நாகபஞ்சமியில் நாகத்தின் மகத்துவம்


சேஷ நாகம் தன் தலையில் பூமியைத் தாங்குகிறது. அதற்கு ஆயிரம் தலைகள் உண்டு. ஒவ்வொரு தலையிலும் ஒரு வைரம் உள்ளது. ஸ்ரீவிஷ்ணுவின் தமோ குணத்திலிருந்து உருவானது அது. ஸ்ரீவிஷ்ணு ஒவ்வொரு கல்பத்தின் முடிவிலும் பாற்கடலில் அனந்த சயனத்தில் பள்ளி கொண்டிருக்கிறார். த்ரேதா யுகத்தில் அவர் ஸ்ரீராமனாக அவதரித்தார். அப்பொழுது சேஷன் லக்ஷ்மணனாக அவதரித்தார். துவாபர மற்றும் கலியுகம் சந்திக்கும் வேளையில் கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்தது. அச்சமயம் சேஷன் பலராமனாக அவதாரம் செய்தார்.

ஸ்ரீகிருஷ்ணன் யமுனா நதியில் காளிங்கனின் மீது நர்த்தனம் ஆடினார். அன்றைய தினம் ஆடி மாதத்தில் சுத்த பஞ்சமி அன்று வருகிறது.

‘நாகங்களில் நான் ‘அனந்த’னாக உள்ளேன்’ என பகவான் ஸ்ரீகிருஷ்ணன் பகவத்கீதையில் (அத்தியாயம் 10, ஸ்லோகம் 29) கூறியுள்ளான்.

அனந்தம் வாசுகிம் சேஷம் பத்மநாபம் ச கம்பலம் |

ஷங்கபாலம் திருதராஷ்ட்ரம் தக்ஷகம், காலியம் ததா ||

அனந்த, வாசுகி, சேஷ, பத்மநாப, கம்பல, ஷங்கபால, திருதராஷ்ட்ர, தக்ஷக மற்றும் காளிய ஆகிய ஒன்பது நாகங்கள் வழிபடப்படுகின்றன. அதன் மூலம் சர்ப்ப பயம் நீங்குகிறது; விஷம் இறங்குகிறது.

‘நாகபஞ்சமி பூஜைவிதி (அர்த்தத்துடன்)’ இந்த வலைதள முகவரியில் உள்ளது

www.sanatan.org/mr/a/984.html  www.sanatan.org/mr/a/986.html

Leave a Comment