நவதுர்கா 2 – ‘பிரம்மச்சாரிணி’

1. நவராத்திரியின் இரண்டாவது நாளில் வெளிப்பட்ட
ஆதிசக்தியின் ரூபமான ‘பிரம்மச்சாரிணி’!

      ததானா கரபத்மாப்யாமக்ஷமாலா கமண்டலு |
     தேவி ப்ரஸீதது மயி பிரம்மசாரிண்யனுத்தமா ||

அர்த்தம் : யார் தன் இரு கரகமலங்களிலும் ருத்ராக்ஷ மாலை மற்றும் கமண்டலுவை தரித்துக் கொண்டிருக்கிறார்களோ அத்தகைய உன்னதமான தேவி பிரம்மசாரிணி தாயே, என் மீது கருணை காட்டு!

1 அ. ‘சிவனே பதியாக வேண்டும்’ என்பதற்காக கடும் தவம் புரிந்த தேவி சதி!

‘பிரம்மச்சாரிணி’ என்பது தேவியின் திருமணத்திற்கு முந்தைய ரூபமாகும். பிரம்மச்சாரிணி என்ற பெயரில் உள்ள ‘பிரம்ம’ என்ற வார்த்தை ‘சுத்த ஆத்ம தத்துவத்தை’ குறிக்கிறது. ‘பிரம்மசாரிணி’ என்பவள் ஆத்ம தத்துவ உபாசனையில் மூழ்கியிருப்பவள் . மகரிஷி நாரதரின் உபதேசப்படி பார்வதி ‘சிவனே தனக்கு கணவனாக அமைய வேண்டும்’ என்பதற்காக ஆயிரக்கணக்கான வருடங்கள் கடும் தவம் மேற்கொண்டாள். இறுதியில் சில ஆயிரம் வருடங்கள் வெறும் வில்வ இலைகளையே உணவாகக் கொண்டாள். பிறகு அதையும் தியாகம் செய்தாள். அப்போதே அவளுக்கு ‘அபர்ணா’ என்ற நாமம் உண்டானது. ‘பர்ண’ என்றால் இலை. ‘அபர்ணா’ என்றால் ‘விரதத்தை அனுஷ்டிக்கும்போது இலைகளை உண்பதையும் தியாகம் செய்தவள்’ என்று அர்த்தம். பிரம்மசாரிணியின் ரூபம் ஜோதிர்மயமானது மற்றும் திவ்யமானது. தேவியின் தவத்தால் மகிழ்ந்த பிரம்மதேவன் ஆகாயவாணி மூலமாக ‘தேவி, இதுவரை உன்னைப் போல் ஒருமுகப்பட்ட மனதுடன் யாருமே ஸாதனை செய்ததில்லை. சாக்ஷாத் பரமேஸ்வரனே உனக்குக் கிடைக்கப் போகிறார்.’ இறைவனை அடைவதற்காக அகண்ட ஸாதனை செய்து தேவி, உலகிற்கு முன்பு ஒரு அதி உன்னத ஆதர்சத்தை நிறுவியுள்ளாள்.

1 ஆ. பிரார்த்தனை : ‘ஹே தேவி பிரம்மசாரிணி, எங்களுக்கும் உன்னைப்
போன்ற ஒருமைப்பட்ட மனதுடன் ஸாதனை செய்வதற்குரிய சக்தியைத் தா,
இந்த ஸாதனை மார்க்கத்திலிருந்து விலகாமல் இருக்க அருள் செய்.

