சுய ஆலோசனை வழங்கும் வழிமுறை – 3

மனதில் எழும் சிந்தனை மற்றும்
எதிர்மறை எண்ணம் ஆகியவற்றிலுள்ள வேறுபாட்டை
எவ்வாறு அடையாளம் காண்பது?

இக்காலத்தில் ‘ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தைக் களையும் செயல்முறை’க்காக முயற்சிப்பது அசாதாரண மகத்துவம் நிறைந்ததாகிறது. இந்த செயல்முறையை உன்னத முறையில் நடைமுறைப்படுத்த உதவும் மிக முக்கிய அங்கமே ‘சுய ஆலோசனை’ வழங்குதல் ஆகும்! சுய ஆலோசனையை அதற்குரிய சரியான வழிமுறைப்படி வழங்கும்போது ஸாதகர்களின் ஆளுமை குறைகளும் அஹம்பாவமும் பெருமளவு குறைகிறது. அதன் மூலமாக அவர்களின் ஆனந்தம் அதிகமாகிறது. அதற்காக பல்வேறு சுய ஆலோசனை வழிமுறைகளைப் பற்றிய விரிவான விளக்கங்களை மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டு வருகிறோம். இதற்கு முந்தைய கட்டுரையில் ‘அ1’  சுய ஆலோசனை வழிமுறையைப் பற்றித் தெரிந்து கொண்டோம். இனி மேற்கொண்டு தெரிந்து கொள்ளலாம். (கட்டுரை எண். 3)

‘மனதில் எழும் சிந்தனைக்கும் எதிர்எண்ணத்திற்கும் உள்ள வேறுபாட்டை பெரும்பான்மையான ஸாதகர்கள் அறிவதில்லை. அதனால் சுய ஆலோசனையை வடிவமைக்க அவர்கள் சரியான சுய ஆலோசனை வழிமுறையைக் கையாள்வதில்லை. ஸாதகர்கள் இவற்றிலுள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கீழ்க்கண்ட குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.   சிந்தனை

அ. சிந்தனை என்றால் என்ன? : ஒருவரின் மனதில் நாள் முழுவதும் பல்வேறு சிந்தனைகள் எழும்புகின்றன. ‘ஒருவரின் சித்தத்தில் தவறான ஸன்ஸ்காரம்’ பதிந்திருந்தால் அது தவறான சிந்தனையாக வெளிப்படுகிறது.

ஆ. தவறான சிந்தனைக்கான உதாரணம்

ஆ 1. தவறான சிந்தனை : கார்த்திக்கும் விவேக்கும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது ‘அவர்கள் என்னைப் பற்றித்தான் பேசுகிறார்கள்’ என்ற சிந்தனை ஏற்பட்டது.

ஆ 2. சுய ஆலோசனை : ‘எப்பொழுது கார்த்திக்கும் விவேக்கும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது ‘அவர்கள் என்னைப் பற்றித்தான் பேசுகிறார்கள்’ என்ற சந்தேகம் எழுகிறதோ அப்பொழுது காரணமில்லாமல் சந்தேகப்படுவதால் என் மனதின் எதிர்மறை தன்மை அதிகரிக்கிறது என்பதை உணர்வேன். அதைத் தடுப்பதற்கு நான் என் ஸாதனையின் மீது கவனம் செலுத்துவேன்.’

இதில் பிரசாத், கார்த்திக்கும் விவேக்கும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது பார்த்துள்ளார். அவர்களுடன் நேரடி தொடர்பு கொள்ளாமலேயே பிரசாத்தின் மனதில் எதிர்மறை சிந்தனை ஏற்பட்டது. அதனால் ‘இந்நிகழ்வு தவறான சிந்தனைக்கான உதாரணம்’ என சொல்லலாம்.

