பாரத தேசமே ஹிந்து ராஷ்ட்ரம் என்பதற்கான சரித்திர, புராண, இதிஹாச ஆதாரங்கள்!

தேசத்தின் பலவித
பெயர்கள் மற்றும் இதிஹாஸம்

ஹிந்துஸ்தான்

பவிஷ்யபுராணப்படி ஸிந்துவின் மேற்கு பகுதி ஹிந்துஸ்தான் என்ற பெயருடன் பிரபலமாக உள்ளது.

பாரதம்

பரத சக்கரவர்த்தி, காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரையிலும் ஸிந்து நதியிலிருந்து பிரம்மபுத்ரா நதி வரையில் உள்ள எல்லா பிரதேசங்களையும் ஒரு குடையின் கீழ் ஆண்டார். அதனால் இந்த பிரதேசம் ‘பாரதம்’ என்றும் ‘பாரத்வர்ஷ்’ என்றும் கூறப்படுகிறது. விஷ்ணுபுராணம் (அம்ச 2, அத்தியாயம் 3, ஸ்லோகம் 1 பாரதத்தின் நான்கு எல்லைகளை விவரிக்கும்போது

உத்தரம் யத் ஸமுத்ரஸ்ய ஹிமாத்ரேஷ்சைவ தக்ஷிணம் |
வர்ஷம் தத் பாரதம் நாம பாரதி யத்ர ஸந்ததி: ||

அர்த்தம் : ஸமுத்திரத்திற்கு வடக்கேயும் ஹிமாசலத்திற்கு தெற்கேயும் உள்ள இடமே பாரதவர்ஷ ஆகும். இங்குள்ள குடிமக்களை பாரத குடிமக்கள் எனக் கூறுவர்.

இண்டியா

ஸிந்துவை இண்டஸ் எனக்கூறும் கிரேக்கர்களால் ஐரோப்பாவிற்கு பாரதத்தைப் பற்றி தெரிய வந்ததால் அவர்களும் பாரதத்தை ‘இண்டியா’ எனக் கூறினர்.

 

ஹிந்து தர்மமே பாரதீயவாசிகளின் தேசீயம் ஆகும் மற்றும் பாரதபூமியே ஹிந்து ராஷ்ட்ரம்

ஐந்து காண்டங்களையுடைய பூமண்டலத்தில் பாரதகண்டம் (பாரதம்) எல்லாவற்றைக் காட்டிலும் உன்னதமான புண்ணிய பூமியாகும்; காரணம் இங்கு ஸனாதன தர்மத்தின் இருப்பு உள்ளது. மஹரிஷி அரவிந்தர் கூறினார், பாரதீயவாசிகளான எங்களுக்கு ஹிந்து தர்மமே தேசீயம் ஆகும். ஹிந்து தர்மத்தைப் போன்றே ஹிந்து ராஷ்ட்ரத்தின் பிறப்பும் ஏற்பட்டுள்ளது. ஹிந்து தர்மத்தின் நிலையை சார்ந்தே இந்த தேசத்தின் முன்னேற்றமும் உள்ளது.

எந்த ஜன சமூகத்தின் மொழி, தர்மம் மற்றும் சம்ப்ரதாயம், பரம்பரை, பூமியின் பரப்பளவு மற்றும் இதிஹாஸம் பொதுவானதாக உள்ளதோ அதுவே ‘ராஷ்ட்ரம்’ ஆகும். அதேபோல் தேசீயம் நிர்மாணமாவதற்கான மிக முக்கிய தேவை, அந்த சமூகத்தை ராஷ்ட்ரமாக்குவதற்கான திட உறுதி. ‘ரேனன்’ என்ற மேற்கத்திய சிந்தனையாளர், மக்களின் இதயங்களில் உண்டாகும் ஒரேயான இச்சையும் உத்வேகமுமே ராஷ்ட்ரம் உருவாவதற்கான மூல ஆதாரமாக விளங்குகிறது எனக் கூறியுள்ளார். இந்த ஆழ்மன உணர்ச்சியும் உத்வேகமுமே ராஷ்ட்ரத்தின் ஆத்மாவாகும். தேசம் மற்றும் தேசீயத்தின் மூல தத்துவம் மற்றும் லக்ஷணங்கள் என்ற கண்ணோட்டத்தில் ஹிந்து சமூகத்தைப் பார்த்தால், ‘ஹிந்து ராஷ்ட்ரம்’ என்ற விஷயம் நன்கு விளங்கும். பாரதத்தின் ஆன்மீக மற்றும் கலாச்சார பரம்பரை வைதீகமானது. இங்குள்ள மொழிகள் ஸம்ஸ்க்ருதத்திலிருந்து தோன்றியவை. அதனால் காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரை எல்லா தார்மீக விதிகளும் வைதீக வழியில் மற்றும் ஸம்ஸ்க்ருத மொழியில் செய்யப்படுகின்றன.

