ஆபத்துக் காலத்தில் உயிருடன் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாகம் – 6

ஆபத்துக் காலத்தில் எவ்வாறு உயிர்வாழ்வது என்பது குறித்த வழிகாட்டுதலை ஸனாதன் ஸன்ஸ்தா வழங்குகிறது!

பாகம் – 5 படிக்க இங்கு க்ளிக் செய்யவும் ஆபத்துக் காலத்தில் உயிருடன் இருக்க செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாகம் – 5

பராத்பர் குரு (டாக்டர்) ஜெயந்த் ஆடவலே அவர்கள்
மட்டுமே ஆபத்துக் காலங்களில் மனிதர்கள் வாழ்வதற்கு
வழி காட்டும் ஒரே தொலைநோக்கு பார்வை கொண்டவர் !

1.       ஆபத்துக் காலத்தை சந்திக்கத் தேவையான
பல ஸ்தூல அளவிலான முன்னேற்பாடுகள்

1 அ. குடும்பத்திற்கு தினசரி தேவைப்படும் பொருட்கள் மற்றும் எப்பொழுதாவது தேவைப்படும் பொருட்கள் ஆகியவற்றை இன்றே வாங்க ஆரம்பியுங்கள்

ஆபத்துக் காலத்தில் இறுதி நேரத்தில் நமக்குத் தேவையான பொருட்கள் எவை என்பதைப் பற்றி சிந்திக்க இயலாது. வாசகர்கள் இப்பொருட்களை வாங்குவதற்கு சுலபமாக அவை இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. குடும்ப அங்கத்தினர்களின் எண்ணிக்கை, அவர்களின் வயது, வீட்டிலுள்ள அறைகளின் எண்ணிக்கை ஆகியவற்றை கவனத்தில் கொண்டு தேவையான பொருட்களைத் தேர்ந்தெடுத்து தேவையான அளவு வாங்கவும். இங்கு விட்டுப் போன சில பொருட்கள் உங்களின் கவனத்திற்கு வந்தால் அவற்றையும் வாங்கிக் கொள்ளவும்.

1 அ 1. தினசரி உபயோகப்படுத்தும் பொருட்கள்

பற்பசை, சவரம் செய்ய தேவையான பொருட்கள், முடி வெட்டிக் கொள்ள தேவையான பொருட்கள், குளியல் சோப் மற்றும் துணி சோப், துணிகள், தலைமுடிக்கு எண்ணெய், குங்குமம், கண்ணாடி, சீப்புகள், நகம் வெட்டும் கத்தி, மற்றொரு மூக்குக்கண்ணாடி (உபயோகப்படுத்தும் கண்ணாடி உடைந்தால்), அயர்ன் (கரித்துண்டு அயர்ன் சிறந்தது), படுக்கை விரிப்பு, போர்வைகள், துடைப்பம், கழிப்பறை சுத்திகரிக்கும் திரவம், பேனா, பென்சில், செருப்பு போன்றவை.

(இவற்றில் பற்பொடி, குளியல் சோப் (7 வாசனைகளில்), தலைமுடி எண்ணெய் மற்றும் குங்குமம் ஆகிய ஸனாதன் பொருட்கள் கிடைக்கின்றன)

1 அ 2. சமையலறை சாமான்கள்

இடுக்கிகள், அம்மி குழவி, கத்தி போன்றவை.

1 அ 3. பருவகால பொருட்கள்

அ. கோடைக்குத் தேவையானவை : கை விசிறி, குளிர்கண்ணாடி, வெயிலில் முகம் மற்றும் கழுத்தை மூடிக் கொள்ள ஸ்கார்ப் துணி, தொப்பி போன்றவை.

ஆ. மழைக்காலத்திற்கு தேவையானவை : குடை, ரெயின்கோட், மழைக்கால பூட்ஸ் போன்றவை.

இ. பனிக்காலத்திற்கு தேவையானவை : ஸ்வெட்டர், கையுறைகள், சாக்ஸ், காதுகளை மூடும்படியான தொப்பி, ஷால், மப்ளர், போர்வை போன்றவை.

