ஆபத்துக் காலத்தில் உயிருடன் இருக்க செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாகம் – 2

முதல் பகுதியைப் படிக்க இங்கு க்ளிக் செய்யவும் : ஆபத்துக் காலத்தில் உயிருடன் இருக்க செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாகம் – 1

1 அ 3. உணவு தானியங்களை பயிரிடுவது, கால்நடைகளை வளர்ப்பது போன்ற செயல்களை உடனே துவங்கவும்

உணவு தானியங்களின் இருப்பு எதுவாக இருந்தாலும், அது குறைந்து போகும். சேமித்து வைத்துள்ள தானியங்கள் தீர்ந்து போகும் நிலையை தவிர்க்கவும், வறுமையை தவிர்க்கவும், உணவு தானியங்களை பயிரிடுவது, கால்நடைகளை வளர்ப்பது போன்றவை ஆபத்துக் காலத்தை எதிர்கொள்ள மிகவும் அவசியம்.

1 அ 3 அ. அரிசி, பருப்பு வகைகள் போன்றவற்றை பயிரிடுங்கள்

விவசாயி அல்லாதவர்கள் விவசாயம் பற்றி அனுபவம் உள்ளவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

1 அ 3 ஆ. காய்கறிகள், வேர் மற்றும் கிழங்கு காய்கறிகள் மற்றும் பழம் தரும் மரங்கள் ஆகியவற்றை பயிரிடுவது

சாகுபடியின் பல்வேறு அம்சங்களை பற்றி வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த, இவற்றை சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளோம். ‘காய்கறிகள், பழ மரங்கள் போன்றவற்றை எவ்வாறு பயிரிடுவது மற்றும் பாதுகாப்பது?’ என்பது குறித்த தனி உரையை ஸனாதன் வெளியிட உள்ளது.

1 அ 3 ஆ 1. காய்கறிகள், வேர் மற்றும் கிழங்கு காய்கறிகள் மற்றும் பழம் தரும் மரங்கள் ஆகியவற்றை பயிரிடுவதின் அவசியம்

அ. சில மாதங்கள் போதுமானதாக இருக்கும் உணவு தானியங்கள், பருப்பு வகைகள் போன்றவற்றை சேமிக்க முடியும்; ஆனால் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அப்படி முடியாது.

ஆ. உணவுக்கு காய்கறிகளை சமைப்பதால் தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் மிச்சமாகும், மேலும் அவை நீண்ட காலம் நீடிக்கும்.

இ. தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை வளர்ப்பதற்கு மிகவும் பரந்த சாகுபடி நிலம் தேவைப்படுகிறது, ஆனால் காய்கறிகள் மற்றும் பழங்களை வீட்டு பால்கனி மற்றும் கொல்லைப்புறத்தில் வளர்க்கலாம்.

ஈ. தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை காட்டிலும் காய்கறிகள் வேகமாக வளரும்.

உ. நம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், இரும்புச்சத்து, நார்ச்சத்து போன்றவை காய்கறிகள், வேர் மற்றும் கிழங்கு காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ளன. எனவே, இவற்றை நம் உணவில் சேர்க்குமாறு உணவு நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஊ. அன்றாடம் பருப்பு மற்றும் ரொட்டியை சாப்பிடுவதால் ஏற்படும் சலிப்பை நீக்க காய்கறிகள் உணவுக்கு பல வகைகளைத் தருகின்றன; தவிர, காய்கறிகள் உணவை மேலும் சுவையுள்ளதாக ஆக்குகின்றன.

எ. காய்கறிகளும் பழங்களும் மருத்துவ குணங்களும் கொண்டவை.

1 அ 3 ஆ 2. ஆபத்துக் காலத்தில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக  எந்தெந்த காய்கறிகள், வேர் மற்றும் கிழங்கு காய்கறிகள் மற்றும் பழம் தரும் மரங்களை வளர்க்க வேண்டும்?

