நாகங்களின் ஆன்மீக மகத்துவம் மற்றும் நாகபஞ்சமி

 

1. நாகங்களின் நிர்மாணம்

கஷ்யப ரிஷி மற்றும் கத்ரு ஆகியோரின் மூலமாக எல்லா நாகங்களும் உண்டாயின.

 

2. நாகங்களின் வகைகள்

2அ. தாமஸீக நாகங்கள்

இந்த நாகங்கள் முக்கியமாக கருப்பு நிறத்துடன் இருப்பதுடன் அவை பாதாளத்தில் உள்ள நாகலோகத்தில் வசிக்கின்றன. மிகப் பெரிய தீய சக்தி சூட்சும யுத்தம் புரியும்போது விஷப் பிரயோகம் செய்து அவர்களின் எதிரிகளைத் தாக்குவதற்கு இந்த நாகங்களை அஸ்திரங்களாக பயன்படுத்துகின்றனர். பாதாளத்திலுள்ள நாகங்கள் பூமியிலுள்ள நாகங்களைக் காட்டிலும் லட்சம் மடங்கு அதிக திறன் வாய்ந்தவை மற்றும் ஆயிரம் மடங்கு அதிக விஷம் கொண்டவை.

2ஆ. ராஜஸீக நாகங்கள்

இந்த நாகங்கள் பூமியில் வசிக்கின்றன. நாகயோனி மூலமாக பிறப்பு ஏற்பட்டதால் இந்த நாகங்களின் செயல்பாடுகள் சர்வ சாதாரண நாகங்களைப் போல் உள்ளன. அவை கருப்பு, நீலம், மரம், சாக்லேட் போன்ற நிறங்களில் உள்ளன.

2இ. ஸாத்வீக நாகங்கள்

இந்த நாகங்கள் தெய்வீகமானவை ஆதலால் அவை சிவலோகத்திற்கு அருகில் இருக்கும் தெய்வீக நாகலோகத்தில் உள்ளன. அவை பொன்னிறமாக உள்ளன மற்றும் அவற்றின் தலையில் சிவப்பு அல்லது நீல நாகமணி உள்ளது. ஸாத்வீக நாகங்கள், பாதாள நாகங்களுடன் ஒப்பிடும்போது லட்சம் மடங்கு அதிக திறன் வாய்ந்தவை. ஸாத்வீக நாகங்களை பல்வேறு தெய்வங்கள் உடலில் ஆபரணமாக தரித்துள்ளனர். சிவனின் கழுத்தில் வாசுகி உள்ளது. கணபதியின் தொந்தி வயிற்றை சுற்றி விச்வகுண்டலினியின் ரூபகமாக விளங்கும் பொன்னிற பத்மனாபம் உள்ளது. ஸ்ரீவிஷ்ணு சேஷ நாகத்தின் மீது சயனித்துள்ளார். ஸாத்வீக நாகங்கள் சித்தபுருஷர்கள் மற்றும் ரிஷிமுனிவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவை அவர்களின் ஆணைக்கு கட்டுப்படுகின்றன. பொன்னிற நாகங்கள் உச்ச தெய்வங்களை உபாசனை செய்வதால் அவற்றிடம் தெய்வீக பலம் உள்ளது. அதனால் அவை ஆசீர்வாதம் அளிக்கும் சக்தி படைத்தவை மற்றும் ஸங்கல்ப சக்தியால் காரியங்களை நடத்துவிக்கும் சக்தி பெற்றவை.

 

3. மூதாதையர் மற்றும்
நாகங்களிடையே உள்ள பரஸ்பர சம்பந்தம்

புவர்லோகம் மற்றும் பித்ருலோகத்தில் மாட்டிக் கொண்டுள்ள மூதாதையர் பெரும்பாலும் அவர்களின் சந்ததியினருக்கு கருப்பு நாக வடிவில் காட்சி தருகின்றனர். ஸாத்வீகமான மூதாதையர்கள் பொன்னிற நாகவடிவில் தரிசனம் தந்து ஆசீர்வாதமும் நல்குகின்றனர். வீடு, செல்வம் மற்றும் குடும்பம் ஆகியவற்றின் மீது மிகுந்த பற்று வைத்துள்ள மூதாதையர் பூமியில் நாகங்களாக பிறக்கின்றனர். மனிதப்பிறவியில் மற்றவருக்கு கஷ்டம் அளித்து தீய வழியில் பணம் சம்பாதித்த மூதாதையர்களுக்கு, பாதாளத்தில் கருப்பு நாகங்களாக பிறவி கிடைக்கின்றது. தெய்வ காரியங்களில் பங்கேற்கும் மற்றும் நல்ல குணவான்களாக உள்ள மூதாதையர்கள் பித்ருலோகத்தில் வசித்த பிறகு சில காலம் சிவலோகத்திற்கு அருகாமையிலுள்ள தெய்வீக நாகலோகத்தில் பொன்னிற நாகங்களாக வசிக்கின்றனர்.

