குரு வார்த்தையின் அர்த்தமும் இதிஹாஸமும்

குரு என்ற வார்த்தையின் சில
விளக்கங்களும் அர்த்தங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. சிஷ்யனின் அஞ்ஞானத்தை அகற்றி அவனுடைய ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட அவனுக்கு ஸாதனையை கற்றுவித்து, செய்ய வைத்து யார் அனுபூதிகளையும் தருகிறாரோ அவரே குரு. குருவின் லக்ஷியம் சிஷ்யனின் உலக முன்னேற்றம் அல்ல (காரணம் அது விதிப்படி நடப்பது), அவனின் ஆன்மீக முன்னேற்றம் மட்டுமே.

2. பரமேச்வரனின் அனுக்ரஹிக்கும் சக்தியே குருவாகும்.

3. குரு சிறியவர் அல்லர்; மாறாக சிறியவர்களையும் பெரியோர்களாக மாற்றும் திறன் படைத்தவர்.

4. ஸ்ரீ குருசரித்திரத்தில் இரண்டாவது அத்தியாயத்தில் குருவின் பெயர் வேததர்ம என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது யாருடைய உடலால், வாக்கால், மனதால் செய்யப்படும் காரியங்கள் வேதத்துடன் ஒத்துப் போகிறதோ அவருக்கு வேததர்மம் ஸத்குரு என்னும் பதவியைத் தருகிறது. – பரம் பூஜ்ய காணே மஹராஜ், புனே, மஹாராஷ்ட்ரா.

5. ஈச்வரனும் பக்தனும் வேறானவர் அல்லர்; ஆனால் ஈச்வரன் நிர்குணமாக இருப்பதால் அவருக்கு தேஹ உணர்வுடைய பக்தனுடன் பேச முடிவதில்லை; அதனால் தன்னுடைய காரிய ப்ரம்மமாக விளங்கும் ஸகுண ரூபத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கிறார். அந்த காரிய ப்ரம்மத்தையே குரு எனக் கூறுகின்றனர்; அதாவது குருவின் ரூபத்தில் ஈச்வரன் நம்முடன் பேசுகின்றார். – பரம் பூஜ்ய காணே மஹராஜ், புனே, மஹாராஷ்ட்ரா.

இதிஹாசம்

குருபரம்பரைக்கு ஆரம்பம் இல்லை; ஆனால் கிளைகள், உப கிளைகள் உண்டு. அநாதி காலத்திலிருந்து இருந்து வரும் குரு பரம்பரை இறுதியில் ஈச்வரனிடம் கொண்டு சேர்க்கிறது. வைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் குரு பரம்பரையின் ஆரம்பம் ஸ்ரீவிஷ்ணுவிடமிருந்து ஆரம்பிக்கிறது. சைவ சம்ப்ரதாயத்திற்கு சிவனே ஆதிகுரு. நாத் சம்ப்ரதாயத்தில் குரு, ஈச்வரனைக் காட்டிலும் உயர்ந்தவராக கருதப்படுகிறார். அவர்கள் சிவனை ஆதிகுருவாக கருதி ஸ்ரீவிஷ்ணு ரூபமான மத்ஸ்யேந்திரரை அவரின் முதல் சிஷ்யராக கருதுகின்றனர். நாத் சம்ப்ரதாயத்தில் முன்னோர்களின் வம்சாவளியைக் கூறாமல் குருவம்சாவளியையே கூறும் வழக்கம் உள்ளது. ஞானேச்வர், ‘நான் விட்டல்பந்த் வழி வந்தவன்’ எனக் கூறாமல் அவரின் குருவான நிவ்ருத்தி வழியில் வந்தவன் எனக் கூறுகிறார்.

(மேலும் விவரங்களுக்கு ஸனாதனின் தமிழ் கையேடு ‘குருக்ருபாயோகம்’ படிக்கவும்)

Leave a Comment