2.   எதிர்எண்ணம்

எதிர்எண்ணம் என்றால் என்ன? : ஏதாவது ஒரு சம்பவத்தில் நிலைமையைப் பற்றியோ அல்லது ஒரு நபரைப் பற்றியோ வழங்கும் மறுமொழியே எதிர்எண்ணம் ஆகும். எப்பொழுது இந்த மறுமொழி தவறான முறையில் வெளிப்படுகிறதோ அல்லது மனதில் தோன்றுகிறதோ, அப்பொழுது அதை ‘தவறான எதிர்எண்ணம் வெளிப்படுதல் அல்லது மனதில் எழுதல்’ எனக் கூறலாம். எதிர்எண்ணம் வெளிப்படுதல் அல்லது மனதில் எழுதல் என்பது சம்பவம், இடம், காலம், நேரம், சூழ்நிலை, நபர் மற்றும் ஒருவரின் நடவடிக்கை ஆகியவற்றைப் பொருத்தது.

ஏதாவது ஒரு சம்பவத்தில் மனதிற்கு விரோதமாக நடந்ததால் தவித்துப் போதல், கோவத்தில் பொருட்களை வீசி எறிதல், ஒருவரைத் திட்டி அவருடன் பேசாமல் இருத்தல் மற்றும் அவரை அடித்தல்  போன்ற நடவடிக்கைகளும் தவறான எதிர்எண்ணத்தின் உதாரணங்களாகும்.

தவறான எதிர்எண்ணத்தின் உதாரணம்

அ. எதிர்எண்ணம் : அம்பிகா என் தவறை சுட்டிக் காட்டியபோது மனம் நிலைகொள்ளாமல் தவித்தது.

ஆ. சுய ஆலோசனை : ‘எப்பொழுது அம்பிகா என் தவறை சுட்டிக் காட்டியபோது மனம் நிலைகொள்ளாமல் தவிக்கிறதோ அப்பொழுது ‘தவறை பூரணமாக ஏற்றுக் கொள்வதற்கான சிந்தனையை செய்வதற்கு எனக்கு சிறிது நேரம் தேவை’ என்பதை உணர்ந்து நான் என் தவறை முழுவதுமாக கேட்டு பின் சிந்தனை செய்வேன்.’

‘தவறான எதிர் எண்ணம்’ என்பது பரிணாமம் ஆகும். தவறான எதிர்எண்ணம் ஏற்படுவதற்கும் அல்லது வெளிப்படுவதற்கும் ஆளுமை குறை அல்லது அஹம்பாவம் ஆகியவை செயல்படுதலே காரணம். ‘தவறான எதிர்எண்ணம் ஏற்படுவதன் காரணத்தைக் கண்டுபிடிக்கும் சமயத்தில் எந்த ஆளுமை குறை அல்லது அஹம்பாவ தன்மை கவனத்திற்கு வருகிறதோ அதுவே மூல ஆளுமை குறை அல்லது அஹம்பாவ தன்மையாகும்’ என்று கூறலாம்.

3.   சிந்தனை மற்றும் எதிர் எண்ணத்திலுள்ள வேறுபாடு

‘சம்பவம் ஒன்றே, ஆனாலும் அதனால் மனதில் எழுவது, தவறான சிந்தனையா அல்லது தவறான எதிர்எண்ணமா என்று எவ்வாறு அடையாளம் காண்பது?, என்பது பற்றி கீழே உள்ள அட்டவணை விளக்குகிறது.

சம்பவம் : ‘சக ஸாதகர் சேவையில் உதவ வேண்டும்’, என எதிர்பார்ப்பது

தவறு  தவறு எப்பொழுது
ஏற்பட்டது?
மனதின் தவறான சிந்தனை
அல்லது எதிர்எண்ணம், இவற்றுள் எதனால் தவறு நேரிட்டது?
1. ‘சக ஸாதகர் என் சேவையில் உதவ வேண்டும்’ என எதிர்பார்த்தது. நிகழ்வு நடப்பதற்கு முன் தவறான சிந்தனை
2. சக ஸாதகரிடம் உதவி வேண்டிய பின் அவர் தன் இயலாமையைத் தெரிவித்தார். அப்பொழுது ‘இவர் எனக்கு உதவி புரியவில்லை’ என்று தோன்றியது. நிகழ்வு நடக்கும்போது தவறான எதிர்எண்ணம்
3. ‘அவர் எனக்கு உதவி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். என் சேவையும் நேரத்துடன் முடிந்திருக்கும்’, என்ற சிந்தனையால் மனம் நிலைகொள்ளாமல் தவித்தல் நிகழ்வு நடந்து முடிந்த பின் தவறான எதிர்எண்ணம்