ஆபத்து காலத்தில் எதெல்லாம் வளர்க்கப்படுகிறதோ அவை தானியங்கள் அல்லது பழங்களை வேகமாக விளைவிக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு, சேப்பங்கிழங்கு தவிர, பெரும்பாலான இலை காய்கறிகள், கொத்தவரங்காய், முட்டைக்கோஸ், பட்டாணி, காலிஃபிளவர், தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய், பச்சை மிளகாய், குடை மிளகாய், படரும்  காய்கறிகள் (உதாரணம் – லிமா பீன்ஸ், சுரைக்காய்); உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட், முள்ளங்கி, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, ரணகள்ளி, சௌ-சௌ, ராச வள்ளிக்கிழங்கு மற்றும் கருணை கிழங்கு போன்ற வேர் மற்றும் கிழங்கு காய்கறிகள்; அன்னாசிப்பழம், பப்பாளி, வாழைப்பழம், சப்போடா மற்றும் மாதுளை போன்ற பழ மரங்களை நடலாம்.

1 அ 3 ஆ 3. காய்கறிகள், வேர் மற்றும் கிழங்கு காய்கறிகள் மற்றும் பழங்களை எப்பொழுது நடவேண்டும்?

பெரும்பாலான இலை காய்கறிகள், கத்திரிக்காய், தக்காளி, மற்றும் வெண்டைக்காயை எந்த நேரத்திலும் நடலாம். படரும் காய்கறிகள் (உதாரணம் – சுரைக்காய்) மற்றும் கொத்தவரங்காய்  போன்ற காய்கறிகள் மழைக்கால துவக்கத்தில் அல்லது குளிர் கால முடிவில் நடப்பட வேண்டும். வேர் மற்றும் கிழங்கு காய்கறிகள் (உதாரணம் – சர்க்கரைவள்ளிகிழங்கு) மற்றும் பழ மரங்களை மழைக்கால துவக்கத்தில் நடவு செய்ய வேண்டும்.

– திரு. அவினாஷ் ஜாதவ், ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா, இந்தியா. (மார்ச் 2020)

1 அ 3 ஆ 4. காய்கறிகள் மற்றும் இலை காய்கறி வகைகளை நடவு செய்வதற்கு மண் பானைகளுக்கு மாற்று வழிகளைப் பயன்படுத்துதல்

செடிகளை மண் பானைகளில் வளர்ப்பதே அவற்றின் வளர்ச்சிக்கு ஏற்றது; எனினும், மண் பானைகள் மென்மையானவை மற்றும் எளிதில் உடையக்கூடியவை. பாதகமான சமயங்களில் என்ன நடக்கும் என்பது நிச்சயமில்லை; எனவே, இழப்பைத் தவிர்க்க, செடிகளை நடவு செய்வதற்கு மாற்றாக, உலோக பீப்பாய்கள், காலி உலோக கேன்கள், பிளாஸ்டிக் சாக்குகள், பைகள், தகரக்குவளை, தட்டையான தொட்டி அல்லது பீப்பாய்கள் போன்றவை பயனுள்ளதாக இருக்கும். அதிகப்படியான தண்ணீரை வெளியேற்றுவதற்கு அடித்தளத்திற்கு மேலே ½ அங்குலத்திற்கு 2-3 சமமான துளைகளை உருவாக்கவும். இந்த கொள்கலன்களின் அடிப்பகுதியில் துளைகள் செய்யப்பட்டால், தாவரத்தின் வேர்கள் கொள்கலனில் இருந்து தப்பி மண்ணுக்குள் நுழைய வாய்ப்பு உள்ளது.

– திரு மாதவ் ராமச்சந்திர பராட்கர், டிசோலி, கோவா, இந்தியா (28.05.2020)

வீட்டு பால்கனியில் காய்கறி செடிகள் மற்றும் இலை காய்கறிகளை நடுதல்

1 அ 3 ஆ 5. பால்கனியில் வளர்க்கக்கூடிய காய்கறிகள்

பால்கனியில் 3-4 மணி நேரம் சூரிய ஒளி கிடைத்தால், கத்தரிக்காய், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி போன்றவைகளை வளர்க்கலாம். பால்கனியில் தேவைக்கேற்ப சூரிய ஒளி கிடைக்கவில்லை என்றாலும் இஞ்சி வளர்க்கலாம்.

