சுய ஆலோசனை வழங்கும் வழிமுறை – 6

கீழே பணிபுரிபவர்களின் ஆளுமை குறைகளால்
ஏற்படும் மன அழுத்தம் நீங்க ஒரு அதிகாரி வழங்க
வேண்டிய ‘ஆ1’ சுய ஆலோசனை வழிமுறை!

இக்காலத்தில் ‘ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தைக் களையும் செயல்முறை’க்காக முயற்சிப்பது அசாதாரண மகத்துவம் நிறைந்ததாகிறது. இந்த செயல்முறையை உன்னத முறையில் நடைமுறைப்படுத்த உதவும் மிக முக்கிய அங்கமே ‘சுய ஆலோசனை’ வழங்குதல் ஆகும்! சுய ஆலோசனையை அதற்குரிய சரியான வழிமுறைப்படி வழங்கும்போது ஸாதகர்களின் ஆளுமை குறைகளும் அஹம்பாவமும் பெருமளவு குறைகிறது. அதன் மூலமாக அவர்களின் ஆனந்தம் அதிகமாகிறது. அதற்காக பல்வேறு சுய ஆலோசனை வழிமுறைகளைப் பற்றிய விரிவான விளக்கங்களை மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டு வருகிறோம். இதற்கு முன்பு சுய ஆலோசனை ‘அ3’ வழிமுறையைப் பார்த்தோம். இன்று ‘ஆ1’ சுய ஆலோசனை வழிமுறையைப் பற்றி தெரிந்து கொள்வோம். (கட்டுரை எண். 6)

சில சமயங்களில் மற்றவர்களின் தவறுகளால் மனதில் அழுத்தம் ஏற்பட்டு கவலைப்படுதல் போன்ற தவறான எதிர்எண்ணங்கள் மனதில் எழும்புகின்றன. இது போன்ற தவறான எதிர்எண்ணங்களை நீங்க நம்மிடம் சரியான கண்ணோட்டம் ஏற்படுவதுடன் எதிரிலுள்ள நபரிடமும் நல்ல மாற்றம் ஏற்படுவது அவசியம். அதற்கு ஒரு அதிகாரத்திலுள்ள நபர் (அதாவது, பெற்றோர், ஆசிரியர், முதல்வர், முதலாளி, பொறுப்பிலுள்ள ஸாதகர்) அவரின் அதிகாரத்திற்கு உட்பட்ட நபரின் சம்பந்தமாக, ‘ஆ1’ சுய ஆலோசனை வழிமுறையை உபயோகித்து சுய ஆலோசனை வழங்கிக் கொள்ளலாம். தாய்-தந்தையர் தங்களின் குழந்தைகள் சம்பந்தமாக, ஆசிரியர் மற்றும் முதல்வர் மாணவர்கள் சம்பந்தமாக, ஒரு காரியாலயத்தின் அதிகாரி அங்கு பணி புரிபவர்கள் சம்பந்தமாக, அதேபோல் பொறுப்பிலுள்ள ஸாதகர் அவருடன் சம்பந்தப்பட்ட ஸாதகர்கள் சம்பந்தமாக இந்த சுய ஆலோசனை வழிமுறை மூலமாக சுய ஆலோசனை வழங்கினால் அவர்களின் மன அழுத்தம் குறைவதற்கு உதவி கிடைக்கும்.

1.   அதிகாரத்திலிருப்பவர் ஸாம, தாம, தண்ட மற்றும் பேத
என்ற நிலைகளுக்கேற்ப மகன், மாணவன், பணி புரிபவர்
மற்றும் ஸாதகர் ஆகியோருக்கு புரிய வைத்து அதன் மூலம்
தங்களின் மன அழுத்தத்தைப் போக்கடித்துக் கொள்ளலாம்

மகன், மாணவன், பணி புரிபவர் ஆகியோர் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அதிகாரத்திலுள்ள நபர் ஸாம, தாம, தண்ட, பேத என்ற முறைப்படி அத்தவறை அவர்களுக்குப் புரிய வைக்கலாம். நபர் மற்றும் சூழ்நிலை ஆகியவற்றிற்கு ஏற்றபடி பல்வேறு தீர்வுகளைத் தேர்ந்தெடுத்து, அதாவது முதல் படியில் அவர்களுக்கு எடுத்துக் கூறி புரிய வைத்து, நஷ்டத்திற்கான பணத்தை வசூலிக்கலாம். இதனால் திருந்தவில்லை என்றால் கடும் வார்த்தைகளால் திட்டியும் அதுவும் பயனில்லை என்றால் தண்டனை வழங்கியும் அதிகாரத்திலுள்ளவர் அந்நபருக்கு புரிய வைக்க முயற்சிக்கலாம்.

‘இந்த சுய ஆலோசனை வழிமுறைப்படி சுய ஆலோசனையை எவ்வாறு வழங்க வேண்டும்?’ என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

2.   ஸாதகர் – பெற்றோர் எடுக்க வேண்டிய சுய ஆலோசனை

சம்பவம் : பள்ளி மாணவனாக இருக்கும் சுரேஷ் தினமும் முழு நேரமும் விளையாடுவதில் செலவழித்து விட்டு சிறிதும் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை.