1 அ 4. வீட்டிற்குத் தேவையானவை

அ. சிறிய ரிப்பேர்களுக்குத் தேவையானவை

ஆணிகள், சுத்தி, ஸ்பானர், ப்ளையர், ஸ்க்ரூ டிரைவர், கட்டர், சிறிய பலகைகளை அறுக்க ரம்பம், பலகைகளை மழமழவென்று ஆக்க பாலிஷ் பேப்பர், கத்திரிக்கோல், அளக்கும் டேப் போன்றவை.

ஆ. தையலுக்கு தேவையானவை

ஊசி-நூல், பட்டன்கள், கத்திரிக்கோல், அளக்கும் டேப் (துணியை அளப்பதற்கு), தையல் இயந்திரம் போன்றவை.

இ. பூச்சித் தொல்லைகளைத் தடுக்க

கொசு, எலி, மூட்டைப்பூச்சி, எறும்பு, பேன், அதன் முட்டைகள் போன்றவற்றின் தொல்லைகளைத் தடுக்க தேவையான மருந்துகள்; எலிப்பொறி, கொசு வலை போன்றவை.

ஈ. அதிகப்படியான  பொருட்கள்

குளிக்கும் வாளி, மக், துணிகளை ஊற வைக்க வாளி, துணி துவைக்கும் பிரஷ், எலக்ட்ரிகல் பொருட்கள் (பல்ப்புகள், ட்யூப் லைட்டுகள், இரு பின், மூன்று பின் ப்ளக் மற்றும் ஹோல்டர்), ரப்பர் செருப்புகள் போன்றவை.

உ. ஏனைய பொருட்கள்

அரசு அறிவிப்புகளை அறிய ஒரு வானொலி, கையால் திருகும் கடிகாரம், ஆடமேடிக் கடிகாரம் 10 வருட உத்தரவாதத்துடன், மொபைலை சார்ஸ் செய்ய போர்டபிள் சோலார் சார்ஜர், காஸ் லைட்டர், காற்று உத்தரவாத லைட்டர், மெழுகுவர்த்திகள், ட்வைன் நூல், துணி உலர்த்தும் கயிறு, சைக்கிளுக்கு காற்றடிக்க சைக்கிள் பம்ப், எலக்ட்ரிக் டெஸ்டர் போன்றவை.

1 அ 5. நோயாளிகளுக்குத் தேவையான கருவிகள்

தெர்மோமீட்டர், வெந்நீர் பாக், ஆயுர்வேத மாத்திரைகளை பொடி செய்ய சிறு அம்மி குழவி, மர கம்மோட், டையபர் போன்றவை.

1 அ 6. தற்காப்புக்குத் தேவையானவை

ஆபத்துக் காலத்தில் கலவரங்கள் ஏற்படலாம். அப்போது தீயவர்களிடமிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள பெப்பர் ஸ்ப்ரே, தடி, விப்பிங் செயின் போன்றவை.

1 அ 7. ஆன்மீக உபாயங்களுக்குத் தேவையான ஸாத்வீகப் பொருட்கள்

ஸநாதனின் குங்குமம், அத்தர், கோமூத்திர அர்க், ஊதுபத்திகள், கற்பூரம், தெய்வ படங்கள், தெய்வங்களின் நாம படிவங்கள் போன்றவை.

ஆன்மீக உபாயங்கள் பற்றி மேலும் விவரங்களுக்கு பார்வையிடவும் –  www.sanatan.org/en/spiritual-remedies  அல்லது ஸனாதன் ஸாதகர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.

1 அ 8. தாற்காலிக வெளியேற்றத்தின்போது உதவக் கூடிய பொருட்கள்

வெள்ளம் போன்ற சமயங்களில் அரசு தரும் எச்சரிக்கையின் பேரில் உடனே வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படலாம். அது போன்ற சமயங்களில் நாம் எடுத்து செல்ல வேண்டிய பொருட்களின் பட்டியல் இங்கு தரப்பட்டுள்ளது. இதன் மூலம் இறுதி நேர குழப்பம் குறைந்து வீட்டை விட்டு வெளியேறும்போது முக்கியமான பொருட்களை மறந்து போகும் துயரத்தைத் தடுக்கலாம்.

அ. எல்லாப் பொருட்களையும் எடுத்துப் போக ஒரு உறுதியான பெரிய பை அல்லது சாக்கு.