1 அ 3 ஆ 6. மொட்டை மாடியில் வளர்க்கக்கூடிய காய்கறிகள், வேர் மற்றும் கிழங்கு காய்கறிகள் மற்றும் பழங்கள்

பால்கனியில் பயிரிடக்கூடிய அனைத்து காய்கறிகளும், அத்துடன் பெரும்பாலான இலை காய்கறிகள், காலிஃபிளவர், முட்டைக்கோஸ், கொத்தவரங்காய், வெண்டைக்காய் போன்ற காய்கறிகள்; சுரைக்காய் போன்ற படரும் காய்கறிகள்; உருளைக்கிழங்கு, முள்ளங்கி, பீட்ரூட் மற்றும் கேரட் போன்ற வேர் மற்றும் கிழங்கு காய்கறிகள்; பழங்களில் அன்னாசிப்பழம்.

1 அ 3 ஆ 7. கொல்லைப்புறத்தில் வளர்க்கக்கூடிய காய்கறிகள் மற்றும் வேர் மற்றும் கிழங்கு காய்கறிகள்

பால்கனியில் மற்றும் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் வளர்க்கப்படும் காய்கறிகள்; லிமா பீன்ஸ் போன்ற படரும் காய்கறிகள்; சர்க்கரைவள்ளிகிழங்கு, கருணை கிழங்கு போன்ற வேர் மற்றும் கிழங்கு காய்கறிகள்.

1 அ 3 ஆ 8. கொல்லைப்புறத்தில் வளர்க்கக்கூடிய பழ மரங்கள்

எலுமிச்சை, வாழைப்பழம், கொய்யா, சப்போட்டா, பப்பாளி, அன்னாசி, சீதாப்பழம் மற்றும் அத்திமரம்.

– திரு அவினாஷ் ஜாதவ், ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா, (மார்ச் 2020)

1 அ 3 இ. கால்நடைகளை வளர்ப்பது

பால், கோமியம், வரட்டி போன்றவைகளுக்காக பசுக்களை வளர்த்தல்; அதேசமயம், விவசாயத்திற்காக, வண்டிகளை இழுக்க போன்ற காரியங்களுக்காக காளைகளை வளர்த்தல். கால்நடைகள் வளர்த்தல், பால் கறத்தல், நோயின் போது அவற்றை கவனித்துக்கொள்ளுதல் போன்றவற்றை பற்றி நிபுணர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.

1 ஆ 4. காட்டு காய்கறிகளை (மழைக்காலத்தில் இயற்கையாக வளரும்) உடனடியாக சமைக்கத் துவங்குங்கள்

தகரை, சிறு தேக்கு, பண்ணை கீரை, நாயுறுவி போன்ற காட்டு காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அவற்றின் பயன்பாடு பற்றி அறிய நிபுணர்களை அணுகவும்.

‘நிசர்கா மித்ரா’ (கைப்பேசி : 9423858711), என்ற கோலாப்பூர், மகாராஷ்டிராவில் உள்ள அமைப்பு, ‘காட்டு காய்கறிகள் மற்றும் அதன் மருத்துவ பயன்கள்’ என்ற நூலை வெளியிட்டுள்ளது. 61 காட்டு காய்கறிகளின் மருத்துவ மற்றும் உணவு பயன்பாட்டை அவர்கள் அவற்றின் படங்களுடன் வழங்கியுள்ளனர்.

(தகவல் : ஸனாதனின் வருங்கால நூல் தொகுப்பு ‘ஆபத்துக் காலத்தில் உயிரோடிருக்க செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்’)

(காபிரைட் : ஸனாதன் பாரதீய ஸன்ஸ்க்ருதி ஸன்ஸ்தா)

இத்தொடரின் அடுத்த பாகத்தைப் படிக்க – க்ளிக் செய்யவும்!

Leave a Comment