உலகில் ஒரு ஹிந்து ராஷ்ட்ரமாவது உள்ளதா?

உலகத்தில் கிறிஸ்தவர்களுக்கு 157, முஸ்லிம்களுக்கு 52, பௌத்தர்களுக்கு 12, யூதர்களுக்கு 1 என நாடுகள் உள்ளன. ஹிந்துக்களுக்கென்று ஒரு ராஷ்ட்ரம் இந்த சூர்யமண்டலத்தில் எங்கு உள்ளது? ஆம், ஹிந்துக்களுக்கென்று ஒரு ஸனாதன ராஷ்ட்ரம் 1947 வரை இந்த பூமியில் இருந்தது. இன்று அந்த ராஷ்ட்ரத்தின் நிலை என்ன?

 

அப்போதைய பாரதமும் இன்றைய பாரதமும்!

1947 ஒரு ரூபாய் கூட கடன் இல்லாத பாரதத்தில் இன்று ஒவ்வொரு குடிமகனின் தலையிலும் ரூபாய் 32,812 கடன் அழுத்துகிறது. 1947 பாரதம் 33% வரை தன் பொருட்களை ஏற்றுமதி செய்தது; இன்று இது 1% அளவு குறைந்துள்ளது. பாரதத்தில் அப்பொழுது 10 வெளிநாட்டு நிறுவனங்களே இருந்தன; இப்பொழுது அந்த எண்ணிக்கை 5,000 தாண்டி விட்டது.

அப்பொழுது ஒரு மாவட்டம் கூட மதக்கலவரத்திற்கு உட்படவில்லை; ஆனால் இப்பொழுது 300 மேற்பட்ட அத்தகைய மாவட்டங்கள் உள்ளன. 1947 பாரதத்தில் ஒரு குடிமகனுக்கு இரண்டு பசுக்கள் என்ற விகிதாசாரம் இருந்தது; இப்பொழுது பன்னிரண்டு குடிமகன்களுக்கு ஒரு பசு என்ற விகிதத்தில் பசு எண்ணிக்கை குறைந்து விட்டன. கர்சன் வைலீ போன்றோரை புதைக்க அவர்களின் நாட்டிற்கே திருப்பி அனுப்பியது பாரதம்; ஆனால் இப்பொழுதோ பாரதீய பாராளுமன்றத்தை 2001 தாக்கிய அப்ஸல் குருவுக்கு 12 வருடங்களுக்கு பிறகே தூக்குமேடை கிடைத்தது!

விழிப்படைந்த தேசப்பற்று என்ற நிலையிலிருந்து தேசப்பற்றே இல்லாத நாடாக, ஊழலில்லாத தேசம் என்ற நிலையிலிருந்து ஊழலில் முதலிடம் வகிக்கும் நாடாக, அகண்ட, விரிந்து பரந்த எல்லையைக் கொண்ட தேசம் என்ற நிலையிலிருந்து காஷ்மீரை இழக்கும் அபாயத்திலுள்ள நாடாக பாரதத்தின் நிலை தாழ்ந்துள்ளது; பட்டியல் நீள்கிறது.

கண்ணீர் உகுக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். ஆனால் சிறிதும் வெட்கமே இல்லாத பாரதீய அரசியல்வாதிகள் களிப்புடன் சுற்றி வருகின்றனர். கடந்த அறுபது ஆண்டுகளில் பாரதம், மொஹம்மதிய ஆக்கிரமிப்பாளர்களைக் காட்டிலும் நயவஞ்சக ஆங்கிலேயரைக் காட்டிலும் நூறு மடங்கு அதிக அளவு ஜனநாயகத்தின் பலனான அரசியல்வாதிகளால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பதே நிதர்ஸனமான உண்மை. உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயகமான பாரதத்தின் அர்த்தம், மக்களால், மக்களுக்காக, மக்களே நடத்தும் அரசாங்கம் என்பதிலிருந்து சுயநலவாதிகளால் (அரசியல்வாதிகள்) சுயநல நோக்குடன் சுயநலவாதிகளுக்காக (பொதுமக்கள்) நடத்தப்படும் அரசாங்கம் என மாறி விட்டது.

(தகவல் : சனாதனின் தமிழ் நூல் ‘ஹிந்து ராஷ்ட்ரம் ஏன் தேவை?’)

Leave a Comment