4. மனதில் தவறான எதிர்எண்ணம் எழும்போது
அதன் மூல ஆளுமை குறை மற்றும் அஹம்பாவ தன்மை, அதோடு
பரிணாமமாக நிர்மாணமாகும் ஆளுமை குறை மற்றும் அஹம்பாவ தன்மை
ஆகியவற்றிற்கு ஒரே சமயத்தில் சுய ஆலோசனை வழங்கும் வழிமுறை

சம்பவம் : நான் கூறுவதை சக ஸாதகர் கேட்கவில்லை; அதனால் எனக்கு கோவம் வந்தது.

விளக்கம் : இதில் ‘கோவம் வந்தது’, என்பது தவறான எதிர்எண்ணம் ஆகும்; ஆனால் கோவம் ஏற்பட்ட காரணத்தைத் தேடினால் ‘நான் கூறுவதை சக ஸாதகர் கேட்க வேண்டும்’, என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் ‘எதிர்பார்த்தல்’, என்ற மூல அஹம்பாவ தன்மை செயல்பாட்டில் உள்ளது என்பது கவனத்திற்கு வருகிறது. ‘கோவம் வருதல்’, என்பது எதிர்பார்ப்பு நிறைவேறாததால் ஏற்பட்ட பரிணாமம் ஆகிறது.

சில சமயங்களில் ‘கோவம் வருதல்’ என்ற விஷயத்திற்காக நெடுங் காலத்திற்கு சுய ஆலோசனை வழங்கிய பின்பும் கோவம் குறைவதில்லை. அதற்குரிய காரணத்தை ஆராயும்போது அதன் மூல அஹம்பாவ தன்மையான ‘எதிர்பார்த்தல்’ செயல்பாட்டில் உள்ளது என்பது கவனத்திற்கு வருகிறது. அந்த சமயத்தில் கோவம் வருவதால் ஏற்படும் மனத் தவிப்பை போக்குவதற்கு ‘அ2’ சுய ஆலோசனை வழிமுறையை கடைபிடித்து சுய ஆலோசனையை வடிவமைக்க வேண்டும். அத்துடன் ‘எதிர்பார்த்தல்’ என்ற அஹம்பாவ தன்மையை அழிப்பதற்கு ‘அ1’ வழிமுறைப்படி சுய ஆலோசனை வழங்க வேண்டும். இந்த சம்பவத்தில் ‘எதிர்பார்த்தல்’ மற்றும் ‘கோவம் வருதல்’ ஆகியவற்றிற்கு ஒரே சுய ஆலோசனையை வடிவமைத்து வழங்குவதற்கு முயற்சிக்கலாம். அதன் மூலம் விரைவில் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

ஸாதகர்கள் இது போன்று தவறான சிந்தனை மற்றும் தவறான எதிர்எண்ணம் ஆகியவற்றிடையே உள்ள வேறுபாட்டை உணர்ந்து சுய ஆலோசனை வழங்க வேண்டும். தவறான சிந்தனை, செயல் மற்றும் உணர்வு ஆகிய நிலைகளில் நடக்கும் தவறுகளுக்கு ‘அ1’ வழிமுறைப்படியும், தவறான எதிர்எண்ணம் சம்பந்தமாக நடக்கும் தவறுகளுக்கு ‘அ2’ வழிமுறைப்படியும் சுய ஆலோசனை வடிவமைத்து வழங்க வேண்டும்.’

– (ஸத்குரு) திருமதி பிந்தா ஸிங்க்பால், ஸனாதன் ஆச்ரமம், ராம்நாதி, கோவா. (23.12.2017)

 

Leave a Comment