வாழ்வின் ரகசிய ஞானத்தை வழங்கும் சித்திரைப்புது வருட கம்பம்!

பராத்பர குரு பரசுராம் பாண்டே மகாராஜ்

1.    ஒவ்வொரு க்ஷணமும் எச்சரிக்கையாக
நம் லட்சியத்தை நோக்கி செல்ல வேண்டும்
என்பதை ‘ப்ரதிபதா’ காண்பிக்கிறது!

‘வாழ்வில் எதை சாதிக்க வேண்டும்  என்பதன் சின்னமாக விளங்குவது சித்திரை வருடப்பிறப்பன்று எழுப்பப்படும் கம்பம். சித்திரை மாதம் முதல் நாள் அன்று அதாவது ‘ப்ரதிபதா’ (பிரதமை) அன்று புதுவருடம் ஆரம்பமாகிறது. ஒவ்வொரு அடியையும் இறைவனை நோக்கி எடுத்து வைக்கவும் மற்றும் ஆற்றலுடன் மேலே பயணிப்பதற்கும் ஒவ்வொரு க்ஷணமும் விலைமதிப்பற்றதாகும். இதன் மதிப்பை உணர்வதற்கு ஒவ்வொரு க்ஷணமும் நமக்கு வாய்ப்பு கிட்டுகிறது. ‘இதை உணர்ந்து வாழ்வை நடத்திக் கொள்ள வேண்டும்’ என்பதை ப்ரதிபதா உணர்த்துகிறது.

சித்திரை வருடப்பிறப்பன்று உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை முழுவதும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். லக்ஷியத்தை நோக்கி பயணிக்கும் சமயம் ஒவ்வொரு க்ஷணமும் அந்த கண்ணோட்டத்தில் திறனுடன் அடுத்த அடியை எடுத்து வைப்பதே ‘ப்ரதிபதா’! ப்ரதிபதா என்றால் ‘ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தல்’ என்று பொருள். இறப்பு எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. ப்ரதிபதா என்றால் ஒவ்வொரு க்ஷணமும் எச்சரிக்கையுடன் உங்களின் லக்ஷியத்தை நோக்கி முன்னேறுவது ஆகும். ப்ரதிபதா என்றால் ஒவ்வொரு க்ஷணமும் எச்சரிக்கையுடன் இருப்பது ஆகும்.

2.    வேப்பிலையின் ஆற்றல்

கம்பத்தில் ஏன் வேப்பிலைக் கொத்தைக் கட்டுகிறோம்? வேப்பிலை கசப்பாக இருந்தாலும் குணம் நிரம்பியது. உண்மையும் இவ்வாறு கசப்பாகவே உள்ளது. அதனால் கம்பத்தில் இதை கட்டுகிறார்கள். இது வனஸ்பதி வர்க்கத்தை மரியாதை செய்யும் செயலாகும்.

ஆயுர்பலம் யஷோ வர்ச: பிரஜா: பசுவசூனி ச |
பிரம்ம பிரக்ஞாம் ச மேதாம் ச த்வம் நோ தேஹி வனஸ்பதே ||

–        அஷ்வத்தஸ்தோத்ர, ஸ்லோகம் 12

அர்த்தம் : ஹே வனஸ்பதே, நீ எங்களுக்கு ஆயுள், பலம், புகழ், தேஜஸ், பிரக்ஞா (நல்ல ஞானம்), கால்நடைகள், செல்வம் மற்றும் பிரம்மத்தை நோக்கி செல்லும், பிரம்மத்தை உணரும் தேஜஸ் நிரம்பிய புத்தி ஆகியவற்றைத் தா.

இதன் மூலம் ‘வனஸ்பதியில் எவ்வளவு சாமர்த்தியம் உள்ளது’ என்பது தெரிகிறது. அதற்கு மரியாதை செய்யும் முகமாக இந்த பண்டிகையின் போது அதற்கு மகத்துவம் அளிக்கப்படுகிறது.

3.    கலசம், ஞானசக்தியின் சின்னம்!

சித்திரை வருடப்பிறப்பன்று மூங்கில் கம்பத்தின் நுனியில் கவிழ்க்கப்பட்ட கலசம் வைக்கும் வழக்கம் உள்ளது. இந்த கலசம் ஞானசக்தியின் சின்னமாக விளங்குகிறது. அந்த கலசமே மணிமகுடம் போல் உள்ளது. அதை எழுப்புவது என்பது வெற்றி அடைவதைக் குறிக்கிறது.

4.    கம்பம் என்பது தியாகம் நிரம்பிய வாழ்க்கையின் சின்னம்!

கம்பம் என்பது தியாகம் நிரம்பிய வாழ்க்கை வாழ்வதைக் குறிக்கிறது. அது ஜாஜ்வல்யமாக இருக்க வேண்டும். அதை வெறும் சின்னமாக பார்க்காமல் அதிலுள்ள சைதன்ய சக்தியை உணர வேண்டும்.  அதற்கு குருவிடமிருந்து ஞானத்தை அதாவது தீக்ஷையை பெற வேண்டும். அவர் நமக்கு சிக்ஷை தருகிறார், அதாவது நம்மை சுற்றியுள்ள ஆவரணத்தை நீக்குகிறார். அதற்கு பிராயசித்தமும் செய்ய வேண்டும்.

