்றாக்குறையை உருவாக்குகிறது. எனவே, ஆபத்துக் காலங்கள் வருவதற்கு முன்பு குடும்பத்திற்குத் தேவையான மருந்துகளை வாங்குவது மிகவும் முக்கியம். ஒரு மருத்துவர் அல்லது ஒரு வைத்தியரை  அணுகி, நோய்களுக்கான பொதுவான மருந்துகள் யாவை, அவற்றை எந்த விகிதத்தில் வாங்க வேண்டும், எதிர்காலத்தில் பொதுவான நோய்களுக்கு சிகிச்சையளிக்க எந்த மருந்துகளை வாங்க வேண்டும் போன்றவற்றைக் கண்டறியவும்.

தினசரி வாழ்க்கையில் எளிய நோய்களுக்கு சிகிச்சையளிக்க சந்தையில் எளிதில் கிடைக்கும் ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி மருந்துகளின் பயன்பாடு பற்றிய தகவல்கள் ஸனாதனின் நூல் தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளன – ‘ஆபத்துக் காலங்களில் எவ்வாறு உயிர்வாழ்வது’ ஸனாதன் சில ஆயுர்வேத மருந்துகளை தயாரிக்கத் தொடங்கியுள்ளது, அவை விரைவில் அனைவருக்கும் கிடைக்கும்.

3 ஏ 2. மருத்துவ தாவரங்களை வளர்ப்பது

ஆபத்துக் காலங்களில் மருந்துகளின் பற்றாக்குறையை எதிர்பார்த்து, நம் வீட்டு மொட்டை மாடி மற்றும் முற்றத்தில், பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயனுள்ள ஆயுர்வேத மருத்துவ தாவரங்களை வளர்க்கலாம். இது மருந்துகள் கிடைக்காததால் ஏற்படும் அவதியை தடுக்கும். (ஸனாதனின் நூல்களில் தாவரங்களின் சாகுபடி பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது – ‘கைவசம் உள்ள இடத்திற்கு ஏற்ப மருத்துவ மூலிகைகள் வளர்த்தல்’ மற்றும் ‘மருத்துவ தாவரங்களை வளர்ப்பது எப்படி?’)

3 ஏ 3. உங்கள் பகுதியில் உடனடியாகக் கிடைக்கும் மருத்துவ தாவரங்களின் பயன்பாடு பற்றி நிபுணர்களிடமிருந்து அறிந்து அவற்றைப் பயன்படுத்த முயற்சிக்கவும்

ஆடாதோடை, துளசி, வில்வம், அத்தி மரம், அரச மரம், ஆலமரம், வேப்ப மரம் போன்ற மருத்துவ தாவரங்கள் எல்லா இடங்களிலும் ஏராளமாகக் கிடைக்கின்றன. மூக்கிரட்டை, அருகம்புல், நாயுருவி, கரிசிலாங்கண்ணி போன்றவை இயற்கையாக வளரும். நிபுணர்களிடமிருந்து இந்த மருத்துவ தாவரங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், ஸனாதனின் நூல்களில் அவற்றின் பயன்களைப் படிக்கவும் – ‘தாவரங்களின் மருத்துவ மதிப்புகள்’ மற்றும் பொதுவான வியாதிகளுக்கு சிகிச்சையளிக்க இந்த தாவரங்களைப் பயன்படுத்துங்கள். வீட்டு வைத்தியம் பற்றிய தகவல்கள் ஸனாதனின் வரவிருக்கும் நூல்களில் வழங்கப்படும்.

3 ஏ 4. சிறு நோய்களுக்கு மருந்துகளைச் சார்ந்து இருப்பதற்குப் பதிலாக, இனி விரதம் இருப்பது, சூரியக் குளியல் போன்ற மருந்து இல்லாத தீர்வுகளைத் தொடங்குங்கள்.

இத்தகைய பரிகாரங்கள் ஸனாதனின் நூல் தொடரில் வழங்கப்படும் – ‘ஆபத்துக் காலத்தில் நமது உயிர்நாடி’.