சுய ஆலோசனை : ‘எப்பொழுது சுரேஷ் படிக்காமல் நாள் முழுவதும் விளையாடுவதில் நேரத்தை செலவழிக்கிறானோ, அப்பொழுது அவனிடம் படிப்பின் முக்கியத்துவத்தை பதிய வைக்க அவனுக்கு சுய ஆலோசனை வடிவமைத்து தருவேன் மற்றும் அந்த சுய ஆலோசனையை அவன் தினசரி வழங்குவதற்கு உதவி செய்வேன்.’

இது சம்பந்தமான சுய ஆலோசனையில் ‘படிக்காவிட்டால் பாஸாக முடியாது மற்றும் சக மாணவர்கள் அனைவரும் அடுத்த வகுப்பிற்கு சென்று விடுவர்’, என்ற கண்ணோட்டத்தை உடைய சுய ஆலோசனையை சுரேஷுக்கு அமைத்துக் கொடுப்பேன்’, என்றும் சேர்த்துக் கொள்ளலாம். (இதில் ‘படிக்கவில்லை என்றால் பாஸாக முடியாது மற்றும் மற்ற அனைவரும் அடுத்த வகுப்பிற்கு சென்று விடுவர்’, என்ற கண்ணோட்டம் மாணவர்களுக்கு பயம் ஏற்பட வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்டது அல்ல, மாறாக, நன்றாக கல்வி பயில்வதன் மகத்துவம் அவர்களின் மனங்களில் பதிய வேண்டும் என்பதற்காக ஆகும்.)

பெற்றோர் எடுத்துக் கொள்ளும் சுய ஆலோசனையில் உள்ள கண்ணோட்டம் குழந்தைகள் ஏற்றுக் கொள்வதாக இருக்க வேண்டும்! : பெற்றோர் மேலே கூறியபடி சுய ஆலோசனையை வடிவமைக்கும்போது ‘எந்த கண்ணோட்டத்தைக் கொண்டால் குழந்தைகள் ஏற்றுக் கொள்வார்கள்?’, என்பதை அவர்களுடன் மனம் விட்டு பேசி தெரிந்து கொள்ள வேண்டும், பிறகு சுய ஆலோசனையை அந்த கண்ணோட்டப்படி அமைக்க வேண்டும். குழந்தைகள் ஓரளவிற்கு பெரியவர்களாக இருந்தால் இவ்வாறு செய்யலாம். ஆனால் வயதில் மிக சிறியவர்களாக இருக்கும் பட்சத்தில் ‘சரியான கண்ணோட்டம் எது?’ என்பதை பெற்றோரே தீர்மானிக்க வேண்டும்.

3.   பொறுப்பிலுள்ள ஸாதகர் எடுத்துக் கொள்ள வேண்டிய சுய ஆலோசனை

பலமுறை எடுத்துக் கூறியும் ஸாதனையில் சரியான கண்ணோட்டத்துடன் போதிய முயற்சி எடுக்காமல் இருக்கும், திரும்பத் திரும்ப அதே தவறுகளை செய்யும் ஸாதகர்களின் பொறுப்பை ஏற்றுள்ள ஸாதகர் (பிரசார சேவகர், ஜில்லா சேவகர், ஸமிதி சேவகர், ஆச்ரம சேவகர், வ்யஷ்டி மதிப்பாய்வு சேவகர் ஆகியோர்) கீழே கூறியுள்ளவாறு சுய ஆலோசனையை வழங்கிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஸாதகர்களை நல்ல முறையில் கையாண்டு அவர்களின் காரியங்கள் மற்றும் ஸாதனையின் பலனை அதிகரிக்க செய்ய முடியும்.

அ. முதல் உதாரணம்

சம்பவம் : அருண் சேவையை காலந்தாழ்த்தி  செய்கிறார். அதனால் காரியங்களில் பல தடங்கல்கள் ஏற்படுகின்றன. அதை அவருக்கு அவ்வப்பொழுது தெரிவித்தும் கூட அடிக்கடி அதே தவறை செய்கிறார்.

சுய ஆலோசனை : ‘எப்பொழுது அருண் மூலமாக சேவை உரிய நேரத்தில் முடிக்கப்படாமல் தாமதமாகிறதோ அப்பொழுது ‘அவர் மூலம் சேவை முடிய ஏன் இவ்வளவு தாமதம் ஆகிறது?’ என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அதற்குரிய தீர்வு யோசனையை செய்வேன்.’ (இங்கு சேவையின் கால அளவு முடிவதற்கு முன்பு அருணிடம் மதிப்பாய்வு செய்வேன் மற்றும் அவ்வப்பொழுது மதிப்பாய்வு தரும்படி அவரிடம் கூறுவேன்’ மற்றும் ‘சேவை நேரத்துடன் முடிய அவரை சக ஸாதகர்களின் உதவியை நாட செய்து சேவையை நேரத்துடன் முடிக்கக் கூறுவேன்’, என்பது போன்ற சிறப்பு தீர்வுடைய கண்ணோட்டத்தை எடுத்துக் கொள்ளலாம்.)