பிராயசித்தமே சிக்ஷை ஆகும். சிக்ஷையிலிருந்து சிக்ஷா என்ற வார்த்தை வந்துள்ளது. சிக்ஷகர், பரீக்ஷை, பரீக்ஷண், கக்ஷா போன்ற வார்த்தைகள் க்ஷ எழுத்து கொண்டவை. அதன் பிறகு தேறியவர்களுக்கு ‘ஸமாவர்த்தன் க்ரியா’ செய்யப்படுகிறது. அதாவது ‘ஆவரணத்தைக் களைந்து அருகில் அழைத்துக் கொள்வது’ என்ற இறுதி நிலை.

5.    வாழ்க்கை சம்சாரத்தை சமபுத்தியுடன்
சம உணர்வுடன் பார்க்க வேண்டும்!

சம்சாரம் என்பது சம உணர்வின் சாரம்! அதனால் சமத்துவ புத்தியுடன் மற்றும் சம உணர்வுடன் வாழ்க்கையை அணுக கற்றுக் கொள்ள வேண்டும். ‘ஸமத்வம் யோக உச்யதே’ (ஸ்ரீமத்பகவத்கீதை, அத்யாயம் 2, ஸ்லோகம் 48) என்றால் ‘சமநிலை உணர்வை யோகம் என்று கூறுவர்’ என்று கீதை கூறுகிறது.

6.    கம்பை நடுவதற்கு ஏன் மூங்கில் உபயோகப்படுத்தப்படுகிறது?

மூங்கில் என்பது சுஷும்னா நாடியின் சின்னமாக உள்ளதால் அதன் மூலம் உடல் எங்கும் சைதன்ய சக்தி (குண்டலினி சக்தி) செயல்படுகிறது. அதை ஆராதனை செய்து, விழிப்படைய செய்து அதன் மூலம் காரியங்கள் நடப்பதற்கு அதனிடம் ஆவாஹனம் செய்வதற்காக அதற்கு பூஜை செய்யப்படுகிறது. அந்த சக்தியை அலங்கரிக்க வேண்டும்; அதற்காக மூங்கிலுக்கு வஸ்திரம் அணிவிக்கப்படுகிறது.

பாகவத அத்யாயம் 5-ல் துந்துக்காரி மற்றும் கோகர்ணன் ஆகியோரின் கதை வருகிறது. அவர்கள் இருவரும் சகோதரர்கள். துந்துக்காரி தீய இயல்பு கொண்டவன். தீய இயல்பால் பாவம் உண்டாகிறது. இறப்பிற்கு பின்னர் பயங்கர பிறவி கிடைக்கிறது. கோகர்ணன் ஸாதனை செய்வதற்காக வனத்திற்கு செல்கிறான். அங்கு இறந்து போன துந்துக்காரி பல்வேறு ரூபங்களை எடுத்து தன்னை உத்தாரணம் செய்யுமாறு வேண்டுகிறான். கோகர்ணன் அவனுக்காக பாகவதம் சொல்ல ஆரம்பிக்கிறான். கதையைக் கேட்பதற்காக துந்துக்காரி வாயு ரூபமெடுத்து அங்குள்ள மூங்கிலுக்குள் நுழைந்து அமர்ந்து கொள்கிறான். எப்பொழுதெல்லாம் ஒவ்வொரு அத்யாயம் பூர்ணமாகிறதோ அப்பொழுதெல்லாம் மூங்கிலின் ஒவ்வொரு கண் உடைந்து போகிறது. இது போன்று ஏழு நாட்கள் நடந்த பாகவத பாராயணத்தால் துந்துக்காரியின் எல்லா போகங்களும் நஷ்டமடைகின்றன.

இந்தக் கதை மூலமாக மூங்கிலின் மகத்துவம் தெரிய வருகிறது. ஜீவனின் உத்தாரணத்திற்கு சுஷும்னா நாடி சுத்தமாக இருப்பது அவசியம். அதன் மூலம் அந்த ஜீவனும் சுத்தமாகிறது. இந்த சாமர்த்தியம் மற்றும் ரகசிய ஞானம் இந்த பாகவத விஷயத்திலிருந்து கவனத்திற்கு வருகிறது.

இது போன்று கம்பத்தின் மகத்துவம் அதிகம். ஜீவனின் ஆதர்சமாக விளங்கும் கம்பம் நமக்கு நம்முடைய ஜீவனின் ரகசிய ஞானத்தை வழங்குகிறது.’

–  (பராத்பர குரு) பரசுராம் பாண்டே, ஸனாதன் ஆஸ்ரமம், தேவத், பன்வேல். (28.3.2017)

 

Leave a Comment