‘ஹே தேவி, நாங்கள் ஸ்ரீ குருவின் சரணங்களை அடைய தாபப்படுகிறோம். ஸாதனை வழியில் ஏற்படக் கூடிய எல்லா தடங்கல்கள் மற்றும் போராட்டங்களில் எங்களை வெற்றி அடைய செய்வாய். திட மற்றும் உறுதியான மனதுடன் ஸ்ரீ குரு சரணங்களில் எங்களை சேவை செய்ய வைப்பாய்’ என்பதே உந்தன் சரணங்களில் நாங்கள் செய்யும் பிரார்த்தனை. தாயே, எங்களின் நாமஸ்மரணம் அகண்டமாக நடக்கட்டும். நாங்கள் குரு சரணங்களை எப்போதும் எங்களின் நினைவில் இருத்துமாறு செய்வாய். “ஹே ஜகன்மாதா, குருதேவரின் எதிர்பார்ப்பின்படி எங்களை ஸாதனை செய்ய வைப்பாய்’ என்பதே எங்களின்  பிரார்த்தனை. உந்தன் சரணங்களில் கோடி கோடி வந்தனம்!’

 திரு. விநாயக் ஷான்பாக், ஜெய்பூர், ராஜஸ்தான் (16.9.2021)

2.    த்ரேதா யுகத்தில் ஸ்ரீராமன் ராவணாதி அசுரர்களை
சம்ஹாரம் செய்ய வேண்டி மேற்கொண்ட நவராத்திரி விரதம்!

2 அ. நாரத மகரிஷி பிரபு ஸ்ரீராமனிடம் ‘ராவணாதி அசுரர்களை வதம் செய்வதற்கு
ஆதிசக்தியை மகிழ்ச்சி அடைய செய்யுங்கள்’, எனக் கூறி ஆதிசக்தியின் மகிமையை
வர்ணித்து நவராத்திரி விரதத்தைப் பற்றி எடுத்துக் கூறுதல்

‘ராவணன் சீதையை அபகரித்த பின்பு சீதையைத் தேடி கானகத்தில் அலையும்போது ஸ்ரீராமன் மற்றும் லக்ஷ்மணன் முன்பு நாரத மகரிஷி வருகிறார். ராவணாதி அசுரர்களை அழிப்பதற்குரிய சக்தியைப் பெற ‘நவராத்திரி விரதத்தை’ மேற்கொள்ளுமாறு நாரதர் ஸ்ரீராமனிடம் கூறினார். ஸ்ரீராமன் உடனே ஒப்புக் கொண்டு நவராத்திரி விரத மகிமையைப் பற்றி எடுத்துரைக்க வேண்டுகிறார். அப்போது நாரதர் ஸ்ரீராமனைப் பார்த்து, ‘ஹே ஸ்ரீமன்நாராயண ஸ்வரூப ஸ்ரீராமா, ஆதி காலத்தில் ஸ்ரீமகாவிஷ்ணுவானவர் மது கைடப அசுரர்களை வதம் செய்வதற்காக சுமேரு மலையில் நவராத்திரி விரதத்தை அநுஷ்டித்தார். வ்ருத்தாசுரனை வதம் செய்வதற்காக சிவன் இந்த நவராத்திரி விரதத்தை அநுஷ்டித்தார். தேவி பாகவதப்படி பிரம்மதேவன், இந்திராதி தேவர்கள் மற்றும் ப்ருகு, வசிஷ்ட, காஷ்யப, விஸ்வாமித்ர போன்ற ரிஷி முனிவர்களும் இந்த நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்துள்ளனர். அதனால் ஸ்ரீராமா, ராவணாதி அசுரர்களை வதம் செய்வதற்கு நீங்களும் இந்த நவராத்திரி விரதத்தை மேற்கொள்ளுங்கள்’,