ஆ. பற்பசை, சவரம் செய்ய தேவையான பொருட்கள், சோப், சிறு கண்ணாடி, சீப்பு, தினசரி உடைகள், படுக்கை விரிப்பு/போர்வை மற்றும் தேவையான மருந்துகள்.

இ. உலர்ந்த உணவுப் பொருட்கள் மற்றும் 3 நாட்களுக்குத் தேவையான குடிதண்ணீர்.

ஈ. தண்ணீரை சுத்திகரிக்க க்ளோரின்.

உ. மொபைல் மற்றும் அதன் சார்ஜர், பவர் பாங்க் மற்றும் மொபைல் எண்கள் அடங்கிய நோட்டுப் புத்தகம்.

ஊ. பாட்டரியில் இயங்கும் ஒரு டார்ச் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் ஒரு பெரிய டார்ச்.

எ. ஈரப்பசை சூழலிலும் ஏற்றக் கூடிய மெழுகுவர்த்திகள் மற்றும் தீப்பெட்டிகள்.

ஏ. முக்கிய ஆவணங்கள் அல்லது அவற்றின் நகல்கள் (ரேஷன் கார்ட், ஆதார் கார்ட், பாங்க் பாஸ்புக் போன்றவை) மற்றும் ஏடிஎம் கார்ட்.

ஐ. முதலுதவிப் பேட்டி, மூக்கு மற்றும் வாயை மூடக்கூடிய முககவசம்.

ஒ. கனமான கயிறு, காம்பாஸ் மற்றும் அனைவரையும் எச்சரிக்க ஒரு விசில்.

ஓ. ஆல் இண்டியா ரேடியோ வெளியிடும் செய்தி, அரசு அறிவிப்புகளை அறிய ஒரு சின்ன டிரான்சிஸ்டர்.

ஔ. ஆன்மீக உபாயத்திற்கான பொருட்கள்.

1 அ 9. நிலநடுக்கம், வெள்ளம் போன்ற ஆபத்துக்களின்போது உதவக் கூடிய பொருட்கள்

அ. கூடாரம், பெரிய தார்பாலின் மற்றும் கெட்டியான ப்ளாஸ்டிக் ஷீட்

தாற்காலிக இருப்பிடமாக கூடாரத்தைப் பயன்படுத்தலாம். வெட்டவெளியில் வைக்கப்பட்ட நம் பொருட்கள் ஈரமாகாமல் பாதுகாக்க  பெரிய தார்பாலின் மற்றும் கெட்டியான ப்ளாஸ்டிக் ஷீட் உதவும்.

ஆ. லைப் ஜாக்கெட் மற்றும் காற்று நிரப்பப்பட்ட படகு

வெள்ள ஆபாயம் உள்ள இடங்களில் வசிப்பவர்களுக்கு இவை உதவியாக இருக்கும். இவை ஆன்லைனில் கிடைக்கும். படகு வாங்கும்போது அதை எப்படி இயக்குவது என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம்.

இ. காஸ் மாஸ்க் மற்றும் போர்டபிள் ஆக்சிஜன் மாஸ்க் டாங்க்

விஷ வாயு கசிவின்போது காஸ் மாஸ்க் உபயோகமாக இருக்கும். அதை உபயோகித்து ஒருவர் பத்திரமான இடத்திற்கு செல்ல முடியும். போர்டபிள் ஆக்சிஜன் மாஸ்க் டாங்க் மூலம் ஒரு நோயாளியைக் காப்பாற்ற முடியும். இவை இரண்டும் ஆன்லைனில் கிடைக்கும்.

ஈ. வாக்கி-டாக்கி மற்றும் ஹாம் ரேடியோ

தகவல் தொடர்புக்கு உதவும் வயர்லஸ் கருவிகள் இவை. தொலைபேசி மற்றும் மொபைல் ஆகியவை இயங்காதபோது அரசின் அனுமதி பெற்று வாக்கி-டாக்கி மற்றும் ஹாம் ரேடியோவை பயன்படுத்தலாம். விவரம் தெரிந்தவர்களிடம் இது பற்றி மேலும் விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