3 ஏ 5. அக்குபிரஷர், வெற்றுப் பெட்டி உபாயம், மந்திர உபாயங்கள் மற்றும் பிராணசக்தி ஓட்டப் உபாயங்கள் போன்ற மருந்து இல்லாத நடவடிக்கைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்.

இந்த உபாய நடவடிக்கைகள் குறித்த நூல்களை ஸனாதன் ஸன்ஸ்தா வெளியிட்டுள்ளது. இந்த உபாய நடவடிக்கைகள் பற்றிய தகவல்களும் www.Sanatan.org  -இல் உள்ளன.

(யோகா, சுலபமான உடல் பயிற்சிகள், பிராணாயாமம், மர்மசிகிச்சை (ஆயுர்வேதத்தின் படி ஆற்றல் சிகிச்சைமுறை), நரம்பியல் சிகிச்சை, வண்ண சிகிச்சை போன்ற மருத்துவம் இல்லாத சிகிச்சை முறைகளைக் கற்று அவற்றை நடைமுறையில் பயன்படுத்தவும்.)

3 ஏ 6. நோய்வாய்ப்பட்ட பிறகு மருந்து எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, பாதிக்கப்படாமல் இருக்க இப்போதே முயற்சி செய்யுங்கள்

இந்த அம்சம் பற்றிய விளக்கம் ஸனாதனின் நூலில் வழங்கப்பட்டுள்ளது – ‘ஆயுர்வேதத்தைப் பின்பற்றுங்கள் மற்றும் மருந்துகள் இல்லாமல் ஆரோக்கியமாக இருங்கள்’.

3 ஐ. குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒருவராவது முதலுதவி பயிற்சி பெற்றிருக்க வேண்டும்

காயங்கள், இரத்தப்போக்கு, தீக்காயங்கள், மயக்கம், மாரடைப்பு போன்றவற்றுக்கு வழிவகுக்கும் விபத்துக்கள் வாழ்க்கையில் எப்போது வேண்டுமானாலும் எழலாம். பாதகமான நேரங்களில் மருத்துவர்கள் உடனடியாக கிடைக்காமல் போகலாம். எனவே, ஒரு நோயாளிக்கு இதுபோன்ற சமயத்தில் தற்காலிகமாக சிகிச்சை அளிக்க முதலுதவி பயிற்சி மிகவும் அவசியம்.

முதலுதவி பயிற்சி ஹிந்து ஜனஜாக்ருதி ஸமிதி மூலம் பல்வேறு இடங்களில் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சி வகுப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஸனாதனின் நூல் தொடர்-‘முதலுதவி பயிற்சி’ (3 பாகங்கள்) கிடைக்கின்றன.

3 ஒ. குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒருவராவது தீயணைப்பு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்

ஆபத்துக் காலத்தில், வெடிகுண்டு வெடிப்பு அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் தீ ஏற்படுதல், நெருப்பால் சூழப்படுதல் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. அச்சமயம், அரசாங்கத்தின் தீயணைப்பு படை உடனடியாக உதவிக்கு வர இயலாது. எனவே, இதுபோன்ற பிரச்சனைகளின்போது தீர்வு காண, தீயணைப்புப் பயிற்சி பெறுவது அவசியம்.

‘தீயணைப்பு போராட்டத்தின் நடைமுறை பயிற்சி’ என்ற ஸானாதனின் நூல் கிடைக்கிறது. இதைப் படித்து பயன் பெறுங்கள். தீயணைப்பு பயிற்சி வகுப்புகள் எங்கு நடத்தப்பட்டாலும் நீங்கள் கலந்து கொள்ளலாம்.

3 ஓ. உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் கலவரக்காரர்கள், குண்டர்கள் போன்றவர்களிடமிருந்து பாதுகாக்க சுய பாதுகாப்பு உத்திகளில் பயிற்சி பெறுதல்

தற்போதைய காலங்களிலும், கலவரக்காரர்கள், குண்டர்கள், கற்பழிப்பாளர்கள் போன்ற சமூக விரோதிகளால் சாமானியர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். பல நேரங்களில், ஆபத்துக் காலத்தில் அராஜகம் போன்ற சூழ்நிலை எழுகிறது. அச்சமயம், சமூக தீமைகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இதற்கு  தீர்வாக, தற்காப்பு உத்திகளில் இப்போதே பயிற்சி பெறுவது நல்லது.

