எந்த தெய்வத்திற்கு எந்த மற்றும் எவ்வளவு பத்ரத்தை (இலையை) சமர்ப்பிக்க வேண்டும்?

தெய்வத்திற்கு உகந்த பூச்செடிகளின் பத்ரத்தை (பூஜையில் உபயோகிக்கப்படும் குறிப்பிட்ட இலைகள்) அர்ப்பணிப்பது அதிக பலனைத் தரும். பத்ரம் என்பது நிற அணுக்களுடனும் மலர்கள் என்பது சுகந்த அணுக்களுடனும் சம்பந்தப்பட்டவை. நிற அணுக்களுக்கும் சுகந்த அணுக்களுக்கும் உள்ள வேறுபாடுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை காண்பிக்கிறது :

நிற அணுக்கள் சுகந்த அணுக்கள்
1. வெளிப்படும் அதிர்வலைகளின் தன்மை தெய்வங்களின் ஒளி வட்டத்துடன் சம்பந்தப்பட்டது ஒளியை சுமந்து வருபவை
2. செயல்பாடு தெய்வத்தின் சகுண ரூபம் உடனே வெளிப்பட உதவுதல் தெய்வத்தை செயல்பட வைத்தல்

பஞ்ச வித பத்ரங்களை தெய்வங்களுக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும். இவை பஞ்சமஹாபூதங்களை குறிக்கின்றன – பிருத்வி தத்துவம் (நிலம்), ஆப தத்துவம் (நீர்), தேஜ தத்துவம் (நெருப்பு), வாயு தத்துவம் (காற்று), ஆகாச தத்துவம் (ஆகாயம்). பஞ்ச வித பத்ரங்களை சமர்ப்பிப்பதன் மூலம், பஞ்சமகாபூதங்களின் உதவியுடன் பக்தனுக்கு தேவைப்பட்ட ஒளி உருவத்தில் தெய்வம் வெளிப்படுகிறது. இந்த ரூபத்திலிருந்து வெளிப்படும் அதிர்வலைகள், மலர்களிலிருந்து வெளிப்படும் அதிர்வலைகள் மூலமாக பக்தனை சென்று அடைகிறது. அதனால்தான், பத்ரம், புஷ்பம் ஆகிய இரண்டையும் சமர்ப்பிப்பதால் ஒரு பக்தனுக்கு இறைவனின் சகுண (வெளிப்பட்ட) மற்றும் நிர்குண (வெளிப்படாத) தத்துவங்களின் அதிகபட்ச பலன்கள் கிடைக்கின்றன.அதனால் பூஜை வழிபாட்டில் பத்ரமும் புஷ்பமும் மிகவும் அவசியம். (சத்குரு (திருமதி) அஞ்சலி காட்கில் மூலமாக, 27 ஏப்ரல் 2005, மாலை 5.32)

 

புனித துளசி

ஏன் துளசியும் வில்வமும்
எப்பொழுதும் புனிதமாக கருதப்படுகின்றன?

துளசி

வில்வம்

சாதாரணமாக துளசியில் 50% ஸ்ரீவிஷ்ணு தத்துவமும் வில்வத்தில் 70% சிவ தத்துவமும் உள்ளன. பூஜை வழிபாட்டில் உபயோகப்படுத்தும்போது அவற்றிலுள்ள தெய்வீக தத்துவங்கள் 20% அதிகரிக்கின்றன. சூழ்நிலையிலுள்ள ரஜ-தம தன்மைகள் ஒவ்வொரு பொருளையும் பாதிக்கின்றன. அதிகப்படியான 20% தெய்வீக தத்துவம் சூழ்நிலையிலுள்ள இந்த ரஜ-தம தன்மைகளை முறியடிக்க உதவுகின்றன. இதன் ஸ்தூல பரிணாமமாக துளசி தளங்களும் வில்வ தளங்களும் வாடி சுருங்கிப் போனாற்போல் காணப்படுகின்றன. இருந்தாலும் அவற்றில் மூல ரூபத்தில் உள்ள தெய்வீக தத்துவங்களை அவை வெளிப்படுத்துகின்றன. அதனால் துளசியும் வில்வமும் எப்பொழுதும் புனிதமாகவே கருதப்படுகின்றன. (குமாரி மதுரா போஸ்லே மூலமாக, 5 ஜனவரி 2005, இரவு 9.11)

புனித துளசி தொடர்ந்து தெய்வீக தத்துவத்தை வெளிப்படுத்துவதால் சுற்றுப்புற சூழலும் புனிதமாகிறது. அதனால்தான் வீட்டில் ஒரு துளசி பிருந்தாவனம் இருப்பது அவ்வீட்டை புனிதமாக்குகிறது.

பூஜை வழிபாட்டில் பத்ரங்களைக் காட்டிலும்
புஷ்பங்களுக்கு ஏன் அதிக மகத்துவம் அளிக்கப்படுகிறது?

தேஜ தத்துவத்துடன் சம்பந்தப்பட்ட பத்ரங்கள் (இலைகள்) இறைவனின் நிராகார (உருவமில்லாத) வழிபாட்டின் சின்னமாக விளங்குகிறது; ஆனால் மலர்களிடமுள்ள சுகந்தம் மற்றும் நிறங்களால் அவை இறைவனின் சகார (உருவமுள்ள) வழிபாட்டில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.

மலர் வழிபாடு (குறிப்பு 1) இலை வழிபாடு
1. எதைக் குறிக்கிறது? சகுண வழிபாடு நிர்குண வழிபாடு
2. செயல்பாடு பிருத்வி தத்துவ மற்றும் ஆப தத்துவ கூறுகளை இணைத்து தேஜ தத்துவத்தை உருவாக்குதல் தேஜ தத்துவ அதிர்வலைகளை வெளிப்படுத்துவது
3. ஆன்மீக பயிற்சியின் எந்த நிலையில் ஒருவர் இதை உபயோகிக்க வேண்டும்? ஆரம்ப நிலையில் இவ்வாறு உருவாக்கப்படும் தேஜ தத்துவத்தை ஒருவரால் க்ரஹித்துக் கொள்ள முடிகிறது ஆன்மீக நிலை உயரும்போது இவ்வாறு வெளிப்படும் அதிர்வலைகளை ஒருவரால் க்ரஹித்துக் கொள்ள முடிகிறது

குறிப்பு 1 : தெய்வத்தின் சகுண தத்துவத்தை இலைகளைக் காட்டிலும் மலர்கள் அதிகமாக உள்வாங்கிக் கொள்கின்றன; ஏனென்றால் மலர்களிடம் சுகந்தம் மற்றும் நிற அணுக்கள் நிறைந்துள்ளன. அதனால் மலர்களால் இறைவனின் சகுண தத்துவத்தை இலைகளைக் காட்டிலும் அதி வேகமாக ஈர்த்துக் கொள்ள முடிகிறது.

Leave a Comment