ஸ்ரீராமன் வினவுகிறார், ‘ஹே நாரத முனிவரே, யாருடைய கிருபையால் ராவணனின் வதம் நடக்குமோ அத்தகைய தேவி யார்? அந்த தேவி சம்பந்தமாக எனக்குக் கூறுங்கள்.’ நாரத மகரிஷி கூறுகிறார், ‘ஸ்ரீராமா, ஆதிசக்தி அவளே. சம்பூர்ண சிருஷ்டியின் நிர்மாணம் அவளால் நடக்கிறது மற்றும் அவளில்லாமல் இந்த சிருஷ்டியை கொண்டு செல்ல முடியாது. உண்மையில் அவளன்றி அணுவும் அசைவதில்லை. படைப்பின் அதிதேவதையான பிரம்மதேவனின் படைக்கும் சக்தி அவளே, காக்கும் தெய்வமான ஸ்ரீவிஷ்ணுவின் காக்கும் சக்தி அவளே மற்றும் அழிக்கும் தொழிலின் தெய்வமான சிவனின் அழிக்கும் சக்தி அவளே. ஆதிசக்திக்கு பல நாமங்கள் உண்டு. அந்த நாமக்களின் மகத்துவம் அனைத்தையும் கூறும் சாமர்த்தியம் என்னிடம் இல்லை.’

2 ஆ. பிரபு ஸ்ரீராமன் நவராத்திரி விரதத்தை மிகுந்த ஸ்ரத்தையோடு
அனுஷ்டிக்கும்போது அஷ்டமி அன்று ஆதிசக்தி தரிசனம் அளித்து ‘வரும் வருட
நவராத்திரியில் ராவணாதிகளுடன் உனக்கு யுத்தம் நடக்கும்போது
நவமி அன்று நான் உன்னுடைய பாணத்தில் பிரவேசிப்பேன்,
தசமி அன்று ராவண வதம் நடக்கும்’, எனக் கூறுதல்

நாரத மகரிஷி ஸ்ரீராமனிடம் நவராத்திரி விரதத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை எடுத்துரைத்தார். அதன் பிறகு ஓரிரு தினங்களில் அஸ்வினி மாதம் ஆரம்பமானதால் நாரத மகரிஷி ஸ்ரீராமனுக்கு நவராத்திரி விரதத்தை எடுத்து வைத்தார். ஸ்ரீராமன் ஆழ்ந்த பக்தியுணர்வுடன் ஆதிசக்தியின் ‘நவராத்திரி விரதத்தை’ அனுஷ்டிக்கிறார். அஷ்டமி திதியன்று நள்ளிரவில் ஆதிசக்தி சிம்மத்தின் மீது ஆரோஹணித்து  ஸ்ரீராமன் மற்றும் லக்ஷ்மணனுக்கு காட்சி தருகிறாள். அச்சமயம் தேவி ஸ்ரீராமனிடம் கூறினாள் ‘ஹே ஸ்ரீராமா, நீ பகவான் நாராயணனின் அம்சம். ராவணனின் வதம் நடப்பதற்காக தேவாதி தேவர்கள் உன்னிடம் பிரார்த்தனை செய்ததால் நீ இந்த அவதாரத்தை எடுத்துள்ளாய். ஹே ஸ்ரீராமா, நீ மனதில் நினைத்துள்ளபடி ராவண வதம் நடக்கும். உனக்கு சேவை செய்வதற்காக தேவர்கள் வானரங்களாக வந்துள்ளனர். ஒவ்வொரு வானரத்திடமும் அந்தர்பூதமாக என்னுடைய சக்தி உள்ளது. லக்ஷ்மணன் ஆதிசேஷ அவதாரம் அவன் மூலமாக ராவணனின் மகன் மேகநாதனின் வதம் நடக்கும். அடுத்த வருட நவராத்திரியின்போது ராவணனுடன் யுத்தம் ஆரம்பமான பின்பு நவமி அன்று நான் உன்னுடைய பாணத்திற்குள் பிரவேசிப்பேன் மற்றும் தசமி அன்று உன் மூலமாக ராவண சம்ஹாரம் நடக்கும். அதன் பிறகு பத்தாயிரம் வருடங்கள் நீ இந்த பூவுலகை ராஜ்ய பரிபாலனம் செய்து பின்பு வைகுண்டத்திற்கு ஏகுவாய்.’

தேவியின் இந்த வார்த்தையைக் கேட்டு ஸ்ரீராமனுக்கு அபரிமித ஆனந்தம் ஏற்பட்டது. பிறகு தேவி கூறியபடியே அனைத்தும் நடந்தது.

