ஹிந்து வார்த்தையின் உற்பத்தியும் அர்த்தமும்

ஹிந்து வார்த்தையின் உற்பத்தி

புராதன காலத்திலிருந்தே இந்த தேசத்தின் மக்கள் ஹிந்துக்கள் என அழைக்கப்பட்டனர் மற்றும் இந்த தேசம் பாரதம் அல்லது ஹிந்துஸ்தான் என அழைக்கப்பட்டது. ஸிந்து நதியின் பெயரிலிருந்து ஹிந்து என்ற பெயர் உருவானது. அராபியர்கள், இரானியர்கள், பார்ஸிக்கள் ‘ஸ’ என்ற எழுத்தை ‘ஹ’ என உச்சரிக்கின்றனர். யுனானிக்கள் (கிரேக்கர்கள்) ஸிந்துவை ‘இன்டஸ்’ என உச்சரித்தனர்; அதனால் ஹிந்துக்களை இந்தியர்கள் என அழைத்தனர். சீன மொழியில் ‘ஸிந்து’ என்பது ‘ஷின்டு’ என உச்சரிக்கப்படுகிறது. சீன யாத்திரிகரான ஹுவான் ஸுவாங், தன்னுடைய யாத்திரைக் குறிப்பில் பாரதீயவாசிகளை ‘ஷின்டு’ அல்லது ‘ஹிந்து’ என அழைக்கிறார். சுருக்கமாக, ‘ஹிந்து’ என்ற வார்த்தை கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்கள் ஆரம்பமாவதற்கு முன்பே இருந்து வந்துள்ளது.

அராபிய தேசங்களை சேர்ந்த இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களை ஹிந்துக்களே தீவிரமாக எதிர்த்தனர்; அதனால் ஹிந்துக்களை அவர்கள் காஃபிர் (இஸ்லாமியத்தின் விரோதிகள்) என அழைத்தனர். இக்காரணத்தால்தான், பெர்ஷிய, அராபிய அகராதியில் ஹிந்து என்ற பதத்திற்கு காஃபிர் என்ற அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அராபிய, துருக்கிய, மொகலாய ஆக்கிரமிப்பாளர்களுடன் பலவருடங்களாக நடந்துள்ள போராட்டத்தில், ஹிந்து என்ற வார்த்தை பாரதீயவாசிகளின் சுகம், வெற்றி, உயிர்த்தியாகம் ஆகியவற்றுடன் இரண்டறக் கலந்துள்ளது. இந்த வீர பராக்கிரம செயல்களே ஹிந்து வார்த்தையை புனிதமாக்குகிறது.

 

ஹிந்து வார்த்தையின் தேசமளாவிய அர்த்தம்

ஆஸிந்துஸிந்துபர்யந்தா யஸ்ய பாரதபூமிகா |
பித்ருபூ: புண்யபூஷ்சைவ ஸ வை ஹிந்துரிதி ஸ்ம்ருத: || – வீர ஸாவர்க்கர்

அர்த்தம் : ஸிந்து நதியின் உற்பத்தி ஸ்தானத்திலிருந்து கன்யாகுமரி முனையிலுள்ள சமுத்திரம் வரையிலும் எந்த பாரதபூமியை பித்ரு (மாத்ரு) பூமியாகவும் புண்ய பூமியாகவும் கருதுகிறோமோ அதுவே ‘ஹிந்து’ எனக் அழைக்கப்படுகிறது.

(தகவல் : ஸனாதனின் தமிழ் நூல் ‘ஹிந்து ராஷ்ட்ரம் ஏன் தேவை?)

Leave a Comment