 

4. கலியுகத்தில்
மனிதர்கள், நாகங்கள் வசிக்கும்
பாம்புபுற்றுகளை முழுவதும் அழித்து விட்டதால் மனிதர்களுக்கு நாகங்களால் கஷ்டங்கள் ஏற்படுகின்றன

கலியுக ஆரம்பம் வரை பல்வேறு இடங்களில் தெய்வங்களுக்கு அவர்களுக்குரிய சுதந்திர ஸ்தானங்கள் வழங்கப்பட்டன, உதாரணத்திற்கு ஸ்தான தேவதை, கிராம தேவதை, எல்லை காக்கும் தெய்வங்கள் போன்றவை. அதேபோல் பாரதத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் நாகங்கள் வசிப்பதற்காக பாம்புபுற்றுகள் இருந்தன. அங்கு பெரிய பெரிய மரங்கள் அடர்ந்து வளர்ந்தன, அவற்றின் வேருக்கு அருகில் மண் புற்றுகள் காணப்பட்டன. ஒவ்வொரு கிராமத்திலும் நாகங்கள் அங்கு வசித்தன. (இது போன்ற பாம்புபுற்றுகள் கர்நாடக மாநிலத்தில் முல்கி, ஸுரத்கல் போன்ற இடங்களில் இன்றும் பார்க்கலாம்.) நாகங்களுக்கு சுதந்திரமான ஸ்தானம் தந்திருந்ததால் அவை மனிதர்களை தொந்தரவு செய்யவில்லை, அத்துடன் மனிதர்களை அவர்களின் செல்வத்தைக் காத்தது. விஞ்ஞான யுகத்தில் மனிதர்கள் உலக முன்னேற்றம் அடைவதற்காக கிராமம் கிராமமாக இருந்து வந்துள்ள பாம்பு புற்றுகளை அழித்து அவ்விடத்தில் பெரிய பெரிய கட்டிடங்களை எழுப்பினர். அதனால் மனிதர்கள் பாம்புகளால் ஏற்படும் கஷ்டங்களை பொறுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

– குமாரி மதுரா போஸ்லே (சூட்சுமத்தில் கிடைத்த ஞானம்)

‘கேரள மாநிலத்தில் சில இடங்களில் இது போன்று பாம்பு புற்றுகளை அழித்து அங்கு கட்டிடங்களை எழுப்பியதால் அங்கு வசிக்கும் ஹிந்துக்களுக்கு நாகதோஷம் ஏற்பட்டு கனவில் நாகங்கள் வருவது, வீட்டில் உள்ளவருக்கு எப்பொழுதும் உடல்நிலை சரியில்லாமல் போதல் போன்ற தொந்தரவுகள் ஏற்படுகின்றன’ என்று ஒரு ஸாதகர் சில வருடங்களுக்கு முன்பு என்னிடம் கூறினார்.

 

5. நாகபஞ்சமியின் இதிகாசம் மற்றும் பூஜைவிதி

5 அ. காளிங்கமர்த்தன திதி

ஸ்ராவண சுக்ல பக்ஷ பஞ்சமி திதியில் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் கோகுலத்தில் யமுனா நதியில் காளிங்கனின் தலை மேல் நாட்டியம் ஆடினான்.

5 அ 1. ஸர்ப்பயக்ஞம் நடந்த தினம்

இன்றைய தினம் ஆஸ்திக ரிஷி கூறியபடி ஜனமேஜய ராஜா ஸர்ப்பயக்ஞம் செய்வதை நிறுத்தினான் மற்றும் ஆஸ்திக ரிஷி உலகிலுள்ள அனைத்து நாகங்களுக்கும் அபயம் அளித்தார்.

5 ஆ. பூஜை விதி

இன்றைய தினம் பாம்பாட்டிகள் பாம்பைக் கொண்டு வருகின்றனர். நாகங்களுக்கு பூஜை செய்து அவற்றிற்கு பால் வார்க்கின்றனர். வீட்டில் மர மணையில் சந்தனம், மஞ்சள் மற்றும் குங்குமம் ஆகியவற்றைக் கலந்த கலவையின் மூலம் ஐந்து தலை நாகத்தை வரையவும் மற்றும் ரக்தசந்தனத்தால் ஒன்பது தலை நாகத்தை வரையவும். நாகத்தை பூஜிக்கும்போது அனந்தன், வாசுகி, சேஷ, பத்மநாப, கம்பல், ஷங்கபால், திருதராஷ்டிரா, தக்ஷக மற்றும் காளிங்க ஆகிய ஒன்பது நாகங்களின் பெயரை சொல்லி சந்தனம், அக்ஷதை மற்றும் பூக்களை அர்ப்பணிக்கவும். வீட்டிலுள்ளவர்கள் பூக்கள், அருகம்புல், அரிசிப்பொரி, பச்சைக்காய்கறிகள் ஆகியவற்றை அர்ப்பணிக்கவும்.

5 ஆ 1. பூஜையின் பலன்

நவ நாகங்களின் பூஜையை செய்வதால் நாகபயம் விலகுகிறது மற்றும் விஷம் ஏறும் கஷ்டம் நீங்குகிறது.’

குமாரி மதுரா போஸ்லே, ஸனாதன் ஆச்ரமம், ராம்னாதி, கோவா. (9.7.2017)

Leave a Comment