சுய ஆலோசனை வழங்கும் வழிமுறை – 1

ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தைக் களையும் செயல்முறையை பலனளிக்கும் வகையில் செய்வதற்கு உதவும்
பல்வேறு சுய ஆலோசனை வழிமுறைகளின் மகத்துவம் !

இக்காலத்தில் ‘ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தைக் களையும் செயல்முறை’க்காக முயற்சிப்பது அசாதாரண மகத்துவம் நிறைந்ததாகிறது. இந்த செயல்முறையை உன்னத முறையில் நடைமுறைப்படுத்த உதவும் மிக முக்கிய அங்கமே ‘சுய ஆலோசனை’ வழங்குதல் ஆகும்! சுய ஆலோசனையை அதற்குரிய சரியான வழிமுறைப்படி வழங்கும்போது ஸாதகர்களின் ஆளுமை குறைகளும் அஹம்பாவமும் பெருமளவு குறைகிறது. அதன் மூலமாக அவர்களின் ஆனந்தம் அதிகமாகிறது. அதற்காக பல்வேறு சுய ஆலோசனை வழிமுறைகளைப் பற்றிய விரிவான விளக்கங்களை மற்றும் வழிகாட்டுதல்களை இக்கட்டுரைத் தொகுப்பில் தருகிறோம். (கட்டுரை எண். 1)

1.   சுய ஆலோசனை என்றால் என்ன?

சுயமாக செய்த தவறான காரியங்கள், மனதில் ஏற்பட்ட தவறான சிந்தனைகள், உணர்வுகள் மற்றும் வெளிப்பட்ட, வெளிப்படாத மனதிலுள்ள எதிர்மறை எண்ணங்கள் ஆகியவை சம்பந்தமாக தானே சுயமாக தன் ஆழ்மனதிற்கு தரும் ஆலோசனையே ‘சுய ஆலோசனை’ ஆகும்.

2.   தினமும் எவ்வளவு முறை சுய ஆலோசனை
செயல்முறையை செய்ய வேண்டும்?

ஸாதகர்கள் ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தைக் களையும் செயல்முறையை பின்பற்றுகின்றனர்; டைரியில் தவறுகள் சம்பந்தமான சுய ஆலோசனைகளை எழுதுகின்றனர். ஒவ்வொரு தவறான செயலுக்காகவும் நியமமாக தானே தன் ஆழ்மனதிலுள்ள தவறை சரி செய்வதற்கு சுய ஆலோசனை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்குவதால் குறைந்த காலத்திற்குள் தவறான செயல்கள் சரியாக்கப்படுகின்றன. ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவ தன்மைகளை முழுவதுமாகக் களைய தினமும் 7 முறை, அல்லது தீவிரம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் 8 – 10 முறை கூட சுய ஆலோசனைகளை வழங்கலாம். தினமும் ஒரே குறிப்பிட்ட சமயத்தில் சுய ஆலோசனைகளை வழங்குங்கள். இவ்வாறு நேர ஒழுங்குமுறை இல்லையென்றால் ஆளுமையில் நாம் எதிர்பார்க்கும் மாற்றம் ஏற்படாது.