அதனால் பாரதபூமி என்பது வெறும் ஹிந்து பெரும்பான்மை பூமி மட்டும் அன்று, அது ஒரு தானே தோன்றிய ஸ்வயம்பு ஹிந்து ராஷ்ட்ரமாகும். ஹிந்து தர்மம் எப்பொழுது ராஜாக்களால் போற்றப்படுகிறதோ அப்பொழுது இந்த பூமியில் ஹிந்து ராஷ்ட்ரம் மலர்கின்றது. ஸிந்துவின் ராஜாவான தாஹிர், லாஹுரின் மஹாராஜாவான ஜய்பால், தில்லியின் ஸம்ராட் ப்ருத்விராஜ் சவ்ஹாண், ராணா ஹம்மீர், ராணா சங், மஹாராணா ப்ரதாப், விஜயநகரின் கிருஷ்ணதேவராயர், சத்ரபதி சிவாஜி மஹராஜ், மஹாராணி லக்ஷ்மிபாய், ராஜா கும்பர்சிங் போன்ற எல்லா ராஜாக்களின் நோக்கம் இஸ்லாமிய ஆக்கிரமிப்பிலிருந்து தேசத்தை விடுவித்து இங்கு ஹிந்து ராஷ்ட்ரத்தை ஸ்தாபனம் செய்வதே ஆகும்.

 

ஹிந்து என்பது ஒரு பூகோள வார்த்தை; அது தேசத்துடன் சம்பந்தப்பட்டது என்பது தெளிவு!

அராபியர்கள் 712 வருடம் ஸிந்துவை ஆளத் துவங்கினார்கள். லாஹூர் வரையிலுள்ள மேற்கு பஞ்சாப் நில பிரதேசம் 1020 கஜினியின் ஆளுகைக்கு உட்பட்டது. இன்றைய பாகிஸ்தான் 1020 முதலில் உருவானது. ஆனால் ஹிந்துக்கள் அதற்கென்று ஒரு தனி அந்தஸ்தை எப்பொழுதும் தந்ததில்லை. மஹாராஜா ரணஜித்சிங் மற்றும் ஹரிசிங் நலுவா ஆகியோர் அதே வருடமான 1020 கைபர் பாஸ் வரை கைப்பற்றி பாகிஸ்தான் என்ற பிரதேசத்தை இல்லாமல் செய்தனர். சிறிது வருடங்களுக்கு பிறகு மறுபடியும் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது. பிறகு 18 நூற்றாண்டில் புனே நகரத்திலிருந்து புறப்பட்ட மராத்திய குதிரைகள் ஸிந்து நதியில் தண்ணீரைப் பருகிய பின்னர் தான் ஓய்வெடுத்தது. காவிக்கொடி, லாஹூர், பெஷாவர் மற்றும் அடாக் எல்லையைத் தாண்டி பறந்தது. இது போன்று நமது முன்னோர்களான ஹிந்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துப் போராடி ஹிந்து தேசமான ஹிந்துஸ்தானத்திற்கு பெருமை சேர்த்தனர். இதிலிருந்து ‘ஹிந்து’ என்பது தேசத்தை குறிக்கிறது என்பது தெரிகிறது.

 

பாரதபூமியை தாய்நாடாக
கருதுவது ஹிந்துக்களின் தேசீயம் ஆகும்!

புராதன காலத்திலிருந்தே ஹிந்துக்களின் மனம் தேசபக்தியிடம் ஈர்க்கப்பட்டுள்ளது. அதனால் ஹிந்துஸ்தானமே தாய்நாடு என போற்றப்படும் முதல் தேசமாகும். பிரபு ஸ்ரீராம் லக்ஷ்மணனிடம் கூறுகிறார்,‘ஜனனீ ஜன்மபூமிஸ்ச ஸ்வர்க்காதபி கரீயஸி’. இதன் அர்த்தம் தாயும் தாய்நாடும் ஸ்வர்க்கத்தைக் காட்டிலும் உன்னதமானது! சிகாகோவிலிருந்து (அமெரிக்கா) கிளம்பி பாரத எல்லையை அடையும் தருணம் விவேகானந்தர் கூறினார், ‘இத்தருணத்தில் எனக்கு ப்ரியமான தாய்நாட்டிலிருந்து வீசும் காற்று மட்டுமல்ல அதிலிருந்து கிளம்பும் தூசியும் எனக்கு ப்ரியமானதாக தோன்றுகிறது’. இங்கிலாந்தில் ஒரு முறை சமுத்திரத்தைப் பார்த்து வீர ஸாவர்க்கர் ‘ஹே சமுத்திரமே, என்னை திரும்பவும் என் தாய்நாட்டிற்கு அழைத்து செல். என் மனம் பதைக்கிறது’ எனக் கதறி காவியம் எழுதினார்.

விஷ்ணுவின் ஏழாவது அவதாரம், ஒரு சன்யாசி மற்றும் ஒரு போராட்ட வீரர் மேற்கூறியபடி வெளிப்படுத்திய தேசப்பற்று, ஹிந்துக்களின் மனதில் மறைந்து காணப்படும் தேசபக்தியின் வெளிப்பட்ட ரூபமாகும். இன்றும் வந்தே மாதரம் உச்சரிக்கும்போதே ஹிந்துக்கள் பாரதமண்ணில் நெற்றிபட தலை வணங்குகின்றனர்.