3.  பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் ஸாதகர்களின்
மூலமாக ஆதிசக்தியின் உபாசனை நடக்குமாறு செய்தல் !

இன்று பல ஸாதகர்கள் விதவிதமான க்ஷாத்ர கீதங்களை இயற்றியுள்ளனர். ஆனால் குருதேவர் இயற்றிய ஒரே ஒரு க்ஷாத்ர கீதம் ஆதிசக்தியின் ஸ்தவன் ஆகும்!

ஆதிசக்தி தூ, அந்தசக்தி தூ |
ஜகஜ்ஜனநீ தூ, லயகாரி தூ |

இந்த முதல் இரு வரிகளில் குருதேவர் ஆதிசக்தியின் ஸ்வரூபத்தை வர்ணித்துள்ளார். ஏனைய வரிகளில் ஆதிசக்தியின் காரியங்களின் விஸ்தீரணத்தை மற்றும் அவளின் மகிமையை வர்ணித்துள்ளார். குருதேவர் இந்த சக்தி ஸ்தவன் பாடலை பல வருடங்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் ஸாதகர்கள் மூலமாக பாட வைத்துள்ளார். இன்று குருதேவரின் காரியத்திற்காக அதாவது தர்மஸன்ஸ்தாபனத்திற்காக ஆதிசக்தி செயல்படுகிறாள்.

‘ஹே ஆதிசக்தி, நீயே எங்களுக்கு சக்தி, புத்தி, ஆரோக்கியம், தைர்யம், பக்தி மற்றும் ஆன்மீக உணர்வைத் தா. இந்த ஆபத்துக் காலத்தைக் கடப்பதற்கு பாதுகாப்பு கவசத்தை அருள்வாய். இதுவே உன் சரணங்களில் நாங்கள் செய்யும் பிரார்த்தனை.’

யா தேவீ ஸர்வபூதேஷு சக்திரூபேண ஸம்ஸ்திதா |
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: ||

–            ஸ்ரீதுர்காஸப்தசதி, அத்யாயம் 5, ஸ்லோகம் 32

அர்த்தம் : எந்த தேவி எல்லா ஜீவராசிகளிலும் சக்தி ரூபமாக வீற்றிருக்கிறாளோ அந்த தேவிக்கு மும்முறை நமஸ்காரம் செய்கிறேன்.’

4.  ரிஷிவாக்கு, தெய்வவாக்கு மற்றும் குருவாக்கு எப்போதும்
பொய்ப்பதில்லை
ஆதலால் நாடிபடிவம் மூலம் மகரிஷிகள் கூறியுள்ளபடி
‘பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களே தர்மஸன்ஸ்தாபனத்தை
செய்யப் போகிறார்’ என்பதில் சந்தேகமே இல்லை!

இன்றைய கலியுகத்தில் நாடிபடிவங்கள் மூலமாக ரிஷிமுநிவர்கள், ‘பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் அவதாரமானதால் அவரே தர்மஸன்ஸ்தாபன காரியத்தை செய்யப் போகிறார்’, என்று எழுதி வைத்துள்ளனர்.  தர்மஸன்ஸ்தாபன காலம் இப்போது நெருங்கி விட்டது. ஸாதகர்கள் உறுதியுடன் இருக்க வேண்டும். ரிஷிவாக்கு, தெய்வவாக்கு மற்றும் குருவாக்கு எப்போதும் பொய்ப்பதில்லை. ஆதிசக்தியின் உதவி கொண்டு ஸ்ரீமந்நாராயண ஸ்வரூப பராத்பர குரு டாக்டர் ஆடவலே பூமியில் தர்மஸன்ஸ்தாபனம் செய்வார் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை!’

–  திரு. விநாயக் ஷான்பாக், ஜெய்பூர், ராஜஸ்தான் (16.9.2021)

 

 

 

 

Leave a Comment