சுய பாதுகாப்பு பயிற்சி வகுப்புகள் ஹிந்து ஜன ஜாக்ருதி ஸமிதியால் இலவசமாக நடத்தப்படுகின்றன. இந்த வகுப்புகள் மற்றும் ‘சுய பாதுகாப்பு பயிற்சி’ என்ற ஸனாதனின் நூலிலிருந்து பயன் பெறுங்கள்.

3 ஒள. பாதகமான காலங்களுக்கு தேவையான மற்ற மேம்பட்ட ஏற்பாடுகள்

1. நவீன மருத்துவ சாதனங்கள் அல்லது கருவிகளின் அடிப்படையில் செய்யவேண்டிய கண் அறுவை சிகிச்சை, பல் சிகிச்சை போன்றவை, ஆபத்துக் காலங்கள் வருவதற்கு முன்பே முடிக்கப்பட வேண்டும்.

2. உணவு, நீர், மின்சாரம், சமையல் எரிவாயு மற்றும் மற்ற விஷயங்கள் (உதாரணமாக, நிலக்கடலை எண்ணெய்) போன்றவற்றை சிக்கனமாக பயன்படுத்தும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

3. ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்துவதற்கு ஏற்ற உணவைக் கண்டறிந்து, அத்தகைய உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கப் பழகிக் கொள்ளுங்கள். ஆபத்துக் காலங்களில், நீங்கள் விரும்பும் அனைத்தையும் நீங்கள் பெற முடியாது; எனவே, இனிமேல் உங்கள் விருப்பு வெறுப்புகளை குறைக்கத் தொடங்குங்கள். அத்தகைய நேரங்களில் நீங்கள் கிழங்குகளை மட்டுமே சாப்பிட நேரலாம் அல்லது பசியோடு இருக்க வேண்டியிருக்கும். எனவே இதுபோன்ற அனைத்து நிகழ்வுகளையும் எதிர்கொள்ள மனதளவில் தயாராக இருங்கள்.

4. இனிமேல் கோடைகாலம், குளிர்காலம் மற்றும் பருவமழைகாலத்திற்கு ஏற்ற குறைந்தபட்ச ஆடைகளைப் பயன்படுத்தும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

5. எல்லா வசதிகளையும் மெதுவாகக் கைவிடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் (குளிப்பதற்கு வெந்நீர், தொடர்ந்து இயங்கும் மின்விசிறி, ஏர் கண்டிஷனர் இல்லாமல் தூங்க இயலாமை போன்றவை).

6. கிணற்று நீரை வாளி கொண்டு எடுப்பது, கைகளால் துணிகளை துவைப்பது, படிக்கட்டைப் பயன்படுத்தி மாடிக்கு செல்வது, குறுகிய தூரம் பயணம் செய்ய காருக்குப் பதிலாக மிதிவண்டி பயன்படுத்துவது போன்ற ஆபத்துக் காலத்திற்கு ஏற்ற உடல் செயல்பாடுகளைத் தொடங்குங்கள். சுருக்கமாக, இயந்திரங்களை நம்புவதற்கு பதிலாக தன்னை சார்ந்து இருக்க பழகிக்கொள்ள வேண்டும்.

7. ஆபத்துக் காலத்தில் கூட சுறுசுறுப்பாக இருக்க தினமும் உடற்பயிற்சி (சூரியநமஸ்காரம் செய்வது, குறைந்தது 1-2 கி.மீ நடைபயிற்சி போன்றவை), மூச்சுப் பயிற்சிகள், யோகா பயிற்சிகள் போன்றவை செய்யுங்கள்.

தகவல் : ஸனாதன் வெளியிடப் போகும் நூல் தொகுப்பு – ‘ஆபத்துக் காலத்தில் உயிருடன் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்’

(Copyright : Sanatan Bharatiya Sanskruti Sanstha) 

Leave a Comment