தர்மவழி நடக்கும் ஹிந்து ராஷ்ட்ரம் எவ்வாறிருக்கும்?

தர்மப்பற்று மற்றும் தேசப்பற்றுடைய வாழ்வை
நடத்த வழிவகுக்கும் உன்னத கலாச்சாரம் மற்றும் அமைப்பு!

ஹிந்து ராஜ்யம் பற்றி சிலருக்கு தவறான கருத்து உள்ளது; சுயநல நோக்குடன் உள்ள ஏதோவொரு அரசியல் கட்சியின் யோசனை இது என அவர்கள் கருதுகின்றனர்; ஆனால், ஹிந்து ராஷ்ட்ரம் என்ற ஸங்கல்பம் அரசியலோடு தொடர்புடையது அல்ல; தர்மப்பற்று மற்றும் தேசப்பற்றுடைய வாழ்வை நடத்த வழிவகுக்கும் உன்னத கலாச்சாரமாக, அமைப்பாக இது விளங்கும்.

 

ஈச்வர ராஜ்யம் என்பது இறைவனின் சங்கல்பத்தால் உருவாக்கப்பட்ட சமூக அமைப்பு!

எப்பொழுதெல்லாம் ஹிந்து ராஷ்ட்ரம் பற்றி பேச்சு வருகிறதோ, ஹிந்துக்களின் தேசம் என்ற குறுகிய மனப்பான்மையோடு அது பார்க்கப்படுகிறது. எனினும், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள், எறும்புகள், மரங்கள், கொடிகள் முதல் மிகவும் சூட்சமமான உயிரினம் வரை அனைத்தின் மேம்பாட்டினையும் சிந்தனையில் இருத்திய, இறைவனின் சங்கல்பத்தால் உருவான ஒரு சமூக அமைப்பாக இது இருக்கும்; எனவே, இதை ஈச்வர ராஜ்யம் என குறிப்பிடலாம்.

 

குடிமக்களின் நலனை ஒரு தந்தை
போல் பேணிக் காக்கும் ஆதர்ச ராஜ்யம்!

தியாக சிந்தனை கொண்ட, நாட்டு நலனில் அக்கறை உடைய தர்ம வழி நடக்கும் சமுதாயம், கடமை உணர்ச்சி கொண்ட பாதுகாப்பு அமைப்பு, ஸத்யத்திற்கு கட்டுப்பட்ட நீதித்துறை அமைப்பு மற்றும் திறனுள்ள நிர்வாகம் போன்றவை ஹிந்து ராஷ்ட்ரத்தின் சில அம்சங்கள்.

ஆட்சியாளர்கள்

அவர்கள் தர்மத்தின் பாதுகாவலர்களாக, நெறிமுறை தவறாதவர்களாக மற்றும் தன்னலமற்றவர்களாக இருப்பர். குடிமக்கள் மீது தந்தையை போன்று அன்பு செலுத்தி அவர்களை தர்மத்தை பின்பற்ற வைப்பர்.

நிர்வாகம்

செயல்பாடு திறமையானதாகவும் வெளிப்படையானதாகவும் இருக்கும். இட ஒதுக்கீடு மூலமாக அல்ல, தேவையான திறமைகள், தகுதி மற்றும் தேசப்பற்றுடைய குடிமக்களே நிர்வாக அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப்படுவர்.

நீதித்துறை

ஹிந்து ராஷ்ட்ரத்தில் ஜனநாயகத்தில் இருப்பது போல் சட்டத்திற்கான நீதிமன்றம் (கோர்ட் ஆஃப் லா) இருக்காது; நியாயத்திற்கான நீதிமன்றமே (கோர்ட் ஆஃப் ஜஸ்டிஸ்) இருக்கும். குடிமக்களுக்கு சரியான, விரைவான நீதி வழங்கப்படும்!

குடிமக்கள்

தர்மத்தை பின்பற்றும், நெறிமுறை தவறாத மற்றும் தேசத்தின் நலனில் அக்கறை உள்ளவர்களாக குடிமக்கள் இருப்பர். உரிமையை கோராமல் தங்கள் கடமைகளை செய்வர். அதனால், எதிர்ப்பு பேரணிகள், கிளர்ச்சி, வேலை நிறுத்தங்கள், பந்த் போன்றவைகள் ஹிந்து ராஷ்ட்ரத்தில் இருக்காது!

மிக முக்கியமாக, தர்மப்பற்று, தேசப்பற்றுடைய, சமுதாய நலனுக்காக ராப்பகலாக உழைக்கக்கூடிய ஆட்சியாளர்கள் ஹிந்து ராஷ்ட்ரத்தின் தூண்களாக இருப்பர். உலகத்தில் ஹிந்து ராஷ்ட்ரம் ஒரு ஆதர்ச ராஜ்யமாக விளங்கும்!

(தகவல் : ஸனாதனின் தமிழ் நூல் ‘ஹிந்து ராஷ்ட்ரம் ஏன் தேவை?)

Leave a Comment