ஆன்மீக முன்னேற்றம் அடையச் செய்து பிறப்பு-இறப்பு சக்கர சுழற்சியிலிருந்து விடுவிக்கும் குரு!

நான் என்பதன், அதாவது ஆத்மாராமனின் முகவரியை குருவே தரக் கூடியவர்!

நாம் ஒரு நண்பனின் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் அவனுடைய முகவரியை யாரிடமாவது விசாரித்து தெரிந்து கொள்வோம். அதேபோல் நான் என்பதன் அதாவது ஆத்மாராமனின் முகவரியை குருவே நமக்குத் தர வல்லவர்.

பிரபஞ்சத்தில் நமக்கு வழிகாட்டக் கூடிய
குரு கிடைக்காவிட்டால் 84 லக்ஷம் யோனிகளில் உழல வேண்டி வரும்!

நீங்கள் ஒரு பாலைவனத்தில் மாட்டிக் கொண்டு வழி தெரியாவிட்டால், இங்கிருந்து அங்கு மற்றும் அங்கிருந்து இங்கு என்று திரிந்து சோர்ந்து போவீர். அங்கு உணவு நீர் கிடைக்காமல் உயிரை விட வேண்டி வரும். அதேபோல் பிரபஞ்சத்தில் வழிகாட்டும் குரு கிடைக்காவிட்டால் நம்முடைய குறைகளால் மற்றும் நம்மால் ஏற்படும் தவறுகளால் நம் வாழ்நாள் வீணாகி விடுகிறது; அதோடு 84 லக்ஷ யோனிகளில் உழல வேண்டி வரும்.

சம்சார சாகரத்தை கடக்க மஹான்களின் உதவி அவசியம்

நம்மால் நீந்தி செல்ல முடியாதபோது நதியைக் கடக்க படகு அவசியம். அதேபோல் சம்சார சாகரத்தை நீந்திக் கரையேற மஹான் என்கின்ற படகு அவசியம்.

ஆன்மீக முன்னேற்றத்திற்கு குருவின்
உதவியுடன் விரைவாக முன்னேற முடிகிறது

ஒரு கப்பல் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல 4 மணி நேரம் ஆகிறது. அதன் பின்னால் கயிறு மூலம் ஒரு படகைக் கட்டி விட்டால் அந்தப் படகும் அதே இடத்திற்கு 4 மணி நேரத்தில் போய் சேர்கிறது. ஆனால் கயிற்றை அவிழ்த்து விட்டால் அந்த படகு அதே இடத்திற்கு செல்ல 10 மணி நேரம் பிடிக்கும். அதேபோல் நம்முடைய ஆன்மீக முன்னேற்றத்திற்கு நாமே முயற்சி செய்தால் நம்முடைய குறைகளால் முன்னேற்றம் அடைய வெகு காலம் ஆகிறது; ஆனால் குருவின் உதவியுடன் முயற்சிக்கும்போது வெகு விரைவில் முன்னேற முடிகிறது

குருபூர்ணிமா என்பது குருசரணங்களுக்கு அருகே செல்வதற்கான ஒரு பொன்னான வாய்ப்பு!

– பூஜ்ய டாக்டர் வஸந்த் பாலாஜி ஆடவலே

Leave a Comment