குரு என்றால் யார் ?

ஸாதனை என்ற வார்த்தையின் அர்த்தம்

ஈச்வரனை அடைய ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 2-3 மணி நேரம் உடல், மனம் மற்றும் புத்தியால் செய்யப்படும் முயற்சியே ஸாதனையாகும்.

 

குரு

அ. அர்த்தம் மற்றும் விளக்கம்

1. சிஷ்யனின் அஞ்ஞானத்தைப் போக்கி, அவனது ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட, யார் அவனுக்கு ஸாதனையைக் கற்றுத் தந்து, செய்விக்கின்றாரோ, யார் அவனுக்கு ஆன்மீக அனுபவங்களை அருளுகின்றாரோ அவரே குரு எனப்படுகிறார். குருவின் கவனம் சிஷ்யனின் உலக சுகங்களில் இருப்பதில்லை (ஏனென்றால் அவை விதிப்படி நடக்கின்றன), மாறாக சிஷ்யனின் ஆன்மீக முன்னேற்றத்திலேயே உள்ளது.

2. பரமேச்வரனின் அருளை வழங்கும் சக்தி ஸ்வரூபமே குரு ஆகும்.

ஆ. குரு தத்துவம் ஒன்றே

குரு என்பது ஸ்தூல தேஹம் (உடல்) அன்று. குருவின் சூட்சும தேஹமும் (மனம்) காரண தேஹமும் (புத்தி) கரைந்து போனதால் அவரால் விச்வமனம் மற்றும் விச்வபுத்தியோடு ஒன்ற முடிகிறது. அதாவது எல்லா குருமார்களின் மனமும் புத்தியும் விச்வமனம் மற்றும் விச்வ புத்தியோடு ஒன்றியதால் அவர்கள் அனைவரும் ஒருவரே. உருவத்தால் அவர்கள் பலவாறாகத் தெரிந்தாலும் தத்துவத்தால் அவர்கள் அனைவரும் ஒன்றே. நிர்குண தெய்வ தத்துவத்தின் ஸகுண ரூபமே குரு. எவ்வாறு பசுவின் மடியிலுள்ள எந்த காம்பிலிருந்து கறந்தாலும் வெள்ளை நிற சுத்தமான பால் கிடைக்கிறதோ, அதேபோல் ஒவ்வொரு குருவிடமும் உள்ள குரு தத்துவம் ஒன்றாக இருப்பதால் அவர்களிடமிருந்து ஒரேபோல் ஆனந்த அதிர்வலைகள் வெளிப்படுகின்றன. சமுத்திரத்தின் அலைகள் எவ்வாறு கரையை நோக்கி வந்து கொண்டே இருக்கிறதோ அதேபோல் ப்ரம்மத்தின், ஈச்வரனின் அலைகளான குருமார்கள் சமூகத்தை நோக்கி வந்து கொண்டே இருக்கின்றனர். எல்லா அலைகளிலுள்ள நீரிலும் சுவை ஒரே மாதிரி இருப்பதுபோல் எல்லா குருமார்களின் தத்துவமும் ஒன்றேயான ப்ரம்மமாக உள்ளது. தண்ணீர் நிரம்பிய பாத்திரங்கள் சிறிது பெரிதாக இருந்தாலும் உள்ளே இருக்கும் தண்ணீர் ஒன்றே; மின்சார விளக்குகளின் வடிவமைப்புகள் விதவிதமாக இருந்தாலும் அதிலிருந்து வெளிப்படும் ஒளி ஒன்றே; அதே போல் குருமார்கள் பலவிதமாக காட்சி அளித்தாலும் அவர்களிடம் உள்ள குரு தத்துவம் (தெய்வ தத்துவம்) ஒன்றே.

(தகவல் : ஸனாதனின் தமிழ் கையேடு ‘குருக்ருபாயோகம்’, தொடர்பு : 9380949626)

 

Leave a Comment