உ. மற்றப் பொருட்கள்

நெற்றி டார்ச், சிறு பைனாகுலர், சிக்னலிங் மிரர் (அதன் மின்மினுக்கும் ஒளி வெகு தொலைவில் உள்ளவரின் கவனத்தை நம்மிடம் ஈர்க்கும்.) பாரா கயிறு (பெரும் கனத்தைத் தாங்கும் உறுதி கொண்டது), ரெயின் பாஞ்சோ (தொப்பியுடைய பெரிய ரெயின்கோட்), எமர்ஜென்சி பெர்சனல் அலாரம் மற்றும் தெர்மல் போர்வை (கடும் குளிர் பிரதேசங்களில் உதவியாக இருக்கும்)

1 அ 10. இந்தத் தொடரில் மற்ற இடங்களில் குறிப்பிடப்பட்ட பொருட்கள்

ஆபத்துக் காலத்தை எதிர்கொள்ளும் முகமாக உணவு தானியங்கள், தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து சம்பந்தமான பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். (உதா. தானியங்களின் பாதுகாப்பு ஏற்பாடு, தண்ணீர் தொட்டி)

1 அ 11. வீட்டு உபகரணங்களுக்கான உதிரி பாகங்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் மற்றும் அவற்றை எப்படி சீர்ப்படுத்துவது என்பதையும் நிபுணர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்

வீட்டு உபகரணங்களான மின்விசிறி, தண்ணீர்க் குழாய், மிக்சி போன்றவை பழுதுபடலாம்; ஆபத்துக் காலத்தில் உதிரி பாகங்கள் கிடைக்காமல் போகலாம்; அதோடு அதை சரி செய்வதற்கு மெக்கானிக் கிடைக்காமல் போகலாம். அதனால் இத்தகைய உபகரணங்களின் உதிரி பாகங்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதோடு முடிந்தவரை அவற்றை நீங்களே சரி செய்யவும் கற்றுக் கொள்ளுங்கள்.

எந்த உபகரணங்களின் உதிரி பாகங்களை வாங்க வேண்டும், அவற்றை சரி செய்ய என்ன கற்றுக் கொள்ள வேண்டும் ஆகிய விஷயங்கள் மேலே சில இடங்களில் வருகின்றன.

1 அ 11 அ. சமையலறை உபகரணங்களின் உதிரி பாகங்கள்

பிரஷர் குக்கரின் விசில் மற்றும் காஸ்கெட், மிக்சி-சமையல் காஸ்-ரப்பர் ஹோஸ் போன்றவற்றிற்கு ஸ்டாடிக் -லிருந்து மோட்டாரின் சுழலும் பகுதிக்கு மின்சாரம் பாய செய்ய உதவும் கார்பன் பிரஷ் போன்றவை.

1 அ 11 ஆ. பாரம்பரிய விளக்குகளின் உதிரி பாகங்கள்

சிம்னி மற்றும் லாந்தரின் கிளாஸ், திரி, சுடரை சரிப்படுத்தும் கீ போன்றவை

1 அ 11 இ. எலக்ட்ரிகல் வயரிங் மற்றும் விளக்குகளின் உதிரி பாகங்கள்

ட்யூப் லைட் ஸ்டார்டர், இன்சுலேஷன் டேப், ப்யூஸ் வயர் மற்றும் ப்யூஸ், எலக்ட்ரிகல் சுவிட்சுகள், எக்ஸ்டென்ஷன் கார்ட், சாதாரண வயர், மின்விசிறி ரெகுலேடர் போன்றவை.

ட்யூப் லைட் ஸ்டார்டர், எலக்ட்ரிகல் சுவிட்சுகள் ஆகியவற்றை மாற்றவும் ப்யூஸ் வயரை புதுப்பிக்கவும் நீங்களே கற்றுக் கொள்ளுங்கள்.

1 அ 11 ஈ. ப்ளம்பிங் சம்பந்தமான உதிரி பாகங்கள்

தண்ணீர்க் குழாய், வாஷர், டேஃப்லான் டேப், தேவையான ஸ்பானர்கள், எம்-சீல், க்ளு ஸ்டிக் போன்ற பசைகள் (இந்த ப்ளாஸ்டிக் ஸ்டிக்கை உருக்கும்போது அது பிவிசி பைப்புகளில் உள்ள ஓட்டைகளை அடைக்கும்), சைக்கிள் ட்யுப் ஸ்ட்ரிப்கள் (இவை தண்ணீர் ஒழுகுவதை தடுக்கிறது), தண்ணீர் பைப்கள் போன்றவை.