ஆ . இரண்டாவது உதாரணம்

சம்பவம் : ஆன்மீக கஷ்டம் இருப்பதால் சாந்தி 5 மணி நேரம் நாமஜபம் செய்ய வேண்டும் என்று மகான் கூறியிருந்தாலும் சாந்தியால் தொடர்ந்து நாமஜபத்தை செய்ய முடிவதில்லை.

சுய ஆலோசனை : (‘ஒரே சம்பவத்திற்கு 2 வெவ்வேறான வழிகளில் எவ்வாறு சுய ஆலோசனை வழங்குவது?’ என்பது பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.)

அ. ‘எப்பொழுது சாந்தி தினமும் 5 மணி நேரம் நாமஜபம் செய்வதற்கு பதிலாக சேவைக்கு முக்கியத்துவம் தருகிறாரோ அப்பொழுது நான் அவரிடம், நாமஜபத்தின் மகத்துவம் மனதில் பதிய உதவும் சுய ஆலோசனையை எடுத்துக் கொள்ள சொல்வேன்.’

ஆ. ‘எப்பொழுது சாந்தி 5 மணி நேர நாமஜபத்தை முழுவதும் முடிக்காமல் சேவைக்கு முக்கியத்துவம் தருகிறாரோ அப்பொழுது நாமஜபத்தை முழுவதும் முடிக்குமாறு நான் நடுநடுவே அவருக்கு நினைவுபடுத்துவேன்.’

இ. பொறுப்பிலுள்ள ஸாதகர் செய்ய வேண்டிய பிரார்த்தனை : பொறுப்பிலுள்ள ஸாதகருக்கு பல்வேறு இயல்வுகள் உடைய ஸாதகர்களின் தொடர்பு ஏற்படுகிறது. ‘அவர்கள் அனைவரையும் கையாள்வது சுலபமாக இருக்க வேண்டும்’, என்பதற்காக அவர் பின்வரும் பிரார்த்தனையை செய்து வரலாம். ‘ஹே இறைவா, எல்லா ஸாதகர்களின் இயல்புகளையும் நீ அறிவாய். ‘இந்த ஸாதகர் மூலமாக ஸாதனை மற்றும் சேவையை எவ்வாறு செய்விப்பது? ‘அவருக்கேற்ற ஆன்மீக உபாயத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது?, என்பதை நீயே எனக்கு சொல்லிக் கொடு’, என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.’

4.   அதிகாரத்திலுள்ள நபரின் குணங்கள் அதிகரிக்க ‘ஆ 1’ வழிமுறையை அவர் கையாளலாம்!

அதிகாரத்திலுள்ள நபர், தன் அதிகாரத்திற்கு உட்பட்டவரிடம் ஒவ்வொரு முறையும் தண்டனை முறையை கையாள வேண்டும் என்பது அவசியம் இல்லை. சில சமயங்களில் அன்புடன் எடுத்துரைத்தல், சில சமயங்களில் கடுமையாகக் கூறி அவரை சரியான செயல் எதுவென்று உணரச் செய்தல் மற்றும் ஒவ்வொருவரின் இயல்பிற்கு ஏற்ப அவரிடம் மாற்றம் ஏற்பட எது அவசியமோ அதை செய்வது ஆகியவை அவரிடம் எதிர்பார்க்கப்படுகிறது. அதன் மூலம் அதிகாரத்திலுள்ள நபர் தன் குணங்களை வளர்த்துக் கொள்ள முடியும்.

‘ஆ 1’ வழிமுறைப்படி சுய ஆலோசனை கொடுத்து வரும்போது பெற்றோர், பொறுப்பிலுள்ள ஸாதகர், முதலாளி ஆகியோருக்கு விரைவில் மன அழுத்தம் குறைகிறது; அதோடு குழந்தைகள், ஸாதகர் மற்றும் பணி புரிபவர்கள் ஆகியோர் மூலமாக சரியான செயல்கள் நடக்க ஆரம்பிக்கின்றன.

சில சமயங்களில் அதிகாரத்திலுள்ள நபருக்கு அவர்களின் பொறுப்பிலுள்ள குழந்தைகள், பணிபுரிபவர்கள் மற்றும் ஏனைய ஸாதகர்கள் ஆகியோரிடம் அபரிமிதமான எதிர்பார்ப்பு உள்ளது. இது போன்ற சமயங்களில் எதிர்பார்ப்பு குறைவதற்கு பெற்றோர், முதலாளி, பொறுப்பிலுள்ள ஸாதகர் ஆகியோர் ‘அ1’ அல்லது ‘அ2’ ஆகிய சுய ஆலோசனை வழிமுறைகளை கடைபிடித்து சுய ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

– (ஸத்குரு) திருமதி. பிந்தா ஸிங்க்பால், ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா. (2.1.2018)

 

Leave a Comment