3.   சுய ஆலோசனை வழங்குவதில் பல்வேறு வழிமுறைகள்

சுய ஆலோசனை வழிமுறையின் எண் வழிமுறையின் விளக்கம்
அ 1 தவறான செயல், சிந்தனை மற்றும் உணர்வால் ஏற்படும் பரிணாமத்தை மனதில் இருத்தி சரியான செயல் மற்றும் சிந்தனைக்கான கண்ணோட்டம் வழங்குதல்
அ 2 மனதில் ஏற்படும் வெளிப்பட்ட, வெளிப்படாத எதிர்எண்ணங்களின் இடத்தில் நேர்மறையான எண்ணங்களை பதிவு செய்தல் (1-2 நிமிடங்களே நீடிக்கக் கூடிய எதிர்எண்ணத்தின் இடத்தில் நேர்மறை எண்ணத்தை பதிவு செய்ய இவ்வழிமுறை பயன்படுத்தப்படுகிறது.)
அ 3 சம்பவத்தை பயின்று மனதில் ஏற்படும் தவறான எதிர்மறை எண்ணத்தின் இடத்தில் நேர்மறை எண்ணத்தைப் பதிவு செய்தல் (1-2 நிமிடங்களுக்கு மேல் அதிக நேரம் நீடிக்கும் சம்பவத்தில் எதிர்மறை எண்ணத்தின் இடத்தில் நேர்மறை எண்ணத்தை பதிவு செய்ய இவ்வழிமுறை பயன்படுத்தப்படுகிறது.)
ஆ 1 மற்றவர்களின் ஆளுமை குறைகளைக் களைய உதவி செய்து தன் மன அழுத்தத்தைக் குறைப்பது மற்றும் சூழலை மாற்றுவது (இவ்வகை சுய ஆலோசனை வழிமுறை நம் அதிகாரத்திற்குட்பட்டவர்களின் ஆளுமை குறைகளைக் களைய பயன்படுத்தலாம், உதா. ஆசிரியர் – மாணவர், பெற்றோர் – குழந்தைகள், எஜமானர் – வேலையாள் ஆகியோருக்கு இவ்வழிமுறை பயன்படும்.)
ஆ 2 மற்றவர்களின் ஆளுமை குறைகளை அல்லது மோசமான சூழ்நிலையை மாற்ற முடியாதபோது நிகழ்வை சாக்ஷி உணர்வுடன் பார்ப்பது
இ 1 தொடர்ந்து நாமஜபத்தை செய்வதன் மகத்துவத்தை மனதில் பதிய வைப்பது
இ 2 ‘அ 1’ முதல் ‘இ 1’ வரையிலான வழிமுறைப்படி  சுய ஆலோசனைகள் வழங்கிய பின்பும் அவ்வப்பொழுது தவறான செயல்கள் மற்றும் எண்ணங்கள் ஏற்பட்டால் தன்னைத் தானே கிள்ளிக் கொள்வது போன்ற தண்டனைகளைத் தருவது

4.   ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தில்
விரைவான மாற்றத்தைக் காண சரியான ஆலோசனை
வழிமுறையைக் கைக்கொள்வதன் பயன்!

‘மேற்கூறப்பட்ட பல்வேறு வழிமுறைகளின்படி சுய ஆலோசனைகள் வழங்க வேண்டும்’ என்பது பற்றி பலருக்கு தெரிவதில்லை. தவறுகளின் தன்மைக்கேற்ப அதற்குரிய வழிமுறையைக் கையாண்டு சுய ஆலோசனை தருவதால் எதிர்பார்க்கும் மாற்றம் விரைவில் ஏற்படுகிறது. இக்காரணத்தால் ஸாதகர்கள் பல்வேறு சுய ஆலோசனை வழிமுறைகளைக் கையாண்டு சுய ஆலோசனைகளை வடிவமைத்து தொடர்ந்து நியமமாக ச்ரத்தையுடன் மனதிற்கு வழங்கினால் நல்ல மாற்றத்தை அனுபவபூர்வமாக உணரலாம்.

5.   ‘ஆழ்மனதிற்கு தரப்படும் சுய ஆலோசனை
சரியானதுதானா ?’ என்பதை எவ்வாறு உணர்வது ?

நம் மூலமாக வழங்கப்படும் சுய ஆலோசனை சரியானதாக இருந்தால் சிறிது காலத்திற்குள் மனம் அமைதியாக லேசாக மாறும், அத்துடன் கொடுக்கப்பட்ட சுய ஆலோசனைப்படி சிந்தனை மற்றும் செயலில் நல்ல மாற்றத்தை உணர முடியும்.

மேற்கூறப்பட்ட சுய ஆலோசனை வழிமுறையை (‘அ1’, ‘அ2’, ‘அ3’, ‘ஆ1’, ‘ஆ2’, ‘இ1’ மற்றும் ‘இ2’) ஆங்கிலத்தில் ‘ஏ.பி.ஸி. டெக்னிக்’ (ABC Technique) என்பர்.

6.   ஸாதகர்களே, சுய ஆலோசனை வழிமுறை சம்பந்தமான
இந்த தகவல்களை எழுதி சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள் !

ஸாதகர்கள் சுய ஆலோசனை வழிமுறைகள் சம்பந்தமான இந்த தகவல்களை தங்களின் நோட்டுப் புத்தகங்களில் எழுதி வைத்துக் கொள்ளலாம். நடுநடுவே இதைப் படித்து புரிந்து கொள்ளலாம். மற்றவர்களின் வ்யஷ்டி ஸாதனை பற்றிய மதிப்பாய்வு செய்யும் ஸாதகர்களும் இத்தகவல்களை எழுதி சேகரித்து வைத்துக் கொள்ளலாம். மற்றவர்களுக்கு உதவும் நேரத்தில் இத்தகவல்கள் கை கொடுக்கும்.’

– (ஸத்குரு) திருமதி பிந்தா ஸிங்க்பால், ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா. (23.12.2017)

Leave a Comment