1 அ 11 உ. வாகனங்களின் உதிரி பாகங்கள்

சைக்கிள், சைக்கிள்-ரிக்க்ஷா, இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், மாட்டு வண்டி, குதிரை வண்டி போன்றவற்றின் உதிரி பாகங்களை வாங்கி வைத்துக் கொள்ளலாம். உதா. உங்களிடம் சைக்கிள் இருந்தால் டயர் பன்க்ச்சர், ட்யுப், டயர் ஆகியவற்றை சரி செய்யும் கருவி போன்றவை.

உங்களிடம் உள்ள வாகனங்களை சரி செய்வதற்கு நீங்களே கற்றுக் கொள்ளுங்கள், உதா. உங்களிடம் சைக்கிள் இருந்தால் பன்க்ச்சரை சரி செய்ய கற்றுக் கொள்ளுங்கள்.

பகுதி 7 படிப்பதற்கு இங்கு க்ளிக் செய்யவும் – ஆபத்துக் காலத்தில் உயிருடன் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாகம் – 7

தகவல் : ஸனாதன் வெளியிடவிருக்கும் நூல் தொகுப்பு – ‘ஆபத்துக் காலத்தில் உயிருடன் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்’

(Copyright : Sanatan Bharatiya Sanskruti Sanstha) 

மகரிஷி ஆன்மீக பல்கலைகழகம் சார்பாக
பாரதம் முழுவதும் மூலிகை செடிகள் நடுவதற்கு திட்டமிட்டுள்ள
இப்பணியில் நீங்களும் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்

மூன்றாம் உலக யுத்தம் மற்றும் இயற்கைப் பேராபத்துகளை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதற்காக மகரிஷி ஆன்மீக பல்கலைகழகம் சார்பாக பாரதம் முழுவதும் மூலிகை செடிகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணி செவ்வனே நடப்பதற்கு விவசாயிகள், நிலச்சுவான்தார், தாவிரவியல், விவசாயம் மற்றும் ஆயுர்வேத  நிபுணர்கள், ஆகியோரின் உதவி எங்களுக்குத் தேவைப்படுகிறது. உங்களின் திறன் மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் மேற்கூறிய எந்தப் பணியிலும் பங்கேற்கலாம்.

நேரடி செடிகள் நடுதல் சம்பந்தமான சேவைகள்

மூலிகை செடிகளை நடுதல்; செடி நடுவதற்கு தேவையான சிறு முளை, கிராஃப்டிங் ஆகியவற்றை தயாரிப்பது; செடி நடுவதற்கு தேவையான நிலம், மனித உழைப்பு, கருவிகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்தல்; செடி நடுதலை விஞ்ஞான பூர்வமாக செய்தல்; நேரடியாக செடி நடுதலில் பந்கேற்றல் போன்றவை.

மற்ற சேவைகள்

மூலிகை செடிகளை அடையாளம் காண்பது; எப்படி நடுவது என்று வழிகாட்டுவது; தொழில்நுட்ப விஷயங்களில் தீர்வு காண்பது; மூலிகை செடிகளைப் பற்றிய கட்டுரைகள் எழுதுவது; அரசாங்கத் திட்டங்களின் பயனைப் பெற உதவுவது; செடிகள் நட பண உதவி; மூலிகை செடிகளிலிருந்து மருந்துகள் தயாரிக்க உதவுவது போன்றவை.

மூலிகை செடிகளை நடும் சேவையில் பங்கேற்க தொடர்பு கொள்ளுங்கள்

திரு. விஷ்ணு ஜாதவ், ஸனாதன் ஆச்ரமம், 24/பி, ராம்நாதி, பாந்திவடே, போண்டா, கோவா. 403 401.

அலைபேசி எண் : 8208514791

இணையதள முகவரி : [email protected]

வரப்போகும் ஹிந்து ராஷ்ட்ரத்தில் ஆயுர்வேதமே முக்கிய சிகிச்சை முறையாக விளங்கும். அதனால் இப்போதிலிருந்தே மூலிகை செடிகளைப் போற்றி பாதுகாப்பது அவசியமாகிறது.

 

 

Leave a Comment