 

பிரிவினைக்குப் பின்னர் பாரதத்தை ஹிந்து ராஷ்ட்ரம் என அறிவிக்காதது ஹிந்துக்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியாகும்!

1947 வருடம் பாரதம் இரண்டாக துண்டாடப்பட்டபோது பாரதத்திலுள்ள முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய சித்தாந்தத்தை ஆதாரமாகக் கொண்ட பாகிஸ்தான் என்ற தனி ராஷ்ட்ரம் கிடைத்தது. 1947 முஸ்லிம்களின் ஜனத்தொகை 22 % ஆக இருந்தது. ஆனால் பாரத பூமியின் 30% நிலம் அவர்களுக்குரிய ராஷ்ட்ரமாக கிடைத்தது. யார் பாரதத்தை புண்யபூமியாக பித்ருபூமியாக கருதவில்லையோ அவர்கள் பாகிஸ்தானுக்கு சென்றனர். யார் தங்களின் கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஹிந்து பூமியுடன் தொடர்பு கொண்டது என கருதி இங்கேயே தங்கிவிட்டனரோ அவர்கள் தங்களின் தேசீயத்தை உறுதிப்படுத்தினர். பிரிவினை மூலம் கற்றுக் கொண்டதை கவனத்தில் கொண்டு இந்த தேச மக்களுக்காக பாரதத்தை ஹிந்து ராஷ்ட்ரம் என 1947 வருடத்திலேயே அறிவித்திருக்க வேண்டும்; ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவ்வாறு அறிவிக்கப்படவில்லை!

 

அதர்மமான மதசார்பற்ற ஜனநாயகத்தில் ஹிந்து ராஷ்ட்ரம் என்ற வார்த்தைக்கே இடமில்லை!

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்துள்ள மற்ற மத ஆக்கிரமிப்புகளாலும் சுதந்திரத்திற்கு பின்பு ஆட்சியில் அமர்ந்த மதசார்பற்ற சுயநல அரசியல்வாதிகளாலும் ஹிந்து தர்மத்திற்கு எவ்வித அரசாங்க ஆதரவும் கிடைக்கவில்லை. அதனால் இன்று பாரதபூமியில் ஹிந்து ராஷ்ட்ரம் என்ற வார்த்தைக்கே இடமில்லாமல் போய் விட்டது. பாரதீய ஜனநாயகத்தில் ஹிந்து அரசியல்வாதிகளின் கைகளில் அரசாங்கம் இருந்தாலும் ஹிந்து தர்மத்திற்கு அரசாங்க ஆதரவு இல்லை.

 

தர்ம ஜனநாயகம் பாரதத்தை அதோகதிக்கு தள்ளி விட்டதால் ஹிந்து ராஷ்ட்ர ஸ்தாபனம் மிகவும் அத்தியாவசியமாகி விட்டது!

பண்டைய பாரதத்தில் ஸனாதன வைதிக ஹிந்து தர்மத்திற்கு ராஜாக்களின் முழு ஆதரவு இருந்ததால் அந்த ராஷ்ட்ரம் இக லோக (உலக விஷயங்கள்) மற்றும் பர லோக (ஆன்மீக) முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது. அதனால் நல்லொழுக்கமுள்ள செழுமையான சமூகம், உத்தம வர்ணாஸ்ரம அமைப்பு, உணவு தூய்மை மற்றும் கட்டுக்கோப்பான குடும்ப அமைப்பு ஆகியவை இந்த ஹிந்து தர்மவழி நடக்கும் ராஷ்ட்ரத்தில் காணப்பட்டன. ஆனால் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் தர்ம ஜனநாயக அமைப்பை போற்றிப் புகழும் எல்லா அரசியல் கட்சிகளாலும் நன்நடத்தையுள்ள சமூகத்தினரையும் செழுமையான ராஷ்ட்ரத்தையும் நிர்மாணிக்க இயலவில்லை. மாறாக பல சமூக, தேசீய மற்றும் தார்மீக கஷ்டங்கள் காட்டுத் தீ போல் பரவி தேசத்தை அதோகதிக்கு கொண்டு செல்கின்றன. சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்த கஷ்டங்கள் குறைவதற்கு மாறாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த கஷ்டங்களின் தீவிரத்தை உணர்ந்த பின் நாம் அங்கீகரித்துள்ள ஜனநாயக வழிமுறையின் உபயோகமற்ற தன்மை நன்கு புலப்படும்; அத்துடன் ஹிந்து தர்மத்தை அடிப்படையாக கொண்ட ஹிந்து ராஷ்ட்ர ஸ்தாபனத்தின் அவசியமும் நன்கு புரியும்.

(தகவல் : ஸனாதனின் தமிழ் நூல் ‘ஹிந்து ராஷ்ட்ரம் ஏன் தேவை?’)

Leave a Comment